வியாழன், 22 டிசம்பர், 2011

ஈமு கோழி வளர்ப்பு (ஒரு நேரடி ரிப்போர்ட்)


ஈமு கோழி பித்தலாட்டம் என்ற என் பதிவை 1000 பேருக்கு மேல் பார்த்துள்ளார்கள். அவர்களுக்கு என் கடமை ஒன்று இருக்கிறது. களத்தில் (Field) உள்ள நிலைமை என்ன என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டியது என் கடமையல்லவா? நான் ஒரு கடமை வீரன் என்பது உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை என்பது வேறு விஷயம்!

ஈமு கோழி ஆஸ்திரேலியாவின் பறவை. அவைகளை ஐரோப்பியர்கள் இனம் கண்டு அவைகளை வளர்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் ஈமுவின் மாமிசத்தை விரும்பி உண்டார்கள். இந்த மாமிசம் கொழுப்புச் சத்து குறைந்தது. ஆகவே இருதய நோயாளிகளும் உண்ணலாம். மேலும் இந்த மாமிசம் பல மருத்துவ குணங்கள் பொருந்தியது என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த குணத்தை யாரும் ஆராய்ச்சி செய்து பார்க்கவில்லை. இந்த மாமிசம் கிலோ 400 ரூபாய்க்கு விற்கும் என்று சொல்லுகிறார்கள். ஆனால் இதை இந்தியாவில் யாரும் இன்னும் சாப்பிட ஆரம்பிக்கவில்லை.

ஈமு கோழியை இந்தியாவுக்கு யார் கொண்டு வந்தார்கள் என்று அதிகாரபூர்வமான தகவல் ஏதும் இல்லை. 1998 வாக்கில் ஆந்திர பிரதேசத்தில் இதை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். தற்போது அங்கு பெரிய ஈமு பண்ணைகள் இருக்கின்றன. சுமார் பத்து வருடங்களுக்கு முன் இந்த ஈமு தமிழ்நாட்டில் அறிமுகமாயிருக்கிறது. தற்போது பரவலாக தமிழ் நாட்டின் மேற்கு மாவட்டங்களில் பலர் ஈமு வளர்க்கிறார்கள். இதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு விவசாயிகளின் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

இந்த விழிப்பணர்வை வியாபார ரீதியில் உபயோகப்படுத்த பலரும் ஆரம்பித்திருக்கிறார்கள். நான் ஈரோடு சங்கமத்திற்கு போய்வந்த வழியெங்கிலும் நிறைய விளம்பரங்களையும் இரண்டொரு ஈமு பண்ணைகளையும் பார்த்தேன். விளம்பரங்கள் எப்போதும் மக்களை ஈர்க்கும். அதுவும் நல்ல வாசகங்களை உபயோகப்படுத்தினால் அவைகளின் ஈர்ப்பு இன்னும் அதிகம். “குறைந்த முதலீட்டில் மாதம் ஆறு ஆயிரம் பணம் ஈட்டுங்கள்” என்று ஈமு கோழியின் படத்தைப் போட்டு விளம்பரம் செய்து இருக்கிறார்கள். இவர்கள் என்ன திட்டம் வைத்து இருக்கிறார்கள், அதில் உள்ள ஓட்டைகள் என்ன என்று வேறு ஒரு பதிவு போடுகிறேன்.

என்னுடைய உறவினர் ஒருவர் ஆறு வருடங்களுக்கு முன்பு ஈமு பண்ணை ஆரம்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் சென்று பார்த்ததில்லை. அதற்கு அவசியம் வந்ததால் (பதிவு போடத்தான்-வேறு என்ன அவசியம்?) இன்று சென்று பார்த்து வந்தேன். அங்கு நான் அறிந்து கொண்டவைகளை இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


ஈமு வளர்ப்பு ஏறக்குறைய கோழி வளர்ப்பு மாதிரிதான். ஏற்கனவே கோழி வளர்ப்பு பரவலாக இருக்கும் நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களின் சீதோஷ்ண நிலையில் இவைகள் நன்கு வளரும். ஆண் பெண் இணைந்த ஜோடிகளாகத்தான் இவைகளை வளர்க்க வேண்டும். வளர்ந்த ஜோடிகள் விலை ரூ. 30000.00 வரை இருக்கும். பொதுவாக மூன்று மாதக் குஞ்சுகளை வாங்கி வளர்ப்பதுதான் நல்லது. அவைகள்தான் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து வளர்ந்துவரும்.

மூன்று மாதக்குஞ்சுகள் ஒரு ஜோடி 12000 முதல் 15000 வரை விற்கிறது. ஏன் இவ்வளவு விலை என்றால் இவைகளின் முட்டைகளின் தற்போதைய மார்க்கெட் விலை முட்டை ஒன்றுக்கு 1250 ரூபாய். என் உறவினர் ஆறு வருடங்களுக்கு முன் 15 ஜோடி (ஜோடி 15000 ரூபாய்) வாங்கி வளர்க்க ஆரம்பித்திருக்கிறார். அதற்கு நல்ல கெட்டியான வலைக்கம்பி வேலி போட்டிருக்கிறார். ஒரு ஈமு கோழிக்கு சுமார் 20 ச.அடி இடம் வேண்டும். மொத்தம் 600 சதுர அடி. தரையைச் சுத்தமாக வைக்கவேண்டும். இதற்கு ரூ.30000 செலவு செய்திருக்கிறார்.

ஈமு கோழிகளுக்கு சாதாரண கோழித்தீவனமே போடலாம். நன்கு வளர்ந்த கோழிகள் ஒரு நாளில் ஒரு கிலோ (20 ரூ.) தீவனம் சாப்பிடும். தண்ணீர் நிறையக் குடிக்கும். நல்ல தண்ணீர் சுத்தமான பாத்திரத்தில் வைக்க வேண்டும். மூன்று வருடங்களில் கோழிகள் முட்டையிட ஆரம்பிக்கும். அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில்தான் முட்டையிடும். மூன்று நாட்களுக்கு ஒரு முட்டை வீதம் 100 நாட்களில் சுமார் 30 முட்டைகள் இடும். முட்டை கரும் பச்சை நிறத்தில் 600 கிராம் எடையில் இருக்கின்றன. முட்டையை தற்போது பெரிய அடைகாக்கும் நிறுவனங்கள் முட்டை ஒன்றுக்கு 1250 ரூபாய் என்று விலை கொடுத்து பண்ணைக்கே வாரம் ஒரு முறை வந்து வாங்கிச் செல்லுகிறார்கள்.



இந்தக் கோழிகள் 40 வருடம் வரை வாழும் என்று சொல்கிறார்கள்.

வரவு செலவு விவரங்கள்: 30 கோழிகளுக்கு.

வேலி அமைக்க                     :     ரூ.   30,000
30 கோழிகளின் விலை              :     ரூ.  1,80,000
30 கோழிகளை 3 வருடம் வளர்க்க    :    ரூ. 3,00,000
                                        ---------------------------
                         மொத்தம்  :     ரூ.  5,10,000
                         ஏறக்குறைய      5 லட்சம்

நான்காவது வருடத்திலிருந்து வரவு செலவு;

கோழி ஒன்றுக்கு ஒரு கிலோ தீவனம் @ ரூ.20 வீதம்
               30 x 20 x 365              :     ரூ.  2,19,000
தினம் ஒரு பெண் கூலியாள் @ 150 ரூ.   :     ரூ   555,000
          வேறு சிலவுகள்                :     ரூ   26,000
                                                    ----------
                                   மொத்தம்        3,00,000
                              அதாவது            3 லட்சம்

கோழி ஒன்றுக்கு 30 முட்டை வீதம் 15 பெட்டைக்கோழிகள் இடும்
முட்டைகள் @ 1250 ரூ.=  15 x 30 x 1250=  ரூ. 5,62,500

                    நிகர லாபம்         ரூ. 2,62,500
                         அதாவது      2.5 லட்சம்

மொத்தம் 5 லட்சம் முதலீட்டுக்கு வருடம் ஒன்றுக்கு 2.5 லட்சம் லாபம் கிடைக்கிறது.

இது மிகவும் லாபகரமான தொழிலாகத்தான் தெரிகிறது. ஆனால் இதில் கண்ணுக்குத் தெரியாத நுணுக்கங்கள் இருக்கின்றன. இந்தப் பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் ஊக்கமளித்தால் அடுத்த பதிவில் அந்த விவரங்களை எழுதுகிறேன்.




33 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்!

