திங்கள், 15 டிசம்பர், 2014

தமிழ் மணம் ஓட்டுப்பட்டை - பாகம் 4

                                                 

                                                    

அய்யப்பன் புலி மீது வருகிறார். நாம் சிங்கத்தின் மீது ஏறி சவாரி செய்வோம்
உங்கள் டேஷ்போர்டு சென்று Template பட்டனை அழுத்தி கீழே தெரியும் ஸ்க்ரீன் வரை வந்து விட்டீர்களா? இது வரை செய்ததெல்லாம் ஜுஜுபி. இனிமேல் செய்யப் போவதுதான் உண்மையில் கம்ப்யூட்டர் மூளையில் கைவைப்பது. கொஞ்சம் கை நடுங்கினாலும் பேஷன்ட் குளோஸ்.



இதில் இருப்பவைகளை எல்லாம் கொஞ்சம் சாவதானமாகப் பார்த்து மனதில் இருத்திக்கொள்ளவும்.

இடது பக்கம் My Blogs என்று இருப்பவைகளுக்கு கீழே இருக்கும் பல பட்டன்களில் Template என்ற பட்டனை அழுத்தி நாம் இந்த ஸ்கிரீனுக்கு வந்திருக்கிறோம்.

இதில் உள்ள Backup/Restore பட்டனை அழுத்திக் கிடைத்த பைலை பத்திரமாக வைத்திருக்கிறோம்.

இப்போது Edit HTML என்ற பட்டனை அழுத்தவும். கீழே பார்க்கும் ஸ்கிரீன் வரும்.


கட்டத்திற்குள் இருப்பவைதான் நம் பிளாக்கின் புரொக்ராம். இந்தக் கட்டாத்திற்கு மேலே பல பட்டன்கள் இருப்பதை நன்றாகக் கவனிக்கவும். முதல் பட்டன்தான் "ஒன் ஸ்டெப் பேக்"  பட்டன். தொடைநடுங்கி வீரர்களுக்கானது. அவர்கள் இந்த பட்டனை அழுத்தினால் வீட்டிற்குப் போய் சுகமாகப் போர்த்திக்கொண்டு தூங்கலாம்.

அடுத்த பட்டன் நம்மைப்போன்ற சிங்கங்களுக்கானது. டெம்ப்ளேட்டுக்குள் நம் வேலை முடிந்ததும் இந்த Save Template  பட்டனை அழுத்தினால் கொஞ்ச நேரம் கழித்து எல்லாம் நார்மலுக்கு வந்து விடும். அவ்வளவுதான் ஆபரேஈன் சக்சஸ் பாடவேண்டியதுதான்.

ஆபரேஷனைப் பார்ப்போமா. இந்த கட்டத்திற்குள் உங்கள் கர்சரைக் கொண்டு போய் ஒரு லெஃப்ட் கிளிக் செய்யவும். இப்போது கர்சர் இந்த டெம்ப்ளேட் பெட்டிக்குள் இருக்கிறது. ஒரு சின்ன வேலை செய்து பார்ப்போமா?

இப்போது Ctrl + F  இரண்டு கீ களையும் ஒன்றாக அழுத்தவும். இப்போது இந்த செம்ப்ளேட்டின் வலது மேல் மூலையில் ஒரு சிறிய நீள் சதுரக் கட்டம் தெரிகிறதல்லவா? அதற்குள்   line-height என்று டைப் செய்து என்டர் கீயை அழுத்துங்கள். இப்போது டெம்ப்ளேடில் 398 வது லைன் தெரிகிறதா? அந்த லைனில்  line-height:   என்கிற வார்த்தை கொஞ்சம் மாறுபட்ட கலரில் தெரிகிறதா? அதற்கு வலது பக்கம்  1.2 என்று தெரிகிறதா? தெரிந்தால் நீங்கள் பாஸ். அதை ஒன்றும் செய்யவேண்டாம். இப்போது வலது மேல் மூலையில் உள்ள கட்டத்திற்கு கர்சரைக் கொண்டு போய் வைத்து அந்த  line-height என்கிற வார்த்தையை அழியுங்கள்.

அந்த இடத்தில் கீழ்க்கண்ட வரியைக் காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.

<b:include data='blog' name='all-head-content'/>
பிறகு என்டரைத் தட்டவும். இப்போது இந்த வரி அதாவது 10 வது லைன் ஹைலைட் ஆகி உங்களுக்குத் தெரியும். அந்த லைனின் கடைசியில் கர்சரைக்கொண்டு போய் வைத்து லெஃப்ட் கிளிக் செய்யவும். இப்போது கர்சர் அந்த இடத்தில் கண்ண்டித்துக் (Blinking) கொண்டிருக்கும்.
இப்போது என்டரைத் தட்டவும். உடனே ஒரு புது லைன் உருவாகும். அதற்கு 11 என்ற எண் இருக்கும். கர்சர் இந்த லைனின் ஆரம்பத்தில் இருக்கும்.
இப்போது கீழே கொடுத்துள்ளதைக் காப்பி செய்யவும். (Ctrl +c)

<link expr:href="data:blog.canonicalUrl" rel="canonical"/>
<script type="text/javascript">
var str= window.location.href.toString();
if ((str.indexOf('.com/'))=='-1') {
var str1=str.substring(str.lastIndexOf(".blogspot."));
if (str1.indexOf('/')=='-1') {
var str2=str1;
}
else {
var str2=str1.substring(0,str1.indexOf('/')+1);
}
window.location.href =window.location.href.toString().replace(str2,'.blogspot.com/ncr/');
}
</script>

பிறகு டெம்ப்ளேட்டுக்குள் சென்று பார்க்கவும். கர்சர் அதே இடத்தில் (அதாவது 11 ம் லைனின் ஆரம்பத்தில்) இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும். இப்போது பேஸ்ட் செய்யவும். (Ctrl +v)
அவ்வளவுதான். ஆபரேஷன் முடிந்தது. கர்சரைக் கொண்டு போய் இந்த டெம்ப்ளேட் கட்டத்திற்கு மேலே ஆரஞ்சு வர்ணத்தில் இருக்கும்
என்ற பட்டனை அழுத்தவும். கொஞ்ச நேரம் ஆகும். பொறுமையாக காத்திருக்கவும். சேவ் செய்யும்போது ஏதாவது மாற்றுச்செய்தி வந்தால் டெம்ப்ளேட் மேல் உள்ள 




என்ற பட்டனை அழுத்தி  "எஸ்" ஆகிவிடலாம். நான் சொல்லியவற்றை மாற்றமில்லாமல் செய்திருந்தால் அந்த இக்கட்டு வராது.
அவ்வளவுதான். உங்கள் பிளாக்கில் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை ஜோராக வேலை செய்யும். ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்.
உங்களை கடவுளும் பழனி. கந்தசாமியும் கட்டாயம் காப்பாற்றுவார்கள். வெற்றி நமதே.
                                             

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

அமேசான் கிண்டிலும் டேப்ளெட்டுகளும்

       

                          டேப்ளெட்                                   அமேசான் கிண்டில்

நான் ஒரு அமேஸான் கிண்டில் வாங்கினதைப் பற்றி ஒரு நகைச்சுவைப் பதிவு எழுதியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் தெரியாதவர்கள் இங்கே சென்று படித்துக் கொள்ளலாம்.

அதில் தமிழ் இளங்கோ கிண்டிலுக்கும் டேப்ளெட்டுக்கும் பயன்பாட்டில் என்ன வித்தியாசம் என்று எழுதுங்களேன் என்று கேட்டிருந்தார். பதிவு எழுத டாபிக் கிடைக்காமல் காய்ந்து கொண்டிருப்பவனுக்கு இது போதாதா? அதனால்தான் இந்தப் பதிவு.

இரண்டும் பார்ப்பதற்கு ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் அவைகளின் பயன்பாடுகள் வெவ்வேறு. டேப்ளட் ஒரு மினி கம்ப்யூட்டர். கம்ப்யூட்டரில் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் இதில் செய்யலாம். இன்டெர்நெட் மேயலாம். கூடுதலாக போன் மாதிரியும் கேமரா மாதிரியும் பயன்படுத்தலாம். பாட்டுக் கேட்கலாம். புத்தகம் படிக்கலாம். இன்னும் எத்தனையோ ...லாம், ...லாம். ஆனால் கொள்ளளவு (Capacity) கம்மி. பேட்டரி லைஃப் கம்மி.

டேப்ளெட்டுகள் எத்தனையோ கம்பெனிகள் தயாரிக்கின்றன. ஆனால் கிண்டில் அமேசான் மட்டுமே தயாரிக்கிறது.

அமேசான் கிண்டில் என்பது அமேசான்காரனின் விளம்பரக் கருவி.முக்கியமாக புக் ரீடர் மட்டுமே. கண்களுக்கு சோர்வு வராமல் புத்தகங்களைப் படிக்கலாம். கேம்ஸ் விளையாடலாம். பாட்டுக் கேட்கலாம். வை-பை மூலம் மட்டுமே இன்டர்நெட் தொடர்பு கிடைக்கும். போன் இல்லை. கேமரா இல்லை. பேட்டரி லைஃப் நீங்கள் உபயோகிப்பதைப் பொறுத்து சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை தாங்கும்.

நான் இதை வாங்கியது புத்தகங்கள் படிக்க மட்டுமே.

 பத்திரிகைகளில் விளம்பரம் வருவது மாதிரி இதில் அதை வாங்குங்கள், இதை வாங்குங்கள் என்று விளம்பரங்கள் சொல்லிக்கொண்டே இருக்கும். இது அமேசான்காரனின் விளம்பர உத்தி.

மொத்தத்தில் டேப்ளெட் குடும்ப்பப் பெண். கிண்டில் விலைமாது.

வெள்ளி, 12 டிசம்பர், 2014

தமிழ் மணம் ஓட்டுப்பட்டை - பாகம் 3


                                   

இந்த தொடர் பதிவு, பதிவுலகில் உள்ள தைரியசாலிகளுக்கு மட்டுமே.

தெரு நாயைக் கண்டு ஓட்டம் பிடிப்பவர்களும்,  கரப்பான் பூச்சியைக் கொல்ல முடியாதவர்களும், பெண்டாட்டிக்குப் பயப்படுகிறவர்களும் (தாய்க்குலம் என்னை மன்னிக்கவும். ஒரு ஃப்ளோவில் வந்து விட்டது) வேறு வேலை ஏதாவது இருந்தால் பார்க்கவும்.

சிங்கத்தின் மேல் ஏறி சவாரி செய்யக்கூடியவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும். மற்றவர்கள் "ஒன் ஸ்டெப் பேக்".

ஆனால் நான் சொல்லிக் கொடுப்பதை பொறுமையுடன் ஒழுங்காகப் படிப்பவர்கள் கண்டிப்பாக சிங்கத்தின் மேல் ஏறி சவாரி செய்யலாம்.

முதலில் நம் பிளாக்கர் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். பிளாக்கருக்குள் நுழைந்தவுடன் நாம் பார்ப்பது



இதைத்தான் பிளாக்கர்  "டேஷ்போர்டு" என்று சொல்கிறார்கள். இதில் என்னுடைய மன அலைகள் என்பதற்கு வலது புறமாக ஒரு ஆரஞ்சு வர்ணப் பட்டை தெரிகிறதா. அதற்கு வலப்புறம் சின்னதாக ஒரு பட்டன்   தெரிகிறதல்லவா?   

இதைச் சொடுக்கினால் கீழ்க்கண்ட ஸ்க்ரீன் தெரியும்.


இதெல்லாம்தான் எங்களுக்குத் தெரியுமே, இதைச்சொல்லி எதற்கு போர் அடிக்கிறீர்கள் என்று சொல்லுவது காது கேட்கிறது. எனக்கு அது நன்றாகத் தெரியும். கணக்கு சொல்லிக்கொடுக்கும்போது கணக்கு வாத்தியார் ஸ்டெப் ஸ்டெப்பாகப் போவார். அதில் பல ஸ்டெப்கள் நமக்கு முன்பே தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் ஏன் அந்த ஸ்டெப்களைப் போடுகிறார் என்றால் நம் மரமண்டையில் நன்றாகப் பதிவதற்காகவே. இப்போது புரிந்ததா, நான் ஏன் இந்த விவரங்களை எல்லாம் விவரமாகச் சொல்லுகிறேன் என்று? 

இந்த நம் பதிவுகளின் லிஸ்ட் கொண்ட ஸ்கிரீனை தினமும் பார்த்தாலும் அதில் உள்ள சில நுட்பமான விஷயங்களை நாம் கவனிப்பதில்லை.
இடது பக்கம் உள்ள இந்த மெனுவை நீங்கள் கவனிப்பதுண்டா? அதில் Template என்று ஒன்று இருப்பதைக் கவனித்ததுண்டா? இந்த விவரங்களை ஒரு முறை உங்கள் பிளாக்கிற்கு சென்று கவனித்து விட்டுப் பிறகு தொடர்ந்து படியுங்கள். இந்த  Template  ஐ சொடுக்கினால் உங்களுக்கு கீழ்க்கண்ட ஸ்கிரீன் கிடைக்கும்.



