திங்கள், 23 ஜனவரி, 2012

நீங்கள் சாதனையாளரா?


"வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருக்கவேண்டும். பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று வாழ்வதில் என்ன பயன்? வாழ்நாளில் ஏதாவது ஒரு சாதனை செய்வதுதான் பிறவியின் பயனை அடைந்ததாகும்."

இவ்வாறு பல அறிஞர்கள் தங்கள் நூல்களிலும், பேச்சாளர்கள் தங்கள் மேடைப் பேச்சுகளிலும் முழங்குவதைப் படித்தும் கேட்டுமிருப்பீர்கள்.
நம் வாழ்நாளில் பல சாதனையாளர்களைப் பார்த்தும் இருக்கிறோம். அவர்கள் லட்சத்தில் ஒருவராகவோ அல்லது கோடியில் ஒருவராகவோதான் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்ற வகையைச் சேர்ந்தவர்களே. நானும் அப்படித்தான்.

நீங்கள் ஒரு சாதனையாளராக இருந்தால் மிக்க சந்தோஷம். அதற்காக முயற்சி செய்பவராக இருந்தால் வாழ்த்துக்கள். அப்படி இல்லையென்றால் அதற்காக வெட்கப்பட வேண்டியதில்லை. அப்படியிருக்கும் நாம்தான் பெரும்பான்மைக் கட்சி. அதற்காக நாம் எந்த குற்ற உணர்ச்சியுடனும் வாழவேண்டியதில்லை.

நீங்கள் உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் செயல்பட்டு உங்கள் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றிக்கொண்டிருந்தால், அதுவே போதும் உங்களை முழு மனிதன் என்று சொல்வதற்கு. உலக மனிதர்கள் அனைவரும் சாதனையாளர்களாக மாறினால் இந்த உலகம் தாங்குமா?



23 கருத்துகள்:

  1. நன்றி, கந்தசாமி அவர்களே. என் நெடுநாளய மன உளைச்சலுக்கு விடை கிட்டியது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் குற்ற உணர்ச்சிகளிலிருந்து விடுதலை பெறவேண்டும், நண்பரே. அதுதான் முக்கியம்.

      நீக்கு
  2. நீங்கள் உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் செயல்பட்டு உங்கள் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றிக்கொண்டிருந்தால், அதுவே போதும் உங்களை முழு மனிதன் என்று சொல்வதற்கு. உலக மனிதர்கள் அனைவரும் சாதனையாளர்களாக மாறினால் இந்த உலகம் தாங்குமா //

    மிகச் சரியான கருத்து
    நமக்கு நாமே நல்லவராக இருப்பதே
    பெரிய சாத்னைதான்
    மன்ம் கவர்ந்த பகிர்வு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் செயல்பட்டு உங்கள் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றிக்கொண்டிருந்தால், அதுவே போதும் உங்களை முழு மனிதன் என்று சொல்வதற்கு.


    நல்ல பதிவு. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  4. ////நீங்கள் உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் செயல்பட்டு உங்கள் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றிக்கொண்டிருந்தால், அதுவே போதும் ////
    மிக நல்ல கருத்து

    நானும் வாழ்க்கையில் எதாவது சாதிக்கனும் என்று நினைத்துக்கொண்டு இருப்பவன் தான்

    உங்கள் பதிவு அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதனை புரிய நினைப்பது மிகவும் உயரிய நோக்கமே. ஆனால் எல்லோராலும் அது முடிவதில்லை.

      நீக்கு
  5. //மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் செயல்பட்டு//

    சரியாக சொன்னிர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, மனசாட்சி. உங்களைத்தான் இவ்வளவு நாளாத் தேடிக்கிட்டிருக்கேன்.

      நீக்கு
  6. வணக்கம் ஐயா,
    வாழ்விற்கு நீதி சொல்லும் நல்லதோர் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.
    எமது கடமைகளைச் சரிவரச் செய்து வாழ்வில் முன்னேறுவது எப்படி என்பதனை அழுத்தமாகச் சொல்லி நிற்கிறது இப் பதிவு.

    பதிலளிநீக்கு
  7. ஐயா, நானும் மெஜாரிடி கட்சிதான். தோன்றிற் புகழொடு தோன்றுக என்றான் வள்ளுவன். தோன்றுவதே நம் கையில் இல்லாத போது புகழோடு தோன்றுவது எப்படி.?

    பதிலளிநீக்கு
  8. மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் செயல்பட்டு உங்கள் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றிக்கொண்டிருந்தால், அதுவே போதும். சூப்பர் வரிகள். வாழ்க்கையின் யதார்த்தம் இதுதான்.
    அழகாக சொல்லியிருக்கிறீர்கள்... நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒரு யதார்த்தவாதி. கற்பனைகளில் வாழ்வதில்லை. நடைமுறை வாழ்க்கைதான் முக்கியம்.

      நீக்கு
  9. //உலக மனிதர்கள் அனைவரும் சாதனையாளர்களாக மாறினால் இந்த உலகம் தாங்குமா?//

    அருமையான சிந்தனை.

    பதிலளிநீக்கு
  10. என்ன ஐயா இப்பிடி சொல்லீட்டிங்க?
    வாழ்க்கைன்னா ஏதாச்சும் சாதிக்கணும்ல.நமக்கும் ஆசைதான்.ஆனா,திரும்புற பக்கமெல்லாம் அடிக்குமேல் அடியாவே விழுந்துட்டிருக்கு.
    பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  11. நானும் ரொம்ப காலமா எதையாச்சும் சாதிச்சுப் போடறதுன்னுதான் இருந்தனுங்க. இதுவரை சாதித்தது 77 வயது வரை உயிரோடு இருப்பது ஒன்றே.

    பதிலளிநீக்கு
  12. நம்மை கடமையை சரிவரச் செய்தாலே பெரும் தொண்டு.அதுவே பெரிய சாதனை .

    பதிலளிநீக்கு