திங்கள், 11 செப்டம்பர், 2017

20. பணக்காரர்களுடன் பழகுவது எப்படி?

                     Image result for bungalow house
மனிதர்கள் என்றுமே அவர்களின் பொருளாதார ரீதியில்தான் மதிக்கப்படுகிறார்கள் என்பது எல்லோரும் உணர்ந்த உண்மை. ஒருவனைப் பார்த்தால் இவனுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை அறிந்த பிறகுதான் அவனுக்கு அவன் சொத்திற்குத் தகுந்தாற்போல் மதிப்பு கிடைக்கும்.

இப்போதுள்ள மக்களை பொருளாதார ரீதியில் பார்த்தால் கீழ்க்கண்ட வகுப்புகள் இருப்பது தெரியும்.

Poor (including ultra poor), Lower Middle class, Upper Middle class, Rich, Super Rich, Ultra Rich, Aristocrats, Arab Sultans, Top Rich persons like Ambani brothers.

நான்  ஏழையும் அல்லாத மிடில் கிளாசும் அல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து  தற்சமயம் ஒரு  அப்பர் மிடில் கிளாஸ் என்று சொல்லக்கூடிய தகுதியில் இருக்கிறேன். நான் வளர்ந்த சூழ்நிலை எனக்குள் பல குணாதசியங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில் முக்கியமானது பணக்காரர்களைக் கண்டால் ஒதுங்கிப்போவது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கியமானது பணக்காரர்கள் நம்மைப் போன்ற மிடில் கிளாஸ் ஆசாமிகளைப் பிச்சைக் காரர்கள் போல் பார்க்கும் ஒரு குணம். அவர்கள் வீட்டிற்கு சும்மா பார்க்கப்போனாலே, ஏதோ பண உதவி கேட்பதற்காக  வந்திருக்கிறானோ என்று சந்தேகப்பட்டு தூரமாகவே நிறுத்தி வைத்து திருப்பி அனுப்பி விடுவார்கள்.

பல பணக்காரர்களின் வீடுகளில் பல நிலைகள் இருக்கும்.

1. வாசல் கேட்.
2. முன் வாசல்
3. வராந்தா
4. உள் ஹால்

தங்கள் வீட்டிற்கு வருபவர்களை இனம் பிரித்து அந்தந்த நிலைகளில் நிறுத்தி திருப்பி அனுப்பப்   படுவார்கள். இதற்காக பல நிலைகளில் சிப்பந்திகள் இருப்பார்கள். நீங்கள் முக்கியமானவராகத் தெரிந்தால் மட்டுமே உங்களை முன் வராந்தாவில் அமர வைப்பார்கள். இதோ ஐயா வந்து விடுவார் என்ற செய்தியைச் சொல்லி விட்டு உங்களைக் காக்க வைப்பார்கள்.

அந்த வீட்டு ஐயா வந்திருப்பவர் யார், என்ன விபரம் என்று விசாரித்து விட்டு, சாவகாசமாக தன் ஒப்பனைகளை முடித்து விட்டு முன் வராந்தாவிற்கு வருவார். வந்திருப்பவர் தனக்கு முன்பே தெரிந்தவராகவும் தன் தகுதிக்கு ஈடானவராகவும் இருந்தால் உடனே வாங்க, வாங்க என்று வரவேற்று உள் ஹாலுக்கு கூட்டிக்கொண்டு போவார்.

தன்னை விட கொஞ்சம் கீழ்நிலையில் உள்ளவர் என்றால் அங்கேயே அவரை விசாரித்து விட்டு அனுப்பி விடுவார்.

இந்த நடைமுறைகளை நான் நன்கு பார்த்திருக்கிறேன். அதனாலேயே எனக்கு பெரும் பணக்காரர்கள் வீட்டிற்குப் போவதென்றால் வெறுப்பு.

நீங்களும் இந்த மாதிரியான அனுபவங்களை சந்தித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

19 கருத்துகள்:

  1. நானும் ஒதுங்கியே நிற்பேன். இது மாதிரி இடங்களுக்கு போனது கூட இல்லை!