இதில் வலது மேல் மூலையில் Backup/Restore  என்று ஒரு இடம் இருக்கிறது பாருங்கள். அதைச்சுட்டுங்கள். கீழ்க்கண்ட ஸ்கிரீன் வரும்.





இதில் ஆரஞ்சு கலரில் உள்ள Download Full Template என்ற பட்டனை அழுத்தவும்.

உங்களுடைய டெம்ப்ளேட் டவுன்லோடு ஆகி வழக்கமாக நீங்கள் டவுன்லோடுகளை எங்கே சேமிப்பீர்களோ அங்கு சேமித்து விடும். நான் வழக்கமாக டெஸ்க்டாப்பில் சேமிப்பேன். அந்த சேமித்த பைலைக் காணுங்கள்.


உங்கள் டெம்ப்ளேட் சேமிக்கப்பட்டிருப்பதைப் பாருங்கள்.


தைரியமாக இந்தப் பைலை கிளிக் செய்து திறந்து பாருங்கள். கொசகொசவென்று என்னென்னமோ நமக்குப் புரியாத சமாச்சாரங்கள் இருக்கும். கொஞ்சநேரம் பார்த்து விட்டு பைலை மூடி விடுங்கள்.



இது வரை நான் சொல்லியவற்றை நீங்கள் செய்து பார்க்கவும். நீங்கள் இவற்றில் என்ன தவறு செய்தாலும் உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தினருக்கோ, உங்கள் கம்ப்யூட்டருக்கோ, உங்கள் பதிவுகளுக்கோ எந்த வித ஆபத்தும் நேராது என்று நான் உறுதியளிக்கிறேன். 

இந்த விபரங்கள் உங்கள் உடலுக்குள் சென்று ஜீரணமாவதற்கு ஒரு வாரம் ஆகலாம். அது வரை நீங்களும் வேறு வேலை பாருங்கள். நானும் வேறு வேலை பார்க்கிறேன். 

அடுத்த வாரம் இந்தத் தொடரின் 4 வது பாகம் வெளி வரும்போது அநேகமாக இந்தத் தொடரைப் படிக்க ஒருவரும் வரமாட்டார்கள் என்று நம்புகிறேன். இருந்தாலும் இந்தத் தொடரை என் நினைவுக்காக கட்டாயம் பதிவு செய்வேன். 

இந்த ஸ்டெப்களை தினந்தோறும் ஒரு முறை செய்து பார்க்கவும்.

வியாழன், 11 டிசம்பர், 2014

தமிழ் மணம் ஓட்டுப்பட்டை - பாகம் 2

                              Logo

ஆக தமிழ்பதிவர்கள்  தமிழ் மணம் ஓட்டுப் பட்டையை சீர்திருத்த தயாராக உள்ளார்கள்.

அதற்கு முன் இந்த தமிழ் மணம் ஓட்டுப்பட்டையினால் என்ன பயன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ் மணம் ஒரு தமிழ்ப் பதிவுகளின் முதன்மையான திரட்டி. நாம் பதிவு எழுதுவது நாலு பேர் படிக்கட்டும் என்பதற்காகத்தான். என் பதிவை யாரும் படிக்கத்தேவை இல்லை, நான் பதிவு எழுதுவது என் ஆத்ம திருப்திக்காக மட்டுமே என்று சொல்பவர்களுக்கு நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. அது அவர்கள் விருப்பம்.

தமிழ் மணம் திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைத்தால் பல பேர் உங்கள் பதிவுகளைப் படிக்க வசதியாக இருக்கும். அதற்கு இந்த ஓட்டுப் பட்டை உதவுகிறது. இந்த ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் நிறுவுவதற்கு நீங்கள் முதலில் தமி.ழ்மணத்தில் உறுப்பினராக வேண்டும். உங்கள் தளத்தை ஆரம்பித்து ஓரிரண்டு மாதங்கள் ஆன பிறகு விண்ணப்பித்தால் தமிழ்மணம் உங்களை உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளும்.

இதற்கான வழிமுறை தமிழ்மணம் திரட்டியிலேயே இருக்கிறது. நீங்கள் உறுப்பினராக ஆன பிறகு தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை உங்கள் தளத்தில் நிறுவிக்கொள்ளலாம். அதற்கான வழிமுறையும் தமிழ்மணம் திரட்டியிலேயே இருக்கிறது. மற்ற தொழில் நுட்பப் பதிவர்களும் இதற்கான வழியை விளக்கியிருக்கிறார்கள்.

தமிழ் மணத்தில் உள்ள இரண்டாவது  விஷயம், தமிழ் மணம் உங்கள் தளத்தை மதிப்பீடு செய்து தர வரிசை எண் கொடுக்கிறது. திரு.பகவான்ஜி அவர்களின் ஜோக்காளி தளம் தரவரிசையில் முதலாவதாக இருக்கிறது என்றால் அவர் மிகவும் பிரபலமானவர் என்று தெரிகிறதல்லவா?

                                                   Tamil Blogs Traffic Ranking

என்னைப் போன்றவர்களுக்கு இந்த தரவரிசை எண்ணைப் பற்றிய எண்ணம் விட்டுப்போய் விட்டது. ஆனால் சிலருக்கு அந்த ஆசை இருக்கலாம். தவறில்லை. யாருக்குமே புகழ்ச்சி மகிழ்ச்சியைத் தருமல்லவா.

சரி விஷயத்திற்கு வருவோம்.

தமிழ்மணம் திரட்டி ஆரம்பித்து இந்த ஓட்டுப் பட்டையைப் புகுத்தின சமயத்தில் அனைத்து பிளாக்கர்களின்  "வெப் அட்ரஸ்" களும்  .com என்றுதான் முடியும். இந்தப் பதிவைப் போய்ப் பாருங்கள். அதனுடைய வெப் அட்ரஸ்  .in என்று முடிவதைப் பார்க்கலாம். மேலும் அந்தப் பதிவில் தமிழ் மணம் ஓட்டுப் பட்டை மாறாமல் இருப்பதையும் பார்க்கலாம்.

