வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு

                                              Image result for ரூபாய்
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும் வாயில் ஈ போவது தெரியாமல் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கையில் காலுக்கடியில் ஒரு சுண்டெலி ஓடிப்போய் விட்டது.

ஸ்டேண்டர்டு டிடக்ஷன் என்று ஒன்று ஒரு காலத்தில் இருந்ததை சம்பளதாரர்கள் ஏறக்குறைய மறந்தே போய்விட்ட நிலையில் அருண் ஜேட்லி அவர்கள் அதை இப்போது நினைவூட்டியிருக்கிறார்.

சரி, சம்பளம் வாங்குறவனுக்கு என்னதான் மிச்சம் என்று கேட்பவர்களுக்கு-
நான் பென்சன்தான் வாங்குகிறேன். எனக்கு என்ன மிச்சமாகும் என்பதுதான் எனக்குத் தெரிகிறது. நான் வாங்கும் பென்சனில் சுளையாக நாற்பது ஆயிரம் ரூபாய்க்கு இன்கம்டாக்ஸ் கட்ட வேண்டியதில்லை. இப்போது 20 சதம் கட்டிக்கொண்டு இருக்கிறேன். ஆகவே எட்டு ஆயிரம் ரூபாய் மிச்சம். ஆனால் இன்னொரு ஆப்பை அருண் ஜேட்லி வைத்திருக்கிறார்.

எஜுகேசன் செஸ் 3 % ஆக இருந்ததை இப்போது 4 % ஆக உயர்த்தி இருக்கிறார். அதில் ஒரு ஆயிரம் ரூபாய் போய்விடும். ஆக மொத்தம் ஏழு ஆயிரம் ரூபாய் மிச்சமாகும். வந்தது லாபம் என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

15 கருத்துகள்:

  1. வேலையில் இருப்பவர்களுக்கு பெரிதாக லாபமில்லை... :(

    ஏற்கனவே மருத்துவம் மற்றும் போக்குவரத்து என இருந்தவற்றை எடுத்து SD - என்பதால் பெரிய லாபமில்லை.

    பதிலளிநீக்கு
  2. அப்போ உங்க ஒரு ஓட்டு தமிழ்நாட்டில பாஜகவுக்குத்தான்னு சொல்லுங்க. எனக்கென்னவோ tangible benefits வந்தமாதிரி இதுவரை தெரியலை.

    பதிலளிநீக்கு
  3. சீனியர் சிடிசன்கட்கு -பென்ஷன் வாங்குவோற்கும்-இந்த பட்ஜெட்டில் சில உபயோகமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தவிர பாங்க் வட்டியில் 50,000 வரை விலக்கு 80-D Health Insurance Premium ல் சலுகை உயர்வு போன்ற வற்றால் வரிச்சுமை Rs20000/ வரை குறையலாம் ,

    பதிலளிநீக்கு
  4. for me, 40,000 ( Standard deduction) - Medical allowance (15000)- Conveyance (19200) =5800.
    20% Tax of 5800 = 1160 (Tax benefit due to standard deduction)
    1160 - 494 ( Cess 1% of Tax amount 49397) = 666.


    Tax benefit = 666. (approx. 0.01 % in Tax paying value)

    பதிலளிநீக்கு

  5. ஓய்வூதியம் பெறுவோருக்கு Standard Deduction மட்டுமல்லாது, சேமிப்பு மற்றும் வைப்புகளின் மூலமாக வட்டிக்கு ரூபாய் 50000 வரை வரிவிலக்கு என்பதும் சாதகமானவை.

    பதிலளிநீக்கு
  6. என்ன சார்.... இடுகை வந்து நாளாகிவிட்டது? நலமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நலமே. பதிவுகளைப் படிக்க ஆட்கள் இல்லை. யாராவது இரண்டு பேராவது திட்டினாலும்போதும். அதற்குக் கூட ஆள்கள் இல்லை. அப்புறம் யாருக்காக எழுதுவது. என் தளத்திற்கு ஏறக்குறைய பூட்டு போட்டு விட்டேன்.

      நீக்கு
    2. என்ன இப்படிச் சொல்றீங்க. எழுதுங்க.. படிக்கிறோம். கருத்திடறோம். மிளகாய் ஊறுகாய்க்கு அப்புறம் வேறு எதுவுமே நீங்க செய்துபார்க்கலையா?

      நீக்கு
  7. சார்.. நாட்டுல எத்தனையோ சூடான நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. உங்களிடமிருந்து அவற்றைப்பற்றி இடுகை ஒன்றும் வரலையே... எழுதுங்க... உங்க ஆசைக்கு வேணும்னா பின்னூட்டத்துல திட்டிடறேன். :-)

    பதிலளிநீக்கு
  8. Sir.. It has been long time.. knocking your page regularly and leave with disappointment..
    Will be happy even if you repost any old message :)

    பதிலளிநீக்கு
  9. முனைவர் சார்... என்ன ரொம்ப மாதங்களா இடுகையே போடலையே... நலமா?

    பதிலளிநீக்கு
  10. முனைவர் கந்தசாமி சார்.... என்ன பதிவு வெளியிட்டு ரொம்ப நாளாகிவிட்டதே.. எழுதுங்க....

    பதிலளிநீக்கு
  11. சார் எங்க காணம் ரெம்ப நாளா!

    பதிலளிநீக்கு