சரி, இதற்கு என்ன பண்ணலாம் என்று ஆராய்ச்சியில் இறங்கினேன் (பழைய தொழில் புத்தி?). இந்த ஆராய்ச்சியில் நான் கண்டு பிடித்தவைகளை புதிய பதிவுலக நண்பர்களுக்காக இங்கே கொடுக்கிறேன்.
1. நீங்கள் குறைந்தது ஒரு பத்து பதிவுலக நண்பர்களையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
2. அவர்களுடன் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்துக்கொள்ள வேண்டும். அதாவது உங்கள் பதிவிற்கு அவர்கள் பின்னூட்டம் போடவேண்டும். பதிலுக்கு நீங்கள் அவர்கள் பதிவிற்கு பின்னூட்டம் போட ஒத்துக்கொள்ள வேண்டும்.
3. நீங்கள் ஒரு பதிவை இற்றைப்படுத்தியவுடன் இந்த பத்து பேருக்கும் மின்னஞ்சல் மூலம் தகவல் கொடுத்திட வேண்டும்.
4. உடனே மளமளவென்று உங்கள் பதிவிற்கு பின்னூக்கள் குவிந்து விடும். சில சமயங்களில் ஆர்வக்கோளாறு காரணமாக ஒருவரே பத்துப்பதினைந்து பின்னூட்டங்கள் போட்டு விடலாம. கண்டு கொள்ளாதீர்கள்.
5. எல்லா பின்னூ’க்களுக்கும் தவறாது பதில் பின்னூட்டங்கள் உடனே போட்டு விடுங்கள். ஆறின கஞ்சி பழங்கஞ்சி.
6. அதேபோல் உங்கள் நண்பர்களின் பதிவுகளைப்பற்றிய விவரங்களும் உங்களுக்கு மின்னஞ்சலில் வரும். அவைகளுக்கு உடனுக்குடன் பின்னூட்டம் போடுவது உங்கள் கடமை.
7. இதையெல்லாம் நேரத்துடன் செய்யவேண்டுமென்றால் சிறிய தியாகங்கள் செய்யவேண்டியிருக்கும். ஒன்றுமில்லை. நீங்கள் தூங்கக்கூடாது. அவ்வளவுதான்.
அவ்வளவுதான், நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக