புதன், 11 செப்டம்பர், 2019

தஹில் இரானியை திகில் இரானியாக்கிய கதை.

தமிழில் ”திகிலடிச்சுப்போனான்” என்ற வார்த்தை ஒருவன் திடீரென்று ஏற்படும் ஏதோவொரு சம்பவத்தினால் நிலை குலைந்து போவதைக் குறிக்கும்.  இந்தப்பதிவில் அந்த வர்த்தையை அந்தப் பொருளில்தான் உபயோகப்படுத்தியிருக்கிறேன். வேறு விதமான அர்த்தங்கள் கற்பித்துக்கொள்ளாதீர்கள்.

பொதுவாக அரசுத்துறை அதிகாரிகளை (நீதித்துறையும் ஒரு அரசுத்துறைதானே) மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இடமாறுதல் செய்வது வழக்கம்தான். இது சாதாரண அதிகாரிகளுக்குப் பொருந்தும். ஆனால் பெரிய பதவிகளில் இருக்கும் நீதிபதிகள், அரசு செக்ரடரிகள், பல்வேறு துறைத்தலைவர்கள் போன்ற அதிகாரிகளை மாற்றும்போது சில விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

அவர்களாக விருப்பப் படும்போது அல்லது அத்தகைய பதவிகளில் குறிப்பிட்ட காலம் பணியாற்றிய பின்பு அவரை இடமாற்றம் செய்வார்கள். அதே மாதிரி ஒருவர் பதவு உயர்வு பெறும்போதும் வழக்கமாக இட மாற்றம் செய்வது உண்டு. இத்தகைய இடமாற்றங்கள் போதுவாக அந்த அதிகாரிக்கு பெரிய மனத்தாங்கல் ஏற்படாது.

ஆனால் குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படாது. அந்தக் குறிப்பிட்ட சில அதிகாரிகளின் நடவடிக்கைகளினால் மேலிடத்திற்கு அசவுகரியங்கள் ஏற்படும்போது அந்த அதிகாரியை அப்புறப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் உருவாகும்.அப்போது அவரை முக்கியமல்லாத பதவிகளுக்கு மாற்றுவார்கள். அவருடைய பதவியின் தரத்தில் மாற்றமிருக்காது. ஆனால் பதவியின் முக்கியத்துவம் மிகவும் குறைந்துவிடும்.

இத்தகைய சூழ்நிலையில் அந்த அதிகாரி சம அதிகாரிகளின் மதிப்பில் மிகவும் தாழ்ந்து விடுவார். இது ஏறக்குறைய ஒரு பதவி இறக்கம் போலப் பாவிக்கப்படும். இது ஒரு அவமானமாகும். பலர் இதைத் தாங்க முடியாமல் விடுமுறையில் செல்வார்கள். ஒரு சிலர் வேலையை ராஜினாமா செய்வார்கள். மேலிடத்தில் இதை எதிர்பார்த்துத்தான் காயை நகர்த்துவார்கள்.

அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது ஒன்றும் புதிதான விஷயமில்லை. ஆகவே தஹில் இரானியை மாற்றுவதற்கு வலுவான அரசியல் காரணங்கள் ஏதாவது இருந்திருக்கலாம். எப்படியானாலும் சம்பவம் நடந்து விட்டது. அதற்கு எதிர்வினையும் ஏற்பட்டாகி விட்டது. இதற்கு மேல் மேலிடம் இறங்கி வந்து சமாதானம் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. அதேபோல் சம்பந்தப்பட்டவரும் தன் நிலையிலிருந்து தன்னை மாற்றிக்கொள்ள முடியாது.

இதை ஒரு விபத்தாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

4 கருத்துகள்:

  1. ஐயா! அவரது பெயர் விஜயா தஹில் ரமானி. மிகப்பெரிய நீதி மன்றத்தின் தலைமை நீதியரசரை மிகச்சிறிய நீதிமன்றத்துக்கு தலைமை நீதியரசராக மாற்றியது விபத்து அல்ல. அடுத்த ஆண்டு உச்ச நீதிமன்ற நீதியரசராக ஆகும் தகுதியில் உள்ள ஒரு மூத்த நீதியரசரை மூன்று நீதியரசர்கள் கொண்ட நீதிமன்றத்திற்கு மாற்றியது பழிவாங்கும் செயலாகவே உள்ளது. பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியாகவும். அடுத்து பதிவாளராகவோ அல்லது துணைவேந்தராகவோ ஆகக்கூடிய ஒருவரை புதிதாய் திறக்கப்பட்ட கல்லூரிக்கு கல்லூரி முதல்வராக மாற்றுவதுபோல் உள்ளது இது. ம்.ம். என்ன செய்ய! கலி காலம். கடவுள் தான் காப்பாற்றவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. நமக்கு நேரிடையாக நடந்தது என்ன என்று தெரியாது. பின்னணியில் காரணங்கள் இருக்கும். அது அல்ப காரணமாகவும் இருக்கலாம். இதனை விபத்து என்றுதான் நினைத்துக்கொள்ளவேண்டும். நீதித்துறையிலும் பலமுறை இத்தகைய விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. இது பெரிய விஷயமில்லை.

    தமிழகத்தில் பல காலங்களாக கருணாநிதி, அதிமுக அரசுகளால் இத்தகைய விபத்துக்கள் ஏற்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.

    இன்னொன்று, தவறுதலாக இத்தகைய நிலைமை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நீதிபதி தனிப்பட்ட முறையில் இதனை முன்னெடுத்திருந்தால் 6 மாதங்கள் அல்லது 1 வருடத்தில் சரிசெய்யப்பட்டு இருக்கலாம்.

    பதிலளிநீக்கு