கல் தோன்றி மண் தோன்றாக் காலம் தொட்டு இப்பூவுலகில் வாழ்ந்து வரும் இனம் தமிழினம். பிற்காலத்தில் இவ்வினத்தில் சில புல்லுருவிகளின் சதியால் இனக் கலப்பு ஏற்பட்டது என்னமோ உண்மைதான். இருந்தாலும் தமிழினம் தன் தனித்தன்மையை இது வரையிலும் காத்தே வந்திருக்கிறது. இனியும் காப்போம் என்று மார் தட்டும் தனித்தமிழர்கள் இருக்கிறார்கள்.
தமிழினத்திற்கு எந்த அவமானம் ஏற்பட்டாலும் அவர்கள் தீக்குளிப்பார்கள் என்பது உறுதி. இந்த சூழ்நிலையில்தான் பார்பனர்களின் ஆதரவோடு செயல்படும் மோடி அரசு சம்ஸ்கிருத மொழித்திணிப்பை பின் வாசல் வழியாக கொண்டு வருகிறது. இதை தமிழினத்தின் காவலர்கள் கவனித்துக் கொள்வார்கள்.
சாமானிய மனிதர்களான நாம் என்ன செய்யலாம் என்று யோசித்ததில் ஒரு வழி புலனாகியது. அதாவது தமிழ் மொழியில் வடமொழிக்கலப்பு உள்ளதா என்ற ஒரு சுய பரிசோதனை செய்யலாம் என்று தோன்றியது. அப்படிக் கலந்திருந்தால் அந்த வார்த்தைகளை நாம் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இங்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில சொற்களைக் கொடுத்திருக்கிறேன். அவைகளில் தமிழ் அல்லாத சொற்கள் எவை என்று பகுத்தறிந்து கூறுங்கள்.
ஆகாசம்
உபாயம்
நகம்
வீரன்
ஆனந்தம்
தோரணம்
பாடம்
சபை
மாயை
வீணை
ஆயுதம்
கீதம்
புஸ்தகம்
பயம்
பழம்
சுகம்
வாகனம்
விஷம்
தர்மம்
நரகம்
மேகம்
பக்தன்
இப்போதைக்கு இது போதும். அடுத்த பதிவில் என்னுடைய விடையைக் கூறுகிறேன்.
பின் குறிப்பு: இந்தப் பதிவில் ஆரம்பத்தில் போட்டிருக்கும் படத்திலுள்ள பெண்மணி 100 சதம் தமிழ்ப் பெண்மணிதான் என்று தமிழினத்தின் பேரில் உறுதி கூறுகிறேன்.
ஐயா எனக்குத் தெரிந்த தமிழ் சொற்களை கீழே தந்திருக்கிறேன்
பதிலளிநீக்குஆகாசம் வானம்
உபாயம் வழி, அணுகுமுறை
நகம் உகிர்
வீரன் அடலேறு
ஆனந்தம் மகிழ்ச்சி
தோரணம் ஒப்பனைத் தொங்கல்
பாடம் படிப்பு, படிப்பினை
சபை அவை
மாயை பொய் தோற்றம்
வீணை இது தமிழ் சொல்லே, யாழ் என்றும் சொல்வதுண்டு
ஆயுதம் படைக்கலம், கருவி
கீதம் இன்னிசை
புஸ்தகம் நூல்
பயம் அச்சம்
பழம் கனி
சுகம் நலம்
வாகனம் ஊர்தி
விஷம் நஞ்சு
தர்மம் கொடை
நரகம் அளறு
மேகம் முகில்
பக்தன் தொண்டன்
உங்கள் உழைப்பிற்கு நன்றி. ஆனால் பெரும்பாலானோர் இவைகளைத் தமிழ்ச் சொற்கள் என்றே கருதுவர்.
நீக்குஇவற்றில் புஸ்தகம் தான் தமிழ் இல்ல, புத்தகம் தான் சரியான தமிழ் என்று நினைச்சிருந்தேன்.மற்றவை எல்லாம் சரியான தமிழ் என்று நினைச்சிருந்தேன்.
நீக்குதமிழ்ச் சொற்கள் அல்லது தமிழ்ச் சொற்கள் என்று நம்பபடும் இந்திய பிற மொழி சொற்களை தவிர்த்து தனி ஆங்கில சொற்கள் பாவிப்பதிலேயே உள்ளது தமிழர்கள் தனி பெருமை.
