ஞாயிறு, 11 டிசம்பர், 2011

தொழில் நகரங்களும் விவசாயமும்



இந்தியா ஒரு விவசாய நாடு. ஏனெனில் நிலப்பரப்பில் பாதிக்கு மேல் விவசாயம்தான் நடைபெறுகிறது. நாட்டின் வருமானத்தில் பெரும் பங்கு விவசாயம் மூலமாகவே கிடைக்கின்றது. ஆனால் விவசாயம் மட்டும் பண்ணிக்கொண்டிருந்தால் இந்தியா வல்லரசாக முடியாது.


கி.பி. 2020 ம் ஆண்டு இந்தியா வல்லரசாகிவிடும் என்று ஒருவர் கனா காணச் சொல்லிவிட்டுப் போனார். அது பகற்கனவாகவே போய்விடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்தியா வல்லரசாக முதல் தேவை இந்தியா ஒரு தொழில் நிறைந்த நாடாக மாற வேண்டும். இது சரியா, தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் இது சரியென்று கருதுவதால் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்கள்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் மிகுந்த மாற்றமடைந்துள்ளது. நிலங்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன. தொழில் நகரங்களைச் சுற்றியுள்ள நிலங்கள் அதிக விலைக்குப் போவதால் விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்றுவிட்டு வரும் பணத்தை பேங்கில் போட்டு வரும் வட்டியை வைத்து வாழ்கிறார்கள்.

இந்த நிலை நாட்டின் நலனை எவ்வகையில் மாற்றும் என்பது தெரியவில்லை? வருங்காலத்தில் மக்கள் உணவிற்கு யாரிடம் கையேந்த வேண்டி வரும் என்பது ஒரு பெரிய கேள்வி?    




ஈரோட்டில் பதிவர் சங்கமம் 18.12.2011


பதிவர் சந்திப்பு வருகிற 18.12.2011 ஞாயிறு அன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது.
இடம் : ரோட்டரி சி.டி ஹால், பழையபாளையம், ஈரோடு.

6 கருத்துகள்:

  1. வருங்காலத்தில் மக்கள் உணவிற்கு யாரிடம் கையேந்த வேண்டி வரும் என்பது ஒரு பெரிய கேள்வி?

    கவலை அளிக்கும் கேள்வி!

    பதிலளிநீக்கு
  2. ஐயா உங்களின் நியாயமான ஆதங்கத்திற்கு விவசாயிகளிடம் ஆய்வு செய்து அவர்களே கூறிய காரணங்களை இங்கு தீர்வாக இத்தொடரில் ஆய்வு செய்து தொகுத்துள்ளோம்.படித்துவிட்டு உங்கள் கருத்தையும்,நடைமுறையையும் கூறுங்கள்.

    விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் -1
    http://suraavali.blogspot.com/2011/10/1.html


    விவசாயிகள்: நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் 2

    இந்தியாவோ எப்போதுமே இப்படி ஒரு நிரந்தர சந்தையை வைத்திருந்தும் அதை தமக்கானதாக வைத்திருக்கவில்லை.20 கோடி பேரை கொண்ட உலகின் மிகப்பெரிய சந்தையை கொண்டிருந்தும்,அதை மேலை நாடுகளின் சந்தையாகத்தான் வைத்துள்ளன இதனால் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் வாங்கும் சக்திஅற்றவர்களாகத்தான் ஆக்கப்பட்டுள்ளனர்,ஆக்கப்படுகின்றனர்.அதனால் இங்கு சந்தை நெருக்கடி என்று சொல்வதற்குஎதுவுமில்லை.
    http://suraavali.blogspot.com/2011/11/2_10.html


    விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் -3
    http://suraavali.blogspot.com/2011/11/3.html
    1.விவசாயத்தை நாட்டின் தொழிலாகவும்,அத்தியாவசிய தொழிலாகவும் அறிவித்து நடைமுறைப்படுத்து!
    2.நிலப்பிரபுக்கள்,மடங்கள்,ஆதீனங்கள்,கோயில்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை கூலி ஏழைவிவசாயிகளுக்கு பிரித்து வழங்கு!
    3.விவசாய விளை பொருட்களுக்கான விலையை தீர்மாணிக்கும் உரிமையை விவசாயிகளுக்கேவழங்கு!
    4.ஒவ்வொரு சாகுபடிக்கும் ஆகும் முழுச்செலவையும் விவசாயிகளுக்கு கடனாக வழங்கு!
    5.நாடு முழுக்க விவசாய விளை பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யும் முறையைஏற்படுத்து.

    விவசாயிகள் நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்-4
    http://suraavali.blogspot.com/2011/11/4.html

    பதிலளிநீக்கு
  3. >கி.பி. 2020 ம் ஆண்டு இந்தியா வல்லரசாகிவிடும் என்று ஒருவர் கனா காணச் சொல்லிவிட்டுப் போனார். அது பகற்கனவாகவே போய்விடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது

    ஹாஸ்யத்தை ரசித்தேன். ஆனால் விவசாயத்தைக் கை விடாமலே தொழிற்துறையில் ஈடுபடலாமே?

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்!

    //விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்றுவிட்டு வரும் பணத்தை பேங்கில் போட்டு வரும் வட்டியை வைத்து வாழ்கிறார்கள்//

    தங்கள் கருத்து உண்மைதான்.இந்தியாவில் நெல் விவசாயம் என்பது தற்சமயம் லாபகரமானதாக இல்லை.

    பதிலளிநீக்கு
  5. //எஸ் சக்திவேல் said...
    >கி.பி. 2020 ம் ஆண்டு இந்தியா வல்லரசாகிவிடும் என்று ஒருவர் கனா காணச் சொல்லிவிட்டுப் போனார். அது பகற்கனவாகவே போய்விடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது

    ஹாஸ்யத்தை ரசித்தேன். ஆனால் விவசாயத்தைக் கை விடாமலே தொழிற்துறையில் ஈடுபடலாமே?//

    முடியும் சக்திவேல். ஆனால் அதற்கு வலுவான அரசும் சுயநலமற்ற தலைவர்களும் தேவை. கிராமப்புற வேலை வாய்ப்புத்திட்டம் என்ற பெயரில் சோம்பேறிகளையும் சுரண்டல்காரர்களையும் வளர்க்கும் இப்போதைய அரசால் இதைச் செய்யமுடியாது.

    பதிலளிநீக்கு