சனி, 7 பிப்ரவரி, 2015

ஒரு அவசர உதவி

என் தளத்தில் ஏதோ ஒரு வேகத்தில் பின்னூட்டப் பெட்டியை மூடிவிட்டேன். ஆனால் நண்பர்கள் வேண்டுகோளுக்காக அதைத் திறக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

எனக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் உபயோகித்து விட்டேன். ஆனால் பின்னூட்டப் பெட்டியைத் திறக்க முடியவில்லை. டெம்ப்பிளேட்டை மாற்றிப் பார்த்து விட்டேன். பலனில்லை.

யாராவது உதவிக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பின் குறிப்பு; இந்த வேடிக்கையைப் பாருங்க. உதவி வேணும்னு நான் பதிவு போட்டவுடனே கூகுள்காரன் பயந்து போயி பின்னூட்டப்பெட்டியைக் கொண்டு வந்து கொடுத்துட்டான். நண்பர் ஸ்ரீராம் அவர்களும் ஏதோ மந்திரம் போட்டிருக்கார். முதலில் அவருக்கு நன்றி. அப்புறம் கூகுளுக்கும் நன்றி.