ஆகவே எப்படியாவது இந்த சமூகத்தை சீர்திருத்தி விடுவது என்று தீர்மானம் செய்தாகிவிட்டது. அதை எப்படி செய்யலாம் என்று யோசித்தபோது இந்த வலைத்தளத்தை அதற்கு பயன்படுத்தலாமே என்ற எண்ணம் உதித்தது. உடனே அதை நடைமுறைப்படுத்துகிறேன்.
ஆனால் உலகத்தில் நடைமுறை எப்படியென்றால் யாரும் அடுத்தவர் சொல்லும் அறிவுரையை ஏற்றுக் கொள்வதில்லை.நேற்றுப்பிறந்த குழந்தை முதல் நாளை சாகப்போகும் கிழவன் வரை யாரும் பிறர் சொல்வதை, அது நன்மையே பயக்குமென்றாலும் கேட்பதில்லை. தான் நினைத்ததுதான் சரி, எனக்கு யாரும் சொல்லவேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறார்கள். இது மனிதனின் இயற்கை குணம். இதை யாராலும் மாற்ற முடியாது.
பிறகு ஏன் எல்லோரும் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்க முற்படுகிறார்கள் என்றால் தனக்கு மற்றவர்களை விட அறிவு அதிகம் என்று காட்டிக் கொள்ளத்தான். அவன் சொல்வதை அடுத்தவன் கேட்க மாட்டான் என்று அவனுக்கு நன்றாகத்தெரியும். ஆனால் ஏன் அறிவுரை கூற முற்படுகிறான் என்றால் பின்னால் மற்றவன் ஒரு கஷ்டம் என்று சொல்லும்போது ‘’ நான் அன்றே சொன்னேனே கேட்டியா?’’ என்று குத்திக் காட்டுவதற்காகத்தான்.
இவ்வளவு பேசும் நீ எதற்காக இப்போது அறிவுரை கூற முற்பட்டிருக்கிறாய் என்று நீங்கள் கேட்கலாம். எனக்கோ வேறு வேலை இல்லை, மற்றவர்களுக்காக நீ என்ன செய்தாய் என்று வருங்கால சந்ததியினர் என்னைக் குற்றம் சொல்லக்கூடாது அல்லவா? அதற்காகத்தான்.
ஊதற சங்கை ஊதி வைத்தால் விடியும்போது விடியட்டும் எனகிற பரந்த நோக்கில் இந்த தளத்தைப்பயன்படுத்துகிறேன்.
தொடரும்.....
The best advice is not to advise others
பதிலளிநீக்கு"மற்றவர்களுக்காக நீ என்ன செய்தாய் என்று வருங்கால சந்ததியினர் என்னைக் குற்றம் சொல்லக்கூடாது அல்லவா? அதற்காகத்தான்" - இந்தப் பிரச்சனையைக் கையாள என்னிடம் ஒரு அறிவுரை இருக்கிறது. சொல்லவா? சார்.. சார்... ஏன் ஓடறீங்க... சொல்றதைக் கேட்டுட்டு ஓடுங்க.... சார்... சார்....
பதிலளிநீக்குசரீங்க, ஓடலீங்க, என்னன்னு சட்டுப்புட்டுன்னு சொல்லிப்போடுங்க.
நீக்கு//இவ்வளவு பேசும் நீ எதற்காக இப்போது அறிவுரை கூற முற்பட்டிருக்கிறாய் என்று நீங்கள் கேட்கலாம். எனக்கோ வேறு வேலை இல்லை, மற்றவர்களுக்காக நீ என்ன செய்தாய் என்று வருங்கால சந்ததியினர் என்னைக் குற்றம் சொல்லக்கூடாது அல்லவா? அதற்காகத்தான்.//
பதிலளிநீக்குஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
எதுவும் நான் சொல்வதற்கு இல்லை. சொன்னாலும் யாரும் கேட்கப்போவதும் இல்லை. :)
கோரப்படாத ஆலோசனையை (Unsolicited advice) யாரும் விரும்புவதில்லை என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியுமே. அப்படி இருக்கும்போது தாங்கள் ஊதுகிற சங்கு செவிடன் காதில் ஊதியதுபோல் ஆகிவிடாதா?
பதிலளிநீக்கு