வியாழன், 27 ஜூன், 2013

எனக்குப் புரியாத பேங்க் விவரம் ஒன்று

இன்றைய செய்தித்தாள்களில் வந்த ஒரு பேங்க் மோசடி விவகாரம் பற்றி படித்திருப்பீர்கள். கர்நாடகா பெங்களூரில் உள்ள அரசு சார்ந்த ஒரு நிறுவனம் 25 கோடி ரூபாயை இரண்டாகப்பிரித்து சேலம் மாவட்டத்தில் சங்ககிரியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் டிபாசிட்டாக ஒரு வருடத்திற்கு வைத்திருக்கிறார்கள்.

அதில் 12 கோடி ரூபாயை வங்கி அதிகாரிகள் மோசடி செய்திருக்கிறார்கள்.

எனக்கு வந்த சந்தேகம் என்னவென்றால் இந்தப் பணத்தை டிபாசிட் வைப்பதற்கு ஒரு நல்ல பேங்க் பெங்களூரில் இல்லையா என்பதுதான்?  பெங்களூரில் இருந்து இவ்வளவு தூரம் வருவதற்கான காரணம் என்ன?

என் சந்தேகம் நியாயமானதுதானா?

19 கருத்துகள்:

  1. தங்களின் சந்தேகம் சரிதான். என்னவோ நடந்திருக்கிறது

    பதிலளிநீக்கு
  2. /// இன்றைய செய்தித்தாள்களில் வந்த ஒரு பேங்க் மோசடி விவகாரம் பற்றி படித்திருப்பீர்கள். ///

    படிக்கலையே :) {நான் படித்த பேப்பர் இந்தியன் எக்ஸ்பிரஸ்}

    சரவணன

    பதிலளிநீக்கு
  3. உங்கள் ஐயம் நியாயமானது தான். இங்குள்ள வங்கியாளர்கள் அங்கு சென்று அதை ‘கேன்வாஸ்’ செய்து கொண்டு வந்திருப்பார்கள். தங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா புரிஞ்சிடுச்சுங்க. ஆனா அடுத்த சந்தேகம் - அப்படி முடிவு எடுத்த அதிகாரிங்களுக்கு மனசுல கொஞ்சம் கூட பயமா இருக்காதுங்களா?

      நீக்கு
    2. சில இடங்களில் வைப்புக்கள் ‘வாங்க’ப்படுகின்றன என்பதுதான் வேதனையான விஷயம். இதற்கென்று commission பெற்றுக்கொண்டு Deposits களை பெற்றுத் தருகின்ற முகவர்கள் நிறைய உண்டு.(அதுவும் சேலம் போன்ற இடங்களில்) இப்படி வருகின்ற Deposits களை நிச்சயம் மாட்டிக்கொள்வோம் எனத் தெரிந்தாலும், அவைகளை சிலர் இப்படி ‘தள்ளிக்கொண்டு போவதும் உண்டு.காரணம் பேராசைதான். அதற்கு முன்னால் பயமெல்லாம் பறந்தோடிவிடும்.

      நீக்கு
  4. அநியாயமான சந்தேகம் :) ஆட்டையப்போடறதுன்னு முடிவு பண்ணித்தான் வேலைய ஆரம்பிகிறாங்க.. அதுக்கு தோதான பேங்க் எங்கயோ அங்கதானே டெபாசிட் பண்ணமுடியும். இதெல்லாம் கூட்டுக்கொள்ளை :)

    எங்கயோ பங்கு பிரிக்கிறதுல கோளாறு போல.. வெளிய வந்திருச்சு :)

    இதெல்லாம் தெரியாத அப்பாவி நீங்கன்னு நம்பசொல்றீங்களே அது இதவிட அநியாயம் :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரெக்ட்டா பாயின்ட்ட புடிச்சிட்டீங்க !

      நீக்கு
    2. The Depositor PSU would have some internal guidelines for placing deposits with banks. Banks are governed by RBI regulations in accepting Deposits. Generally deposits of ticket size of Rs 5 Crores and above are called PDs and carry special rates of interest (different from the published public rates). These rates are decided on a daily basis based on the funds position of concerned banks. Some PSUs place the fixed deposit only with such banks where they maintain the current account. Some may go outside such net and distribute the patronage. Some call for bids from various banks and choose the competitive bids. But in any case they choose only reputed banks. Hence your perception that the bank chosen by the PSU is "NOT A GOOD BANK" appears misplaced. If you see the news item you would find that PSU had their account with the Bangalore Branch of the bank and the deposit was transferred to their Sankagiri Br. In fact the concerned bank, PNB, is one of the leading Public Sector Banks. The real problem is that the deposit was foreclosed based on a forged request. That such a forgery could happen in one branch but not in another is not a tenable proposition. Also the concurrent deposit of Rs13 crores was repaid by the same branch.From the details of the case as reported in the press, it would appear that the depositor may not stand to lose, unless he is a part of the fraud.

      நீக்கு
    3. Well. Despite comprehensive Systems & Procedures and Checks and Balances in place in big organisations including Banks, mishaps/frauds do occur.We do not know the full facts of the case as the investigation is not completed yet. From what is reported in the press:
      http://articles.timesofindia.indiatimes.com/2013-06-27/coimbatore/40231708_1_five-days-custody-special-cbi-court-punjab-national-bank
      it can be surmised that it was a result of execution of the request of the depositor (which is reported now to be forged) to foreclose the deposit.The news report says
      "The letter, however, carried the credentials of the finance controller of KIADB and the official seal of the government body."
      The bank official might have felt that the letter is in order and executed it.(or could have connived as alleged by CBI) In hindsight, it may be said that he ought to have remitted the foreclosed deposit proceeds to his Bangalore office to be credited to the PSU. What were the circumstances at that it time is anybody's guess.
      I just wanted to rebut the view that the transaction was patently wrong from the beginning,leading to the mishap.
      Anyway as the settlement was done through banking channels, the beneficiaries can be identified and corrective actions taken, though it would be a long road.

      நீக்கு
  5. வங்கிகளும் கொள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டன என்று தெரிகிறது! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் தவறான கருத்து/முடிவு
      - பாபு

      நீக்கு
  6. நியாயமானதுதான்...

    இந்தப் போக்கில் விசாரித்தால் சில உண்மைகள் வெளி வரலாம்...

    பதிலளிநீக்கு
  7. எல்லா இடமும் நடக்கிறது. மிக அநியாயம் தான்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு