வியாழன், 20 மார்ச், 2014

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.


ஆரம்பப் பள்ளிப் பாடத்தில் படித்த இந்த வாசகம் "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்ற வாசகம் என்னுடைய உள் மனதில் ஆழமாகத் தைத்திருந்தது. இதன் கூடவே இன்னொரு வாசகமும் தைத்திருந்தது. அது "எந்தப் பொருளையும் வீணாக்காதே" என்பதாகும்.

இந்த இரண்டு வாசகங்களும் உண்மையில் பொன்மொழிகளாகக் கருதப்பட வேண்டிய தகுதி உடையவை. ஆனால் பொன்மொழிகள் ஏட்டில் பொன்னெழுத்துகளால் பொறித்து சட்டம் போட்டு வைக்கத்தான் லாயக்கே தவிர வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்காக அல்ல என்ற உண்மையை நீங்கள் கற்றிருப்பீர்கள்.

என் வாழ்வில் இந்த பொன்கொழிகளைக் கடைப்பிடித்ததின் விளைவுகளை சொல்கிறேன். வருடத்தில் இரண்டு முறை எங்கள் வீட்டைத் திருப்பிப் போட்டு சுத்தம் செய்வதை என் சகதர்மிணி வழக்கமாகக் கொண்டுள்ளாள். தமிழ் வருடப் பிறப்பிற்கும் ஆயுத பூஜைக்கும் இரண்டு தடவை. பொதுவாக இந்த நாட்களில் நான் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி ஒரு வாரம் வெளியூர் போய்விடுவது வழக்கம்.

இந்த முறை அப்படி செய்ய உடல் நிலை இடம் கொடுக்கவில்லை. பொறியில் சிக்கிய எலி போல் மாட்டிக்கொண்டேன். இங்க பாருங்க, உங்க கப் போர்டை எல்லாம் சுத்தம் செய்வது உங்கள் பொறுப்பு, கொஞ்சம் கொஞ்சமாகச் செய்தால் போதும் என்று உத்திரவு போட்டு விட்டாள். சுப்ரீம் கோர்ட்டு உத்திரவை அலட்சியம் செய்ய நானென்ன மத்திய அரசு மந்திரியா என்ன, ஆகவே ஒழுங்காக சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.

முதல் நாள் ஒரு கப்போர்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். அதில் பல காலமாக வாங்கின சாமான்கள் பேக் செய்து கொடுத்த பிளாஸ்டிக் பைகள் கட்டு கட்டாக இருந்தன. பின்னால் எதற்காகவாவது வேண்டியிருக்கும் என்று சேமிக்கப்பட்டவை அவை. கல்யாண வீட்டில் கொடுக்கப்படும் தாம்பூலப் பைகளும் இதில் அடக்கம். கரப்பான் பூச்சிகள் அங்கு பல தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருக்கும் போலத் தோன்றியது.

இது எல்லாம் வேண்டுமா என்று பார்யாளைக் கேட்டேன். எனக்கு வேண்டாம் உங்களுக்கு வேண்டுமா என்று நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்று முடிவை என்னிடம் விட்டு விட்டாள்.

நான் எப்போதோ படித்த இன்னொரு பொன்மொழி ஞாபகத்திற்கு வந்தது. "எந்த ஒரு பொருளையும் 6 மாதம் நீங்கள் உபயோகப்படுத்த வில்லையானால் அந்தப் பொருள் உங்களுக்குத் தேவையில்லை என்று அர்த்தம்." இதுவும் மனதில் தைத்த ஒரு வாசகம்.

இந்த அளவுகோலில் பார்த்தால் இந்தப் பைகளை பல வருடங்களாக உபயோகப் படுத்தவில்லை. ஆகவே இவை நம் வாழ்விற்குத் தேவையில்லை என்று முடிவு செய்தேன். அவைகளை எல்லாம் தூக்கி வெளியே போட்டேன். கரப்பான் பூச்சிகள் மிகவும் ஆட்சேபணை தெரிவித்தன. எல்லாவற்றிற்கும் "ஹிட்" ஸ்ப்ரே கொடுத்தேன். எல்லாம் தங்கள் ஆட்சேபணையை வாபஸ் வாங்கிக்கொண்டன.

தொடரும்...

31 கருத்துகள்:

  1. ஆறுமாதம் டைம் தரணுமா... போச்சு.. இப்போ நான் எந்தப் பொருளை எந்தத் தேதியில் பத்திரப் படுத்தினேன் என்று நோட் செய்து வைக்க ஆரம்பிக்கணுமா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்து ஸ்ரீராம் அவர்களே அந்த நோட்டுக்கு ஆறு மாதம் ஆகிவிடபோகிறது.
      ஆனாலும் இது நல்ல யோசனைதான். தூக்கி எறிவதையும் நோட்டில் குறித்து வைத்து ஆறு மாதம் உபயோகமில்லாமல் இருந்தால் மட்டுமே எறிய வேண்டும் என்ற பழக்கம் நல்லதொரு பழக்கம்தான்.
      சும்மாவா சொன்னார்கள் "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு" என்று (இன்னொரு பொன்மொழி வந்து விட்டது)

      சேலம் குரு

      நீக்கு
    2. அப்போ 6 மாதம் ஆகும்போது பழசைத் தூக்கிப் போட்டு விட்டு புது நோட்டு மாற்ற வேண்டுமோ....! :))

      நீக்கு
  2. //"எந்த ஒரு பொருளையும் 6 மாதம் நீங்கள் உபயோகப்படுத்த வில்லையானால் அந்தப் பொருள் உங்களுக்குத் தேவையில்லை என்று அர்த்தம்."//

    இதை படித்ததும் நானும் என்னிடம் தேங்கியுள்ள தேவையில்லா பொருட்களை தூக்கி எறிய தொடங்கிவிட்டேன்.

    மேலும் என்ன செய்தீர்கள் என் அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுமை திரு நடன சபாபதி அவர்களே. எனது அனுபவத்தில் கண்ட உண்மை இதுதான். நம்மிடம் இருக்கும் வரை அந்த பொருளுக்கு உபயோகம் இருக்காது. வேண்டாம் என்று தூக்கி எறிந்த அடுத்த நாள் அதற்கு ஓர் உபயோகம் வந்துவிடும். ஏண்டா தூக்கி எறிந்தோம் என்று நம்மை நாமே திட்டிகொள்வோம். ஒன்று நாலு இடம் தேடி மீண்டும் காசு கொடுத்து அதே பொருளை வாங்கிகொண்டு வருவோம் இல்லை அந்த வேலையை செய்யாமல் விட்டு விடுவோம்.
      எனவே தூக்கி எறிவதற்கு முன் ஒரு தடவைக்கு நாலு தடவை யோசனை செய்து செய்ய வேண்டும் (யோசனை செய்ய ஆரம்பித்தால் தூக்கி எறியவே மாட்டோம்)

      சேலம் குரு .

      நீக்கு
  3. ஹிட்" ஸ்ப்ரே கொடுத்தேன். எல்லாம் தங்கள் ஆட்சேபணையை வாபஸ் வாங்கிக்கொண்டன.

    சர்வாதிகாரிகள் எடுக்கும் முடிவாயிற்றே..! ஆட்சேபிக்க ஆளேது ..??!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "வலியோர் வாழ்வதும் எளியோர் வீழ்வதும்" (இன்னொரு பொன்மொழி) அன்று முதல் இன்று வரை உள்ள நடைமுறைதானே.
      மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.
      அட்லீஸ்ட் அந்த கரப்பான்களுக்கு வேறு ஒரு இடம் கொடுத்திருக்கலாமே

      திருச்சி பூச்சிப்பிரியன்

      நீக்கு
  4. "எந்த ஒரு பொருளையும் 6 மாதம் நீங்கள் உபயோகப்படுத்த வில்லையானால் அந்தப் பொருள் உங்களுக்குத் தேவையில்லை என்று அர்த்தம்." ஐயையோ....... அப்படீன்னா ஒரு வருஷமா உண்டியல்ல போட்டு வச்சிருந்த காசு.....?


    -

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயப்படவே வேண்டாம்
      எனக்கு கொடுத்து விடுங்கள்.
      நான் ஒரு ஆறு மாதம் வைத்திருந்து விட்டு அப்புறம் உங்களிடம், உங்களிடமே திரும்ப கொடுத்து விடுகிறேன்

      சேலம் குரு

      நீக்கு
    2. //வருடத்தில் இரண்டு முறை எங்கள் வீட்டைத் திருப்பிப் போட்டு சுத்தம் செய்வதை என் சகதர்மிணி வழக்கமாகக் கொண்டுள்ளாள். தமிழ் வருடப் பிறப்பிற்கும் ஆயுத பூஜைக்கும் இரண்டு தடவை.//

      அப்போ போகியன்று வீட்டை சுத்தம் செய்வதில்லையா?
      அன்றுதானே "பழையன கழிதலும் புதியன புகுதலும்" நடந்து கொண்டிருந்தது.