இவற்றில் பெரும்பாலான சொற்கள் தமிழ் வேர்ச்சொற்கள் தான். சமக்கிருதம் தமிழிலிருந்து இரவல் வாங்கி சமக்கிருதமயமாக்கப்பட்ட சொற்கள் அவை. உங்க்களைப் போன்ற தமிழ்ப்பண்டிதர்கள் தான் அவற்றை தமிழ்ச் சொற்கள் அல்ல என்று வாதாடுவார்கள். :-)
நீக்குஅதிர்ஷ்டத்திற்கு என்ன தமிழ்? உடனடியாக பதில் வேண்டும் என்று நான் கேட்ட கேள்விக்கு சற்றும் தயங்காமல் வந்த விடை : லக். அதுவும் கல்லூரி படிப்பு முடித்த கோவை வாசியிடம் இருந்து. நம் மொழிக்கல்வியின் தரம் அவ்வளவே உள்ளது.
பதிலளிநீக்குஅதிர்ஷ்டம் அல்லது அதிட்டம் தமிழ்ச் சொல்லே தவிர சமக்கிருதம் அல்ல.
நீக்குஅதிர்ஷ்டம் = அதிர் + இஸ்டம்
அதிர்- என்றால் தமிழில் திடீரென, எதிர்பாத விதமாக என்று பொருள் உதாரணம்: அதிரடி, அதிர்வு, அதிர்ச்சி
இஸ்டம் > இட்டம் = இடு +அம். இடு என்றால் தமிழில் இடுவது (கடன் அல்ல) அல்லது கொடுப்பது அல்லது one way drop.
அதாவது அதிட்டம் என்பதன் கருத்து திடீரென எதிர்பாராத விதமாக கிடைத்த பணம், அல்லது வாய்ப்பு etc. அதிட்டம் என்ற தமிழ் வேர்ச் சொல் தமிழிலிருந்து இரவல் வாங்கப்பட்டு ஸ் ஐ இணைத்து சமஸ்கிருத்தச் சொல்லாக்கி விட்டனர். :-)
அதிர்ஷ்டம் என்பதை நற்பேறு என சொல்லலாம்.
நீக்குசொல்லலாம். தமிழ் இயற்கையான, வளமான மொழி. தமிழில் ஒரு சொல்லுக்கு இணையாகப் பல சொற்கள் உண்டு. நாங்கள் இங்கே பேசிக் கொண்டிருப்பது, அதுவல்ல. பண்டிதர் கந்தசாமி தமிழ் வேர்ச் சொற்களை அறியாமல், இந்தச் சொற்கள் தமிழ்ச் சொற்கள் அல்ல என்று தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்ப முனைகிறார்கள். அதைப் பற்றித் தான் நாங்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம். :-)
நீக்குவியாசன் அவர்களுக்கு,
நீக்குநான் பதிவில் கொடுத்துள்ள வார்த்தைகள் அனைத்தும் ஒரு வடமொழி பயிற்சிப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. வடமொழியான சம்ஸ்கிருதம் தமிழ் மொழியை விட மூத்தது என்பது எல்லோரும் ஒத்துக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை. அப்படி இருக்கு இந்தச் சொற்களை தமிழிலிருந்து வடமொழிக்குப் போயிற்று என்று சொல்ல இயலாது. திராவிட மொழிகள் அனைத்தும் வடமொழியிலிருந்து பல சொற்களை ஏற்றுக்கொண்டுதான் வளர்ந்திருக்கின்றன. அந்தக்காலத்து தமிழ் அறிஞர்கள் பலர் வடமொழியிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தினர். பலகாலமாக சொற்களை நாம் உபயோகப்படுத்தியதால் மட்டுமே அவை அந்த மொழியின் வேர்ச்சொற்கள் என்று கூற முடியாது.
நான் குழம்பவில்லை. நீங்கள்தான் குழப்பத்திலிருந்து வெளிவரவேண்டும்.
வடமொழிப் பயிற்சிப் புத்தகம் யாராவது சமக்கிருதவாதிகளால் கூட எழுதப்பட்டிருக்கலாம் அல்லவா? பல தமிழ்ப்பண்டிதர்களே தமிழ் வேர்ச்சொற்களில் உருவாகிய சொற்களை வடமொழிச் சொல் என்று தவறு விட்டுள்ளனர். அதனால் உங்கலிடமுள்ள வடமொழிப் பயற்சிப் புத்தகத்திலுள்ளதால் இவை எல்லாம் வடமொழிச் சொற்கள் அல்ல. :-)
நீக்கு//வடமொழியான சம்ஸ்கிருதம் தமிழ் மொழியை விட மூத்தது என்பது எல்லோரும் ஒத்துக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை. //
நீக்குஇதற்கு ஆதாரத்தைக் காட்டுங்கள். அண்மையில் தான் சமக்கிருதவாதியான சோ ராமசாமியே "ஸம்ஸ்க்ருதம் என்றால் ‘நன்றாகச் செய்யப்பட்டது, தூய்மையானது’ என்றுதான் அதற்கு அர்த்தம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவரே சமஸ்கிருதம் ஒரு செயற்கையான (artificial language) மொழி என ஒப்புக் கொள்கிறார். நன்றாகச் செய்யப்பட்ட, refined language சமஸ்கிருதம் என்றால், அது எந்த மொழியிலிருந்து செய்யப்பட்டது அல்லது எந்தெந்த மொழிகளிலிருந்து இரவல் வாங்கிச் செய்யப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. இந்த “நன்றாகச் செய்யப்பட்ட”, தூய்மையான மொழி உருவாக்கப்பட முன்னர் பூமியில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் ஊமையாக இருந்தார்களா அல்லது Sign language மூலம் பேசிக் கொண்டார்களா? இந்த லட்சணத்தில் நீங்கள் என்னடாவென்றால் சமஸ்கிருதம் தமிழ்மொழியை விட மூத்தது என்று ஜோக் வேறு அடிக்கிறீர்கள். :-)
சோ ஒன்றும் பெரிய மொழியியல் அறிஞரல்ல.
நீக்குஎனக்கு ஒன்றும் சம்ஸ்கிருதம் தாய்மொழி அல்ல. அதைப் போற்றும் அவசியமும் கொண்டவனல்ல. இருந்தாலும் இன்று பலர் தூய தமிழில் எழுதுவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயலில் இறல்கியிருக்கிறார்கள். தூய தமிழில் ஒரு கதை எழுதுபவர்களுக்குப் பரிசு என்றுகூட ஒரு பதிவு வெளியாகியது.
Sanskrit என்றால் சோ சொல்வதுபோல் "நன்றாகச் செய்யப்பட்டது" என்ற பொருள் அநேகரால் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்தேயாகும். ஆனால் சம்ஸ்கிருதம் என்ற மொழி பிராகிருத மொழியிலிருந்து தோன்றியது என்ற ஆராய்ச்சுக்குறிப்புகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி இன்டர்நெட்டில் வெளியாகியிருக்கும் ஒரு குறிப்பை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
Glenn Friesen, Thinker and Layabout
Tamil is almost surely older than Sanskrit, as a spoken language; but Sanskrit is definitely older than Tamil as a form of writing (based on what evidence we currently have).
The earliest written work we know of which is written in Tamil is the Tolkāppiyam which dates back between 2300 and 3000 years ago, based on linguistic and other evidence. The thing is, this work includes loan words from Sanskrit.
The earliest written work in Sanskrit is the Rigveda, composed roughly 3100 to 3700 years ago -- possibly 1400 years earlier than the first work written in Tamil.
In other words, we can be almost absolutely sure that Sanskrit was written down first.
மொழி உண்டாவதற்கு முன்னர் மனிதர்கள் கண்டிப்பாக Sign Language மூலம்தான் பேசிக் கொண்டிருந்திருப்பார்கள்.
//The earliest written work in Sanskrit is the Rigveda, composed roughly 3100 to 3700 years ago -- possibly 1400 years earlier than the first work written in Tamil.//
நீக்குOh please don’t make a fool of yourself. Sanskrit version of Vedas were compiled only at 350 B.C but Tholkaapiyam belongs to second Sangam period that is it was written in 5500 B.C. :-)
புழக்கத்தில் தமிழ்ச்சொல்லாகவே இருப்பதை அப்படியே உபயோகிக்கலாம் என்று கூறுகிறேன்
பதிலளிநீக்குindha padivukku oru Malayali pen photo YEN???
பதிலளிநீக்குமலையாளீன்னு எப்படி கண்டுபிடிக்கிறீங்க?
நீக்குஅதானே ! எப்படி?
நீக்குசேலம் குரு சொன்ன மாதிரி அய்யா அவர்கள் இந்த கட்டுரையை இடக்கரடக்கல் என்ற இலக்கணப்படிதான் எழுதியிருக்கிறார்கள்.
