பதிவுலகத்தில் எழுதும் அனைவரும் பதிவர்களே. பதிவுலகத்தின்
நெளிவு சுளிவுகளை அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம் அல்லது அவர்களின் பதிவுலகப் பயணத்தில்
அறிந்து கொள்வார்கள். ஆகவே பதிவர்களுக்கு அறிவுரை கூற எனக்கு அருகதை இல்லை. தேவையும்
இல்லை. ஆனாலும் நான் இந்தப் பதிவை எழுதக் காரணம் என்னவென்றால் நான் கூறப் போகும் குறிப்புகள்
நான் என்னுடைய அனுபவத்தில் உணர்ந்தவை. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்.
1. பதிவுகளை
எவ்வளவு முடியுமோ அவ்வளவு எளிமையாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அவை சீக்கிரம் தரவிறங்கும்.
பார்வையாளர்களுக்கு பதிவுகளுக்காக அதிக நேரம் காத்திருக்க பொறுமை இருக்காது. வேறு தளத்திற்கு
சென்று விடுவார்கள்.
2. பதிவுகளின்
எழுத்துக்கள் பெரிதாகவும், வரிகளுக்கிடையில் உள்ள இடைவெளி போதுமானதாகவும் இருக்கட்டும்.
இதை மிக எளிதாக செயல்படுத்தலாம். Edit Template
சென்று அதில் Line height 1.2 என்று இருப்பதை 2.0 என்று மாற்றவும். அதே போல் Font size 110% என்று இருப்பதை 120 அல்லது 130 என்று மாற்றவும்.
தவிர வெள்ளை பின்புலத்தில் கருப்பு எழுத்துகள்தான் படிப்பதற்கு மிகவும் எளிதானது.
3. பதிவுகளின்
தலைப்பைப் பார்த்துத்தான் பார்வையாளர்கள் பதிவுக்குள்ளே வருகிறார்கள். ஆகையால் தலைப்பு
கவர்ச்சியாக இருப்பது அவசியம். பூக்கடைக்கும் விளம்பரம் தேவைப்படும் காலம் இது.
4. எல்லோரும்
தங்கள் பதிவுகளை அதிகம் பேர் படிக்கவேண்டும் என்கிற ஆவலுடன்தான் எழுதுகிறார்கள். அப்படி
எழுதப்படும் பதிவில் ஏதாவது ஒரு உபயோகமான செய்தி அல்லது பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு
விஷயம் இருக்கவேண்டும்.
5. தமிழில்
எழுதும் அனைவரும் தமிழை பிழையில்லாமல் எழுத முயல வேண்டும். ற,ர வின் உபயோகம், ல,ள,ழ இவைகளின் வித்தியாசம், சந்தி விதிகள், ஆகியவைகளை
உணர்ந்து பயன் படுத்தினால் உங்கள் பதிவின் தரம் கூடும்.
6. பதிவுகளின்
எழுத்து நடை சரளமாக, எளிதில் புரிந்து கொள்ளும்படியாக இருக்கவேண்டும். பதிவை எழுதி முடித்தவுடன் ஒரு தடவைக்கு
இரு தடவை படித்துப் பாருங்கள். பிழைகளைக் களைய இது உதவும்.
7. பதிவுகள்
அதிக நீளமாக இருந்தால் படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும். இன்றுள்ள அவசர கதியில் பதிவுகளுக்காக
செலவிடப்படும் நேரத்தில் அதிக பதிவுகளைப் படிப்பதற்கே அனைவரும் விரும்புவர்.
8. போட்டோக்கள்
பதிவுகளுக்கு அழகு சேர்க்கின்றன என்பது முற்றும் உண்மை. அதற்காக அதிகப் போட்டோக்களை
சேர்த்தால் அனைத்து போட்டோக்களையும் முழுவதுமாக ரசிப்பது சிரமமாகி விடுகிறது.
9. பதிவர்கள்
தங்களுக்குப் பிடித்த தளங்களில் “பின்தொடர்பவர்கள்” ஆகிறார்கள். அவர்களுடைய Dash
Board ல் அந்த தளங்களின் பதிவுகள் தானாகவே தெரிகின்றன. ஆகவே தனியாக email அனுப்புவது
தேவையில்லை. Word Verification இருப்பது பெரும்பாலான சமயங்களில் பின்னூட்டமிடுபவர்களுக்கு
இடைஞ்சலாய் இருக்கிறது.
10. தங்கள்
பதிவுகளில் பின்னூட்டங்கள், ஹிட்ஸ்கள், முதலானவை அதிகரிக்கவேண்டும் என்று விரும்புபவர்கள்
அதற்குண்டான தளங்களுக்குச் சென்று அதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.