      திருச்சி அஞ்சு

      நீக்கு
    3. //வருடத்தில் இரண்டு முறை எங்கள் வீட்டைத் திருப்பிப் போட்டு சுத்தம் செய்வதை என் சகதர்மிணி வழக்கமாகக் கொண்டுள்ளாள். தமிழ் வருடப் பிறப்பிற்கும் ஆயுத பூஜைக்கும் இரண்டு தடவை.//

      புரிந்து விட்டது. எனக்கு நன்றாக புரிந்து விட்டது.
      தமிழர்கள் தமது கலாச்சாரமாக போகி அன்றுதான் வீட்டை சுத்தம் செய்வார்கள். நீங்கள் தமிழ் வருடப் பிறப்புக்காக சுத்தம் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு தமிழ் வருட பிறப்பு சித்திரை 1 அல்ல தை 1 அன்றுதான். முத்தமிழ் அறிஞர் கலைஞர் சொன்ன மாதிரி தை 1 அன்று தமிழ் வருட பிறப்பு கொண்டாடி வருவதால் நாங்கள் தி மு க கட்சியை சேர்ந்தவர் என்று புரிந்து விட்டது எனக்கு நன்றாக புரிந்து விட்டது.

      திருச்சி தாரு

      நீக்கு
    4. உண்டியல் காசை உடனே எடுத்து செலவு செய்து விடுங்கள். நீங்கள் செலவழித்த பணம்தான் நீங்கள் சம்பாதித்தது. சேமித்து, விட்டுச் செல்லும் பணமெல்லாம் உங்கள் வாரிசுகள் சம்பாதித்தவை.

      நீக்கு
  5. //பொன்மொழிகள் ஏட்டில் பொன்னெழுத்துகளால் பொறித்து சட்டம் போட்டு வைக்கத்தான் லாயக்கே தவிர வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்காக அல்ல என்ற உண்மையை நீங்கள் கற்றிருப்பீர்கள்.//

    முற்றிலும் உண்மையான வார்த்தைகள்.
    அதனால்தான் திருக்குறள் போன்றன நூலகங்களிலும்
    அர்த்தம் புரியாத இன்றைய பாட்டுக்கள் எல்லா தெருக்களிலும் இருக்கின்றன.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  6. // கரப்பான் பூச்சிகள் மிகவும் ஆட்சேபணை தெரிவித்தன. எல்லாவற்றிற்கும் "ஹிட்" ஸ்ப்ரே கொடுத்தேன். எல்லாம் தங்கள் ஆட்சேபணையை வாபஸ் வாங்கிக்கொண்டன.//

    கரப்பான் பூச்சிக்கு "ஹிட்" ஸ்ப்ரே
    ஆம்படையான்களாகிய நமக்கு நமது பாரியாளின் ஒரு பார்வை போதுமே. அடிச்சி புடுச்சி வேலையை செய்து முடித்து விட மாட்டோம் ஹா ஹா ஹா

    திருச்சி காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  7. //சுப்ரீம் கோர்ட்டு உத்திரவை அலட்சியம் செய்ய நானென்ன மத்திய அரசு மந்திரியா என்ன //

    நேரத்துக்கு தகுந்த உதாரணங்கள்
    அதுதான் நமது கவுண்டரோட சிறப்பே

    சுப்ரீம் கோர்ட் உத்தரவை வேண்டுமானால் மத்திய மந்திரி அலட்சியம் செய்யலாம். அவரும் தன சகதர்மினியின் உத்தரவை தலை மேல் வைத்தல்லவா நிறைவேற்றவேண்டும்.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  8. //சுப்ரீம் கோர்ட்டு உத்திரவை அலட்சியம் செய்ய நானென்ன மத்திய அரசு மந்திரியா என்ன //

    வெளியில்தான் அவர் மத்திய மந்திரி. சுப்ரீம் கோர்ட் உத்தரவை அலட்சியம் செய்யலாம்.
    வீட்டில் சகதர்மிணியின் உத்தரவை அலட்சியம் செய்தால் அவரது சகதர்மிணி "மத்திய மந்திரியை மொத்திய மந்திரி" யாக ஆகிவிடுவார்கள் என்பது அவருக்கு தெரியுமே

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  9. //சுப்ரீம் கோர்ட்டு உத்திரவை அலட்சியம் செய்ய நானென்ன மத்திய அரசு மந்திரியா என்ன, //

    என்னங்காணும் இப்படி மனைவிக்கு பயந்தவர்களாக இருக்கிறீர்கள்.
    என்னை மாதிரி தைரியமாக இருக்க யோசிக்க கூட மாட்டீர்களா?

    (திரும்பி என் சகதர்மிணியிடம்) - சரியாம்மா? நீ சொன்ன சொல்லியதை நான் சொல்லி விட்டேன். வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா?

    சேலம் துளசி மைந்தன்

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீராம் சொன்னது போல செய்யணுமா..... குழப்பம்! :)))

    பல சமயங்களில் தேவை இருக்கிறதோ இல்லையோ பொருட்களை சேமித்துக் கொண்டே இருக்கிறோம்!

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னால் ஒரு நாளைக்குத் தேவைப்படலாம் என்ற கற்பனைதான் அதற்கு காரணம்.

      நீக்கு
  11. //பொதுவாக இந்த நாட்களில் நான் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி ஒரு வாரம் வெளியூர் போய்விடுவது வழக்கம் //

    ஆகா மொத்தத்தில் "பொறுப்புள்ள" ஒரு நல்ல கணவராக இருந்திருக்கிறீர்கள். எப்படி சமாளித்தீர்கள் என்ன மாதிரி காரணம் சொல்லி தப்பித்தீர்கள் எனபது பற்றி ஒரு ஸ்பெஷல் பதிவு, அதுவும் அவசர பதிவு, போட்டீர்களானால் என் போன்ற காரணம் தேடி அலையும் "அப்பாவிகளுக்கு" உபயோகமாக இருக்கும்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  12. //எந்த ஒரு பொருளையும் 6 மாதம் நீங்கள் உபயோகப்படுத்த வில்லையானால் அந்தப் பொருள் உங்களுக்குத் தேவையில்லை என்று அர்த்தம்.//

    இதை படித்தவுடன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். உங்களை மாதிரியே நானும் பதவி ஒய்வு பெற்றவுடன் நண்பர்கள் வீடு, நூலகங்கள், கம்ப்யூடர் என்று என் ஆம்படையாளுக்கு ஒரு உபயோகமும் இல்லாமல் இருந்து வந்தேன். "ஆறு மாதமா நீங்க ஒன்னத்துக்கும் உபயோகமில்லை" என்று என் ஆம்படையா என்னை தூக்கி எறிந்துவிடப்போகிறாளோ என்ற பயம் இப்போது வந்து விட்டது.
    இனிமேல் ஒழுங்காக வீட்டில் கொஞ்ச நேரம் இருக்க போகிறேன் (தூங்கும் நேரம் தவிர)

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  13. //கரப்பான் பூச்சிகள் மிகவும் ஆட்சேபணை தெரிவித்தன. எல்லாவற்றிற்கும் "ஹிட்" ஸ்ப்ரே கொடுத்தேன். எல்லாம் தங்கள் ஆட்சேபணையை வாபஸ் வாங்கிக்கொண்டன.//

    கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுக்க வேண்டியதை முறையாக கொடுத்தால்தான் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கவேண்டியவை ஒழுங்காக நடக்கும். சரியான வேலை செய்தீர்கள்

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  14. //பொன்மொழிகள் ஏட்டில் பொன்னெழுத்துகளால் பொறித்து சட்டம் போட்டு வைக்கத்தான் லாயக்கே தவிர வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்காக அல்ல என்ற உண்மையை நீங்கள் கற்றிருப்பீர்கள்.//

    என்ன செய்வது. கஷ்டப்பட்டு இந்த உண்மையை உணர்ந்தேன்.
    ஒவ்வொருவருக்கும் இதே கதிதான் போலிருக்கிறது. அதனால்தான் "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" என்று ஒரு பொன்மொழி வந்திருக்கிறது (மீண்டும் ஒரு பொன்மொழியா?).

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  15. //எந்த ஒரு பொருளையும் 6 மாதம் நீங்கள் உபயோகப்படுத்த வில்லையானால் அந்தப் பொருள் உங்களுக்குத் தேவையில்லை என்று அர்த்தம்." //

    இது வீட்டில் பரண் மேல் தூக்கிபோடப்பட்டுள்ள பொருட்களுக்குத்தானே தவிர வங்கியில் போடப்பட்டிருக்கும் நிரந்தர வைப்புக்களுக்கு ( Fixed Deposit) அல்லதானே.

    சேலம் குருப்ரியா

    பதிலளிநீக்கு
  16. //என்னுடைய உள் மனதில் ஆழமாகத் தைத்திருந்தது.//
    // இதன் கூடவே இன்னொரு வாசகமும் தைத்திருந்தது.//
    //இதுவும் மனதில் தைத்த ஒரு வாசகம்.//

    இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் "தைத்தது" என்ற வார்த்தை அய்யா அவர்களின் மனதில் ஆழமாக மறக்க முடியாத அளவுக்கு "தைத்திருக்கிறது". தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் சொல்லக்கூடிய அளவு மனதில் பதிந்திருந்ததென்றால் அதை "தைத்திருந்தது" என்று சொல்லாம் என்று புரிகிறது.

    சேலம் குருபிரியா

    பதிலளிநீக்கு
  17. //இது எல்லாம் வேண்டுமா என்று பார்யாளைக் கேட்டேன். எனக்கு வேண்டாம் உங்களுக்கு வேண்டுமா என்று நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்று முடிவை என்னிடம் விட்டு விட்டாள்.//

    நிஜமாகவே நீங்கள் கொடுத்து வைத்தவர் அய்யா.
    "நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று முடிவெடுக்கும் பொறுப்பை ஒரு பார்யாள் தன ஆம்படையானிடம் கொடுக்கிறாள் என்றால் அந்த ஆம்படையான் எப்படிப்பட்ட புண்ணியம் செய்திருக்க வேண்டும். எங்களுக்கெல்லாம் உத்திரவுதான் வரும் இப்படி முடிவெடுக்கும் அதிகாரமெல்லாம் கிடைக்கவே கிடைக்காது.
    அதனால்தான் சொல்கிறோம் நாங்கள் கொடுத்து வைத்தவர் அய்யா

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  18. இந்த மாதிரி பொன்மொழிகளை பற்றி படித்தவுடன் என் மகனும் மகளும் சேர்ந்து அடித்த லூட்டி ஞாபகம் வந்தது. அவர்கள் சிறு வயதாக இருக்கையில் வீட்டில் தின்பண்டங்கள் வாங்கி வைக்கும்போது ஓரிரு நாட்களில் தீர்த்து விடுவார்கள். எனவே எடுத்து வைத்து சாப்பிடவேண்டும் என்று சொல்லும்போது அவர்கள் சொன்னது.
    "ஒன்றே செய்
    நன்றே செய்
    அதுவும் இன்றே செய்"
    என்பது பொன்மொழியல்லவா
    அதைத்தானே அப்பா நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என்று தங்கள் செயலுக்கு பொன்மொழியை உதவிக்கு கூப்பிட்டார்கள் பாருங்கள். நான் அசந்து போய்விட்டேன்.
    இன்ஷா காலத்து குழந்தைகளிடம் கொஞ்சம் பார்த்துத்தான் பேச வேண்டியதை இருக்கிறது.

    திருச்சி காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  19. "பொதுவாக இந்த நாட்களில் நான் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி ஒரு வாரம் வெளியூர் போய்விடுவது வழக்கம்......மாட்டிக்கொண்டேன். " ஹா....ஹா... :))

    பதிலளிநீக்கு
  20. பல பொருட்களை தேவை இருக்கிறதோஇல்லையோ தூக்கி எறிய மனம் வருவதில்லை. பிற்காலத்தில் உபயோகமாகலாம் என்பது கற்பனை அல்ல. பல நேரங்களில் உபயோக மாகி இருக்கிறது. ஆனால் அது எல்லாம்மிகக் குறைவே

    பதிலளிநீக்கு
  21. ஐயா,வணக்கம்,தேவையானதை வைத்துக்கொண்டுதேவையற்றதை வெளியேற்றவேண்டும்
    அதுதான் சுகாதாரம் நல்லது செய்தீர்கள் .நன்றி.

    பதிலளிநீக்கு