“இந்த தகவல் எல்லோருக்கும் சென்றடைய ஓட்டு போடுங்க”
இந்த வார்த்தைகளை பதிவர்கள் எல்லோரும் பல பதிவுகளில் பார்த்திருப்பார்கள். இந்த வார்த்தைகளில் இருந்து நான் புரிந்து கோண்டது என்னவென்றால் :-
அவர்களுடைய எழுத்துக்கள் மிகவும் பொருளும், மதிப்பும் மிக்கவை. அவை நிறையப் பேருக்குப் போய்ச் சேர்ந்தால் அந்த மக்கள் அதைப் படித்து ஜன்ம சாபல்யம் அடையட்டும் என்பதுதான் அவர்கள் அவா. அதனால்தான் அந்த எழுத்துக்கள் பல பேரைச் சென்றடையட்டும் என்று நம்மை பல திரட்டிகளில் ஓட்டுப்போடச் சொல்லுகிறார்கள்.
நான் புரிந்துகொண்டது சரி என்று நினைக்கிறேன். அப்படியானால் அந்தப்பதிவை காப்பி பேஸ்ட் செய்கிறவர்களும் அதே வேலையைத்தானே செய்கிறார்கள். ஏன் அப்போது மட்டும் எல்லோரும் லபோ திபோ என்று அடித்துக்கொள்கிறார்கள். அந்த எழுத்துக்களை நீங்கள் பிறக்கும்போதே கொண்டு வந்தீர்களா, இல்லையே. நீங்களும் அந்தக் கருத்துக்களை எங்கிருந்தோ எடுத்துக்கொண்டவர்கள்தானே? நீங்கள் எங்கிருந்தோ எடுத்ததை, உங்களிடமிருந்து ஒருவர் எடுக்கிறார், அவ்வளவுதானே.
ஏன்ய்யா பெரிசு, வயசான காலத்துல சும்மா இருக்க முடியலயா. நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு மூளையைக்கசக்கி பதிவு போடறோம். அதை ஒருத்தன் வந்து சும்மா லவட்டிட்டுப் போவான். அதப்பாத்துட்டு எங்களைச் சும்மா இருக்ச்சொல்றீங்க. உங்களுக்கே இது நியாயமாப்படுதா?
பதிலளிநீக்குஉங்க பதிவ இன்னொருத்தர் எடுத்து தன் பதிவில போட்டா, சும்மா இருப்பீங்களா?
பதிலளிநீக்குPrabhu said:
பதிலளிநீக்கு//உங்க பதிவ இன்னொருத்தர் எடுத்து தன் பதிவில போட்டா, சும்மா இருப்பீங்களா?//
தம்பி, என்னோட பதிவில கடைசீல என்ன போட்டுருக்கேன் பாத்தீங்களா? என்னுடைய பதிவை யார் வேண்டுமென்றாலும் எடுத்து உபயோகிக்கலாம்னு போட்டிருக்கேன்.
யோவ் பெரிசு. அவங்கவங்க பதிவு போடறதுக்கு எவ்வளவு கஷ்டப்படறாங்கன்னு உனக்குத்தெரியுமா? சும்மா வாயக்கு வந்ததைப் பேசக்கூடாது.
பதிலளிநீக்குசரி தான் ...
பதிலளிநீக்குஐயா நீங்க எழுதுனத நீங்க எழுதுனதுன்னு நான் பதிவிட்டால் அது சரி. ஆனா நீங்க எழுதுனத நான் எழுதுனதுன்னு பதிவிட்டால் அது சரியா?
பதிலளிநீக்கு//என்னுடைய பதிவை யார் வேண்டுமென்றாலும் எடுத்து உபயோகிக்கலாம்னு போட்டிருக்கேன்.//
பதிலளிநீக்குநானும் அந்த கொள்கை உடையவன் தான். நானும் எல்லோரும் என் எழுத்துக்களை பயன்படத்தலாம் என்று அனுமதி தந்துவிட்டேன்.
நல்ல விஷயம் யாரும் பயன்படுத்தட்டுமே என்கின்ற நல்ல நோக்கில்.
ஆனால் நகைசுவை, சமையல் அல்லது வேறு ஏதாவது தானே சொந்தமாக கண்டுபிடித்தது என்று விஷயங்களுக்கு அவர் அந்த பெருமையை எதிர்ப்பார்கின்றார். இதில் தவறு என்ன ஐயா?
ஏனுங்க ஐயா, இப்பத்தானுங்க அமெரிக்காக்காரங்க கிட்ட வாங்கி கட்டினீங்க. அதுக்குள்ள உள்ளூர்க்காரங்க கிட்ட எதுக்கு வம்பு பண்ணறீங்க?
பதிலளிநீக்குசொன்னா கேளுங்க, வம்பு வழக்கெல்லாம் இந்த வயசுல வேணுமுங்களா?
பதிலளிநீக்குஎன்னது நானு யாரா? சொன்னது:
பதிலளிநீக்கு//ஆனால் நகைசுவை, சமையல் அல்லது வேறு ஏதாவது தானே சொந்தமாக கண்டுபிடித்தது என்று விஷயங்களுக்கு அவர் அந்த பெருமையை எதிர்ப்பார்கின்றார். இதில் தவறு என்ன ஐயா?//
சரி, தவறு எனபது நாம் வரையறுப்பதுதானே. நான் யாரையும் தவறாக நினைக்கவேயில்லை. copy right. patent right ஆகியவை நீண்டகாலமாக சட்டபூர்வமாக இருக்கின்றன. அவைகளில் பணம் பண்ணும் நோக்கம் இருக்கிறது. ஆனால் பதிவுகளில் பணம் பண்ண முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.
அஃகஃகா!!!
பதிலளிநீக்குஇதைச் செய்யாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் ஐயா. ரொம்ப ஆழ்ந்துநோக்கினால், இந்த தமிழீஷ்,இண்ட்லி ஓட்டுக்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை. வலைப்பதிவை நமது மகிழ்சிக்காக எழுதுகிறவரை, இது பற்றி கவலைப்பட வேண்டாம்.
பதிலளிநீக்குமற்றவர்கள் எழுதியதை படித்து புரிந்துகொண்டு தங்கள் கருத்துகளையும் சேர்த்து தங்கள் சொந்த நடையில் எழுதுவது வேறு, அப்படியே காப்பியடிப்பது வேறு. ஒரு சில பகுதிகளை காப்பி பேஸ்ட் செய்தால் எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அந்த வலைத்தள முகவரியை கொடுக்கவேண்டும். முழுக்க முழுக்க காப்பி செய்யவேண்டுமெனில் சம்பந்தப்பட்டவரின் அனுமதி வாங்கவேண்டும்.
பதிலளிநீக்குஉங்கள் குறும்பை நினைத்து வாய் விட்டு சிரித்தேன்.
பதிலளிநீக்குநான் இது பற்றி எல்லாம் கவலை படுவதேயில்லை.
" தான் " எனக்கு தேவையுமில்லை.
சேட்டைக்காரன் சொன்னது:
பதிலளிநீக்கு//இதைச் செய்யாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் ஐயா. ரொம்ப ஆழ்ந்துநோக்கினால், இந்த தமிழீஷ்,இண்ட்லி ஓட்டுக்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை. வலைப்பதிவை நமது மகிழ்சிக்காக எழுதுகிறவரை, இது பற்றி கவலைப்பட வேண்டாம். //
வலைப்பதிவு நம் மகிழ்ச்சிக்காக எழுதும் வரை எந்தப்பிரச்சினையும் இல்லை. ஓட்டுக்களைப்பொருத்த வரையில் என் கருத்து உங்களுடையதுடன் ஒத்துப்போகின்றது.
எடுத்துப் போடுவதைப் பற்றி யாரும் தவறாகச் சொல்லவில்லை, இங்கிருந்தே எடுக்கப்பட்டதுன்னு சேர்த்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்லுகிறார்கள்.
பதிலளிநீக்குகாஃபி கிளப் தம்ளரில் 'இது ... விலாசில் இருந்து திருடப்பட்டது' ன்னு போட்டிருப்பாங்களே அந்த காலத்தில்
கக்கு-மாணிக்கம் சொன்னது:
பதிலளிநீக்கு//உங்கள் குறும்பை நினைத்து வாய் விட்டு சிரித்தேன்.
நான் இது பற்றி எல்லாம் கவலை படுவதேயில்லை.
" தான் " எனக்கு தேவையுமில்லை.//
வம்புக்காகத்தான் இந்தப்பதிவைப் போட்டேன்.
இந்த வயசில அசந்து தூங்கினாக்கூட சொந்தக்காரங்களுக்கு ஆள் உட்டுடுவாங்க. அதனால தூங்கறப்ப கூட நான் கால ஆட்டிட்டுத்தான் தூங்குகிறேன்.
அது மாதிரி நாலு நாள் பதிவு போடலைன்னா ரைட்ஆஃப் பண்ணீடுவாங்க. அதுக்காகத்தான் இப்படி மொக்கைக.
கோவி-கண்ணன் சொன்னது:
பதிலளிநீக்கு//எடுத்துப் போடுவதைப் பற்றி யாரும் தவறாகச் சொல்லவில்லை, இங்கிருந்தே எடுக்கப்பட்டதுன்னு சேர்த்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்லுகிறார்கள்.
காஃபி கிளப் தம்ளரில் 'இது ... விலாசில் இருந்து திருடப்பட்டது' ன்னு போட்டிருப்பாங்களே அந்த காலத்தில்//
ஊட்ல திருடறவன் "திருடினது இன்னார்" னு எழுதி வச்சுட்டுத் திருடுவானா கண்ணன்.
காப்பிக்கடை டம்ளரில் எழுதின மாதிரி நம்ம பதிவுகளிலும் எழுத முடிஞ்சா எவ்வளவு வசதியாக இருக்கும்?
பழமை பேசி, ஊர் போய்ச்சேந்துட்டீங்க போல இருக்கு.உங்க உள்ளூர் பதிவுகளையெல்லாம் பார்த்தேன். எல்லாம் அருமை. பின்னூட்டம் போட முடியவில்லை. மன்னிக்கவும்.
பதிலளிநீக்குநண்டு நொரண்டு, வாங்க,வாங்க. என்னோட பதிவு எதாச்சும் வேணுமுங்களா, தாராளமா எடுத்துக்கோங்க.
பதிலளிநீக்கு//சரி, தவறு எனபது நாம் வரையறுப்பதுதானே. நான் யாரையும் தவறாக நினைக்கவேயில்லை. copy right. patent right ஆகியவை நீண்டகாலமாக சட்டபூர்வமாக இருக்கின்றன. அவைகளில் பணம் பண்ணும் நோக்கம் இருக்கிறது. ஆனால் பதிவுகளில் பணம் பண்ண முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.//
பதிலளிநீக்குஐயா! பதிவுலகு ஒரு திறந்த மேடைன்னு எல்லோருக்கும் தெரிஞ்சது தானே? இதில எந்த விதத்தில பணம் பண்ண முடியும் சொல்லுங்க?
ஆனா புகழ், பெருமைன்னு ஒன்னு இருக்கே! அது கிடைக்கும் இல்லையா? இங்கே நிறைய நண்பர்கள் சொன்னது போல் இந்த பதிவில் இருந்து இந்த விஷயம் கையாளபடுகிறது என்று எழுதிவிட்டு தங்கள் பாணியில் அதே விஷயத்தை சொல்லலாமே!
அதை யாரும் குறை சொல்ல முடியாது. ஆனால் முழுக்க முழுக்க தங்களின் பதிவாக காண்பித்து கொள்வது சரியல்ல அல்லவா ஐயா?
நான் இதுவரை ஓட்டுப் போடுங்க அப்படின்னு கேட்டதேயில்லை.. ஒரு பதிவைத் தவிர..
பதிலளிநீக்குஅவர்களுடைய எழுத்துக்கள் மிகவும் பொருளும், மதிப்பும் மிக்கவை. அவை நிறையப் பேருக்குப் போய்ச் சேர்ந்தால் அந்த மக்கள் அதைப் படித்து ஜன்ம சாபல்யம் அடையட்டும் என்பதுதான்
பதிலளிநீக்குரொம்ப யோசிக்கறீங்க அய்யா
ஐயா .. நான் தான் ....
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவை .. நானும் இப்படி தான் எழுதினேன்...
ஒரு நல்ல தகவலை பதியும் போது, நாலு பேர் படிச்சா நல்லா இருக்கும் .... அதனால ஒரு விளம்பரம் ..
"நமீதாவின் நக்கல் " " நீ யார் பெரிய பருப்பா" " ஓடி விட நடிகை " - இப்படி பதிவு தலைப்பு இருந்தால் தான் இங்கே (தமிழ்மணம் ) முகப்பில் இருக்கும் .. பின்னுட்டமும் நெறைய வருகிறது ..
அதனால நெறைய பேர் தருகிற நல்ல தகவல் காணாம போய்டுது..
நீ பெரிய சீர்திருத்தவாதியா அப்படின்னு நீங்க கேட்கறது புரியுது .. என்ன பண்றது நம்ம குணம் அப்படி ..
எல்லோரும் என் பதிவை பார்க்க
http://sri1982-srihari.blogspot.com/2010/09/laptop.html
இது எப்படி இருக்கு சார் !!
இப்படிக்கு ,
உங்கள் அன்பு சிஷ்யன்
என்னது நானு யாரா? சொன்னது:
பதிலளிநீக்கு//அதை யாரும் குறை சொல்ல முடியாது. ஆனால் முழுக்க முழுக்க தங்களின் பதிவாக காண்பித்து கொள்வது சரியல்ல அல்லவா ஐயா? //
மனச்சாட்சின்னு ஒண்ணு இருந்தா அப்படி பண்ண மாட்டாங்க. சில பேரு அதை நல்லா தொடச்சுட்டு இந்த மாதிரி செய்யறாங்க. இத தடுக்கிறதுக்கு பதிவுலகில ஒரு வழியும் இப்ப இல்லை. பார்ப்ப்போம்.
///நீங்கள் எங்கிருந்தோ எடுத்ததை, உங்களிடமிருந்து ஒருவர் எடுக்கிறார், அவ்வளவுதானே.
பதிலளிநீக்கு///
இது சிந்திக்க வேண்டிய விஷயம் தாங்க .. ஆனா அதுவே ஒருத்தரோட கற்பனை சம்பந்தப்பட்ட விஷயம் அப்படின்னு அவுங்க அப்படி அடித்துக்கொள்வதில் அர்த்தம் இருக்கிறது..
ஹ ஹ ஹ...! உங்கள் பதிவின் நோக்கமும் அதற்கு வந்துள்ள பின்னூட்டகளும் சூப்பர், கலக்குங்க.
பதிலளிநீக்குகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே...சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
இப்ப நீங்க புரியாத மாதிரி கேட்ட உண்மை புரிஞ்ச மாதிரி இருக்குமே :-)
அஹமது இர்ஷாத், வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குசிங்கக்குட்டி சொன்னது:
பதிலளிநீக்கு//ஹ ஹ ஹ...! உங்கள் பதிவின் நோக்கமும் அதற்கு வந்துள்ள பின்னூட்டகளும் சூப்பர், கலக்குங்க.