இது ஏன் என்றால் 2013 அல்லது 2014 வாக்கில் கூகுள் பிளாக்கர்களின் வெப் அட்ராஃகளில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது.  .com  என்று முடியும் வெப் அட்ரஸ்களை எல்லாம்  .in என்று மாற்றியது. ஏன் என்றால் பதிவுகள் சிலவற்றில் நாட்டுக்கு விரோதமான சில விஷயங்களைப் பிரசுரித்தார்கள். அப்போது அந்தந்த அரசுகள் இம்மாதிரியான பிரசுரங்களைத் தடுக்கவேண்டும் என்று கூகுளை நெருக்கியது. அவரகள் தொழில்நுட்ப ரீதியாக அப்படிப்பட்ட பிளாக்குகளைத் தடுக்கவேண்டுமென்றால் நாடு வாரியாக பிளாக்குகளைப் பிரிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அதனால் .com என்று முடியும் வெப் அட்ரஸ்களையெல்லாம் அந்தந்த நாட்டிற்கு ஏற்ப மாற்றியது. இந்தியாவில் புழங்கும் பிளாக்குகள் எல்லாவற்றையும்   .in என்று முடியுமாறு மாற்றியது. இந்த மாற்றத்தினால் இந்தியாவில் பிரசுரமாகும் ஏதாவது பிளாக்கைத் தடை செய்யவேண்டுமானால் அதை கூகுள் தடை செய்ய முடியும். ஆனால் அதே பிளாக்கை அமெரிக்காவில் பார்க்க முடியும்.

இது புரிந்து கொள்ளக் கொஞ்சம் கடினமான தொழில் நுட்ப உத்திதான். இதனால் சாதாரண பிளாக்கர்களுக்கு அதிகம் பாதிப்பில்லை. இந்த தமிழ்மணம் ஓட்டுப்பட்டை மட்டுமே பாதிப்புக்கு உள்ளானது. தமிழ்மண ஓட்டுப்பட்டை .com  என்று முடியும் பிளாக்குகளில் மட்டுமே சரியாக வேலை செய்யுமாறு அமைக்கப்பட்டுள்ளது. கூகுள் செய்த மாற்றத்தினால் இது பாதிக்கப்பட்டது. ஆனால் தமிழ்மணம் இதை மாற்றவேண்டுமானால் ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக ஓட்டுப்பட்டை தயாரிக்கவேண்டும். இது நடைமுறையில் சாத்தியமல்ல. அதனால் பிளாக்கர்கள் எப்படியோ போகட்டும் என்று விட்டு விட்டார்கள்.

ஆனால் நம் இந்திய கம்ப்யூட்டர் நிபுணர்களின் மூளை சாதாரணமானதா, என்ன? ஆனானப்பட்ட மைக்ரோசாஃப்ட் புரொக்ராம்களையே பைரேட் செய்பவர்களுக்கு இது ஒரு ஜுஜுபி. ஆகவே இதற்கு ஒரு மாற்று வழி கண்டுபிடித்தார்கள். அதைத்தான் பெரும்பாலான தமிழ் பிக்கர்கள் உபயோகித்து வருகிறார்கள்.

அது என்ன வழி என்று அடுத்த பதிவில் சொல்லுகிறேன்.



புதன், 10 டிசம்பர், 2014

ஒரு சின்ன சின்னவீட்டுப் பிரச்சினை

டிஸ்கி - இந்தப் பதிவை பெண்களும் 60 வயதுக்குக் குறைந்தவர்களும் படிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். படித்து விட்டு என் மேல் வீண் பழி சுமத்தக்கூடாது.


தி.தமிழ் இளங்கோபுதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ 8:45:00 முற்பகல் IST  அவர்கள் என் தளத்தில் இட்ட பின்னூட்டம்.

வலைப்பதிவில் தமிழ்மணத்தின் ஓட்டுப்பட்டை நிறுவுவது என்பது ஒரு பெரிய வித்தையாகத்தான் இருக்கிறது. இதற்காக நான் முதன் முதல் தொடங்கிய ஒரு வலைத்தளத்தையே பலி கொடுக்க வேண்டி இருந்தது. பேசாமல் அவர்கள் FACEBOOK இல் உள்ளது போல LIKE முறையைக் கொண்டு வரலாம். எல்லோரும் எளிமையாக ஓட்டளிப்பார்கள்.

என்னுடைய பதில்

எல்லோருக்கும் புரியும்படியான எளிமையான வழியை எழுதிக்கொண்டு இருக்கிறேன். இரண்டு மூன்று நாட்கள் பொறுக்கவும். அதற்குள் ஒரு சின்ன சின்ன வீட்டுப் பிரச்சினை. முடித்து விட்டு வருகிறேன்.

அந்தச் சின்ன சின்ன வீட்டுப் பிரச்சினை என்னவென்றால்:

தஞ்சாவூர்க்காரர்களுக்கு சின்ன வீடு என்றால் நன்றாகத் தெரியும். அந்த ஊரில் ஒருவருக்கு குறைந்த பட்சம் ஒரு சின்னவீடாவது இருந்தால்தால் ஊருக்குள் அவருக்கு மரியாதை. அதற்கு மேல் இருந்தால் எண்ணிக்கைக்கு தக்க மாதிரி மதிப்பு கூடும். மற்ற ஊர்க்காரர்களுக்கு சின்ன வீடு என்றால் சிறியதாக ஒரு சொந்த வீடு என்றுதான் புரியும்.

நான் ஏற்கெனவே இரண்டு சின்ன வீடுகள் வைத்திருக்கிறேன். மூன்றாவது  மூன்று நாளைக்கு முன்பாகத் தான் அமைந்தது.

என்னுடைய கம்ப்யூட்டர் மானிட்டர் மண்டையைப் போட்ட விவரம் எல்லோருக்கும் தெரியும். புது மானிட்டர் வாங்கப் போனபோதுதான் இந்த மூன்றாவது சின்ன வீட்டை செட் செய்தேன். 

"கிண்டில் புக் ரீடர்" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அமேசான்காரன் அடிக்கடி விளம்பரம் போடுகிறான். எனக்கு அதன் பேரில் ஒரு சபலம். அந்தக் கம்ப்யூட்டர் கடையில் "கிண்டில் ரீடர்" இருக்கான்னு சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டேன்.

அவன் உடனே ஒரு பெட்டியைத் திறந்து இங்கே பாருங்கள், இது அமேசான்- காரன் டெமோவிற்காக அனுப்பியது. இதன் ஒரிஜினல் விலை 21000 ரூபாய். இதை நாங்கள் இப்போது 8999 ரூபாய்க்கு கொடுக்கிறோம். ஏறக்குறைய புதுசேதான் சார், என்று சொல்லி அதனுடைய வீரதீரப் பிரதாபங்களை- யெல்லாம் டெமோ பண்ணிக் காட்டினான்.

எனக்கு அதன் பேரில் "கண்டவுடன் காதல்" என்பார்களே அது போல் காதல் பிறந்து விட்டது. சரி பேஃக் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதை வாங்கி வந்தவுடன் மூன்று நாளாக அதனுடன் xxxxxx* நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் நான் மூன்றாவது சின்னவீடு செட்அப் பண்ணின கதை.