இப்பதிவைப் பார்வையிட்டதற்கு நன்றி.
அன்புள்ள (இல்லையென்றாலும் பரவாயில்லை)சக பதிவர்களுக்கு,
பதிலளிநீக்குஇந்தப் பதிவைப் படித்தவுடன் ஆட்டோ அனுப்பவேண்டும் என்று நினைப்பவர்களெல்லாம் ஒரு ஓரமாக நிற்கவும். அவருகளுக்கு ஆட்டோ சார்ஜ் கொடுக்கப்படும்.
என்னை ஏதாவது உபகரணத்தின் மூலம் அடிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் மறு பக்கம் நிற்கவும். அவர்களுக்கு எந்த உபகரணம் வேண்டுமோ அது சப்ளை செய்யப்படும். ஒரே ஒரு வேண்டுகோள். கூட்டாக எதுவும் செய்ய வேண்டாம். தனித்தனியாக வரவும்.
இப்போதுதான் ஒரு மிகப்பிரபல பதிவரின் ஒரு பதிவைப் பார்த்தேன். அவரும் என்னைப்போலவே ஒரு புலம்பல் பதிவு போட்டிருக்கிறார். அவருக்கு 200 பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன.
பதிலளிநீக்குஎன்னுடைய ஏக்கமெல்லாம் நான் எப்போது அந்த நிலையை அடைவேன் என்பதுதான்?!
இந்த முயற்சிக்கு ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
குறிப்பாக ஐடியா மணி கவனிக்கவும்.
nice idea!
பதிலளிநீக்கு// பூக்கடைக்கும் விளம்பரம் தேவைப்படும் காலம் இது.//
பதிலளிநீக்குஏன்னா நாம விற்பது காகிதப் பூ
:)
அய்யா வணக்கம்
பதிலளிநீக்குநல்ல தேவையான கருத்துகள் நன்றி.
ஹி..ஹி. ரைட்டு.....
பதிலளிநீக்குரைட்டுங்க அய்யா!
பதிலளிநீக்குபதிவுலக நண்பர்களுக்கு அவசியமான பகிர்வு, பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஸார்...நான் நெனச்சதை...செய்வதை..அப்பிடியெ சொல்ரீங்களே..ஒரே “ வேவ் லெந்த்தோ “
பதிலளிநீக்குநீங்க சொல்லி இருப்பது எல்லாமே உண்மைதாங்க.
பதிலளிநீக்குபதிவர்கள் எல்லாருமே கவனத்தில் கொள்ள வேண்டிய பதிவு. நன்றி
>. Word Verification இருப்பது பெரும்பாலான சமயங்களில் பின்னூட்டமிடுபவர்களுக்கு இடைஞ்சலாய் இருக்கிறது
பதிலளிநீக்குஎல்லாம் அருமை என்றாலும் மேலுள்ளது எனக்குத் தாமதமாகத்தான் (அனுபவ வாயிலாக) புரிந்தது.
//இப்போதுதான் ஒரு மிகப்பிரபல பதிவரின் ஒரு பதிவைப் பார்த்தேன். அவரும் என்னைப்போலவே ஒரு புலம்பல் பதிவு போட்டிருக்கிறார். அவருக்கு 200 பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன.
பதிலளிநீக்குஎன்னுடைய ஏக்கமெல்லாம் நான் எப்போது அந்த நிலையை அடைவேன் என்பதுதான்?!
இந்த முயற்சிக்கு ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.//
அதற்கு நீங்களும் அந்தப் பதிவரைப் போலவே, சகபதிவர்களின் இடுகைகளுக்கு, குறிப்பாக புதிய பதிவர்களின் இடுகைக்குச் சென்று அவர்களை உற்சாகப்படுத்தி இரண்டொரு வார்த்தைகள் எழுத தொடங்குங்கள் ஐயா!
பிற பதிவர்களைப் பாராட்டுகிற பெருந்தன்மையைக் கொண்டிருப்பதே அதிக பின்னூட்டங்கள், அதிக ஹிட்ஸ்-கள் கொண்ட பதிவர்களின் வெற்றியின் பொதுவான காரணம் என்று உறுதியாக நம்புகிறேன்.
அனுபவசாலி பதிவர்களின் வருகை புதியவர்களுக்கு அவர்கள் மீது அளப்பரிய அபிமானத்தை ஏற்படுத்தும். அவர்களும் பின் தொடர ஆரம்பிப்பார்கள்; பின்னூட்டம் இடுவார்கள்.