    பதிலளிநீக்கு
  2. ஐயா, பணக்காரர்கள் என இருக்கணும்னே அவசியம் இல்லை. சொந்தக்காரர்களிலேயே அதிலும் அண்ணன், தம்பியர் இடையே கூட இம்மாதிரிப் பாகுபாடுகள் உண்டு. மூத்தவர் ஆன அண்ணன், தன் மனைவியுடன் சாதாரணமாக வந்தாலே ஏதேனும் பண உதவி கேட்பார்களோ எனப் பயப்படும் தம்பி குடும்பம் உண்டு! பணக்காரங்க கிட்டே நாம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு போனால் தான் அவமானம். ஆனால் சொந்த, பந்தங்கள், நட்புகள் கொஞ்சம் வசதி வந்தாலே ஏறி வந்த ஏணியைத் தூக்கிக் கடாசி விடுகின்றனர்! :(

    பதிலளிநீக்கு
  3. ஐயா! தாங்கள் சொல்வது சரியே! அதனால் தான், மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்று உலக நீதியும், மதியாதார் தலைவாசல் மதித்தொருகால் சென்று மிதியாமை கோடி பெரும் என்று ஔவை பாட்டியின் பாடல்களும் சொல்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. ஆமாம் பணக்காரர்களிடம் கொஞ்சம் தள்ளியே நிற்க வேண்டும். பக்கத்தில் போனால் நம்முடைய கொஞ்ச நஞ்சம் பணத்தையும் அப்படியே உறிஞ்சி விடுவார்கள். உண்மையாக நேர்மையாக , எல்லா வரிகளையும் செலுத்தி, கடன் இல்லாமல் இருப்பவன் பணக்காரனாக இருக்க முடியாது.

    உங்களுக்கே தெரியும். இந்தியாவின் நம்பர் 1 பணக்காரன் வரி கட்டுவதில் நம்பர் 1 இல்லை. கடன் வாங்கியிருப்பதில் நம்பர் 1. ஆகவே DEBT is WEALTH என்ற உண்மை உங்களுக்கு புரிந்து இருக்கும். அடுத்தவன் பணத்தில் தான் பணக்காரனாக முடியும்.

    உங்களையும் என்னையும் போன்றவர்கள் எப்போதும் பணக்காரனாக முடியாது.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  5. கீழ் நிலையில் இருப்பவனுக்கு அதை விட மேநிலையிலிருப்பவன்பணக்காரனே நான் உங்களிடம் எந்த மாற்றத்தையும் காணவில்லையே

    பதிலளிநீக்கு
  6. நான்உங்கள் வீட்டுக்கு வருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் வீட்டையே நீங்க கண்டு பிடிக்க முடியாதபடி ஒளிச்சு வச்சிருக்கேனே! இப்ப என்ன பண்ணுவீங்க!

      நீக்கு
  7. சில பணக்காரர்கள்தான் மனதளவிலும் பணக்காரர்களாக இருக்கின்றார்கள்.

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் சொன்ன பெரும் பணக்காரர்களுக்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது.

    நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். பணத்தால் மட்டுமே இப்போதெல்லாம் அறிமுகமோ நட்போ ஏற்படுகிறது. 'பணக்காரர்கள்' 'மிடில் கிளாஸ்' ஆசாமிகளை ஒரு மாதிரி நடத்துவதுபோன்றே, 'மிடில் கிளாஸ்' ஆசாமிகளும் அந்த அந்த லெவெல், அதற்கு கீழே உள்ள லெவல்களை நடத்துகிறார்கள். இதை மனது ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், உண்மை நிலை இது.