    //இது மிகவும் லாபகரமான தொழிலாகத்தான் தெரிகிறது. ஆனால் இதில் கண்ணுக்குத் தெரியாத நுணுக்கங்கள் இருக்கின்றன.//

    ஒரு புதிய உயிரினம் அதுவும் ஐந்து அல்லது ஆறு அடி உயரம் உள்ள நெருப்புக் கோழி போன்ற ஈமு கோழிக்களால் பறவைக் காய்ச்சல் போன்ற அல்லது புதிய வகை நோய்கள் நாட்டில் பரவுமா என்பதனையும் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
    ஈமு கோழி பற்றிய தங்களது சென்ற பதிவில் ஒருவருக்கு மறுமொழியாக,
    //நெருப்புக் கோழியும் ஈமு கோழியும் மரபு ரீதியாகத் தொடர்புடையவை. ஆனால் இரண்டும் வேறு வேறு.
    ஈமு கோழி சாது என்று உங்களுக்கு யார் சொன்னது? புது ஆள் போனால் ஒரே கொத்தில் ஆள் சாய்ந்து விடுவான் தெரியுமுங்களா? //
    சொல்லி இருந்தீர்கள்.தங்கள் ஈமு கோழி பற்றிய விழிப்புணர்வு கட்டுரைகள் பயன் உள்ளவை தொடர்ந்து மக்களுக்காக எழுதவும். நன்றி!

    பதிலளிநீக்கு
  3. நேரடியாக சென்று பல தகவல்களை சேகரித்து எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள் பாஸ்

    பதிலளிநீக்கு
  4. Sir,useful information.Waiting for business details in next post.


    I'm from Namakkal,in our area the new concept is little bit different,just we need to take care of "Emu" at our location and they will give some maintenance amount per month.

    பதிலளிநீக்கு
  5. கோழி ஒன்றுக்கு ஒரு கிலோ தீவனம் @ ரூ.20 வீதம்
    30 x 20 x 365 : ரூ. 2,19,000
    தினம் ஒரு பெண் கூலியாள் @ 150 ரூ. : ரூ 555,000
    வேறு சிலவுகள் : ரூ 26,000
    ----------
    மொத்தம் 3,00,000
    அதாவது 3 லட்சம்



    கணக்கு தப்பா இருக்கே சாமி சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 55000 என்பதை தவறாக குறிப்பிட்டுவிட்டார்.

      நீக்கு
  6. கண்ணுக்குத் தெரியாத நுணுக்கங்களை நிச்சயம் சொல்லுங்கள் சார்..

    பதிலளிநீக்கு
  7. நானும் ஒரு பதிவில் படித்தேன்,இவ்வளவு விளக்கம் இல்லை.....,அழகாக தொகுத்து உள்ளீர்கள் அய்யா..நன்றிகள் உங்களுக்கு...

    பதிலளிநீக்கு
  8. ஈமு கோழி வளர்க்கும் ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தை தினமலர் ஒரு மினி புத்தகமாகவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மதுரையில் இலவச இணைப்பாக தந்தது.
    ஒரு புத்தகத்தில் விளம்பரம் செய்யும் அளவுக்கு ஈமு வளர்ப்பில் லாபம் இருக்கிறதா? அடுத்த பதிவு விரைவில்...


    வாசிக்க:
    முல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரையில் கடைகள் முழுஅடைப்பு, ஆட்டோக்கள் ஓடவில்லை.

    பதிலளிநீக்கு
  9. ஐயா கணக்கு எங்கயோ உதைக்குதே
    ஒரு ஆண்டு வளர்க்க 3,௦௦,௦௦௦ எனில் முதல் 3 ஆண்டு வளர்க்க 9,00,000 ஆகும் அல்லவா...

    என் புரிதல் தவறெனில் மன்னிக்கவும்.