வலையுலகம் என்பது பரஸ்பர அபிமானிகளின் சமூகம் ( Mutual Admiration Society) என்பதை இன்னும் நிறைய பதிவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது ஐயா.
super info
பதிலளிநீக்குஉங்கள் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் இடம்பெற செய்து நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம்பெற வேண்டுமா? see this blog http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html
பதிலளிநீக்குஉபயோகமான தகவலுக்கு நன்றி
பதிலளிநீக்குசூப்பரா ஐடியா தந்துருக்கீங்க பாஸ் நன்றி....
பதிலளிநீக்குஎன்னை ஏதாவது உபகரணத்தின் மூலம் அடிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் மறு பக்கம் நிற்கவும். அவர்களுக்கு எந்த உபகரணம் வேண்டுமோ அது சப்ளை செய்யப்படும். ஒரே ஒரு வேண்டுகோள். கூட்டாக எதுவும் செய்ய வேண்டாம். தனித்தனியாக வரவும். //
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா சிரிச்சி முடியலை பாஸ்.....
ஆஹா டாக்டர் புலப்பம் பெரும் புலப்பாமா இருக்கே.
பதிலளிநீக்குகவலை படதாதீங்க கமெண்ட்கள்வரும்
மிகவும் அருமையான தேவையானதொரு பதிவு.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றிகள். vgk
நல்ல பதிவு.
பதிலளிநீக்குநல்ல உத்திகள்.
நன்றி ஐயா.
தெரிந்த செய்திகள் என்ற போதும் ஒரு சேர வாசிக்கையில் நன்றாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. தங்களது துவக்க வரிகளில் தெரிகின்ற தாழ்ச்சியால் உயர்ந்து நிற்கிறீர்கள். வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குபூக்கடைக்கு விளம்பரம் தேவை என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. ஆனால் விளம்பர யுக்தி தான் புரியாத புதிராய் உள்ளது. :)
சார் கரெக்டா சொன்னீங்க... இதை நான் பின்பற்றி வருகிறேன். ஆனால் 7,8 ஆவது பாயிண்டை எவ்வளவு முயன்றும் பின்பற்ற முடியவில்லை.
பதிலளிநீக்கு//MANO நாஞ்சில் மனோ said...
பதிலளிநீக்குஎன்னை ஏதாவது உபகரணத்தின் மூலம் அடிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் மறு பக்கம் நிற்கவும். அவர்களுக்கு எந்த உபகரணம் வேண்டுமோ அது சப்ளை செய்யப்படும். ஒரே ஒரு வேண்டுகோள். கூட்டாக எதுவும் செய்ய வேண்டாம். தனித்தனியாக வரவும். //
ஹா ஹா ஹா ஹா சிரிச்சி முடியலை பாஸ்.....
//
யாராச்சும் என்ன உபகரணங்கள் என்று கேட்டீங்களா? சரி, நானே சொல்லிடறேன். ஆண்களாயிருந்தால்-நல்ல பழைய செ..பு. (நான் ரொம்ப பண்பாளன். அதனால் செருப்பு என்று முழுதாகச் சொல்லமாட்டேன்.)
பெண்களுக்கு பழைய சீமாறு, சாணி, பழைய முறம், ஓட்டைக் குடம், பூரிக்கட்டை.
இவைகளையெல்லாம் மொத்தமாக வாங்க டெண்டர் விட்டாயிற்று. டெண்டரில் பங்கெடுப்பவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு//பாலா said...
பதிலளிநீக்குசார் கரெக்டா சொன்னீங்க... இதை நான் பின்பற்றி வருகிறேன். ஆனால் 7,8 ஆவது பாயிண்டை எவ்வளவு முயன்றும் பின்பற்ற முடியவில்லை.//
பரவாயில்லைங்க. எது முடியுதோ அதை செய்தால் போதுங்க.
வருணன் said...
பதிலளிநீக்குதெரிந்த செய்திகள் என்ற போதும் ஒரு சேர வாசிக்கையில் நன்றாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. தங்களது துவக்க வரிகளில் தெரிகின்ற தாழ்ச்சியால் உயர்ந்து நிற்கிறீர்கள். வாழ்த்துக்கள்...
பூக்கடைக்கு விளம்பரம் தேவை என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. ஆனால் விளம்பர யுக்தி தான் புரியாத புதிராய் உள்ளது. :)
விளம்பர யுக்திகள் அவரவர்கள் மனப்பாங்கைப் பொருத்தது.
//sheik said...
பதிலளிநீக்குஉங்கள் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் இடம்பெற செய்து நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம்பெற வேண்டுமா? see this blog http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html//
அவங்களே ஒரு தடவ கேட்டாங்க. நான்தான் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். நம்ம கொள்கைக்கு சரிப்படாதுங்க.
//எஸ்.ஆர்.சேகர் said...
பதிலளிநீக்குஸார்...நான் நெனச்சதை...செய்வதை..அப்பிடியெ சொல்ரீங்களே..ஒரே “ வேவ் லெந்த்தோ “//
அப்படித்தான் இருக்குமுங்க.
