ஆஹா, அடிச்சது ஒரு லாட்டரி பிரைஸ். நம்மையும் (ஒரு பார்மாலிட்டிக்காக தன்மைப் பன்மை உபயோகித்திருக்கிறேன். தன்மைப் பன்மை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் உடனடியாம ஒரு தமிழ் வாத்தியாரைப் பார்த்து கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.) ஒரு பதிவரா மதிச்சு ஸ்ரீராம் ஒரு தொடர் பதிவு எழுதக் கூப்பிட்டிருக்கார். விடுவோமா வந்த வாய்ப்பை. எல்லோரும் எழுந்து ஓடத் தயாராக இருங்கோ!
1987 ம் வருடம். விவசாயப் பல்கலைக் கழகத்தில் நான் ஒரு ஆராய்ச்சி யூனிட் டைரக்டராகப் பொறுப்பேற்றேன். யூனிவர்சிடி வைஸ்-சேன்சலருக்கு அடுத்த கீழ் பதவி. (பேரு பெத்த பேருதான்.) என்ரூமில் ஒரு கம்ப்யூட்டர் வைத்திருந்தது. எனக்கு முன் இருந்தவர் வாங்கிப்போட்டிருந்தார். ஏறக்குறைய ஒரு வாஷிங்க் மெஷின் சைசில் இருந்தது.
அப்போதுதான் PC என்று சொல்லப்படும் Personal Computer கள் மார்க்கெட்டில் வர ஆரம்பித்த காலம். அதற்கு முன் மெய்ன் பிரேம் கம்ப்யூட்டர்கள் என்று சொல்லப்படும் வெள்ளை யானைகள்தான் கோலோச்சிக்கொண்டு இருந்தன. எல்லாம் யானை சைசில் இருக்கும். விலையும் யானை விலைதான். எங்கள் யூனிவர்சிடியில் ஒரு வெள்ளை யானை 20 லட்சம் ரூபாயில் வாங்கி, ஏகப்பட்ட பாதுகாப்புகளுடன் ஒரு 10 அடி அகலம் 20 அடி நீளமான ரூமுக்கு AC பொறுத்து அதற்குள் வைத்திருந்தார்கள்.
அந்த அறைக்குள் போவதென்றால் கோவிலுக்குள் போவது போல் செருப்பையெல்லாம் கழட்டி வாசலில் வைத்து விட்டுப் போகவேண்டும். அந்தக் கம்ப்யூட்டரை இயக்க ஒரு அசிஸ்டென்ட்டுக்கு ஒரு மாதம் அந்தக் கம்ப்யூட்டர் கம்பெனியே டிரெய்னிங்க் கொடுத்திருந்தது. அந்த ஆளுக்கு ஏகப்பட்ட மரியாதை. தலையில் லேசாக கொம்பு முளைத்திருக்கிறது என்று எல்லோரும் சொன்னார்கள். என் கண்ணுக்குத் தெரியவில்லை.
அதுவரை கம்ப்யூட்டரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேனே தவிர கம்ப்யூட்டரை தொட்டுக்கூடப் பார்த்ததில்லை. ஆகவே என் ரூமில் இருந்த கம்ப்யூட்டரை ஆசை தீர தொட்டு, தடவி எல்லாம் பார்த்தேன். பக்கத்தில் அந்தக் கம்ப்யூட்டரை உபயோகப் படுத்துவது பற்றிய மேன்யுவல் எல்லாம் இருந்தன. அந்த கம்ப்யூட்டரில் ஹார்டு டிஸ்க் கிடையாது. A மற்றும் B டிரைவ் என இரண்டு ஸ்லாட்டுகள்தான் இருந்தன. அப்போது 6 அங்குல விட்டத்தில் பிளாப்பி டிஸ்க் என்று ஒன்று இருக்கும். அதில்தான் கம்ப்யூட்டர் புரொக்ராம்கள் இருக்கும். அதை A டிரைவில் போட்டால் கம்ப்யூட்டர் இயங்கும். B டிரைவில் நாம் தேவைப்பட்ட பைல்களை சேமிக்க ஒரு பிளாங்க் பிளாப்பி டிஸ்க்கைப் போட்டு வேலை செய்யவேண்டும்.
இந்த விவரங்களெல்லாம் பல மாதங்கள் கழித்துத்தான் நான் அறிந்து கொண்டேன். முதலில் எனக்கு ஒன்றும் தெரியாது.
நான் ஒரு பெர்ர்ர்ரிரிரிய அதிகாரியானதால் எனக்குத் தெரியாது என்று எதைப் பற்றியும் வெளியில் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் நான் அந்தப் பதவிக்கு லாயக்கில்லை என்று அர்த்தம். இந்தக் கலாச்சாரத்தில் வளர்ந்தவனாதலால் யாரிடமும் இந்தக் கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்துவது என்று கேட்க முடியாது. மற்றவர்கள் எல்லாம் எனக்கு கீழ் பணிபுரிபவர்கள். என்னைவிட ரேங்க் குறைவானவர்கள். அவர்களிடம் போய் இந்தக் கம்ப்யூட்டரை எப்படி இயக்குவது என்று கேட்டால் அது பெருத்த அவமானம். அதற்குப் பதிலாக தூக்குப் போட்டு செத்து விடலாம்.
