திங்கள், 27 டிசம்பர், 2010

ஈரோடு பதிவர் சங்கமம் - 1


ஈரோடு பதிவர் சங்கமத்திற்கு போய்விட்டு வந்தேன். விழாவைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் = விழா வெற்றி, மாபெரும் வெற்றி, வரலாறு காணாத வெற்றி, பதிவுலக சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி. அவ்வளவுதானுங்க.

விரிவாக எழுதுவதற்கு முன்பாக எனக்குப்பிடித்ததைப்பற்றி முதலில் எழுதுகிறேன்.

செவிக்குணவு இல்லாத போழ்தில் சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்.

செவிக்குணவு இன்னும் ஜீரணமாகவில்லை. ஆகவே அதை அப்புறம் பார்ப்போம்.

வயிற்றுணவைப் பற்றி முதலில் பார்த்து விடுவோம். பாருங்க. எழுத்தெல்லாம் எதுக்குங்க?

காலை சிற்றுண்டி களம் ?


முட்டைல என்னென்னமோ பார்த்திருப்பீங்க. முட்டை பூரிய பார்த்திருக்கீங்களா?


மதிய உணவு. இடமிருந்து வலமாக மூன்றாவது இருப்பதுதான் உலகிலேயே தலை சிறந்த பதிவர் ( நான்தானுங்க அது, ஹிஹீஹி..)


நாமக்கல்லில் ஒரு கோழிப்பண்ணையே காலி !

ஆனாப் பாருங்க, மீட்டிங் முடியறதுக்குள்ள அத்தனையும் ஜீரணமாகிட்டுதுங்க. புறப்படறப்ப கொஞ்சம் ஊட்டுக்கு கட்டிட்டிப் போலாம்னு பாத்தா சமையலறைல எல்லாத்தையும் கழுவிக் கமுத்துட்டுப் போயிட்டாங்க. நமக்கு கொடுப்பினை அவ்வளவுதான். ஆனா பாருங்க, அடுத்த வருஷம் உஷாரா மொதல்லயே பார்சல் பண்ணீடுவமில்ல !

நான் எடுத்த எல்லா படங்களையும் பார்க்க இங்கே செல்லவும். அல்லது இங்கே பார்க்கவும்

36 கருத்துகள்:

  1. சாப்பாடு சூப்பர். மத்ததையும் சீக்கிரமா சொல்லுங்க...

    பதிலளிநீக்கு
  2. கலாநேசன் said...
    //சாப்பாடு சூப்பர். மத்ததையும் சீக்கிரமா சொல்லுங்க...//
    அட, மொத வெட்டு

    பதிலளிநீக்கு
  3. ஐயோ பாவம்.... ஏன் சார் இப்படி நக்கலும் நையாண்டியும்..........சாப்பாடு எல்லாம் பிரமாதமாய்தான் இருக்கு. நாங்க எல்லாம் வந்திருந்தா உங்களுக்கு ரொம்ப சிரமமாய் போயிருக்கும். அதான்...நாங்க வரல. சரி சரி...என்ன பேசினாங்க? அத சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  4. கலாசேசன்,
    நான் நேற்று ஈரோடு பதிவர் சங்கமத்தில் எடுத்த இந்த போட்டோவைப்பாருங்கள்.

    http://nathathottamveeran.blogspot.com/2010/12/blog-post.html?zx=66b6a649e27ab021

    உங்கள் பதிவு ID போட்டோவிற்கும் நான் எடுத்த போட்டோவிற்கும் உள்ள ஒற்றுமை அபூர்வமான ஒன்றல்லவா?

    பதிலளிநீக்கு
  5. கக்கு - மாணிக்கம் said...

    //ஐயோ பாவம்.... ஏன் சார் இப்படி நக்கலும் நையாண்டியும்..........சாப்பாடு எல்லாம் பிரமாதமாய்தான் இருக்கு. நாங்க எல்லாம் வந்திருந்தா உங்களுக்கு ரொம்ப சிரமமாய் போயிருக்கும். அதான்...நாங்க வரல.//
    உங்களுக்கு கொடுப்பினை இல்லை. அதுக்காக போனவங்க மேல எதுக்கு வயித்தெரிச்சல் படறீங்க ?

    //சரி சரி...என்ன பேசினாங்க? அத சொல்லுங்க.//

    அதைத்தானுங்க ஜீரணம் பண்ணிட்டு இருக்கறனுங்க. கொஞ்சம் பொறுக்கோணும். இப்பத்திக்கு நான் எடுத்த படங்களை மட்டும் பாத்துக்கோங்க.

    http://picasaweb.google.com/drpkandaswamy1935/ErodeBloggersMeet#

    பதிலளிநீக்கு
  6. நல்ல அனுபவ பகிர்வு.
    (ஒன்லி மீல்ஸ் பதிவுன்னு போட்டு இருக்கலாம்! ஹி ஹி!)
    நன்றி

    பதிலளிநீக்கு
  7. விக்கி உலகம் said...

