திங்கள், 31 அக்டோபர், 2011

வேர்களைக் காப்பாற்றுவது எப்படி?

எனது நெருங்கிய நண்பர் அவருடைய மாப்பிள்ளையின் குழந்தைக்கு நடக்கும் காது குத்து விழாவிற்கு என்னையும் அழைத்துச் சென்றிருந்தார். இன்னொரு நெருங்கிய நண்பரும் உடன் வந்தார். விழா சிவகாசிக்குப் பக்கத்தில் உள்ள ஆலங்குளம் என்ற ஊரில் நடைபெற்றது. போகும் வழியில் சிவகாசிக்கு 5 கி.மீ.முன்பாக நண்பரின் சொந்த கிராமம் இருக்கிறது. ஆனைக்குட்டம் என்று பெயர்.

அவர் அந்த கிராமத்தை விட்டு வந்து 50 வருடங்களுக்கு மேல் இருக்கும். அந்தக் கிராமத்தில் அவருடைய பூர்வீக வீடு மட்டும்தான் இருக்கிறது. நெருங்கிய சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை.
















அந்தக்கிராமத்தில் ஊராட்சி தேர்தல் சமீபத்தில் நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கட்சி சார்பில்லாமல் போட்டியிட்டு வென்றவர்கள். அதில் சிலரை என் நண்பருக்குத் தெரியும். நாங்கள் அங்கு போவதால் அந்த பஞ்சாயத்து தலைவருக்கு போன் போட்டு சொல்லி அவர்களை பஞ்சாயத்து ஆபீசுக்கு வரச்சொல்லியிருந்தார். அவர்கள் எல்லோரும் வந்திருந்தனர்.


பஞ்சாயத்து வாயிலில் வரவேற்பு

அவர்களுக்கு என் நண்பர் தனித்தனியாக சால்வை அணிவித்து அவர்களைக் கவுரவப்படுத்தினார்.


பஞ்சாயத்து தலைவருக்கு சால்வை அணிவிக்கிறார்


பஞ்சாயத்து துணைத்தலைவருக்கு சால்வை அணிவிக்கிறார்


பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் அளவளாவுகிறார்

நண்பர் வேர்களைக் காப்பாற்றும் பாங்கைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.

15 கருத்துகள்:

  1. நண்பருக்கு எங்கள் இனிய பாராட்டுகள்.


    பகிர்வுக்கு எங்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  2. வேர்கள்னு சொன்னதும் ஏதோ செடி வைக்க போரிங்கனு நினச்சேன்....

    பதிலளிநீக்கு
  3. முன்னேற்பாடாக முனைந்துதான் உங்கள் நண்பர் சென்றிருக்கிறார்.(சால்வைகளெல்லாம் எடுத்துக்கொண்டு.)இவர் சொல்லி அவர்களும் வந்ததால் வேர்களைக் காக்க அவர்களும் முனந்தவர்களே அல்லவா.

    பதிலளிநீக்கு
  4. நண்பர் வேர்களைக் காப்பாற்றும் பாங்கைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. பாராட்ட வேண்டிய செயல், அவருக்கு என் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கவும்,,,

    பதிலளிநீக்கு
  6. கடந்த கால நினைவு நீரை உறிஞ்சி தரும் நண்பர்கள் வேர்கள் தான்.

    பதிலளிநீக்கு
  7. அய்யாவுக்கு வணக்கம்
    தீபாவளிக்கு சிவகாசி போயிருக்கிங்க...

    பதிலளிநீக்கு
  8. Just a thought. Isn't it time that this "Salvai" tradition is changed? Any ideas? In fact, Crazy Mohan had stated that he gives away all such "Salvai" gifts to needy people in the neighborhood.

    பதிலளிநீக்கு
  9. //D. Chandramouli said...
    Just a thought. Isn't it time that this "Salvai" tradition is changed? Any ideas? In fact, Crazy Mohan had stated that he gives away all such "Salvai" gifts to needy people in the neighborhood.//

    நீங்கள் சொல்வது மிகச் சரி. ஆனால் அதற்குப் பதிலாக மாற்று என்னவென்பது தெரியவில்லை. யோசிப்போம்.

    பதிலளிநீக்கு
  10. //பழமைபேசி said...
    உங்களுக்கும் பாராட்டுதல்கள்!!//

    மிக்க நன்றி, பழமை பேசி.

    பதிலளிநீக்கு
  11. How can the ancestral property exist when either relatives or inmates are not there to take care of the property? Has it been maintained as a monument! I would like to have this clarified. if you don't mind.
    His adorning and greetings the elected people with PNNADAI deserves appreciation.
    vss

    பதிலளிநீக்கு
  12. ஆக மொத்தம் கடைசி காலத்தில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் உங்களின் ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வழியில் அமைதியாக கழிகின்றது. சரிதானே? உங்கள் காலத்திற்குப் பிறகு உங்கள் உறவுகள் குழந்தைகள் அத்தனை பேருக்கும் இந்த வலைதளம் ஒரு பொக்கிஷம். தலைதலைமுறை தாண்டியும் உங்களை நினைவு படுத்திக் கொண்டேயிருக்கும்.

    நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. //vss said...
    How can the ancestral property exist when either relatives or inmates are not there to take care of the property? Has it been maintained as a monument! I would like to have this clarified. if you don't mind.
    His adorning and greetings the elected people with PONNADAI deserves appreciation.
    vss//

    ரொம்ப நல்ல கேள்வி. WG யில் விளக்கம் கேட்டு எனக்கும் சொன்னால் மிகுந்த நன்றியுடையவனாக இருப்பேன்.

    பதிலளிநீக்கு