புதன், 31 அக்டோபர், 2012

விண்டோஸ் 8 Pro. நிறுவினேன்.



சில நாட்களுக்கு முன் விண்டோஸ் 7 Home Basic வாங்கி என் கம்ப்யூட்டரில் நிறுவினேன். விண்டோஸ் 7 நிறுவினவர்களுக்கு விண்டோஸ் 8 Pro. சலுகை விலையில் கொடுப்பதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்திருந்தது. இதற்கு முன்பே “விண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ” நிறுவி அதில் ஈடுபாடு வந்துவிட்டது. ஆகவே விண்டோஸ் 8 ஜ விலை கொடுத்து வாங்கிவிடுவது என்ற ஆசை வந்தது.

அக்டோபர் 26 ம் தேதி விண்டோஸ் 8 ரிலீஸ் பண்ணினார்கள். நம் ஊரில் 27 ம் தேதி 00.01 AM முதல் கிடைக்க ஆரம்பித்தது. அதாவது இன்டர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளவேண்டும். அதற்கு நம் கம்ப்யூட்டரில் ஒரிஜினல் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் XP நிறுவியிருக்கவேண்டும். நாம் விண்டோஸ் 8 டவுன்லோடு செய்ய முதலில் இன்டர்நெட்டில் பணம் கட்டவேண்டும். (1999 ரூபாய்). முதல் நாள் என்னுடைய ஏடிஎம் கார்டு வேலை செய்யவில்லை. அடுத்த நாள் என் பெண்ணின் கிரெடிட் கார்டை உபயோகித்தேன். பணம் மைக்ரோசாஃப்ட் கம்பெனிக்கு போனவுடன் விண்டோஸ் 8 டவுன்லோடு செய்ய விண்டோஸ் கீ வந்து விட்டது.

டவுன்லோடுக்கு இரண்டு மணி நேரம் ஆயிற்று. அந்த பைல், ISO வடிவில் இருக்கிறது. அதை DVD யில் ஏற்றவேண்டும். அதன் பிறகு அந்த DVD ஐ கம்ப்யூட்டரில் போட்டு விண்டோஸ் 8 ஐ நிறுவ வேண்டும். அதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. மொத்தமாக நான்கு மணிநேரம் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் கரன்ட் கட் ஆகாமல் வேறு தொந்திரவுகள் வராமல் இருக்கவேண்டும். கடவுள் புண்ணியத்தில் எந்த தொந்திரவும் இல்லாமல் விண்டோஸ் 8 ஐ நிறுவி விட்டேன்.


விண்டோஸ் 8 உடன் “விண்டோஸ் மீடியா சென்டர்” என்ற புரொகிராமை இலவசமாக கொடுக்கிறார்கள். அதற்கு தனியாக ஈமெயில் அனுப்பி, தனி கீ வாங்கவேண்டும். அப்படியே செய்து, அதன் கீ வந்தவுடன் அதையும் டவுன்லோடு செய்து நிறுவினேன்.  “விண்டோஸ் மீடியா சென்டர்”  என்ற புரொக்ராம் எல்லா வகையான ஆடியோ, விடியோ பைல்களையும் பிளே பண்ணுகிறது. இது ஒரு நல்ல புரொக்ராம்.


விண்டோஸ் 8 புரொக்ராமில் Antivirus சேர்ந்திருக்கிறது. தனியாக Antivirus மென்பொருள் வாங்க வேண்டியதில்லை.

இப்படியாக இந்த இரண்டு மாதங்களில் மென்பொருட்களுக்காக ஏறக்குறைய பத்தாயிரம் ரூபாய் செலவு ஆகிவிட்டது.

பதிவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இதற்கு முந்தைய விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் XP ஐ விட விண்டோஸ் 8 ல் பிரமாதமாகச் சொல்வதற்கு ஏதுமில்லை. விண்டோஸ் 77ஏழுக்கு ஒரு புது டிரஸ் மாட்டியிருக்கிறார்கள், அவ்வளவுதான். நான் கம்ப்யூட்டர் வைத்திருப்பது இந்த மாதிரியான கிறுக்குத்தனங்கள் பண்ணுவதற்காகத்தான். அதனால்தான் விண்டோஸ் 8 ஐ வாங்கினேன். குழந்தைகள் ஒரு பொம்மை பழசாகிப் போனால் வேறு புது பொம்மை வாங்குகிறார்கள் அல்லவா? அதுமாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அன்றாடத் தேவைகளுக்கு இந்த விண்டோஸ் 8, ஒன்றும் புதிதாக தரப்போவதில்லை.

31 கருத்துகள்:

  1. ரொம்ப அட்வான்ஸாக போகிறீர்கள். வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  2. உண்மையைச் சொன்னதுக்கு என் நன்றிகள்.

    பழைய லேப்டாப் மண்டையைப்போடும் நிலைக்கு வந்துருச்சுன்னு புதுசு ஒன்னு வாங்கி பத்துநாள் ஆச்சு. இது விண்டோஸ் 7.

    கலர் செட்டிங்ஸ் சரியா இல்லைன்னு தினமும் குடைஞ்சுக்கிட்டே இருக்கேன்:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ துளசி கோபால்

      கிராபிக்ஸ் கார்டு நிறுவப்பட்டுவிட்டதா என்பதை பரிசோதியுங்கள் [இந்த சிடி கணினி நிறுவனமே கொடுக்கும் விண்டோஸ் 7 க்கு என கிராபிக்ஸ் சாப்ட்வேர் இருக்கும், அதை நிறுவாவிட்டால் திரை பார்க்கவே சகிக்காது. அது மிஸ் ஆகிறது என நினைக்கிறேன்.

      நீக்கு
  3. // பதிவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இதற்கு முந்தைய விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் XP ஐ விட விண்டோஸ் 8 ல் பிரமாதமாகச் சொல்வதற்கு ஏதுமில்லை. விண்டோஸ் ஏழுக்கு ஒரு புது டிரஸ் மாட்டியிருக்கிறார்கள், அவ்வளவுதான். //

    நீங்களும் உங்கள் கம்ப்யூட்டரில் ஏதாவது செய்து கொண்டுதான் இருக்கிறீர்கள். உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு வழிகாட்டி.






    பதிலளிநீக்கு
  4. 'அட, அட, நல்ல விஷயமாக இருக்கிறதே.... நாமும்... 'என்று யோசித்துப் படித்து வரும்போது கடைசி வரிகளில் அந்த எண்ணங்களுக்கு பதில் சொல்லி விட்டீர்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
  5. kanini payanaaligalukku payanulla padhivu
    nandri vaazhththukkal
    surendran
    surendranath1973@gmail.com

    பதிலளிநீக்கு
  6. நானும் விண்டோஸ் 7 தான் பயன்படுத்துகிறேன்... விண்டோஸ் 8 இப்போதைக்கு தேவையில்லை என்று தான் நானும் நினைக்கிறேன்... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா பொழுது போகலைன்னா இந்த மாதிரி ஏதாவது நோண்டிக்கிட்டே இருக்கலாம். சாதாரண கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு விண்டாஸ் 7 போதும். ஏதுவாக இருந்தாலும் ஓரிஜினலாக இருந்தால் நாமே கம்ப்யூட்டரை பராமரிக்க ஏதுவாகும். நீங்கள் கம்ப்யூட்டரில் புலியாக இருந்தால் எதுவும் செய்யலாம்.

      நீக்கு
  7. நானும் Windows 8 க்கு மாறலாமா என யோசித்துக் கொண்டு இருந்தபோது தங்கள் பதிவு என் கண்ணைத் திறந்தது. ஆலோசனைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. டாக்டர் கந்தசாமி ஐயா!
    நீங்க விண்டோஸ் நிறுவனா என்ன நிருவாட்டி என்ன?
    அந்த பதாகியைப் பற்றி நச்சுன்னு நாலு வார்த்தை சொல்லுங்கோவ்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாக்டர் கந்தசாமி ஐயா!
      நீங்க விண்டோஸ் நிறுவனா என்ன நிருவாட்டி என்ன?
      அந்த பதாகியைப் பற்றி நச்சுன்னு நாலு வார்த்தை சொல்லுங்கோவ்..!

      பதாகி = பாதகி - சரிதானே?

      பாதகி அப்படீங்கற ஒரு வார்த்தையிலேயே எல்லாம் அடங்கிப் போச்சுங்களே. அப்புறம் தனியா வேற சொல்லணுங்களா.

      ஒண்ணு சொல்லோணுமின்னு நெனைக்கறேன். அந்தம்மா ரொம்ப நல்லவங்க. இந்தப் போலீஸ்தான் அவங்களை வில்லியா பண்ணீட்டாங்க.

      நீக்கு
  9. Windows 8 is not designed for old hardware.Better don't buy windows 8 , unless otherwise you intend buy new convertible laptop which comes with windows 8 where you can see real performance of windows 8.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம். விண்டோஸ் 8 பற்றிய இந்தக் கட்டுரை நல்ல சமயத்தில் எழுதி இருக்கிறீர்கள்.
    பல சந்தேகங்கள் தீர்ந்தன.

    நன்றி!

    ranjaninarayanan.wordpress.com

    பதிலளிநீக்கு
  11. தரமான இயங்குதளம் நிறுவுதல், பயன்படுத்துதல் எளிது, வைரஸ் தொல்லை இல்லை, எல்லா மீடியா பைல்களும் பிளே செய்ய முடியும். இது அத்தனையுமே லினக்ஸ் காரன் இலவசமா குடுக்கறான். பத்தாயிரம் மிச்சமாயிருக்கும். உலகம் பூராவும் இந்த மைகுரோசாப்ட் காரன் பின்னாடி போயி ஏமாந்து போறாங்களே..............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழகாத தேவதையை விட பழகின சைத்தானே மேல் என்ற ஆங்கிலப் பழமொழிப் பிரகாரம் நடக்கிறேன். தவிர 100 க்கு 90 பேர் செய்வதில் பெரிதாக தவறு ஒன்றும் வந்து விடாது என்ற எண்ணமும் காரணம்.

