திங்கள், 31 டிசம்பர், 2012

இந்திய நாடு எப்போது உருப்படும்?


வருடக் கடைசியில் திரும்பிப் பார்த்தால் விரக்தியே மிஞ்சுகிறது. மக்கள் திருந்தி, இந்திய நாடு மறுமலர்ச்சி அடையவேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகிறோம்.

ஆனால் அப்படி நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் இன்றைய நடைமுறையில் இருக்கிறதா? பல பதிவர்கள் மிக நம்பிக்கையுடன் பதிவுகள் எழுதுகிறார்கள். இந்தியா மறுமலர்ச்சி அடையும், அடைந்தே தீரும், என்றெல்லாம் எழுதுகிறார்கள். இந்தியா கண்டிப்பாக மறுமலர்ச்சி அடையும். எப்போது?

அடிப்படையிலிருந்து ஆரம்பமாக வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். இதற்கு நல்ல தலைவர்கள் வேண்டும். எப்போது நல்ல தலைவர்கள் உண்டாவார்கள். மக்கள் சகிக்க முடியாத துன்பங்களுக்கு ஆளாகும்போது அப்படிப்பட்ட தலைவர்கள் ஏற்படுவார்கள்.

ஆனால் நம் நாடு இவ்வளவு சீர்கெட்டிருந்தாலும் மக்களுக்கு வேண்டிய உணவு, உடை, உறைவிடம் கிடைக்கிறது. இந்த விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் விழிப்புடன் இருக்கிறார்கள். அடிமட்ட மக்களின் தேவைகள் எப்படியாவது அவர்களுக்கு கிடைக்கும்படியான திட்டங்களை நடைமுறைப் படுத்தி விடுகிறார்கள்.

அப்படி தங்களுடைய ஆதாரத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவை எந்தக் கஷ்டமும் இல்லாமல் கிடைத்து விடுவதால் அவர்கள் இந்த அத்தியாவசியத் தேவைகளுக்கு அப்பாற்பட்டவைகளைத் தேட ஆரம்பித்து விடுகிறார்கள். அதில் சேர்ந்ததுதான் பலாத்காரம். வழிப்பறி, கொலை, கொள்ளை ஆகியவை.

கனவு காண்பதில் உள்ள சுகம் தனியானதுதான். திரு. அப்துல் கலாம் அவர்கள் இதற்கு வழிகாட்டிவிட்டுப் போயிருக்கிறார். நாமும் அந்த வழியில் சென்று இன்புறுவோம்.