முதல் இரண்டு சின்ன வீடுகளும் என்னவென்று சொல்லாவிட்டால் கதை முற்றுப் பெறாதல்லவா. முதல் சின்ன வீடு - கம்ப்யூட்டர். இரண்டாவது சின்ன வீடு - ஸ்மார்ட் போன். 

ஆகவே புதுப்பெண்டாட்டி மோகம் குறைய இன்னும் இரண்டொரு நாள் ஆகும். அதற்கப்புறம் தமிழ்மணம் ஓட்டுப் பட்டையைப் பட்டை கிளப்புகிறேன்.

*  இங்கே உங்களுக்குப் பிடித்த வார்த்தையைப் போட்டுக் கொண்டு படியுங்கள்.

திங்கள், 8 டிசம்பர், 2014

An urgent announcement

1.30 PM
My monitor hospitalised. Hence no computer.  From Smartphone.
Palani. Kandaswamy

6.00 PM
In continuation - At the hospital they pronoumnced "Brought Dead"

                                        

அப்புறம் என்ன செய்ய முடியும்? அங்கேயே அடக்கம் செய்து விட்டு பால் ஊற்றிவிட்டு கம்ப்யூட்டர் கடைக்குப் போய்  "சாம்சுங்க்" மானிடர் 20 இஞ்ச் 7000 ரூபாய் சுளையாகக் கொடுத்து விட்டு ஒரு புது மானிட்டர் வாங்கி வந்து மாட்டினேன். நன்றாக இருக்கிறது. பின்ன, சும்மாவா ஏழாயிரம் கொடுத்தது?

கம்ப்யூட்டர் இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியுமா, நீங்களே சொல்லுங்கள்? சாப்பாடு இல்லைன்னாக் கூட இருந்திடலாம். கம்ப்யூட்டர் இல்லாமல் !!!!!!!!!!! நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

துக்கத்திற்கு வந்தவர்களுக்கும் வராதவர்களுக்கும் எல்லோருக்கும் நன்றி.

தமிழ் மணம் ஓட்டுப்பட்டை

தமிழ் பதிவர்கள் பெரும்பாலும் தமிழ்மணத் திரட்டியில் இணைந்திருப்பார்கள். தங்கள் பதிவுகளை தமிழ்மணம் திரட்டியில் இணைப்பதற்காகவும் அதில் ஓட்டுப் போடுவதற்காகவும் ஒரு ஓட்டுப் பட்டை உள்ளதை எல்லோரும் அறிந்திருப்பார்கள். ஆனால் அதில் உள்ள சில நுணுக்கங்களை பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டார்கள்.

இந்த ஓட்டுப் பட்டையை தங்கள் தளத்தில் இணைப்பது பற்றி பல தொழில் நுட்பத் தளங்களில் விளக்கியுள்ளார்க்ள. பார்க்க பிளாக்கர் நண்பன், பொன்மலர் பக்கம்,  டி.என் முரளிதரனின் மூங்கில் காற்று.

இந்த ஓட்டுப் பட்டை முதலில் இந்த மாதிரி இருக்கும்.


நீங்கள் உங்கள் பதிவை "பப்ளிஷ்" பண்ணியவுடன் இந்த ஓட்டுப் பட்டையை சொடுக்கினால் உங்கள் பதிவு தமிழ்மணம் திரட்டியில் இணைந்து விடும். இதுதான் எங்களுக்குத் தெரியுமே என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால் இதில் நுட்பம் என்னவென்றால், நீங்கள் இந்தப் பட்டையைச் சொடுக்கியவுடன் அந்த ஓட்டுப் பட்டை கீழ்க்கண்டவாறு மாறவேண்டும்.


இப்படி மாறினால்தான் உங்கள் பதிவைப் படிப்பவர்கள், உங்கள் பதிவு பிடித்திருந்தால், உங்கள் பதிவிற்கு ஓட்டுப்போட முடியும். அதனால்தான் இதற்கு ஓட்டுப் பட்டை என்று பெயர்.

பெரும்பாலான பதிவுகளில் இந்த மாற்றம் நிகழ்வதில்லை. தமிழ்மணம் ஓட்டுப்பட்டை அப்படியே கல்லுளி மங்கனாக உட்கார்ந்து கொண்டிருக்கும். இதை அந்தந்த தளத்தின் பதிவர்கள் உணர்ந்துள்ளார்களா, இல்லையா? என்று நான் அறியேன்.

இந்த மாற்றம் ஏற்பட்டால்தான் ஒரு பதிவிற்கு தமிழ்மணம் ஓட்டு போடமுடியும். தவிர எவ்வளவு ஓட்டுகள் விழுந்திருக்கிறது என்று அறியவும் முடியும்.

இந்த சிக்கல் ஏன் வந்தது, இதை தீர்ப்பது எப்படி, இதற்கு எளிமையான வழி ஏதாவது இருக்கிறதா என்று அறிய விருப்பமா? பின்னூட்டத்தில் சொல்லுங்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அந்த வழியைச் சொல்லிக் கொடுக்கிறேன்..


வெள்ளி, 5 டிசம்பர், 2014

புது வருட புது முட்டாள்


பல சமயங்களில் பலரும் முட்டாள்கள் ஆவதுண்டு. தினப் பத்திரிகை செய்திகளை மேலோட்டமாக படித்து விட்டு தவறான கருத்துகளை மனதில் பதியவைத்துக் கொள்வோம். அதே மாதிரி அடுத்தவருடன் பேசும்போது அவர் சொல்லும் வார்த்தைகளை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளாமல் வேண்டாத முடிவுகளுக்கு வருவோம். கடிதங்களைச் சரியாகப் படிக்காமல் தவறான செயல்களைச் செய்வோம்.

முக்கியமாக தேதிகளை சரியாக மனதில் பதிய வைப்பதில்லை. அதுவும் புது வருடம் பிறந்து பல நாள் ஆன பின்பும் கையெழுத்து போடும்போது பழைய வருடத்தையே குறிப்பிடுவோம். பலரும் இவ்வாறான தவறுகளினால் முட்டாள்கள் ஆவதுண்டு. சிலர் தக்க சமயத்தில் தங்கள் முட்டாள்தனத்திலிருந்து விடுபடுவார்கள். சிலரோ அதே தவறான புரிதலோடு வாழ்வார்கள்.

நானும் சமீபத்தில் இவ்வாறு முட்டாள் ஆனேன். ஆனால் தக்க சமயத்தில் விழித்துக்கொண்டேன்.

நான் இந்த வார வலைச்சர ஆசிரியராகப் பணியாற்றி வருவது அநேகருக்குத் தெரிந்திருக்கும். அதில் ஒரு பதிவிற்கு திரு சீனா ஐயா இட்டிருந்த மறு மொழியைப் பாருங்கள்.

