சனி, 6 நவம்பர், 2010

கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களின் கல்யாண முறைகள்.


அன்புள்ள வாசகப்பெருமக்களுக்கு,

கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களின் கல்யாண முறைகளைப் பற்றி என்னுடைய இன்னொரு பிளாக்கில் (மசக்கவுண்டன் கிறுக்கல்கள்) எழுதி வருவது நிறையப் பேருக்குத் தெரியும். என்னை ஜாதி வெறி பிடித்தவனென்று தூற்றினாலும் பரவாயில்லை என்றுதான் இந்தப்பதிவை எழுதுகிறேன். காரணம், கவுண்டர்களின் கல்யாணங்களில் தாலி கட்டி முடித்தபிறகு "குடிமகன்" அதாவது நாவிதர், மங்கல வாழ்த்து பாட்டு சொல்வது முக்கியமானது.

பலர் கல்யாணத்தின் போது அவசரத்தின் காரணமாக இந்த மங்கல வாழ்த்தை முழுமையாகக் கேட்டிருக்க மாட்டார்கள். இந்தப் பாட்டு கம்பர் எழுதிக்கொடுத்ததாக நம்பப்படுகிறது. கவுண்டர்களின் கல்யாண முறைகளைப்பற்றிய முழு விவரங்களும் இந்தப்பாட்டில் இருக்கிறது.

எல்லோரும் இந்தப்பாட்டை முழுமையாக கேட்டு பயன் பெறும் வகையில், பாட்டின் வசனத்தையும் பாட்டாகப் பாடினதையும் கீழே கொடுத்திருக்கும் பதிவில் போட்டிருக்கிறேன்.
யாவரும் கேட்டு இன்புற்று, தங்கள் கருத்துகளை மறக்காமல் பின்னூட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மங்கல வாழ்த்து பாடல் – வசனமும் பாடலும்

http://masakavunden.blogspot.com/2010/11/blog-post_05.html

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.