    நம்ம ஊர்ல, ஒருத்தன், கார்ல வர்றானா (அப்படீன்னா எப்படிப்பட்ட கார், எல்லோரும் வைத்திருப்பதுபோல் சோப்பு டப்பா காரா அல்லது பாரீன் காரா போன்று), பைக்ல வரானா, கால் டாக்சில வரானா(கார் இருந்து ஆத்திர அவசரத்துக்கு வந்தால் அது ஒருவகை மரியாதை), ஆட்டோல வரானா (இவங்களுக்கு மரியாதை குறைஞ்சுடும்), பஸ்ல வரானா - இதெல்லாம் பொறுத்துத்தான் மரியாதை. இன்னும் எத்தனையோ சொல்லலாம்.

    இதுலயும், பரம்பரைப் பணக்காரர்கள், புதுப் பணக்காரர்கள் என்றெல்லாம் வித்தியாசம் உண்டு. உறவினர்களில், எப்போதும் பணத்தை வைத்து மட்டும்தான் எடைபோடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  9. //உறவினர்களில், எப்போதும் பணத்தை வைத்து மட்டும்தான் எடைபோடுவார்கள்.// இது முழுக்க முழுக்க உண்மை! என் உறவினப் பெண் ஒருவர் தன் மகன் உபநயனத்தின்போது எனக்கு முதலில் சாதாரணப் புடைவை எடுத்திருந்தார். பின்னர் நாங்கள் கொடுக்கப்போகும் பணம் பற்றித் தெரிந்ததும் அந்தப் புடைவையை மாற்றி விட்டு விலை உயர்ந்த புடைவையை எடுத்துக் கொடுத்தார். அந்தப் புடைவையைக் கட்டவே என் மனம் கூசும்! :(

    பதிலளிநீக்கு
  10. இன்னும் சொல்லப் போனால் என் கணவர் கண்ணுக்கு அறுவை சிகிச்சை இங்கேயே ஶ்ரீரங்கத்தில் செய்து கொண்டதைக் கூட அவங்க கேலி பேசுவாங்க. திருச்சியிலே, ஶ்ரீரங்கத்திலே எல்லாம் நல்ல மருத்துவர் இருக்க மாட்டாங்க! இங்கே சென்னையில் லேசர் ஆபரேஷன் செய்வாங்க என்று என்னிடம் சொல்ல அதே லேசர் ஆபரேஷன் தான் இங்கேயும் என நான் லென்ஸ் வைத்ததின் பில்லை எல்லாம் எடுத்துக் காட்டினேன். வெளிநாட்டுத் தயாரிப்புத் தான் அவருக்கு வைச்சிருக்கும் லென்ஸும் என்று சொன்னேன். ஆனால் சென்னை மாதிரி இங்கே பணம் பிடுங்கவில்லை! சென்னையில் ஒரு லக்ஷம் ஆனால் இங்கே அதை விடக் குறைவாக 30,000 ரூபாய்க்குள் முடிந்து விடும்! இந்தியத் தயாரிப்பு லென்ஸுகள் எனில் இன்னமும் குறைந்த பணம்! எளியவர்களிடம் மருத்துவத்திற்கான பணத்தை வாங்கிக் கொள்ளாமல் லென்ஸுக்கு மட்டுமே பணம் வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்க்கிறார் நாங்க போகும் கண் மருத்துவர்.

    பதிலளிநீக்கு
  11. ஆனால் பரம்பரைப் பணக்காரர்களிடம் ஒருவிதப் பெருந்தன்மை, பெரும்போக்கு காண முடியும்! புதுப் பணக்காரர்களிடம் அகம்பாவமும் அலட்சியமும் தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. பரம்பரை பணக்காரர்களில் பலர் மனிதர்களாக இருப்பார்கள்...
    புதுப்பணக்காரர்களில் பலர் பவுசியுடந்தான் இருப்பார்கள்... மதிக்க மாட்டார்கள்....

    பதிலளிநீக்கு
  13. அப்ப, புது பணக்காரன் எப்ப பரம்பரை பணக்காரனாவான்?

    பதிலளிநீக்கு
  14. பணத்திமிர் பிடித்தவர் எவரெனினும் நான் அணுக மாட்டேன் த ம 4

    பதிலளிநீக்கு