அன்பின் திரு கந்த சாமி அய்யா - தாங்கள் இப்பதிவில் எழுதி உள்ள படி - திங்கள் வரவேண்டிய ரெகுலர் பதிவு செவ்வாய் காலையில் வரும்.படி செய்க. இப்படியே மற்ற ஆறு நாட்களுக்குப் போடவேண்டிய ஆறு பதிவுகளையும் செவ்வாய் முதல் நாளுக்கு ஒன்றாக ஞாயிறு வரை போட்டு விடுங்கள். அவ்வளவு தான். செவ்வாய் மட்டும் இரண்டு பதிவுகள் வரும். பர்வாய் இல்லை.
சரி 08-01-2014ம் நாள் திங்கள் முதல் நாளுக்கு ஒன்றாக 14..01.2014 வரை இதே மாதிரி ஏழு பதிவுகள் எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா 

இதற்கு நான் போட்ட பதில்:

மிக்க நன்றி, சீனா ஐயா.
அடுத்து இன்னொரு பதிலும் போட்டேன்.

"சரி 08-01-2014ம் நாள் திங்கள் முதல் நாளுக்கு ஒன்றாக 14..01.2014 வரை இதே மாதிரி ஏழு பதிவுகள் எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா"

இந்த வரிகள் முதலில் என் மனதில் சரியாகப் பதிவாகவில்லை. இந்த அழைப்பு உண்மையாகவா? இந்த வார வலைச்சரப் பதிவுகள் முடிவடைந்த பிறகும் உங்கள் எண்ணம் இதுவாகவே இருந்தால் உறுதி செய்யவும். நான் என்றும் உங்கள் அன்பிற்குக் கட்டுப்பட்டவன்.

அன்புடன், பழனி.கந்தசாமி.
இந்த பரஸ்பர செய்திகளில் உள்ள முரண்பாடு புரிகிறதா? எனக்கும் முதலில் புரியவில்லை.
இதற்கு தமிழன்பன் இட்ட பதிலில் இருந்துதான் இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது போல என்று மனதிற்குப் பட்டது.

"சரி 08-01-2014ம் நாள் திங்கள் முதல் நாளுக்கு ஒன்றாக 14..01.2014 வரை இதே மாதிரி ஏழு பதிவுகள் எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா"

ஒண்ணுமே புரியல்ல உலகத்திலே !!
இன்றுதான் அகஸ்மாத்தாக இந்த பின்னூட்டத்தைப் பார்த்தும்தான் என் மூளையில் ஒரு ஸ்பார்க் அடித்தது. ஆஹா நாம் முட்டாளாகி விட்டோமே என்ற ஞானோதயம் ஏற்பட்டது.
தமிழன்பனுக்கு இவ்வாறு பதில் போட்டேன்.
//தமிழன்பன்Tue Dec 02, 03:39:00 AM
"சரி 08-01-2014ம் நாள் திங்கள் முதல் நாளுக்கு ஒன்றாக 14..01.2014 வரை இதே மாதிரி ஏழு பதிவுகள் எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா"

ஒண்ணுமே புரியல்ல உலகத்திலே !!//

தமிழன்பனின் பின்னூட்டத்திற்கு இப்போதுதான் பொருள் புரிந்தது.

தமிழன்பன், என் மூளை நிஜமாகவே துருப்பிடித்துத்தான் போய்விட்டது. இப்படித்தான் செய்திகளை மேலோட்டமாக படித்து விட்டு தவறான முடிவுகள் எடுத்து விடுகிறோம். இதற்கு திரு. சீனா என்ன செய்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்பர்களே, நான் எப்படி முட்டாள் ஆனேன் என்று புரிகிறதா?
ஆனாலும் என் நல்ல காலம் அதில் இருந்து விடுபட்டு விட்டேன்.

வியாழன், 4 டிசம்பர், 2014

12. உண்மை சற்றே வெண்மை

இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்

உண்மை கசப்பானது, அன்றாட நடைமுறை வாழ்வில் உண்மையைக் கடைப்பிடிப்பது கடினம் என்று வாழ்க்கையில் அனுபவப்பட்டவர்களுக்குத் தெரியும். ஆனாலும் உண்மையாகவே வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.

அத்தகைய ஒரு குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்த ஒருத்திக்கு உடலில் இருக்கும் சிறிய குறை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்ற போராட்டம்தான் இந்தக் கதை.

இளம் பெண்ணின் பருவ மாற்றங்கள் அவளுள் ஏற்படுத்தும் தாக்கங்களை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார் கதாசிரியர். அந்த எண்ண அலைகள் படிப்பவர் மனத்திலும் ஆழ்ந்த சோகத்தை தூண்டுகிறது. நம் கையாலாகாத்தனத்தை எண்ணி நம்மை தலை குனிய வைக்கிறது.


ஆணிடம் எப்பேர்ப்பட்ட குறைகள் இருந்தாலும் அதை மறைக்கும் இந்த சமூகம் பெண்ணிடம் இருக்கும் குறைகளை மறைத்தால் மட்டும் ஒத்துக் கொள்வதில்லை. இது அநியாயம் என்று தெரிந்தாலும் நாம் இந்த மனப்பானமையை விடுவதில்லை. காலம் மாறுமா?

செவ்வாய், 2 டிசம்பர், 2014

ஒரு நடைமுறை வாழ்க்கைத் தத்துவம்.


வாழ்க்கையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் வருவது சகஜம். அப்படி வந்தால் அதை எப்படி கையாள்வது என்று தெரிந்து கொள்வது அவசியம். தமிழ் டி.வி. சீரியல்களில் வருவது மாதிரி நேரடியாக சம்பந்தப்பட்டவரிடம் போய் சண்டை போடுவது வாழ்க்கைக்கு ஒவ்வாது..

ஒரு பிரபல மனிதரைப்பற்றி அவருடன் பழகிக்கொண்டிருக்கும் ஒருவர் அவதூறாக ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். இதை அவருடைய நண்பர்கள் முதல் வேலையாக இந்தப் பெரிய மனிதரிடம் சொல்வார்கள். நண்பர்கள் பணியே அதுதானே. இங்கு கண்டதை அங்கு  சொல்வதும் அங்கு கண்டதை இங்கு சொல்வதும்தானே அவரகளின் தலையாய வேலை.

இதைக் கேட்கும் சாதாரண மனிதர்கள் என்ன செய்வார்கள்? உடனே பொங்கி எழுவார்கள். "அவனுக்கு இவ்வளவு திமிர் ஆகிப்போச்சா, அவனை என்ன செய்கிறேன் பார்?" என்று தாம் தூம் என்று குதிப்பார்கள். இதை அவரது நண்பர்கள் கண், காது, மூக்கு எல்லாம் வைத்து அந்த முதல் நபரிடம் போய் சொல்வார்கள். உன்னை என்னவெல்லாம் சொல்லி திட்டினார் தெரியுமா என்று ஆரம்பித்து விலாவாரியாக நடந்ததை தங்கள் கைச்சரக்கோடு விளக்குவார்கள்.