நீக்குமற்ற மொழி சொற்களை - ஆங்கிலம் பல தமிழ் சொற்களை அப்படியே உபயோகப்படுத்துவது போல - தமிழில் பயன் படுத்தினால் நாளடைவில் அது தமிழ் சொல்லாகி விடுகிறது. அது போல அமலாபால் கேரளா என்றாலும் விஜயை மனம் செய்த பிறகு தமிழ் பெண்ணாகி விட்டார். அதனால்தான் இந்த கட்டுரைக்கு அவர் படம் போட்டிருப்பதுடன், பின்குறிப்பில் "இந்தப் பதிவில் ஆரம்பத்தில் போட்டிருக்கும் படத்திலுள்ள பெண்மணி 100 சதம் தமிழ்ப் பெண்மணிதான் என்று தமிழினத்தின் பேரில் உறுதி கூறுகிறேன்." என்று சொல்கிறார். இதிலிருந்தே தெரியவில்லையா இது ஒரு இடக்கரடக்கல் என்று.
தமிழ் பற்று இருக்க வேண்டியதுதான் ஆனால் அது தமிழ் வெறியாகிவிடக்கூடாது. வெறி ஏற்பட்டு விட்டால் பின்னர் மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் தமிழையும் வளர விட மாட்டோம்.
திருச்சி அஞ்சு
Anubavathil(yen vayathu 11 years) theriyum!!!
நீக்குAmala paul-i malayali-nu
kandupitakka CBI venumaaa
Saaarey!!!?
(appaaada! yeda-koodamaa solaaama yeskey-pu!!!)
பின் குறிப்பு: இந்தப் பதிவில் ஆரம்பத்தில் போட்டிருக்கும் படத்திலுள்ள பெண்மணி 100 சதம் தமிழ்ப் பெண்மணிதான் என்று தமிழினத்தின் பேரில் உறுதி கூறுகிறேன்
நீக்குyengey??
Keralavilaaa???
ஒரு மொழியானது காலத்திற்கேற்ப வளர்ந்து வர வேண்டும். அதுவே அத்தகைய மொழி நிலைத்து நிற்க உதவி புரியும்.
பதிலளிநீக்குசமஸ்கிருத மொழி பேசப்படாததற்கு முக்கிய காரணம் அதன் கடினமான சட்ட திட்டங்களுடன் கூடிய இலக்கணம்தான். இன்றைய கணினி மொழிகள் போன்று வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்கள் உண்டு. ஜெர்மன் வல்லுனர்கள் சமஸ்கிருதம், கணினிக்கு உகந்த மொழி என்று அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். நாம் நமது கதைக்கு வருவோம்.
காலத்திற்கேற்ப வளர்ந்து வருவதில் தமிழும் விதி விலக்கல்ல.
இல்லையென்றால் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மொழி என்று நம்மால் சொல்லப்படும் தமிழ் இத்தனை காலம் நீடித்திருக்காது.
கோவில்களிலும் பழங்காலத்து கல்வெட்டுக்களிலும் எழுதியிருக்கும் தமிழை நம்மால் படிக்க முடியுமா? தொல்துறை வல்லுனர்களால் மட்டுமே அதை படித்து பொருள் சொல்ல முடிகிறது. ஏன் என்றால் அன்றைய தமிழ் அப்படியே நின்று விடவில்லை படிப்படியாக மாறி வந்திருக்கிறது.
ஆங்கிலமும் அப்படித்தான். பல்வேறு மொழிகளில் இருந்து வார்த்தைகளை அப்படியே எடுத்துகொண்டிருக்கிறது. (நமது தமிழில் இருந்தும்தான்)
விக்கிபீடியாவில் பார்த்தோமானால்
கிரிகோரி ஜேம்ஸ் என்ற ஹாங்காங் பல்கலைகழக மொழித்துறையில் ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் ஆக்ஸ்போர்ட் அகராதியில் இருக்கும் வார்த்தைகளில் ஏறத்தாழ 100 வார்த்தைகளுக்கு மேல் தமிழ் வார்த்தைகள்தான் என்கிறார். டு
Cash - காசு
Catamaran - கட்டுமரம்
Cheroot சுருட்டு
Corundum குருந்தம்/குருவிந்தம் (ruby )
Mulligatawny மிளகுத்தண்ணீர்
Patchouli பச்சை இலை
Pandal பந்தல்
porampokku பொறம்போக்கு
இன்று எந்த கிராமத்திலாவது சென்று அய்யா இங்கு பேருந்து வருமா என்றால் ஏம்பா பேசாம தமிழ்ல பஸ் வருமான்னுட்டு டு கேட்க வேண்டியதுதானே என்பார்கள் என்பது நிதர்சன உண்மை.
அதே போல்தான் டீ காபி போன்றனவும்.
மொழி பெயர்க்கிறோம் என்ற பேரில் கொட்டைவடிநீர் என்றெல்லாம் சொன்னால் யாரும் ஒத்துகொள்ளபோவதுமில்லை உபயோகப்படுத்த போவதுமில்லை.
டீக்கு இன்னமும் தேத்தண்ணி (தேநீர்) வழக்கில் உள்ள ஒன்றுதான்.
இவையெல்லாம் உணர்வுகளை தூண்டி விட உதவுமேயல்லாமல் மொழியை வளர்க்க உதவாது.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியர்களின் வீடுப்பில்லைகளும் பேரன்களும் கொள்ளுபேரங்களும் ஹிந்தியில் பிய்த்து விளாசுகிறார்கள் என்பதுதான் உண்மை.
அய்யா அவர்கள் எழுதியது "இடக்கரடக்கல்" என்ற இலக்கணப்படி (tongue in cheek என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்) என்றுதான் நினைக்கிறேன்.
எனவே பாரதியார் சொன்ன மாதிரி "எட்டுத்திக்கும் செல்வோம் கலை செல்வம் கொண்டிங்கு வந்து சேர்ப்போம்" என்பதற்கு உண்மையான அர்த்தம் தெரிந்து நடந்தால் தமிழ் நன்றாகவே வளரும். இப்படிப்பட்ட பயம் தேவையில்லை.
சேலம் குரு
சேலம் குரு,
நீக்குபஸ் வருமா டீ காபி போன்றனவற்றை தமிழாகவே நினைத்து எங்க பாஷை தமிழை தமிழகத்திலே வெட்கபடாம அவசியம் பேச வேண்டும் என்று நினைத்து பேசுபவங்களை தமிழகம் வரவேற்க வேண்டும்.ஆனா திட்டமிட்டு தமிழை பேசுவது வெட்கத்துக்குரியது ஒரு நடவடிக்கையா தமிழை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கோடு தமிழை தவிர்க்க விரும்பும் தமிழ் தொலைகாட்சிகள் நிகழ்ச்சிகள் நடத்துபவங்களது மாதிரியானவங்க சிந்தனைகள் கொண்டவங்களை தமிழகம் ஒரு போதும் அனுமதிக்க கூடாது.
//ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியர்களின் வீடுப்பில்லைகளும் பேரன்களும் கொள்ளுபேரங்களும் ஹிந்தியில் பிய்த்து விளாசுகிறார்கள் என்பதுதான் உண்மை. //
இது தான் யதார்த்தம்.
சமீபத்தில் ஒரு ஹிந்தி சீரியல்(மெகா தொடர்) பார்த்தேன். (பொதுவாக நான் டிவி சீரியல்களை வெறுப்பவன்) அதில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஒரு பெண் கோபமாக பேசுகிறாள். ஆச்சரியத்திலும் ஆச்சரியம், ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் இல்லை. என் பெண் சொன்னது - "அதே சீரியல் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பபடுகிறது. ஆனால் ஆங்கில வார்த்தைகள் சரளமாக உபயோகப்படுத்தப்படுகின்றன". நீங்கள் சொல்வது போல, தமிழை ஒழிக்க டிவி ஒன்றே போதும். ஆனாலும் என் மனதில் ஒரு நப்பாசை. எல்லா தமிழ் மகா தொடர்களிலும் சரியான காரணம் இல்லாமல் ஆங்கில வார்த்தைகள் உபயோகப்படுத்தப்படக்கூடாது என்று ஒரு வரையறை வைத்தால் என்ன? படங்களின் பெயரை தமிழில் வைத்தால் அரசு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது போல தமிழ் வார்த்தைகள் பேசும் டிவி தொடர்களுக்கு ஏதேனும் சலுகை அளித்துப்பார்த்தால் என்ன? (ஆனாலும் மனதின் ஒரு மூலையில் இப்படி சலுகை அளித்துத்தான் நமது தாய் மொழியை வளர்க்க வேண்டியுள்ளது என்ற நிலையை நினைத்து செந்நீர் வடிக்க வேண்டியுள்ளது)
நீக்குசேலம் குரு .
நல்ல பதில் சேலம் குரு! தமிழ் ஒரு பழமையான மொழி! அப்புறம் computer programming இல் object oriented languages இருப்பது போல் தமிழும் ஒரு விதமான object oriented மொழிதான். அதனால் தான் இன்னும் அது வளர முடிகிறது! யாரும் அதை மெல்லச் சாகடிக்க முடியாது!
பதிலளிநீக்கு-பாலா, PA.
எது மூத்த மொழி என்பதில் இன்னும் யாருக்கும் அவ்வளவு தெளிவு ஏற்படவில்லை. அந்த சூழ்நிலையில் சமஸ்கிருதம் மூத்த மொழி என்பதை உங்கள் சொந்த கருத்தாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்காக தமிழினக் காவலர்களைக் கொச்சைப் படுத்த வேண்டாம். உங்களுக்கு மொழி ஆராய்ச்சியை பற்றி விளக்க வேண்டும் என்றால் அதைப் பற்றிய விவாதங்களை எடுத்து வையுங்கள். அதை விட்டு தேவையில்லாதவற்றையும் இழுப்பது உங்களது ஆராய்ச்சி உண்மையாக இருந்தாலும் பொய்யாக்கி விடும். சமஸ்கிருதம் மூத்த மொழி என்றாலும் அதை ஏன் கட்டாயப்படுத்தி படிக்க வைக்க வேண்டும்? பல மொழிகள் இருக்கும் ஒரு நாட்டில் ஒரு மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது பாரபட்சம் தான்.
பதிலளிநீக்கு//வடமொழியான சம்ஸ்கிருதம் தமிழ் மொழியை விட மூத்தது என்பது எல்லோரும் ஒத்துக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை.//
பதிலளிநீக்குசாமானியர்களுக்கு இந்த மயக்கம் இருப்பது உண்மைதான். வேட்டி முதலா, வேஷ்ட்டி முதலா? சேட்டையா, சேஷ்ட்டையா எது சரி? தமிழ் சமசுக்கிருதத்தின் கொச்சை வடிவம் என்று பலகாலமாக பரப்புரை நடந்துகொண்டுள்ளது[1]. அதை நம்பித்தான் நாம் தாழ்வு மனப்பான்மையோடு உள்ளோம்.
நல்ல தமிழ் அறிஞர்களின் விளக்கத்தை படித்தோமானால்தான் உண்மை நிலவரம் தெரியும். அதை விடுத்து சான்றுகளில்லாமல் சமஸ்கிருதம் கணினிக்கு உகந்த மொழி, தேவ பாஷை என்று நம்புவதும், அறுவெருப்பான சொல்லாடல் சதிகளை காட்டி தமிழை சீண்டுவதும் முறையாகாது.
இராம.கி ஐயாவின் இடுகைகளையாவது நீங்கள் படிக்க வேண்டும்.
[1] http://valavu.blogspot.com/2007/02/1_21.html
திரு.குலவுசனப்பிரியன் அவர்களுக்கு,
நீக்குஇராம.கி. அவர்களின் பதிவைப் படித்தேன். இந்த அளவிற்கு என் தமிழறிவு இல்லை. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு என்பதை மீண்டும் மீண்டும் இந்நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
ஆனால் அதற்காக ஒருவன் சிந்திப்பதையும் தன் சிந்தனைகளைப் பதிவிப்பதிலும் தவறு இல்லை. கல்லாததைக் கற்க இதுவும் ஒரு வழி என்று நான் கருதுகிறேன்.
//கல்லாததைக் கற்க இதுவும் ஒரு வழி என்று நான் கருதுகிறேன்.//
நீக்குதிரு இராம.கி அவர்கள் கூட ”இந்தியாவில் பிச்சைக்காரர்களே இல்லை”, என்று மெக்காலே இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உரையாற்றியதாகவும் அந்த பெருமையைக் கெடுக்கும் விதமாக புதியக் கல்விமுறையை ஏற்படுத்தியதாகவும் உலவும் பரப்புரையை சரிபார்க்காமல் அப்படியே வெளியிட்டு இருந்தார். நான் உணர்ச்சி மிகுதியில் மெக்காலே ஆற்றிய உரையின் மூலத்தைப் படித்தபோதுதான், அந்தப் பரப்புரை சமசுக்கிருத / இந்துமத மோசடியாளர்களின் வேலை என்பது புரிந்தது.