சனி, 21 ஏப்ரல், 2012

நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?



இது ரொம்ப சுலபம். ஒரே ஒரு கொள்கை வைத்துக்கொள்ளவேண்டும். அதாவது நான் நல்ல கணவனாக இருப்பேன் என்று.  இதில் ஆழமான பிடிப்பு வேண்டும். கொள்கைப்பிடிப்பு இல்லாதவன் மனிதனே அல்ல.

முதலில் செய்யவேண்டியது என்னவென்றால்வெட்கம், மானம், மரியாதை, சூடு, சொரணை, இப்படி வேண்டாத சாமான்களை எல்லாம் காயலான் கடைக்குப் போட்டு விடவேண்டும். அப்புறம் நல்ல கணவனாவது வெகு சுலபம்.

வளவளவென்று சும்மா பேசி என்ன பிரயோஜனம்? சுருக்கமாக பாய்ன்ட் பை பாய்ன்ட்டாக (Point by Point) நெம்பர் போட்டு சொல்லிவிடுகிறேன்.

   1.   காலையில் மனைவிக்கு முன் எழுந்திருந்து நல்ல டிகாக்ஷன் காப்பி   போட்டு மனைவி எழுந்திருக்கும்போது சூடாகக் கொடுக்கவும்.
   
   2.   காய்கறிகள் வாங்கி வருவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவைகளை சமையலுக்குத் தேவையானபடி அரிந்து, கழுவிக் கொடுக்கவேண்டும்.

   3.   அவ்வப்போது உபயோகித்த பாத்திரங்களை அப்போதைக்கப்போது கிளீன் செய்து அதது வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவும்.

   4.   சாப்பிடும்போது ஆஹா, பேஷ் என்று சொல்லிக்கொண்டே சாப்பிடவும்.

   5.   துணி துவைக்கும் வேலைக்காரி வரவில்லையென்று துணிகளை பாத்ரூமிலேயே விட்டு விடக்கூடாது. உங்கள் துணிகளைத் துவைத்து காயப்போடவும். (உங்களில் உங்கள் மனைவியும் அடக்கம் என்பதை மறக்காதீர்கள்)

   6.   மனைவிக்கு உடம்பு சரியில்லையென்றால் ஆபீசுக்கு மருத்துவ விடுப்பு போட்டுவிட்டு மனைவிக்குத் தேவையானவை பணிவிடைகளைச் செய்யவும்.

   7.   மனைவி ஷாப்பிங்க் போகும்போது கூடவே போய் அவர்கள் வாங்கும் பொருட்களை பத்திரமாக வீட்டிற்குக் கொண்டுவந்து சேர்க்கவேண்டும்.
   
   8.   மாமியார் வீட்டு ஜனங்கள் வந்தால் ரயில்வே ஸ்டேஷன் அல்லது பஸ் ஸ்டேண்டிற்குப் போய் வரவேற்று டாக்சி வைத்து வீட்டிற்குக் கூட்டிவரவேண்டும். ஆட்டோவில் எக்காரணம் கொண்டும் கூட்டி வரக்கூடாது.

   9.   அந்த ஜனங்களை உள்ளூரில், பக்கத்து ஊர்களில் பார்க்க வேண்டிய இடங்களுக்கு டாக்சியில் கூட்டிக்கொண்டு போய் காண்பித்துக் கூட்டி வரவேண்டும்.

   10. அவர்கள் சில மாதங்கள் கழித்து ஊருக்குப் போகும்போது உண்மையாக வருத்தப்பட வேண்டும். கண்களில் கண்ணீர் வந்தால் நல்லது.

இந்த முறைகளெல்லாம் அக்மார்க் முத்திரை வாங்கியவை. இவை கட்டாயம் உங்களுக்கு நல்ல கணவன் பட்டத்தை உங்கள் மனைவியிடமிருந்து மட்டுமல்ல, உங்கள் மாமியாரிடமிருந்தே பெற்றுத்தரும். நான் கேரன்டி.

33 கருத்துகள்:

  1. அனுபவம் பேசுகிறது!!!!!!!!!!!!!!!
    நல்ல கணவனா இருக்க கோபாலின் மாமியார் சான்ஸே கொடுக்கலை:(

    பதிலளிநீக்கு
  2. அனுபவம் பேசுகிறது.. இல்லையா ஐயா...!!! தங்களைப் போன்ற அனுபவஸ்தவர்கள் சொல்வதிலும் ஒருவிதத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை இருக்கிறது. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பகிர்ந்து வாழ்வதில்தான் இன்பம் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது தங்களின் பத்து கருத்துகளும். பகிர்வினிக்கு நன்றி. ஐயா.!!!

    பதிலளிநீக்கு
  3. நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும் என்று என்னிடம் கேட்பவர்களுக்கு ஒரே பதில்: என்னை மாதிரி இருக்க வேண்டாம்; இருக்கவும் கூடாது; Simple and Best!