அவனுக்கு இன்னும் வெறி ஏறிவிடும். இப்படி இரண்டு ரவுண்ட் நண்பர்களின் உதவியால் நடந்த பிறகு, இருவருக்கும் கொலைப் பகை மூண்டு விடும். இரண்டு பக்கத்து நண்பர்களும் இந்த வெறி தணியாத மாதிரி பார்த்துக் கொள்வார்கள். கடைசியில் இந்த வெறி கைகலப்பிலோ அல்லது அதற்கும் மேல் கொலையிலோ முடியும். இத்தகைய கொலைகளை அன்றாடம் தினப் பத்திரிக்கைகளில் நாம் படிக்கிறோம்.

ஆனால் உண்மையாக மனமுதிர்ச்சி பெற்றவர் எப்படி இந்த மாதிரி நிகழ்வுகளை எதிர் கொள்வார் என்று பார்ப்போம். யாரவது நண்பர் வந்து உங்களைப்பற்றி இன்னார் மோசமாகப் பேசினார் என்று சொன்னால் அதைப் பொறுமையாக க் கேட்டுக்கொண்டு அப்படியா,  இருக்கட்டும், அவன் அப்படி பேசக்கூடியவனல்லவே, நான் அவனைக் கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்லி அந்தப் பேச்சை வளர விடாமல் அடுத்த செய்திக்குப் போய்விடுவார்.

இந்தச் செய்தியைக் கொண்டு வந்தவருக்கோ சப்பென்று போய்விடும்.

பிறகு சம்பந்தப்பட்ட அவர்கள் நேரில் சந்திக்கும்போது கூட இப்படி ஒரு செய்தி தனக்குக் கிடைத்தது என்று  சொல்லமாட்டார். இந்த செயல் பல தீமைகளைத் தவிர்த்து விடும். மேலும் இதுதான் மனமுதிர்ச்சிக்கு உண்மையான அறிகுறி. 

திங்கள், 1 டிசம்பர், 2014

வலைச்சர ஆசிரியர் பொறுப்பு

பதிவுலக நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு.

1-12-2014 ல் இருந்து ஒரு வாரத்திற்கு என்னை வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு திரு. சீனா ஐயா அழைத்ததும் நான் அதை ஏற்றதும் எல்லோருக்கும் தெரியும்.

ஏதோ தொழில் நுட்ப கோளாறினாலோ அல்லது என் அறியாமையினாலோ என் டேஷ்போர்டில் வலைத்தளம் தோன்றவில்லை. அதனால் வலைத்தள பதிவுகள் தாமதமாகின்றன.

நான் ஒரு கல்யாண விசேஷத்திற்குப் போய்விட்டு பகல் 12 மணிக்கு மேல் வீடு திரும்புவேன். அதற்குள் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். அதன் பிறகு வலைச்சரப் பதிவுகள் வெளியாகும்.

புதன், 26 நவம்பர், 2014

அரசியல்வாதிகள்- அன்றும் இன்றும்



இப்படி ஒரு பின்னூட்டம் என் ஒரு பதிவிற்கு வந்தது.

அய்யா அவர்களே 

ஒரு பதிவில் இதை படித்தேன். நம்பவே முடியவில்லை.
இத்தகைய அரசியல்வாதியையும் இன்றைய அரசியல்வாதிகளையும் compare செய்து ஒரு பதிவிடுங்களேன். இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு புதிய பாடமாக இருக்கும்.

அன்பரின் வேண்டுகோளை நிறைவேற்றும் அளவிற்கு எனக்கு அரசியல் ஞானம் இல்லை. ஆகவே அவர் பின்னூட்டத்தை மட்டும் அப்படியே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். கூடவே என் அனுபவங்கள் சிலவற்றையும் பகிர்கிறேன்.

முதலமைச்சர் காமராசரும் பிரதமர் நேருவும் கூட்டமொன்றில் பங்கேற்க மதுரையைத் தாண்டி மகிழுந்தில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

உரையாடலின் நடுவே நினைவு கூர்ந்தவரான நேரு ‘மிஸ்டர் காமராஜ்... உங்க சொந்த ஊர் இந்தப் பக்கம்தானே...?’ என்று கேட்கிறார்.

‘ஆமாங்க. இங்ஙனதான். இன்னும் கொஞ்ச தூரத்தில் வரப்போகிறது’ என்று கூறுகிறார் காமராசர்.

‘அப்படியானால் உங்கள் வீட்டுக்குப்போய் உங்கள் தாயாரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுச் செல்லவேண்டும் அல்லவா...’ என்று நேரு கேட்க ‘அது எதுக்குன்னேன். இப்பவே கூட்டத்துக்கு நேரமாயிட்டு...’ என்று காமராசர் மறுக்கிறார்.

‘நோ நோ... இவ்வளவு தூரம் வந்துவிட்டு உங்கள் தாயாரைப் பார்க்காமல் சென்றால் நன்றாக இருக்காது. நீங்கள் பார்க்க நினைக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் அவர்களைப் பார்த்தேயாக வேண்டும். என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்’ என்று அன்புக் கட்டளையிடுகிறார் நேரு.

‘விடமாட்டேன்னுதீகளே...’ என்ற காமராசர்., வண்டி சற்று தூரம் சென்றதும் ஓட்டுநரிடம் ‘ஏப்பா. வண்டிய இப்படி ஓரங்கட்டு...’ என்று நிறுத்தச் சொல்கிறார்.

அது வீடுகளே இல்லாத பகுதி. சாலையின் இருமருங்கிலும் விவசாய நிலங்கள். அந்நிலங்களில் அப்பகுதிப் பெண்கள் களை பறித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தாயாரைப் பார்க்க வீட்டுக்கு அழைத்துச் செல்லச் சொன்னால் இப்படி அத்துவான வெயிலில் வண்டியை நிறுத்தியிருக்கிறாரே என்ற வினாவுடன் வண்டியை விட்டிறங்குகிறார் நேரு.

காமராசர் களை பறிக்கும் பெண்டிர் கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி ஒருவரை அழைக்கிறார் ‘ஆத்தா... நான்தான் உன் மகன் காமராசு வந்திருக்கேன். உன்னப் பார்க்க நேரு வந்திருக்காரு...’ என்று கூவியிருக்கிறார்.

