சனி, 29 செப்டம்பர், 2012

ஒரு திருத்தம்


எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எவ்வாறு Blogger ல் தமிழில் Type செய்வது | உலகவாழ்க்கையே வெறும் ஜெயிலு வாழ்க்கைதான்......

பழனி.கந்தசாமி at சாமியின் மனஅலைகள் - 10 hours ago
மேற்கண்ட தலைப்பில் என்னுடைய பிளாக்கில் ஒரு பதிவு வெளியானதாக கூகுள் காட்டும். அது ஒரு தவறான சரியான தகவல்தான். அது எப்படி நடந்தது என்பது ஒரு வெட்கக்கேடான சம்பவம்.
இப்போது பதிவுகளில் பின்னூட்டம் போடுவது ஒரு பெரிய கலையாகி மர்மமாகி வருகிறது. ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு மாதிரியான பின்னூட்ட வழிகள் வைத்திருக்கிறார்கள். நேற்று ஒருவர் 

எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எவ்வாறு Blogger ல் தமிழில் Type செய்வது


என்று ஒரு பதிவு போட்டிருந்தார். அதைப் பார்த்து விட்டு ஒரு பின்னூட்டம் போட முயற்சி செய்தேன். என்னமோ ஈமெயில், அப்பன் பேரு, ஆத்தா பேரு எல்லாம் கேட்டது. எல்லாத்தையும் கொடுத்துப்புட்டு அவங்க சொன்ன பட்டனை அழுத்தினா, என்னுடைய பிளாக்கில் அதே தலைப்பில் ஒரு பிளாக் ஏறி விட்டது.

என்னடா வம்பாப் போச்சே அப்படீன்னு அதை உடனே டெலீட் செய்தேன். ஆனா கூகுள்காரன் கொம்பனாச்சே, உடுவானா, அதையும் லிஸ்ட்டுல சேர்த்துட்டான். அதை கிளிக் பண்ணினா ஒரு மண்ணும் இல்ல. பார்த்தவங்க எல்லாம் பேஜாரா ஆயிட்டாங்க.

இதைப் பார்த்தவங்க எல்லாம் பேராசிரியருக்கு ஏதோ மறை கழண்டு போச்சு போலன்னு நெனச்சிருப்பாங்க. அப்படி நெனச்சா அதில தப்பு ஒண்ணும் இல்லை. கொஞ்ச நாளாகவே மண்டைக்குள்ள என்னமோ லூசா ஆடற மாதிரிதான் இருக்கு. கழட்டிப் பாக்கோணும். எப்படியும் இந்த ஆயுத பூஜைக்கு எல்லாத்தையும் கிளீன் பண்ணோணும். இதையும் கிளீன் பண்ணிடறேன்.

14 கருத்துகள்:

  1. ஹா....ஹா.....ஹா....
    இப்போ இங்க ஒரு கமெண்ட் போட்டா எங்கள் ப்ளாக்ல பதிவு ஒண்ணு ஏறிடாது இல்ல?! :)))

    பதிலளிநீக்கு
  2. ஹா..ஹா... இப்போது தான் பார்த்தேன்... இன்னும் dashboard-ல் இன்னும் அந்தப்பதிவு (தலைப்பு) இருக்கு...!

    பதிலளிநீக்கு
  3. "இதைப் பார்த்தவங்க எல்லாம் பேராசிரியருக்கு ஏதோ மறை கழண்டு போச்சு போலன்னு நெனச்சிருப்பாங்க"-----ரொம்ப நாளைக்கு பிறகு வாய் விட்டு சிரிச்சேன் சார்...!

    பதிலளிநீக்கு
  4. இது உங்க தப்பில்லை. கூகிள்காரன் எதோ குளறுபடி பண்ணிருக்கான்

    பதிலளிநீக்கு
  5. அப்படியா....

    எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கவேண்டியதிருக்கிறது பாருங்க..

    பதிலளிநீக்கு
  6. சிரிப்பு வருது! சிரிப்பு வருது!! உங்கள் பதிவை படிக்கையில் சிரிப்பு வருது.

    பதிலளிநீக்கு
  7. //காப்பி தண்ணி கொண்டாந்து வெச்சு ஆறி கெடக்கு //

    பதிலளிநீக்கு
  8. டெபிட் கார்டு நம்பரை குடுத்தா பணத்தையே உருவுனா மாதிரி ஆயிடுச்சே சார்!!

    பதிலளிநீக்கு
  9. ஐயா தாங்கள் கமான்ட் பாக்ஸ் கீழே லிங்க் திஸ் போஸ்ட்,கிரோடிவ் எ லிங்க் என்பதை கிளிக் செய்து இருப்பீர்கள் . அது அந்த தளத்தின் தலைப்பை உங்கள் ப்ளாக்கில் வரைவேற்றம் செய்த்து இருக்கும்.தங்கள் ப்ளக்கில் பார்க்கும் போது தலைப்பு தெரியும் அதை கிளிக் செய்தால் அவரின் தளத்திற்கு இட்டு செல்லும்.

    இது தான் நடந்து இருக்கும்.அவலவுதான் ப்ராபலம் சால்வ்.

    அ.ஆரிப்.

    பதிலளிநீக்கு
  10. மறை கழண்டு போச்சு கூகுள்காரனுக்கு

    பதிலளிநீக்கு
  11. என்ன! இப்படியெல்லாம் கூட ஆகுதா!!!!
    ஒண்ணுமே புரிய மாட்டேங்குது...

    பதிலளிநீக்கு