    இந்த பதிலை எல்லோரையும் விட அதிகம் ரசித்தது...வேறு யார்?
    என்னுடைய, Bitter-Half, sorry, என்னுடைய Better-Half!

    பதிலளிநீக்கு
  4. சார் இப்படியெல்லாம் செஞ்சா திட்டு கிடைக்காம இருக்குமா? அதுக்கு ஏதும் காரண்டி உண்டா?

    பதிலளிநீக்கு
  5. //முதலில் செய்யவேண்டியது என்னவென்றால், வெட்கம், மானம், மரியாதை, சூடு, சொரணை, இப்படி வேண்டாத சாமான்களை எல்லாம் காயலான் கடைக்குப் போட்டு விடவேண்டும். அப்புறம் நல்ல கணவனாவது வெகு சுலபம்.


    ////

    ஹி ஹி ஹி ஹி...
    சார்... என்னிக்கு நாங்க காச வாங்கிட்டு ஓட்டுப் போடா ஆரம்பிச்சமோ, அப்பவே இந்தக் கருமமெல்லாம் போயிடுச்சி சார்..

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவுங்க ஆனால் பெண்களை மதிக்க வேண்டாம் மிதிக்காமல் இருந்தால் சரி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னங்க, நீங்களே இப்படி சொல்லலாமா? உங்க பேர்ல எல்லாம் எவ்வளவு மதிப்பு வச்சிருக்கிறோம்? உங்களைப்போய் ............. ப்பமா? எழுதவே கை நடுங்குதுங்க.

      நீக்கு
  7. கொஞ்சம் முயன்றால் முடியும் என நினைக்கிறேன்
    முடிந்தால் நல்ல கணவனாக நிச்ச்யம் இருக்க வாய்ப்பிருப்பது
    என்பது அழகாகத் தெரிகிறது
    மனம் கவர்ந்த அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  8. நல்ல பல கருத்துக்களை சொல்லி இருக்கீங்க ஐயா......:)

    பதிலளிநீக்கு
  9. நல்ல பயனுள்ள ஆலோசனைகள்.

    நல்ல கணவர் என்று பெயரெடுப்பதென்றால் சும்மாவா?

    இதிலெல்லாம் சிலவற்றை நானே இரக்கப்பட்டு பகிர்ந்து கொள்ளப்போய் இப்போது அவைகள் எல்லாம், முழுமையாக என் வேலை என்றே ஆகிவிட்டது, ஐயா! ;(

    பதிவிடவே நேரம் கிடைப்பதில்லையாக்கும்!

    பதிலளிநீக்கு
  10. நல்ல யோசனைதான். ஆனால் இது காலம் கடந்து அல்லவா கிடைத்திருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கையை எப்போது வேண்டுமானாலும் புதிதாக ஆரம்பிக்கலாம், தோழரே.

      நீக்கு
  11. நல்ல யோசனைகள்.... அனுபவம் தந்த பாடத்தினை எங்களுக்கும் சொல்லிக் கொடுத்த உங்கள் நல்ல மனசுக்கு ஒரு சல்யூட்!

    பதிலளிநீக்கு
  12. தேவையான பதிவுதான், உண்மையா இருக்கக்கூடாதுன்னு
    சொல்றீங்க,.................
    கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் கலக்கிட்ரன்

    பதிலளிநீக்கு
  13. இந்த கட்டுரையை உங்கள் வீட்டில் படிக்கச் சொல்லி அவர்கள் கருத்துரையை போடுங்கள். அப்பொழுதுதான் உண்மை வெளி வரும். ஒரு உண்மை தெரிகின்றது நீங்கள் மகிழ்வாக வாழ முக்கிய காரணம் உங்கள் அன்பு மனைவியார் எந்த கருத்து வேறுபாடு இல்லாமல் நீங்கள் சொன்னபடி மகிழ்வாக கேட்டு மறுப்பு கொடுக்காமல் வாழ்ந்ததுதான்.தொடரட்டும் அன்பான ஆண்களின் மேலதிகாரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில ஒரு முக்கியமான குறிப்பு விட்டுப் போச்சு. அது என்னவென்றால்;

      நீங்கள் நினைப்பதை எல்லாம் மனைவியிடம் சொல்லிவிடாதீர்கள்.

      வம்பை விலை கொடுத்து வாங்கக் கூடாது நண்பரே.

      நீக்கு
  14. இதெல்லாம்தான் கண்டிப்பா பின்பற்றணும்னு நான் நினைக்கலை.., பொதுவா பொண்டாட்டியை மனுஷியா மதிக்கணும். அவர்களுக்கும் நம்மளை போல் உணர்ச்சிகள் உண்டுன்னு நினைச்சா போதும் மற்றபடி விசேசமா ஒன்னும் செய்ய வேண்டியதில்லை..!