    Typo also there instead of 55,000 its 555,0000

    பதிலளிநீக்கு
  10. //இந்தப் பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் ஊக்கமளித்தால் அடுத்த பதிவில் அந்த விவரங்களை எழுதுகிறேன்//.
    பலனளிக்கும் பதிவுதான்.பின்னூட்டங்கள் ஊக்கமளிக்காவிட்டாலும் பராவாயில்லை.அடுத்த பதிவில் விபரங்களை கூறுங்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  11. //கோவை நேரம் said...
    கோழி ஒன்றுக்கு ஒரு கிலோ தீவனம் @ ரூ.20 வீதம்
    30 x 20 x 365 : ரூ. 2,19,000
    தினம் ஒரு பெண் கூலியாள் @ 150 ரூ. : ரூ 555,000
    வேறு சிலவுகள் : ரூ 26,000
    ----------
    மொத்தம் 3,00,000
    அதாவது 3 லட்சம்

    கணக்கு தப்பா இருக்கே சாமி சார்//

    அது வந்துங்க.. என்னோட தமிழ் font ரெண்டு நாளா என்ன வாதிக்குதுங்க. நெம்பர்கள் சரியா வர மாட்டேங்குது. 555,000 தப்புங்க. 55,000 தான் கரெக்ட்ங்க. அப்போ கணக்கு சரியா வருதுங்களா?

    பதிலளிநீக்கு
  12. //கிறுக்கன் said...
    ஐயா கணக்கு எங்கயோ உதைக்குதே
    ஒரு ஆண்டு வளர்க்க 3,௦௦,௦௦௦ எனில் முதல் 3 ஆண்டு வளர்க்க 9,00,000 ஆகும் அல்லவா...

    என் புரிதல் தவறெனில் மன்னிக்கவும்.//

    உங்கள் புரிதலில் ஒன்றும் தவறில்லை நண்பரே. நான்தான் சரியாகச் சொல்லவில்லை.

    ஒரு ஆண்டு வளர்க்க மூன்று லட்சம் என்ற கணக்கு நன்கு வளர்ந்த கோழிகளுக்குத்தான். குஞ்சுகளுக்கு வளரும் வரை அவ்வளவு தீனி சாப்பிடாதல்லவா? அதனால்தான் குறைந்த செலவு. இது ஒரு தோராயமான மதிப்புத்தான்.

    பதிலளிநீக்கு
  13. //Thirumalai Kandasami said...
    Sir,useful information.Waiting for business details in next post.
    I'm from Namakkal,in our area the new concept is little bit different,just we need to take care of "Emu" at our location and they will give some maintenance amount per month.//

    இது புரமோட்டர்கள் மூலம் ஈமு வளர்த்தால் அப்போது அவர்கள் சொல்லும் திட்டம். நீங்கள் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால் அவர்கள் உங்களுக்கு 6 கோழிக் குஞ்சுகள் (3 மாதம் ஆனவை). அவைகளுக்கு ஷெட் அவர்களே போட்டுக்கொடுப்பார்கள். தீவனம் அவர்களே கொடுப்பார்கள். மாதாமாதம் வெட்டினரி டாக்டர் வந்து பார்த்துக்கொள்வார். இவையெல்லாம் போக, உங்களுக்கு பராமரிப்பு செலவாக மாதம் 6 ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள்.

    ஆனால் இந்த நடைமுறை அவர்களுக்கு கட்டுபடியாகுமா என்பது பற்றி தனிப் பதிவில் எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. ////பிடிக்காதவர்கள் என்னைத் தாராளமாகத் திட்டலாம் - நம்மூர்ல மட்டும்தான் எந்த சாமியையும் தாராளமா திட்டலாம்!!! :)

    பதிலளிநீக்கு
  15. அய்யா உங்களின் அடுத்த பதிவை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    சின்னையா -துபாய்

    பதிலளிநீக்கு
  16. //நிலவன்பன் said...
    ////பிடிக்காதவர்கள் என்னைத் தாராளமாகத் திட்டலாம் - நம்மூர்ல மட்டும்தான் எந்த சாமியையும் தாராளமா திட்டலாம்!!! :)//

    வாங்க, நிலவன்பன், தங்கள் வரவு நல்வரவாகுக. சாமியையும் திட்டலாம், கந்தசாமியையும் திட்டலாம். அப்படி என்ன திட்டிப்போடப்போறீங்க?

    பதிலளிநீக்கு
  17. //chinnu said...
    அய்யா உங்களின் அடுத்த பதிவை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    சின்னையா -துபாய்//

    போட்டுடலாங்க, உங்க பேச்சுக்கு மறுப்பு சொல்லுவேனுங்களா?!

    பதிலளிநீக்கு
  18. நல்ல பதிவு. நேரில் சென்று பார்த்து எழுதியது மிக்க மகிழ்ச்சி.
    வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  19. THANKYOU UNKALIDAM INNUM ETHIRPARKIROM
    BY
    SENTHIL KUMAR

    பதிலளிநீக்கு
  20. நேரடியாக சென்று பல தகவல்களை சேகரித்து எழுதியிருக்கீங்க..
    very good effort..
    am waiting for next emu business post...
    Thank u

    பதிலளிநீக்கு
  21. கும்பிடுறேன் சாமி
    அது இல்ல என் பெயர் பிரதீஷ் தகவல்கள் அனைத்தும் அருமை யார் எப்படி போனா எனக்கு என்னவென்று இல்லாமல் அக்கறையோடு விசாரித்து ஒரு நல்ல தகவல் தந்திருக்கீங்க அதற்க்காக என் நன்றி களை தெரிவித்துக்கொள்கிறேன் ,
    நீங்கள் கூரியது போல நல்ல லாபகரமான தொழில் அப்புறம் தீவனம் எல்லா நால்லயும் 20 ரூ ஆகல செப்டம்பர்ல இருந்து அதன் அளவு பிப்ரவரி வரைக்கும் பாதியாக குறைந்துவிடுகிறது 30 கோழிக்கு பாத்தீங்கன்னா ஒரு 155000 வ்ரும் வேலைக்கு ஆள் வைத்துதான் பார்க்கவேண்டும் என்ற அவசியம் இல்லை வீட்டில் இருப்பவர்களே பார்த்துக்கொள்ளலாம் 100 கோழி வரை வருஷத்துக்கு 30 பறவைக்கு 2,00,000 வரை செலவு இந்த பறவைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் அதனால மருத்துவ செலவு அதிகமா எதுவும் இல்ல
    5,62,500
    2,00,000
    ---------
    3,62,000 இலாபம்
    அதையே அடைகாப்பான் மூலமாக அடை வைத்து 3 மாதம் கழித்து விற்றால் 450 முட்டைகளில் 400 குஞ்சு பொறித்தால்கூட 400x7500=3000000 ஆகிறது கூட்டி கழித்து பாருங்கள் கண்க்கில் கொஞ்சம் வீக்

    பதிலளிநீக்கு
  22. பிரதீஷ்,
    மேலதிக தகவல்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

    1. நான் கவர்மென்ட்டிலிருந்து ரிடைர்டு ஆன ஆசாமி. எதையும் நானாகச் செய்யமாட்டேன். ஆட்களுக்கு ஆர்டர் போட்டுத்தான் பழக்கம். அந்தப் பழக்கத்தில் ஒரு ஆள் கூலியைச் சேர்த்து விட்டேன். அதை நாமே செய்தால் அந்தக் கூலி மிச்சம்தான்.

    2. முட்டைகளை நாமே குஞ்சு பொரிக்க வைத்து விற்பது என்பது வேறு ஒரு தொழில் என்றே சொல்லலாம். காரணம் அதற்கு வேண்டிய இன்குபேட்டர், தொழில் நுடபம், திறமையான,பயிற்சி பெற்ற ஆட்கள், தேவையான இடம் என்று ஏகப்பட்ட தேவைகள் இருக்கின்றன. அதைச் செய்தால் ஏகப்பட்ட லாபம் கிடைக்கும்தான். முடிந்தவர்கள் கட்டாயம் செய்யலாம்.

    3. கணக்குல ஒண்ணும் வீக் மாதிரி தெரியலயே!

    பதிலளிநீக்கு
  23. மிக சிரத்தை எடுத்து எழுதியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

    இந்த விளம்பரங்கள்தான் நம்மை பயமுறுத்துகின்றன. இது சில ஆண்டுகளுக்கு முன் தேக்கு மர வளர்ப்பு விளம்பரங்கள் போல் தோன்றுவதால், நமக்கு பயம் வருவது இயற்கையே!

    காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  24. டி‌வியில் வரும் விளம்பரங்களை பார்த்து, ஈமு பற்றிய விபரம் அறிய விரும்பினேன். தங்களது கருத்துக்கள் எனக்கு மிகுந்த த்ரிப்தியை தந்துள்ளன.

    பதிலளிநீக்கு
  25. தங்களது கருத்துக்கள் எனக்கு மிகுந்த த்ரிப்தியை தந்துள்ளன.
    Reply

    பதிலளிநீக்கு