ஆக தமிழ்பதிவர்கள் தமிழ் மணம் ஓட்டுப் பட்டையை சீர்திருத்த தயாராக உள்ளார்கள்.
அதற்கு முன் இந்த தமிழ் மணம் ஓட்டுப்பட்டையினால் என்ன பயன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் மணம் ஒரு தமிழ்ப் பதிவுகளின் முதன்மையான திரட்டி. நாம் பதிவு எழுதுவது நாலு பேர் படிக்கட்டும் என்பதற்காகத்தான். என் பதிவை யாரும் படிக்கத்தேவை இல்லை, நான் பதிவு எழுதுவது என் ஆத்ம திருப்திக்காக மட்டுமே என்று சொல்பவர்களுக்கு நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. அது அவர்கள் விருப்பம்.
தமிழ் மணம் திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைத்தால் பல பேர் உங்கள் பதிவுகளைப் படிக்க வசதியாக இருக்கும். அதற்கு இந்த ஓட்டுப் பட்டை உதவுகிறது. இந்த ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் நிறுவுவதற்கு நீங்கள் முதலில் தமி.ழ்மணத்தில் உறுப்பினராக வேண்டும். உங்கள் தளத்தை ஆரம்பித்து ஓரிரண்டு மாதங்கள் ஆன பிறகு விண்ணப்பித்தால் தமிழ்மணம் உங்களை உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளும்.
இதற்கான வழிமுறை தமிழ்மணம் திரட்டியிலேயே இருக்கிறது. நீங்கள் உறுப்பினராக ஆன பிறகு தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை உங்கள் தளத்தில் நிறுவிக்கொள்ளலாம். அதற்கான வழிமுறையும் தமிழ்மணம் திரட்டியிலேயே இருக்கிறது. மற்ற தொழில் நுட்பப் பதிவர்களும் இதற்கான வழியை விளக்கியிருக்கிறார்கள்.
தமிழ் மணத்தில் உள்ள இரண்டாவது விஷயம், தமிழ் மணம் உங்கள் தளத்தை மதிப்பீடு செய்து தர வரிசை எண் கொடுக்கிறது. திரு.பகவான்ஜி அவர்களின் ஜோக்காளி தளம் தரவரிசையில் முதலாவதாக இருக்கிறது என்றால் அவர் மிகவும் பிரபலமானவர் என்று தெரிகிறதல்லவா?
என்னைப் போன்றவர்களுக்கு இந்த தரவரிசை எண்ணைப் பற்றிய எண்ணம் விட்டுப்போய் விட்டது. ஆனால் சிலருக்கு அந்த ஆசை இருக்கலாம். தவறில்லை. யாருக்குமே புகழ்ச்சி மகிழ்ச்சியைத் தருமல்லவா.
சரி விஷயத்திற்கு வருவோம்.
தமிழ்மணம் திரட்டி ஆரம்பித்து இந்த ஓட்டுப் பட்டையைப் புகுத்தின சமயத்தில் அனைத்து பிளாக்கர்களின் "வெப் அட்ரஸ்" களும் .com என்றுதான் முடியும். இந்தப் பதிவைப் போய்ப் பாருங்கள். அதனுடைய வெப் அட்ரஸ் .in என்று முடிவதைப் பார்க்கலாம். மேலும் அந்தப் பதிவில் தமிழ் மணம் ஓட்டுப் பட்டை மாறாமல் இருப்பதையும் பார்க்கலாம்.
இது ஏன் என்றால் 2013 அல்லது 2014 வாக்கில் கூகுள் பிளாக்கர்களின் வெப் அட்ராஃகளில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. .com என்று முடியும் வெப் அட்ரஸ்களை எல்லாம் .in என்று மாற்றியது. ஏன் என்றால் பதிவுகள் சிலவற்றில் நாட்டுக்கு விரோதமான சில விஷயங்களைப் பிரசுரித்தார்கள். அப்போது அந்தந்த அரசுகள் இம்மாதிரியான பிரசுரங்களைத் தடுக்கவேண்டும் என்று கூகுளை நெருக்கியது. அவரகள் தொழில்நுட்ப ரீதியாக அப்படிப்பட்ட பிளாக்குகளைத் தடுக்கவேண்டுமென்றால் நாடு வாரியாக பிளாக்குகளைப் பிரிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அதனால் .com என்று முடியும் வெப் அட்ரஸ்களையெல்லாம் அந்தந்த நாட்டிற்கு ஏற்ப மாற்றியது. இந்தியாவில் புழங்கும் பிளாக்குகள் எல்லாவற்றையும் .in என்று முடியுமாறு மாற்றியது. இந்த மாற்றத்தினால் இந்தியாவில் பிரசுரமாகும் ஏதாவது பிளாக்கைத் தடை செய்யவேண்டுமானால் அதை கூகுள் தடை செய்ய முடியும். ஆனால் அதே பிளாக்கை அமெரிக்காவில் பார்க்க முடியும்.
இது புரிந்து கொள்ளக் கொஞ்சம் கடினமான தொழில் நுட்ப உத்திதான். இதனால் சாதாரண பிளாக்கர்களுக்கு அதிகம் பாதிப்பில்லை. இந்த தமிழ்மணம் ஓட்டுப்பட்டை மட்டுமே பாதிப்புக்கு உள்ளானது. தமிழ்மண ஓட்டுப்பட்டை .com என்று முடியும் பிளாக்குகளில் மட்டுமே சரியாக வேலை செய்யுமாறு அமைக்கப்பட்டுள்ளது. கூகுள் செய்த மாற்றத்தினால் இது பாதிக்கப்பட்டது. ஆனால் தமிழ்மணம் இதை மாற்றவேண்டுமானால் ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக ஓட்டுப்பட்டை தயாரிக்கவேண்டும். இது நடைமுறையில் சாத்தியமல்ல. அதனால் பிளாக்கர்கள் எப்படியோ போகட்டும் என்று விட்டு விட்டார்கள்.
ஆனால் நம் இந்திய கம்ப்யூட்டர் நிபுணர்களின் மூளை சாதாரணமானதா, என்ன? ஆனானப்பட்ட மைக்ரோசாஃப்ட் புரொக்ராம்களையே பைரேட் செய்பவர்களுக்கு இது ஒரு ஜுஜுபி. ஆகவே இதற்கு ஒரு மாற்று வழி கண்டுபிடித்தார்கள். அதைத்தான் பெரும்பாலான தமிழ் பிக்கர்கள் உபயோகித்து வருகிறார்கள்.
அது என்ன வழி என்று அடுத்த பதிவில் சொல்லுகிறேன்.
அடுத்த பகிர்வுக்காக காத்து இருக்கின்றேன் விடயம் அறிய!
பதிலளிநீக்கு.in என்று முடிந்தாலும் தமிழ்மண ஓட்டுப்பட்டையாக மாற்ற முடியும்... எடுத்துக்காட்டு : http://rajiyinkanavugal.blogspot.in/2014/07/blog-post_22.html
பதிலளிநீக்குகீழ் உள்ள பதிவை வாசித்த பின் எது முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு, அடுத்த பதிவில் தெரிவிக்கவும் ஐயா....
http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html
அன்புள்ள தனபாலன் அவர்களுக்கு,
நீக்குநீங்கள் குறிப்பிட்ட தளத்தில் நான் என்னுடைய கணிணியில் இருந்து பார்க்கும்போது தமிழ் மணம் ஓட்டுப் பட்டை, ஓட்டுப்போடுவதற்கு உகந்ததாக மாறாமல் இருக்கிறதே. நான் பார்த்தது சரிதானா?
தளம் .in என்று இருந்தால் தமிழ்மணத்தில் இணைக்க முடியும்... ஆனால் ஓட்டுப்பட்டையாக மாறாது... தமிழ்மண script-ல் சிறிய மாற்றம் செய்தால், பிறகு ஓட்டுப்பட்டையாக மாறும்... அதற்காகவே சகோதரி ராஜியின் தளத்தை கொடுத்தேன்...
நீக்குஆனால் அதை விட...
.in என்று மாறா விட்டால், நம் தளம் மற்ற நாடுகளில் துள்ளிக் குதிக்கும் என்பதை சொல்லவே நம்ம ப்ளாக்கர் நண்பரின் இணைப்பு...
முதலில் தளத்தை .com என்று மாறி விட்டால் எவ்வித பிரச்சனையும் இல்லை... தமிழ்மணத்தில் இணைத்த பலரின் தளத்தை .com என்று மாற்றிக் கொடுத்துள்ளேன்... ஆனால் ஓரே ஒரு பிரச்சனை என்னவென்றால், அப்படி மாற்றிக் கொடுத்துள்ளவர்களில் சில பேர்கள் அடிக்கடி Template மாற்றம் செய்யும் போது 1) தளம் .in என்று மாறும், 2) தமிழ்மணமே இருக்காது...! மறுபடியும் என்னை தொடர்பு கொள்ளும் போது சரி செய்து கொடுப்பேன்...
டெம்ப்ளேட்டை மாற்றும் போதெல்லாம் புதுப் புதுப் பிரச்சினைகளைச் சந்திக்கவேண்டி வரும். அப்படி சந்தித்துத்தான் நான் இந்த டெம்ப்ளேட் நுட்பத்தைக் கற்றேன்.
நீக்குதமிழ் மணம் ஓட்டுப்பட்டை பற்றிய அனுபவபூர்வமான தகவல்கள். நீங்களும் விரைவில் வலையுலக தொழில்நுட்ப பதிவர் வரிசையில் வந்துவிடுவீர்கள்.
பதிலளிநீக்குத.ம.3
தெளிவூட்டும் பதிவு
பதிலளிநீக்குகனமான விஷயத்தை எளிமையாகச் சொல்லிப் போகும் நேர்த்தி
மனம் கவர்ந்தது.பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 4
பதிலளிநீக்குகாத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு.
பதிலளிநீக்குஎளிமையாக விளக்குகிறீர்கள்! தொடருங்கள்!
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு ஐயா
பதிலளிநீக்குவலைச் சித்தர் இருக்கிறார்
in என்பதை com என மாற்றுவார்
வலைச் சரத்திலும் ,இன்று உங்கள் தளத்திலும் என்ன பிரபலப் படுத்தியதற்கு நன்றி !
பதிலளிநீக்குத ம 6
அடுத்த பதிவிற்கான காத்திருப்பில் நானும்....
பதிலளிநீக்குஅடுத்து என்னங்கிற ஆவல்...ஐயா..
பதிலளிநீக்கு