    ஹி ஹி .., அப்புறம் நீங்க சொன்னதையெல்லாம் அப்பிடியே பின்பற்றினா 'பொண்டாட்டி தாசன்' ஆகிருவோம்..!

    பதிலளிநீக்கு
  15. ஐயா நல்ல புருஷனாக இருக்க இவையெல்லாம் தேவையை எனறு விளக்குனீர்கள் .நன்றி ! .ஒரு உண்மையான பொறுப்புள்ள தலைவன் நிர்வகிக்க வேண்டிய கடைமைகள்,உரிமைகள்,இரசியங்கள் எவை எவை என விளக்க முடியுமா ! அதை பற்றி ஒரு பதிவு உங்களிடம் இருந்து எதிர்பார்த்து காத்துயிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. காமடியாகத்தான் சொல்றீங்களோன்னு நெனச்சேன்... ஆனா சீரியஸாகத்தான் சொல்லியிருக்கீங்க.. ம்... ட்ரை கல்யாணம் ஆகிட்டாலே இந்த மாதிரி பாய்ன்ட் பை பாய்ன்ட் மாறிடுறது தானே பெஸ்ட்...

    ஐயா, உங்க ஒவ்வொரு பதிவையும் http://www.hotlinksin.com/ திரட்டியில இணையுங்கள். அப்போதானே ஈஸியா படிச்சுப் பார்த்துட்டு கமென்ட் போட முடியும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hotlinksin திரட்டியில் இணைந்திருந்தேன். அந்த திரட்டியில் word verification ஒரு பெரிய சங்கடமாக இருக்கிறது. சர்வர் சரியில்லை. இப்போது கூட அந்தத் திரட்டிக்குள் என்னால் login பண்ண முடியவில்லை. இன்னும் நிறைய முன்னேற வேண்டும்.

      நீக்கு
  17. சார் ஒரு உண்மை தெரியணும்.இது காமெடி பதிவா எழுதி இருக்கீங்களா?இல்லை சீரியஸ் பதிவாகவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எவ்வளவு சீரியஸ்ஸா எழுதியிருக்கேன், என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டியேம்மா, என் மனசு ஒடைஞ்சே போச்சு. நீங்க வேணும்னா என் வீட்டுக்கு ஒரு தடவை வந்து பார்த்துடுங்க, நான் சொல்றது உண்மையா இல்லை பொய்யான்னு!

      நீக்கு
  18. ஐயா எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.திருமணம் ஆன பின்பு முத்தான 10 யோசனைகளை(அறிவுரைகளை) கண்டிப்பாக கடைபிடிக்கிறேன்.ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதுக்கும் கல்யாணம் நிச்சயமான உடனே ஒரு தடவ நேர்ல வந்து போங்க. இன்னும் பல சிறப்பான யோசனைகள் வச்சிருக்கேன். அதயெல்லாம் தனியாத்தான் சொல்லணும். இப்படி பப்ளிக்கா ஏலம் போட முடியாது!!!!!!!!!

      நீக்கு
  19. கந்தசாமி சார்... நான் நம்பறேன், சார்... நீங்க சீரியஸாத் தான் எழுதறீங்க!
    இதெல்லாம் TRY பண்ணனும்னு எனக்கு ஆசையாத் தான் இருக்கு..ஆனால் ஏடாகூடாம ஏதாவது ஆய்ட்டா, யார் ‘டின்’ வாங்கறது என்கிற பயத்தில், பின் வாங்கி விட்டேன்!
    பை தி பை, ஃபெவிகால் அனுப்பியிருக்கேன்..உடைஞ்ச மனசை ஒட்ட வச்சுக்குங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப தேங்க்ஸ் ராமமூர்த்தி.

      நான் Quickfix தான் வச்சிருக்கேன். அதுல Fixes anything but broken hearts அப்படீன்னு போட்டிருக்குது. Fevicol, Broken Heart ஐ ஒட்ட வச்சிருங்களா?

      நீக்கு
  20. ரொம்ப ஈசி. அம்மா சொன்னதுதான் சரி- எல்லாவற்றிற்கும்.

    பதிலளிநீக்கு
  21. உங்க படத்தையும் உங்க ஊட்டுக்காரம்மா படத்தையும் போடக்கூடாதா? எதுக்கு இரவல் படம்?

    பதிலளிநீக்கு
  22. "மறுமொழிகள்" மொத்தத்தையும் ஒட்டுமொத்தமா குத்தகைக்கு எடுத்தாமாதிரி, முழுக்க முழுக்க உங்க ஆதிக்கம்! என்ன நடக்குது இங்க! எதாவது அண்டர்கிரௌண்ட் அண்டர்ஸ்டான்டிகா?

    பதிலளிநீக்கு