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே...சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
இப்ப நீங்க புரியாத மாதிரி கேட்ட உண்மை புரிஞ்ச மாதிரி இருக்குமே :-)//
உண்மையும் நடைமுறையும் பல சமயங்களில் ஒத்துப்போவதில்லை. ஒருவருடைய கற்பனையை அடுத்தவர் திருடுவது நியாயமல்ல என்பதை நான் மட்டும் அல்ல, எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அதை அமல்படுத்த தகுந்த கருவிகள் இல்லாதபோது அதைப்பற்றி புலம்புவது வீண் என்று நான் கருதுகிறேன்.
யாராவது ஒரு முறையை கண்டுபிடித்தால் எல்லோருக்கும் பயனளிக்கும்.
Vaasthuvam thaan
பதிலளிநீக்குஅப்பாவி தங்கமணிக்கு,
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி.
சீரியசான விசயத்தை கொளுத்திவிட்டுட்டு அதை நகைச்சுவை லேபிளில் கொடுப்பது சரியா. நீங்களே சொல்லுங்க.
பதிலளிநீக்குநாம் இப்போது சிந்திப்பதை எப்போதோ ஒருவர் சிந்தித்திருப்பார் என்பதுதான் நிஜம்.
பதிலளிநீக்குஅமைதி அப்பா சொன்னது:
பதிலளிநீக்கு//நாம் இப்போது சிந்திப்பதை எப்போதோ ஒருவர் சிந்தித்திருப்பார் என்பதுதான் நிஜம்.//
உண்மைங்க.
ந.ர.செ. ராஜ்குமார் சொன்னது:
பதிலளிநீக்கு//சீரியசான விசயத்தை கொளுத்திவிட்டுட்டு அதை நகைச்சுவை லேபிளில் கொடுப்பது சரியா. நீங்களே சொல்லுங்க.//
கொஞ்சம் வம்பு புடிச்ச சமாசாரந்தானுங்க. ஆனா முடியாத சமாசாரத்தைப் பேசியே தீர்க்கறது எப்படீங்க? பூனைக்கு மணி கட்டறது எப்படி?
“இந்த தகவல் எல்லோருக்கும் சென்றடைய ஓட்டு போடுங்க"
பதிலளிநீக்குஇப்படி மாத்திக்கலாம்...
"இந்த தகவல் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும். ஆனால் அதை நான் மட்டும் தான் செய்யணும்...ஆதலால், எனக்கு நீங்க ஓட்டு போடுங்க"
காப்பியாடிக்கப் பட்ட செய்திகள் ஜோக்குகள் (மொழி பெர்யர்ப்பாக இருந்தாலும்) எல்லாம copy right பண்ணமுடியாது. அப்படி பண்ணினால் அதை முதலில் எழுதியன் வந்து உங்க மேலே கேஸ் போடுவான். காப்பி அடித்ததும் இல்லாம அதை வைத்து "காசு (tangibles) மற்றும் புகழ் (intangibles) வேறு பண்ணுகிறாயா என்று. Intangibles such as good will is the one that gets more money. You pay more penalty for intangibles. ஒருவர் Adobe Photoshop - pirated version வைத்து ஒரு நூறு கோடி சம்பாதித்தால் அதில் 80 விழுக்காடு வரை உருவ முடியும். In addition to this, fines and punitive damages, etc. ஆகவே நாம மாட்டிகிட்டா அப்ப அந்த Adobe Photoshop விலையான 10000 (approx) ரூபாய்கள் மட்டும் கொடுத்து தப்பிக்கலாம் என்று சிலர் நினைக்கலாம். அது தவறு. நீங்கள் நன்றாக வளருங்கள் இப்ப வந்தா வண்டி சத்தம் கூட கிடைக்காது. நீங்கள் மேலும நன்றாக வளர்ந்தபின் அப்புறம் நாங்க வெளிநாட்டுக்காரங்க அங்கன வருவோம்...
ஒரு 25 வருடம் முன்பு உண்மை சமபவம் textile-க்கு பெயர் போன நகரத்தில் நடந்தது. பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளது. குப்புசாமி என்பவர் ஒரு textile machine-ஐ கண்டு பிடித்து விலை ஒரு கோடி என்று விற்க ஆரம்பித்தார். ஆரம்பித்த இரண்டு மாதங்களில் ராமசாமி என்பவர் அதே மாதிர் machine-ஐ காப்பி அடித்து அதே ஊரில் 83 லட்சத்திற்கு விற்பனை செய்தார். குப்புசாமி கண்டு பிடித்த machine-ஐ சீண்டுவார் யாரும் இல்லை. குப்புசாமி ராமசாமி மீது கேசைப் போட்டார். கோர்ட்டில் ராமசாமி தான் அந்த புது textile machine-ஐ காப்பியடித்த machine என்று ஒத்துக்கொண்டார். ஆனால் ராமசாமி தான் காப்பி அடித்தது குப்புசாமி கண்டு பிடித்த machine-ஐ அல்ல என்றும் அது German Company கண்டுபிடித்த machine -ஐப பார்த்து என்று சொல்லி ராமசாமி ஆதாரங்களை அள்ளி வீசினார். Case dismiss. இரண்டு பேரும் Copy Cats... களவாணிகள். அப்புறம் கேசைப்போட்ட குப்புசாமி க்கு அபராதம். கூடவே கோர்ட்டு செலவு எல்லாம். கெட்டிக்கார ராமசாமிக்கு ஜே! குப்புசாமி காலி!!
ஆட்டையாம்பட்டி அம்பிக்கு ஜே போடலாம்போல இருக்குது. எங்க ரொம்ப நாளாக் காணோம்?
பதிலளிநீக்குஆட்டையாம்பட்டி சேலம்-நாமக்கல் வழியில இருக்குதே, அந்த ஊர்தானா? நேத்து அந்த வழியில போனேன்.
Part 1....
பதிலளிநீக்குபதிவுலகமே போலி. இதில் போலிக்கு ஒரு போலியா....இது நீங்கள் சொன்னது தான்...
நான் எழுதிய பின்னூட்டங்கள் “இரண்டு” முன்னுக்கு வரும் பதிவர்களின் நலனில் அக்கறை கொண்டதினால் தான். எனக்கு என்ன அக்கறை? அவர்கள் இருவரும் அழகாக நன்றாக எழுதிகிறார்கள். அதனால், அவர்கள் சொல்லும் "கருத்துக்கள்" எல்லாம “சரி” என்ற மாயையில் அவர்கள் இருக்கிறார்கள். அது தவறு. இந்த இறுமாப்பு எல்லா எழுத்தாளர்களுக்கும் வரும். அவர்கள் இரண்டு பேருக்கும் அந்த இறுமாப்பு வந்து விட்டது எனபது என் கணிப்பு.
காப்பி அடிப்பதை சரி என்று சொல்லும் அவர்கள் “உலக நடப்பு” எதையும் புரிந்து கொள்ளவில்லை. “அணு அளவுக்கும்” அவரகள புரிந்து கொள்ளவில்லை. இது என்னுடை தாழ்மையான அபிபிராயம். அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் யாருக்கும் உலக நடப்பு முற்றும் தெரியவில்லை.
Part 2....
பதிலளிநீக்குஒரு நாள் ஒரு லட்சம் “Turn Over” இருக்கும் ஹோட்டேலில் ஒரு இருபது ரூபாய்க்கு நான் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்கா விட்டால் என்னை விட்டுவிடுவார்களா?
நான் ஏழை! எனது குழந்தைகள் பசியால் செத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆகவே நான் ஒரு அகில உலக, number one, கோடீஸ்வரர் இடம் இருந்து ஒரு இருபது ரூபாய் திருடினால் தப்பா? என்னை விட்டுவிடுவார்களா என்ன?