ஆகவே நானே அந்த மேன்யுவல்களை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். ஆபீஸ் நேரத்தில் இதை செய்ய முடியாது. ஏனென்றால் பார்ப்பவர்கள் எனக்கு கம்ப்யூட்டரைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று கேவலமாக நினைப்பார்கள். எனவே மாலை 5 மணிக்கு மேல் எல்லோரும் ஆபீசை விட்டுப் போனபிறகு இந்த மேன்யுவல்கள்ப் படிப்பேன்.
பாகம் 2 ல் தொடரும்.
சிறப்பான சுவாரஸ்யமானத் துவக்கம்
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்
//A மற்றும் B டிரைவ் என இரண்டு ஸ்லாட்டுகள்தான் இருந்தன. அப்போது 6 அங்குல விட்டத்தில் பிளாப்பி டிஸ்க் என்று ஒன்று இருக்கும்.//
பதிலளிநீக்குஇதை இதுவர யாரும் சொன்னதில்லை.A Drive தெரியும், B Drive தெரியாது. 2.5 இன்ச் Floppy Drive தான் சில ஆண்டுகளுக்குய் முன்பு வரை பயன் படுத்தப் பட்டு வந்தது. அதுவும் இப்போது ஒழிந்து விட்டது .
இப்போதுதான் தெரிகிறது Hard Disk ஏன் C இல் தொடங்குகிறது என்று.
தொடர்ந்து கலக்குங்கள் ஐயா!
எழுதுவீர்களா என்று நினைத்திருந்தேன்... கலக்கல்... அடிச்சது ஒரு லாட்டரி பிரைஸ்... ஹிஹி...
பதிலளிநீக்குஎந்த தொடரையும் சுவாரஸ்யமாக எழுத உங்களால்தான் முடியும் என நண்பர் ஸ்ரீராம் என கணித்தது சரியே.தொடரின் ஆரம்பமே களை கட்டுகிறது.அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.
பதிலளிநீக்குதொடர் பதிவு என்பதால்
பதிலளிநீக்குதொடராகவே தொடர்கிறது ..
பாராட்டுக்கள்..!
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
அருமையான தகவல் நல்லசுவாரஸ்யமானது வாழ்த்துக்கள் ஐயா உங்கள் வலைப்பக்கம் வருவது முதல்தடவை நேரம் கிடைக்கும் போது நம்ம பக்கமும் வாருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்லா, சுவாரஸ்யமா இருக்கு. இரசித்துப் படித்தேன். தொடருங்க.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குaarambame amarkkalamayirukku, valthukkal.
பதிலளிநீக்குநான் இருந்த அதே நிலையில்தான் நீங்களும் இருந்திருக்கிறீர்கள். நல்லவேளையாக எனக்கு இரண்டு குமாஸ்தாக்கள் கிடைத்தனர். ஆனால் அவர்களிடம் சென்று கேட்பதை நான் தலைகுணிவாக நினைத்ததில்லை. பணியிலிருந்து ஓய்வு பெறும் காலக்கட்டத்திலும் என் கீழ் பணியாற்றிய அனைவருமே என்னை விடவும் பாதி வயதுள்ளவர்கள்தான். ஆயினும் அவர்களிடம் இருந்துதான் இந்த blog create செய்வதையெல்லாம் படித்து தேறினேன்.
பதிலளிநீக்கு87 ஆம் ஆண்டா? கணணி பற்றிக் கேள்விப்பட்டது கூடக் கிடையாது இந்த ஆண்டுகளில்!
பதிலளிநீக்குசுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறீர்கள். அடுத்த பகுதி படிக்க காத்திருக்கிறேன்.
உடனடியாகத் தொடர்வதற்கு சந்தோஷம். தலைப்பு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். தொடர்கதையா, நாவலா? எதற்குத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?! :)))
பதிலளிநீக்குஅறியாத தகவல்கள் உங்கள் அனுபவம் மூலம் கிடைக்கிறது! தொடருங்கள்! தொடர்கிறேன்!
பதிலளிநீக்குசிறப்பான துவக்கம்... தொடருங்க முதல் கணிப்பொறி அனுபவத்தை... நன்றி.
பதிலளிநீக்குஅருமையான துவக்கம்.....
பதிலளிநீக்குஎன்னையும் எழுத அழைத்திருக்கிறார்..... எழுதுகிறேன்...
அடுத்த பகுதியைப் படிக்க ஆவலுடன்.....
// ஒரு பதிவரா மதிச்சு ஸ்ரீராம் ஒரு தொடர் பதிவு எழுதக் கூப்பிட்டிருக்கார். விடுவோமா வந்த வாய்ப்பை. எல்லோரும் எழுந்து ஓடத் தயாராக இருங்கோ! //
பதிலளிநீக்குநான் ஓடவில்லை. நீங்கள் செய்யப்போகும் அட்டகாசத்தைப் பார்க்கப் போகிறேன். நீங்கள் சொல்லும் பெரிய சைஸ் கம்ப்யூட்டர்களை பார்த்ததில்லை.
// நான் ஒரு பெர்ர்ர்ரிரிரிய அதிகாரியானதால் எனக்குத் தெரியாது என்று எதைப் பற்றியும் வெளியில் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் நான் அந்தப் பதவிக்கு லாயக்கில்லை என்று அர்த்தம்.//
இன்னும் அந்த கலாச்சாரம் அப்படியேதான் இருக்கிறது.
ஆரம்பமே சுவாரஸ்யம் தொடர்கிறேன்........
பதிலளிநீக்கு