பதிவர்களுக்கு பயனுள்ள விசயங்களை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சார்
பதிலளிநீக்குபதிவர்கள் எல்லாருமே கவனத்தில் கொள்ள வேண்டிய பதிவு... நன்றி
பதிலளிநீக்குஅதற்குண்டான தளங்களுக்குச் சென்று அதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.
பதிலளிநீக்குஅய் அய் இதானே வேண்டாங்றது. நீங்க தான் இந்த பிரச்சனையையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்து (எனக்கு மட்டுமாவது சொல்லிக்கொடுக்கோனும்????
//JOTHIG ஜோதிஜி said...
பதிலளிநீக்குஅதற்குண்டான தளங்களுக்குச் சென்று அதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.
அய் அய் இதானே வேண்டாங்றது. நீங்க தான் இந்த பிரச்சனையையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்து (எனக்கு மட்டுமாவது சொல்லிக்கொடுக்கோனும்//
சரீங்க, நீங்க சொல்றதுனால அதையும் போட்டுடறனுங்க. அதை ஏன் மிச்சம் வைக்கணும்? முட்ட நனைஞ்சதுக்கப்புறம் முக்காடு எதுக்கு?
என்ன, ரொம்பப் பேருக்கு உடம்பெரியும். எரியட்டுமே, நமக்கென்ன? என்ன நெறய மைனஸ் ஓட்டு விழும். விழட்டுமே! நமக்கு பிளஸ், மைனஸ் எல்லாம் ஒண்ணுதானுங்களே?
அப்புறம் நான் வாத்தியாருங்க, வகுப்புல எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் கிளாஸ் எடுப்பேன். ட்யூஷன் கிளாஸ் எல்லாம் வைக்கறது கிடையாது.
போட்டோக்கள் பதிவுகளுக்கு அழகு சேர்க்கின்றன என்பது முற்றும் உண்மை. அதற்காக அதிகப் போட்டோக்களை சேர்த்தால் அனைத்து போட்டோக்களையும் முழுவதுமாக ரசிப்பது சிரமமாகி விடுகிறது./
பதிலளிநீக்குகவனத்தில் கொள்கிறேன் ஐயா.
என் பதிவுகளில் தேவைப் படுவதாக நினைக்கிறேனே!
//இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குபோட்டோக்கள் பதிவுகளுக்கு அழகு சேர்க்கின்றன என்பது முற்றும் உண்மை. அதற்காக அதிகப் போட்டோக்களை சேர்த்தால் அனைத்து போட்டோக்களையும் முழுவதுமாக ரசிப்பது சிரமமாகி விடுகிறது./
கவனத்தில் கொள்கிறேன் ஐயா.
என் பதிவுகளில் தேவைப் படுவதாக நினைக்கிறேன்.//
அன்புள்ள சகோதரிக்கு, தவறாகக் கருதவேண்டாம். என் மனதில் பட்டதைச் சொன்னேன். இப்படிப் பேசுவதும் எழுதுவதும் என் இயல்பாகப் போய்விட்டது.
Neer paambaa? Pazhudhaa ?
பதிலளிநீக்குAnonymous said...
பதிலளிநீக்குNeer paambaa? Pazhudhaa ?
நீங்க எப்படி எடுத்துக் கொள்கிறீர்களோ, அப்படி.
நல்ல அறிவுரைகள்.
பதிலளிநீக்குessential points
பதிலளிநீக்குஎன்னை போன்ற புதிய பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி ஐயா
பதிலளிநீக்குநல்ல பதிவு.பயனுள்ளது.
பதிலளிநீக்குஎங்க சார் இருந்தீங்க...............
பதிலளிநீக்குதுளசிதளம் வழியாக (ஒரு வழியாக!) உங்கள் தளத்தைக் கண்டு பிடித்தேன்.
பதிலளிநீக்குஉங்களது பல பதிவுகளையும் படித்தேன். பதிவர்களைப் பற்றியதாக இருக்கிறதே என்று இதற்கு கருத்துரை கூற வந்தேன்.
இவ்வளவு படித்தவர் என் தளத்திற்கு வந்தது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா!
நான் வேர்ட்ப்ரேஸ் - ஸில் எழுதுவதனால் எந்தப் பதிவைப் படித்து பின்னூட்டம் போட்டாலும் என்னுடைய தளத்தின் பெயரை எழுதிவிடுவேன். இதைபோல செய்தால் அவரது தளத்திற்குப் போய் பார்க்க சௌகரியமாக இருக்கும்.
இதையும் ஒரு குறிப்பாகப் போடலாம்.
உங்களது வருகைக்கு நன்றி ஐயா!