இவை "தப்பு" இல்லை என்றால் தராளாமாக நீங்கள் "காப்பி அடிக்கலாம்>"
நாளைக்கு இவர்கள் இருவரும் ரொம்ப ரொம்ப பெரிய ஆளாக வளர்ந்தால் (கட்டாயம் வருவார்கள் எனபது எனது கணிப்பு), அப்போ Microsoft, Apple, Adobe, etc எல்லா கம்பனிகளும் உங்களை உருவார்கள்.
Part 3....
பதிலளிநீக்குAt least, நாங்கள் உபயோகப்டுததுவது “Pirated Version Software” தான் என்ற “ஒப்புதல் வாக்கு மூலம்” கொடுக்காமல் இருக்கலாம் அல்லவா? அதையும் சொல்லுகிறேர்கள். அது தான் எனது ஆதங்கம். காலம் மாறிப்போச்சு...இந்தியாவும் உலக மகா சந்தையில் நுழைந்து விட்டது. ஆகையால் கவனம் அதிகம தேவை...எனது நண்பர்களே!
அப்படியும் "காப்பி அடிப்பீர்கள்" என்றால் நன்றாக காப்பி அடியுங்கள். அடித்து முன்னுக்கு வாருங்கள். உங்களது சொத்து ஒரு “Million Dollars,” அதாவது ஒரு 4.5 கோடி ரூபாய் இருந்தால் (வண்டி சத்தத்திற்கு ஆக பணம் தேத்த வேண்டுமே? அதனால் தான்), அப்போ நாங்கள் வருவோம். இது மேலும் தொடர்ந்தால் நானும் அங்கு வரலாம்.
நேர்மையாக சம்பாதிப்பது தப்பு இல்லையே????
நீங்கள் சொல்வது மிகச் சரி. நான் எனது இடுகைகளில், யாரையும் ஓட்டுப் போடும்படி குறிப்பிடுவதில்லை. நீங்கள் சொல்லும்போது, முன்பு படித்த பதிவு ஒன்று நினைவுக்கு வருகிறது. ஓட்டுகள் விழாததால், பதிவுகள் எழுதுவதை நிறுத்திவிடப் போவதாக அறிவித்திருந்த ஒரு பதிவுலக நண்பருக்கு, இன்னொருவர் கூறியிருந்த பதிவு.
பதிலளிநீக்கு"ஒட்டு விழவில்லை என்பதற்காக பதிவிடுவதை நிறுத்த வேண்டாம். நமக்கு என்று ஓட்டுகள் குறைவாக விழுகிறதோ, அன்று தான் அதிகமான பார்வையாளர்கள் வந்திருப்பார்கள்." என்று குறிப்பிடப் பட்டிருந்தது. அதனால், ஓட்டுகளைப் பற்றிக் கவலைப் படாமல், நாம் சொல்ல வந்த விஷயத்தை சொல்வதில் மட்டும் நம் கவனம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், அந்த விஷயம், சென்றடைய வேண்டியவர்களைச் சென்றடைந்துவிடும்.
எனது பதிவுகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து, கருத்துக்களை கூறி என் மேன்மைக்கு உதவுவதற்கு, என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு தருமாறு வேண்டுகிறேன்.
நன்றி.
Dragon,
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆட்டையாம்பட்டி அம்பிக்கு,
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்களுடைய ஆழமான கருத்துக்களைப் புரிந்து கொண்டு பொருத்தமான பதில் கமென்ட் போட என்னால் இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்.
நத்தத்தோட்டம் வீரன் அவர்களுக்கு, வருகைக்கு நன்றி. கருத்துக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
பதிலளிநீக்கு//யோவ் பெரிசு. அவங்கவங்க பதிவு போடறதுக்கு எவ்வளவு கஷ்டப்படறாங்கன்னு உனக்குத்தெரியுமா? சும்மா வாயக்கு வந்ததைப் பேசக்கூடாது.//
பதிலளிநீக்குஅப்படீங்களா, பதிவு போடறது அவ்வளவு கஷ்டங்களா? எனக்குத் தெரியாமப்போச்சுங்களே?