வெள்ளி, 8 மே, 2015

இந்த வருட பிளஸ் 2 முடிவுகள்.

                                            Image result for +2 students
நேற்று பிளஸ் 2 முடிவுகள் வெளியாகின. என் பேரனின் மார்க்குகள் அவ்வளவு தரமானதாக இல்லை. இந்த வருடம் பொதுவாகவே எல்லோரும் கம்மி மார்க்தான் என்று சொல்லுகிறார்கள். வீட்டில் எல்லோருக்கும் வருத்தம். ஆனால் என்ன செய்ய முடியும்? இருக்கும் மார்க்குக்கு தகுந்தமாதிரி மேற்படிப்பைத் தொடர வேண்டியதுதான்.

ஆத்மாவை அறிந்து கொள்ள பலருக்கும் விருப்பமில்லை என்று உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். இந்த மனிதப் பிறவி எடுத்ததே தன்னை அறிவதற்காகத்தான் என்று ஆன்மீகத் தலைவர்கள் காலம் காலமாக கூறிக்கொண்டு வருகிறார்கள்.

தன்னை அறிவது என்பது ஆத்மாவை அறிவதுதான். அதை மிகவும் எளிதாக சிறு குழந்தைக்குக் கூடப் புரியும் வகையில் கொடுத்தால் கொள்வாரில்லை. போகட்டும், ஆத்மாவின் தலைவிதி இன்றைய நாளில் அவ்வளவுதான்.

நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம். இந்த ஆத்மா எனப்படுவதும் உயிர் எனப்படுவதும் ஒன்றுதானா அல்லது வேறு வேறா? வேலை இருப்பவர்கள் இந்தக் கேள்வியை விட்டு விட்டு அவரவர்கள் வேலையைப் பார்க்கவும். மற்றவர்கள் மட்டும் இதை யோசித்து மூளையைக் குழப்பவும்.

நாளையிலிருந்து ஏதாவது உருப்படியான பதிவு போடுவதற்கு சப்ஜெக்ட் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.