    //நல்ல அனுபவ பகிர்வு.
    ஒன்லி மீல்ஸ் பதிவுன்னு போட்டு இருக்கலாம்! ஹி ஹி!)
    நன்றி//

    அவங்கவங்களுக்கு அவங்கவங்க பிரியமானதைத்தானே மொதல்ல சொல்லுவாங்க.

    நான் எடுத்த எல்லாப் படங்களையும் யூட்யூப்லயும் வெப் ஆல்பத்திலயும் போட்டு லிங்க் கொடுத்திருக்கிறேன். பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  8. பழமைபேசி said...

    //பகிர்வுக்கு நன்றிங்கண்ணே!//

    தம்பி, நெஜமா இப்பத்தான் உங்க பிளாக்குக்குப் போய் இந்தப் படங்களைப் பார்க்கச் சொல்லலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்களை பார்த்துட்டீங்க. உங்களுக்குத் தெரிஞ்சவங்க நிறையப் பேர் இருப்பாங்கன்னு நினைக்கிறேன். ஏன்னா நேத்து அநேகமா எல்லோரும் உங்களைப்பற்றி நினைவு கூர்ந்தார்கள். அப்புறம் உங்கள் புத்தகம் "ஊர்ப்பழமை" எல்லோருக்கும் அன்பளிப்பாக கொடுத்தார்கள். மொத்தம் 100 பதிவர்கள் ரிஜிஸ்டர் செய்திருந்தார்கள். ஒரு பத்து பேர் ரிஜிஸ்டர் செய்யாமல் கலந்திருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  9. தாங்களை சங்கமத்தில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன் .

    பதிலளிநீக்கு
  10. புகைப்படங்கள் அருமை சார்..செவிக்கு உணவிட்டதையும் சொல்லிடுங்க...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    பதிலளிநீக்கு
  11. சார், நான் உங்களைப் பாத்துக்கிட்டேதான் உக்காந்திருந்தேன். விழா முடிந்து கொஞ்சம் அசந்த நேரத்தில் நீங்கள் பேருந்து நிலையம் சென்றுவிட்டீர்கள் என்று அறிந்தேன்.

    இருக்கட்டும். இன்னொரு சந்தர்ப்பத்தில் உங்களை சந்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. ஐயா உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  13. தங்கள் வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி சார்

    பதிலளிநீக்கு
  14. அசைவ சாப்பாடு தானா ? அவ்வ்வ் சைவ பதிவர்களுக்கெல்லாம் ஒண்ணுமே கிடையாதா ?

    பதிலளிநீக்கு
  15. அய்யா, உங்களை நிகழ்ச்சியில் சந்தித்தத்ல் பெருமகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.

    அன்புடன்
    ஆரூரன் விசுவநாதன்

    பதிலளிநீக்கு
  16. கண்ணாடி இல்லாம உங்களை பார்த்ததில் எனக்கு அடையாளம் தெரியவில்லை.. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  17. அண்ணா, வளச்சு வளச்சு போட்டோ எடுத்து கலக்கிட்டீங்க போங்க!

    இன்ன எங்க தாராவரத்து அண்ணன் இடுகை காணமே!!!!

    பதிலளிநீக்கு
  18. பகிர்விற்கு நன்றி!
    புகைப்படங்கள் அனைத்தும் அருமை!

    பதிலளிநீக்கு
  19. Gopi Ramamoorthy said...
    //சார், நான் உங்களைப் பாத்துக்கிட்டேதான் உக்காந்திருந்தேன். விழா முடிந்து கொஞ்சம் அசந்த நேரத்தில் நீங்கள் பேருந்து நிலையம் சென்றுவிட்டீர்கள் என்று அறிந்தேன்.
    இருக்கட்டும். இன்னொரு சந்தர்ப்பத்தில் உங்களை சந்திக்கிறேன்.//
    என்னை மன்னிக்க வேண்டும். அதிகம் பேரை ஒரே இடத்தில் சந்திக்கும்போது யாரைப்பார்த்தோம், யாரிடம் பேசினோம், அவர்கள் பெயர், அவர்களின் பதிவின் பெயர் இவைகளை மனதில் பதிய வைக்க முடியவில்லை. மாலை நேரம் நெருங்கியவுடன் ஊருக்குத் திரும்ப வேண்டுமே என்ற எண்ணம்தான் தலைதூக்கி நின்றது. அப்படியும் நான் வீட்டுக்கு வந்து சேரும்போது 9.30 ஆகிவிட்டது. கோவை பஸ்களில் அவ்வளவு கூட்டம்.

    எப்பொழுதாவது சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  20. வருகை புரிந்து சிறப்பித்தமைக்கு நன்றி அய்யா.

    அன்புடன் - அமரபாரதி

    பதிலளிநீக்கு
  21. புகைப்படப் பகிர்வுக்கு நன்றி. யார் என்ன விவரம் என்று குறிப்பிட்டிருக்கலாம்!

    பதிலளிநீக்கு
  22. ஸ்ரீராம். said...

    //புகைப்படப் பகிர்வுக்கு நன்றி. யார் என்ன விவரம் என்று குறிப்பிட்டிருக்கலாம்!//

    அன்புள்ள ஸ்ரீராம், என்னோட வீக் பாய்ன்டில் குத்திவிட்டீர்களே? இதற்கு விளக்கம் என்னுடைய இன்றைய பதிவில் கொடுத்திருக்கிறேன். தயவு செய்து மறக்காமல் பார்க்கவும். பார்த்து உங்கள் கருத்தையும் மறக்காமல் போடவும்.

    பதிலளிநீக்கு
  23. ஸ்ரீராம்,
    இந்த பதிவைப்பார்க்கவும்.
    http://www.jackiesekar.com/2010/12/blog-post_27.html#more

    பதிலளிநீக்கு
  24. முதல்ல சாப்பாட்டுக்குத்தான் வரணும் அப்புறம்தான் எல்லாம்... போட்டோஸ் அருமை.

    பதிலளிநீக்கு
  25. என் முட்டை பூரி பதிவில தப்பு இருக்கலாம் அதுக்காக அனானியா வந்து சில நண்பர்களே இத்தனை கமெண்ட்.......போட்டா எப்படி...?

    பதிலளிநீக்கு
  26. நாம ரெண்டு பேரும் சேர்ந்து நின்னு ஒரு போட்டோ எடுத்தோமே சார், சரியா வரலையா அந்த போட்டோ!?

    பதிலளிநீக்கு
  27. வால்பையன் said...

    நாம ரெண்டு பேரும் சேர்ந்து நின்னு ஒரு போட்டோ எடுத்தோமே சார், சரியா வரலையா அந்த போட்டோ!?
    அது வேற யாரோ ஒருத்தரு கேமிரா என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  28. சே.குமார் said...

    //முதல்ல சாப்பாட்டுக்குத்தான் வரணும் அப்புறம்தான் எல்லாம்... போட்டோஸ் அருமை.//

    அதுதானுங்க நடைமுறை உண்மை.

    பதிலளிநீக்கு
  29. இப்படியெல்லாம் போட்டோ எடுத்து நகைச்சுவையா எழுதுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா நானா அங்க வந்து உங்கள "தனியா" கவனிச்சிருப்பேன். :-))))

    பதிலளிநீக்கு
  30. ரோஸ்விக் said...

    //இப்படியெல்லாம் போட்டோ எடுத்து நகைச்சுவையா எழுதுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா நானா அங்க வந்து உங்கள "தனியா" கவனிச்சிருப்பேன். :-))))//

    மணற்கேணி போட்டிக்கு கட்டுரை அனுப்பியிருக்கிறேன். நீங்க எல்லாம் மனசு வைத்து என்னுடைய கட்டுரைக்கு பரிசு வரமாதிரி பண்ணுனீங்கன்னா, நானே அங்க வந்து உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.

    ஆனா என்னைத் "தனியாக" எல்லாம் கவனிக்காதீங்க. உடம்பு தாங்காதுங்க. அதுக்காக "குரூப்பா" கவனிக்கிறோம்னு சொல்லீடாதீங்க. வடிவேலுக்குத் தாங்கும். நமக்கெல்லாம் முடியாதுங்க.

    பதிலளிநீக்கு
  31. மறுபடியும் அனானிப் பின்னூட்டங்கள் வந்தால் நான் என்ன தான் செய்யனும்

    பதிலளிநீக்கு
  32. Anonymous said...

    //மறுபடியும் அனானிப் பின்னூட்டங்கள் வந்தால் நான் என்ன தான் செய்யனும்//

    உங்க வீட்டுக்குப் பக்கத்தில் எங்காச்சும் புளியமரம் இருக்கும். அதுல தூக்குப்போட்டுட்டு தொங்குங்க.

    பதிலளிநீக்கு