      நீக்கு
  12. உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.........

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் நண்பரே!

    Windows 8 release preview வந்தவுடனே, நா அத use பண்ணிப் பாத்தேன். "நா அப்டியே shock ஆய்ட்டேன்!" (நன்றி: "மருதமலை" வடிவேலு). ஏனா, அதுல பெர்சா ஒன்னியும் கெடையாது. நா என்னம்மோ, ஏதொ, ஆஹா, ஓஹோ'ந்னு இருக்கும்னு எதிர் பாத்தேன். நாம தான் ஏமாந்துட்டோம் (Microsoft நம்ள ஏமாத்திடுச்சு. ஏனா, அவுங்க குடுத்த build up அப்டி). இந்த windows 8'க்கு, 2 வருஷ gap ரொம்ப ஜாஸ்தி!

    பதிலளிநீக்கு
  14. விண்டோஸ் 8 வெர்ஷன் தொடு திரை மூலமாக மவுஸ் இல்லாமல் இயங்கக்கூடியது.
    மவுஸ் பயன்படுத்தியும் விண்டோஸ் XP அல்லது விண்டோஸ் 7 போன்றும் இயக்கலாம்.
    டெஸ்க் டாப்பில் அணைத்து போல்டர்களும் கூட வந்துவிடும். ஒவ்வொரு முறையும் உள்ளே செல்ல வேண்டியதில்லை.
    மேலும் சில சிறு மாற்றங்களுடன் இருக்கும். மற்றபடி வேறு பெரிய வேறுபாடுகள் ஒன்றும் இல்லை.
    விண்டோஸ் மீடியா செண்டர் அவர்களின் விஸ்டா பதிவில் இருந்தே எல்லாவற்றுக்கும் கூடவே வருகிறதே!
    எப்படியோ, ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் என்பது போல நீங்களும் கணணி விற்பன்னர் ஆகிவிட்டதில் மகிழ்ச்சியே.
    கொண்டுவந்து வாய்த்த காப்பியை ஆற வைத்து விட்டு வாங்கி கட்டிகொல்லாமல் இருந்தால் சரிதான் :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கொண்டுவந்து வைத்த காப்பியை ஆற வைத்து விட்டு வாங்கி கட்டி கொள்ளாமல் இருந்தால் சரிதான் :))//

      அது எப்படி முடியும்????????

      நீக்கு
  15. ஐயா எனது எக்ஸ் பி தான். ஒரே பிரச்சனையாக இருக்கு மாற்று மாற்று என்று. - சில செயல்பாடும் முடங்கியுள்ளது.சிலருக்கு என்னிடம் வந்து கருத்திடவும் முடியாதுள்ளதாம். இப்படிப் பல தொல்லை. ஒரு மெயில் வந்தது. தங்கள் படங்கள் உள்ளது என்று. நான் இங்கு தான் என்று தேடினேன் காணவில்லை. பதிவிற்கு நன்றி. இறையாசி கிட்டட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  16. விண்டோஸ் எட்டு பற்று சுருக்கமாகவும், அழகாகவும் இருக்கு பதிவு. நானும் நிறுவினேன். எனக்கு பிடித்துள்ளது ஐயா! நான் 700 ரூபாய்க்கு வாங்கினேன்.

    //விண்டோஸ் 77ஏழுக்கு ஒரு புது டிரஸ் மாட்டியிருக்கிறார்கள், அவ்வளவுதான்.//

    ஒரு வகையில் உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  17. அப்பிடி என்னதான் இருக்குஅந்த விண்டோஸ் 8-லன்னு நெனச்சேன்...ஒங்க பதிவை படிச்சதுக்கு பிற்கு தெரிஞ்சிகிட்டேன் அதுல ஒன்னுமில்லேன்னு...நன்றி...

    பதிலளிநீக்கு
  18. ரொம்ப நன்றி ஐயா அனுபவத்தைப் பகிந்து கொண்டமைக்கு

    பதிலளிநீக்கு
  19. உங்கள் அனுபவம் எங்களுக்கு ஒரு இலவச பாடம்.

    பதிலளிநீக்கு
  20. உடனடி அனுபவ தகவலுக்கு மிக்க நன்றி சார்... பயன் தரும் பகிர்வு...

    பதிலளிநீக்கு
  21. உடனடி அனுபவ தகவலுக்கு மிக்க நன்றி சார்.நன்றி..

    பதிலளிநீக்கு
  22. நல்லதொரு தகவல். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு