வெள்ளி, 29 ஜூலை, 2011

மணற்கேணி போட்டிகள்

சிங்கைப் பதிவர்கள் குழுமம் 2009ம் ஆண்டு கட்டுரைப் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற மூன்று பதிவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து விருது வழங்கியது பதிவர்கள் எல்லோருக்கும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும்.

அதேபோல் 2010 ம் ஆண்டுக்கும் கட்டுரைப் போட்டி அறிவிப்பு வெளியாகி பலரும் கட்டுரைகளை அனுப்பினார்கள். நானும் ஒரு கட்டுரை அனுப்பியிருந்தேன்.

இக்கட்டுரைகள் யாவும் தகுந்த நடுவர்களால் ஆய்வு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் தெரிந்தெடுக்கப் பட்டுள்ளார்கள் என்று சில பதிவுகள் மூலமாக அறிந்தேன். ஆனால் இந்த முடிவுகள் அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. ஏனெனில் எனக்கு இதுவரையில் எந்த தகவலும் வந்து சேரவில்லை.

போட்டிகள் நடத்தும் அமைப்பாளர்கள் போட்டி முடிவுகளை பதிவுகளில் வெளியிடுவதோடு இல்லாமல் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முடிவு விவரங்களை அனுப்புவது தேவை என்று கருதுகிறேன்.

ஏனென்றால் மிகுந்த முயற்சியில் தயாரிக்கப்பட்ட கட்டுரைகளை அந்தந்த பதிவர்கள் தங்களுக்கு ஏற்றமாதிரி உபயோகித்துக் கொள்ளலாம் அல்லவா? இதை மணற்கேணி அமைப்பாளர்கள் உடனடியாக கவனித்து ஆவன செய்வார்கள் என்று நம்புகிறேன்.

7 கருத்துகள்:

  1. போட்டிகள் நடத்தும் அமைப்பாளர்கள் போட்டி முடிவுகளை பதிவுகளில் வெளியிடுவதோடு இல்லாமல் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முடிவு விவரங்களை அனுப்புவது தேவை என்று கருதுகிறேன்.//

    அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. திருமதி.இராஜராஜேஸ்வரி,

    சரியாகச் சொல்லியுள்ளீர்கள். போட்டி நடத்துபவர்கள் வெற்றி பெறாத போட்டியாளர்களின் கட்டுரைகளை ரிலீஸ் செய்தால்தானே அவர்கள் அந்தக் கட்டுரைகளை வேறு உபயோகம் செய்ய முடியும்.

    வெற்றி பெற்றவர்களின் கட்டுரைகள் போட்டி நடத்துபவர்களின் உரிமையாகி விடும். இதுதான் வழிமுறை.

    பதிலளிநீக்கு
  3. ஒரு வேளை இதுக்கும் ரிப்ளை ஸ்டாம்ப் உள்ளே வச்சி அனுப்பனுமோ...!! :-)) .

    பதிலளிநீக்கு
  4. //ஜெய்லானி said...
    ஒரு வேளை இதுக்கும் ரிப்ளை ஸ்டாம்ப் உள்ளே வச்சி அனுப்பனுமோ...!! :-)) .//

    அப்படித்தான் போல இருக்குங்க ஜெய்லானி. மொதல்லயே சொல்லியிருந்தாங்கன்னா எப்படியாச்சும் தில்லு முல்லு பண்ணி ஈமெயில்லயே ஸ்டாம்ப் வச்சு அனுப்பிச்சிருக்கலாங்க, ஏமாந்து போச்சே?

    பதிலளிநீக்கு
  5. போட்டிகள் நடத்தும் அமைப்பாளர்கள் போட்டி முடிவுகளை பதிவுகளில் வெளியிடுவதோடு இல்லாமல் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முடிவு விவரங்களை அனுப்புவது தேவை என்று கருதுகிறேன்.//

    அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும்.நல்ல பதிவு.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  6. அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு