வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ஆயிரம் அறுவைப் பதிவிட்ட அறுவைத்திலகம்.


  Image result for 1000 number

இது என்னுடைய ஆயிரத்தியோராவது  அறுவை. இந்த சாதனையைப் பாராட்டி எங்கள் தெருவில் உள்ள பதிவர்கள் அனைவரும் (நான் ஒருவன் மட்டுமே< மற்ற பதிவர்கள் எனக்குப் பயந்து ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள்) எனக்கு "ஆயிரம் அறுவைப் பதிவிட்ட அறுவைத் திலகம்" என்ற பட்டத்தை சூட்டி இருக்கிறார்கள்.

இத்தனை அறுவைப் பதிவுகள் போட்டிருந்தும் இன்னும் பதிவுலகில் இந்த அறுவையைத் தாங்காமல் யாரும் உயிரை விட்டதாகத் தெரியவில்லை. நானும் என்னால் முடிந்த மட்டில் அறுவைப் பதிவுகளாகத்தான் போடுகிறேன். ஆனாலும் ரிசல்ட் வரமாட்டேன் என்கிறது.

கொஞ்ச நாள் அபுதாபி போய் அங்குள்ள ஒரு பிரபல பதிவரிடம்  பாடம் கற்றுக்கொண்டு வரலாமா என்றும் ஒரு யோசனை இருக்கிறது. இருந்தாலும் தமிழ்ப் பதிவர்கள் அதற்கெல்லாம் மசிவார்களா என்றும் நினைக்கவேண்டி இருக்கிறது.

அந்த   அபுதாபிப் பதிவர் சமீபத்தில் இந்தியா வருவதாகக் கேள்விப்பட்டேன். அவரை நேரில் சந்தித்து சில பல யோசனைகள் பெறலாம் என்று முடிவு செய்துள்ளேன். அது வரை இப்போது வெளி வரும் சாதாரண அறுவைகளை வைத்து திருப்திப் பட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொல்கிறேன்.

17 கருத்துகள்:

  1. ஆஹா ..... ஆயிரம் பிறைகள் கண்ட தாங்கள் இன்று 1001வது பதிவினை அளித்திருப்பது ஓர் உலக மஹா சாதனை மட்டுமே !!!!!

    மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    இதேபோல மேலும் பல்லாயிரம் நகைச்சுவைப் பதிவுகளை தங்களிடமிருந்து, தங்கள் பாணியில் மட்டுமே, எதிர்பார்த்து ஏங்கிக் காத்திருக்கிறோம். வாழ்க !

    பதிலளிநீக்கு
  2. முனைவர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. பட்டங்கள் கொடுக்கப்பட வேண்டும் எடுத்துக் கொள்ள அல்ல வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. // கொல்கிறேன் //
    அய்யா நீங்கள் வேணுமென்றே செய்திருந்தாலும் பிழை பிழைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வேண்டுமென்றே போடப்பட்டதுதான். இனிமேலும் அறுத்துக்கொல்வேன் என்பது அதன் முழு விளக்கம்.

      நீக்கு
  5. ஏற்கனவே கிறுக்கர்கள் சங்கத் தலைவர் பட்டம் உண்டு, அதோடு தற்போது அறுவைத்திலகம் என்ற பட்டமும். ஆயிரம் பிறை கண்டவர்க்கு ஆயிரம் பதிவுகள். வாழ்த்துக்கள்.

    அபுதாபிகாரர் இந்தியாவில் தான் தற்போது உள்ளார்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. உங்கள் ஆயிரமாவது பதிவுக்குப் பாராட்டுக்கள். அந்த அபுதாபி பதிவர், நான் நேற்று துபாய்க்கு வருகிறேன் என்று செய்தி அனுப்பினவுடனே (ஒரு வாரத்துக்கு முன்பு) "விட்டான் சவாரி" என்று தேவகோட்டையை நோக்கிச் சென்றுவிட்டார்.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் ஆயிரமாவது பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    மாலி

    பதிலளிநீக்கு
  8. எழுதுவது என்பது சாதாரணமானதல்ல. சாதனைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. "ஆயிரம் அறுவைப் பதிவிட்ட அறுவைத் திலகம்"பட்டம் வென்றதற்கு 'மரண மொக்கைத் திலகம்' ஜோக்காளியின் வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  10. ஆயிரமாவது பதிவு லெட்சமாகட்டும்...
    எழுத்து ஒரு வரம் ஐயா... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துக்கள் ஐயா! சென்றவருடம் தவறவிட்ட உங்கள் சதாபிஷேகம் இந்த ஆண்டு உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து ஆறு மாதத்திற்கு முன்பு சதாபிஷேகத்தை கொண்டாடினேன். ஆனாலும் நீங்கள் எப்போது வந்தாலும் விருந்து காத்திருக்கும்.

      நீக்கு