புன்செய்க் காட்டுப் புழுதியுடன் உழைத்து வியர்த்த முகத்துடன் ‘ஏ காமராசு... வந்திட்டியாப்பா... நல்லாருக்கியா...’ என்று தன் மகனைக் கண்ட மகிழ்ச்சியில் உள்ளம் நெகிழ அருகில் வருகிறார் காமராசரின் தாயார்.

தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள். நேருவைக் காட்டி அறிமுகப்படுத்துகிறார்.

நேருவால் தன் முன்னால் நடந்துகொண்டிருப்பதை நம்ப முடியவில்லை. சிலையாகி நிற்கிறார் !

அவர்தான் நம் அய்யா காமராசர்! 

சேலம் குரு


என் அனுபவம் ஒன்று:

என் நினைவில் நின்ற  அன்றைய ஒரு அரசியல்வாதி பற்றிய நினைவு. எல்லா அரசியல்வாதிகளும் காமராஜர் அல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

நான் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு !956 ல் படித்தபோது நடந்த நிகழ்வு. நான் மாணவ மன்ற செயலாளராக இருந்தேன். மாணவ மன்றத்திற்காக ஒரு கூடுதல் ஹால் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவிற்கு அன்றைய முதல் அமைச்சரைக் கூப்பிட்டிருந்தோம்.

முதல் அமைச்சர் அடிக்கல் நாட்டுவதற்காக புதிதாக ஒரு கலவைச்சட்டியும் ஒரு கொத்தனார் கரண்டியும், இரும்பில், வாங்கி வைத்திருந்தோம். விழாவிற்கு இரண்டு நாள் முன்பு விழா ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த ஒரு முக்கிய மாவட்ட அதிகாரி இந்த கரண்டியைப் பார்த்துவிட்டு, இது சரிப்படாது, முதல் அமைச்சர் பயன்படுத்தும் கரண்டி வெள்ளியில் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

நான் என்ன இது, கொத்தனார் கரண்டி வெள்ளியில் கிடைக்குமா என்று சந்தேகப்பட்டுக்கொண்டு நகைக் கடைக்குப் போனால் அங்கு வெள்ளியில் ரெடிமேடாக இந்தக் கரண்டி வைத்திருந்தார்கள். விசாரித்ததில் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் விழாக்களில் இது சகஜம் என்று சொன்னார்கள். அரசியல்வாதி வந்து போனபிறகு இந்தக் கரண்டியைத் திருப்பிக்கொண்டு வந்தால் வாங்கிக்கொள்வீர்களா என்று கேட்டேன். அந்தக் கடைக்காரர்கள் சிரித்தார்கள். 

எனக்கு அப்போது வயது 21. உலகம் என்றால் வீடு, கல்லூரி மட்டுமே. அவர்கள் ஏன் சிரித்தார்கள் என்று எனக்குப் புரியவில்லை. மந்திரி வந்து போனபிறகு கொண்டு வாருங்கள், வாங்கிக்கொள்கிறோம் என்று சொன்னார்கள்.

சரியென்று ஒரு கரண்டி வாங்கி வந்து வைத்திருந்தோம். விழாவிற்கு மந்திரி வந்து அடிக்கல் நாட்டினார். நான் மேஸ்திரியிடம் மந்திரி போனவுடன் அந்த வெள்ளிக் கரண்டியை பத்திரமாக என்னிடம் கொண்டு வந்து கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தேன். 

விழா முடிந்து மந்திரி போன பிறகு மேஸ்திரியிடம் அந்தக் கரண்டி எங்கே என்று கேட்டேன். தம்பி, அடிக்கல் நாட்டின உடனே மந்திரி அந்தக் கரண்டியை தன் உதவியாளரிடம் கொடுத்தார். அவர் வாங்கி தன் பையில் போட்டு கொண்டு போய் விட்டாரே  என்றார்.  

அப்போதுதான் எனக்கு அந்த நகைக் கடைக்காரர் ஏன் சிரித்தார் என்று புரிந்தது.

அன்றைய அரசியல்வாதி வெள்ளியில் கரண்டி கேட்டார். இன்றைய அரசியல்வாதிகள் தங்கம் அல்லது பிளாட்டினத்தில் கரண்டி கேட்பார்கள் என்று நினைக்கிறேன். இதுதான் அன்றைய அரசியல்வாதிக்கும் இன்றைய அரசியல்வாதிக்கும் உள்ள வித்தியாசம்.

அனுபவம் இரண்டு:

நான் முதல் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது நடந்த நிகழ்ச்சி.

அன்றைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவை எங்கள் கல்லூரிக்கு அழைத்திருந்தார்கள். அனைத்து முதுகலை மாணவர்களும் ஆசிரியர்களும் அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனைத்து மாணவர்களும் நேரு கோட் அணிந்து வரவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். எல்லோரும் புதிதாக அந்த கோட் தைத்தோம். அதனுடன் போட்டோ எடுத்துக்கொண்டோம். இது ஒன்றும் பெரிதல்ல.

அவருக்கு உணவு தயாரிக்க டில்லி அசோகா ஓட்டலில் இருந்து ஒரு சமையல்காரரை விமானத்தில் தருவித்தார்கள். அவருக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சன்மானம். அன்றைய (1958) ஆயிரம் ரூபாய் இன்றைக்கு லட்சம் ரூபாய்க்கு சமம். அவர் செய்த ஆர்ப்பாட்டத்தில் எங்கள் கல்லூரியில் உள்ள அனைத்து பெரிய ஆபீசர்களும் ஆடிப்போய்விட்டார்கள். நேருவுக்குக் கூட அவ்வளவு பயப்படவில்லை. எப்படியோ விழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

அனுபவம் மூன்று:

கேரளாவில் நடந்த ஒரு செமினாருக்குப் போயிருந்தேன்.  கேரள விவசாய மந்திரி கலந்து கொள்வதாக ஏற்பாடு. விழா ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடம் முன்பாக ஒரு அம்பாசிடர் கார் வந்து முகப்பில் நின்றது. வேட்டி சட்டை போட்டவர்கள் இருவர் இறங்கினார்கள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. எந்தப் போலீசும் இல்லை. விழா அமைப்பாளர்கள் அவர்களை வரவேற்று மேடைக்கு அழைத்துச்சென்றார்கள். ஒருவர் மேடையில் அமர்ந்தார் மற்றவர் கீழே முதல் வரிசையில் அமர்ந்தார்.

இவர்கள் யார் என்று விசாரித்தேன். மேடையில் அமர்ந்தவர்தான் விவசாய மந்திரி. கீழே அமர்ந்தவர் அவருடைய உதவியாளர் என்றார்கள். அந்த எளிமையைக் கண்டு நான் அதிசயித்தேன்.