செவ்வாய், 30 மே, 2017

9. நாட்டு நடப்பு - 1

முதலில் வெளியிட்டது :

28 பிப்ரவரி, 2009

                                                        Image result for வயதானவர்கள்
உலகத்தில் எல்லோரும் தனக்கு எல்லாம் தெரியும்; தனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணத்தினால் அடுத்தவர் சொல்லும் நல்லதைக் கேட்க விருப்பப் படுவதில்லை. ஆனால் யாராவது துர்புத்தி சொன்னால் அதை மட்டும் கேட்டுக்கொள்வார்கள். இது உலக வழக்கம்.

தனக்குத் தெரிந்தது ஒன்றுமில்லை என்ற தெளிவு 75 வயதுக்கு மேல்தான் வருகிறது. ஆனால் அப்போது இந்த அறிவு வருவதினால் அவனுக்கு பெரிதாக நன்மை ஒன்றும் விளையப்போவதில்லை. ஆனால் ஒரு நன்மை உண்டு. முன்னால் கேட்பவர்கள் கேட்காதவர்கள் எல்லோருக்கும் இலவச அறிவுரை கூறி வந்ததை இப்போது நிறுத்திக்கொள்ளலாம். அப்படி நிறுத்துபவர்கள் புத்திசாலிகள். பெரும்பாலானவர்கள் அவ்வாறு நிறுத்துவதில்லை. அவர்கள்தான் தங்கள் குடும்பத்தினரால் ஒதுக்கப்படுகிறார்கள்.

வயதானால் அவர்களை அறியாமலேயே அதிகமாகப்பேச வேண்டும் என்கிற அவா தங்களை அறியாமல் வந்து விடுகிறது. இதை கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும். இது மிக மிக முக்கியமானது. ஒவ்வொரு வயதானவரும் இந்த எச்சரிக்கையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். 

....தொடரும்....

11 கருத்துகள்:


  1. ​//தனக்குத் தெரிந்தது ஒன்றுமில்லை என்ற தெளிவு 75 வயதுக்கு மேல்தான் வருகிறது.// ​இந்த உண்மை உங்களுக்கு எப்படி 74 வயதிலேயே (2009) தெரிந்தது.

    //வயதானால் அவர்களை அறியாமலேயே அதிகமாகப்பேச வேண்டும் என்கிற அவா// இந்த அவா உங்களுக்கும் ஓயவில்லை. அதனால் தான் பழைய பதிவுகளை சூடாக்கி கொடுக்கிறீர்கள். சரிதானே?

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Govt.ரூல்ஸ் பிரகாரம் வயதை at nearest birthday யில்தான் கணக்கிட வேண்டும். கணக்கு சரியாக இருக்கா?

      நீக்கு
    2. Govt.ரூல்ஸ் பிரகாரம் வயதை at nearest birthday யில்தான் கணக்கிட வேண்டும். கணக்கு சரியாக இருக்கா?

      நீக்கு
    3. //ஒவ்வொரு வயதானவரும் இந்த எச்சரிக்கையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.//
      இல்லாட்டி பழைய பதிவுகளைத்தான் போட நேரிடும்!

      நீக்கு
  2. அருமையான எச்சரிக்கைகளும் ஆலோசனைகளும் .... சூப்பர்.

    /தனக்குத் தெரிந்தது ஒன்றுமில்லை என்ற தெளிவு 75 வயதுக்கு மேல்தான் வருகிறது. //

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அப்போதாவது வருகிறதே ... நல்லது.

    பதிலளிநீக்கு
  3. நேர்மாறாக 75 வயதுக்குமேல் பிறருடன் அதிகமாகப் பேசுவதைத் தவிர்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப முக்கியமான யோசனைகளைச் சொல்லியிருக்கிறீர்கள். 40 வயது ஆகும்போதே நமக்கு, 'ரொம்பத் தெரியாது' என்ற தெளிவு வந்துவிடவேண்டும். அடுத்த தலைமுறை சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கவேண்டும். அடுத்தவருக்கு அறிவுரை சொல்வதைத் தவிர்க்கவேண்டும். ரொம்ப அவசியமான சொற்கள். கண்டிப்பாகக் கடைபிடிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. //வயதானால் அவர்களை அறியாமலேயே அதிகமாகப்பேச வேண்டும் என்கிற அவா தங்களை அறியாமல் வந்து விடுகிறது.//

    வயதானவர்களிடம் பேச யாரும் அதிகமாக முன்வராததால் வரும் உணர்வு இது இல்லையா! மேலும் முன்பு கதாநாயகர்களாக, முடிவெடுக்கும் இடத்தில் இருந்த காலத்தின் நினைவு அவர்களை எல்லாவற்றிலும் தலையிட்டுப் பேச வைக்கிறது. இப்போது கதாநாயகன் அந்தஸ்து அடுத்த தலைமுறைக்குச் சென்று விட்டது என்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை!

    பதிலளிநீக்கு
  6. வயதானால் அவர்களை அறியாமலேயே அதிகமாகப்பேச வேண்டும் என்கிற அவா தங்களை அறியாமல் வந்து விடுகிறது.

    ஆம் ஐயா உண்மை தான். பேசாமல் இருக்க ரொம்ப நிறைய முயற்சி செய்ய வேண்டி உள்ளது.

    பதிலளிநீக்கு