இன்றைய அவசர உலகில் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளை நல்ல பொறுப்புள்ள மனிதர்களாக்குவது எப்படி என்று சிந்திக்கக்கூட நேரம் இருப்பதில்லை. எப்படியோ குழந்தைகள் பிறந்தார்கள், எப்படியோ வளர்கிறார்கள் என்ற அளவில்தான் சிந்தனைகள் இருக்கின்றனவே தவிர, அவர்களை பொறுப்பான மனிதனாக உருவாக்கும் பொறுப்பு தமக்கு இருக்கிறது என்று பெரும்பாலான பெற்றோர்கள் உணருவதில்லை. அப்படி உணர்ந்தாலும் அந்த நோக்கத்தை எப்படி அடைவது என்ற ஞானம் இருப்பதில்லை.
ஒவ்வொரு குழந்தையின் குணங்கள் கரு உற்பத்தியாகும்போதே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன. அந்த குணங்கள், அந்தக் குழந்தைகள் வளரும் பருவத்தில் சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டு, ஒருவனுடைய திறன் வெளிப்படுகிறது. பெற்றோர்கள் இந்த சூழ்நிலையை அந்த குழந்தை நன்கு வளர்ந்து அவனுடைய திறமைகள் வெளிப்படுமாறு அமைத்துக் கொடுக்கவேண்டும். இது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமையாகும்.
குழந்தை வளர்ப்பை யாரும் முன்கூட்டியே அறிந்து கொண்டு வருவதில்லை. இந்த அறிவு அனுபவத்தால் மட்டுமே வருவது. அதனால் இந்த அனுபவத்தைப் பெற ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் இருக்கவேண்டும். வேலைப்ளுவைக் காரணம் காட்டி இந்த பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது.
குழந்தை பிறக்கும்போதே சில குறைபாடுகளுடன் பிறக்கலாம். அதை நல்ல டாக்டரிடம் காண்பிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். உடலில் குறையிருக்கலாம் அல்லது மூளையில் குறையிருக்கலாம். இதை முதலிலேயே தெரிந்து கொண்டால் அந்தக் குழந்தையை வளர்க்கும்போது தேவையான சிகிச்சைகளைச் செய்ய வசதியாயிருக்கும்.
குழந்தைகள் பள்ளிப் பருவத்திற்கு முன்னால் வூட்டில் பெற்றோர்களின் கண்காணிப்பில் வளருகின்றன. பள்ளிக்குச் சென்ற பிறகு அவர்களைப் பாதிப்பவர்கள் ஆசிரியர்களும் உடன் பயிலும் மாணவர்களும்தான். அவர்கள் வளர வளர சக மாணவர்களின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வரும். இதைத்தான் ஆங்கிலத்தில் Peer Pressure என்கிறார்கள். இது மிகவும் முக்கியமானதொன்றாகும்.
இந்த சூழ்நிலை பாதிப்பை சரியான முறையில் அடையாளம் கண்டு அவர்களை சரியான வழியில் நடத்துவது பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது. பெற்றோர்களின் முதல் கடமை, தங்கள் பொறுப்புகளை உணருவதுதான். வழிமுறைகளை சிறிது முயற்சித்தால் கற்றுக்கொள்ளலாம்.
குறிப்பாக பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் இன்னும் கவனமாக இருக்கவேண்டும். அவர்களை நன்கு கண்காணித்து அந்தந்த வயதில் தெரிந்து கொள்ளவேண்டியவைகளை பக்குவமாகச் சொல்லிப் புரியவைக்கவேண்டும்.
தவிர பெற்றோர்களும் தங்கள் வாழ்க்கையில் தங்கள் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருக்கவேண்டும்.
குழந்தைகளுக்கு வேண்டிய சௌகரியங்களை தேவைக்கு அதிகமாகவே கொடுத்து விட்டு அவர்கள் தானாக வளர்ந்து நல்ல குடிமகன்களாக வளர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்ப்பது பேதமை.

.jpg)




Smell of soil is due to the smell of two small molecules produced by small organisms. These small molecules are known as geosmin and 2-methylisoborneol (MIB). These compounds are mostly produced by bacteria belonging to the genus Streptomyces. In this connection it is worth remembering that the majority of antibiotics we use are produced by streptomycetes. A Petri dish with colonies of Streptomyces and the structures of the two compounds are shown in the Figure at right. The smell of these compounds can cause reduced quality of drinking water. Geosmin and MIB also have been found to reduce the quality of fish in freshwater aquacultures as the odours penetrate and accumulate in the fish, thereby lowering the commercial value.
Recently, with availability of the genome sequence of Streptomyces coelicolor Cane and associates have done extensive research on the enzymology and the reaction mechanisms of the geosmin and MIB biosynthetic pathways (4, 6).