கல்யாண சீர்கள் – 5 வெத்திலை புடித்தல்
இந்த சீர் எதுக்காக செய்யோணும், எப்படி செய்யோணும்அப்படீங்கறதே ரொம்ப பேருக்குத் தெரியாது என்பது ஒரு வருத்தமான உண்மை. என்ன காரணம்னா, இந்த சீர் செய்யஆரம்பிக்கிறபோது ஏறக்குறைய நடுராத்திரி ஆகிவிடும்.வந்தவங்கள்ல முக்காலே மூணுவீசம் பேர் தூங்கப் போயிடுவாங்க.
ரெண்டாவது காரணம், இப்பெல்லாம்கல்யாணங்க மண்டபத்திலதான் நடக்குது. அதனாலஇந்தச்சீருக்கு அவசியமில்லாம போயிட்டுது.
ரெண்டாவது காரணம், இப்பெல்லாம்கல்யாணங்க மண்டபத்திலதான் நடக்குது. அதனாலஇந்தச்சீருக்கு அவசியமில்லாம போயிட்டுது.
மொதல்ல இந்தச்சீரு எதுக்குன்னு சொல்றேன். முந்திக்காலங்களிலே கல்யாண முகூர்த்தம் பொண்ணு ஊட்லதான்நடக்கும். மாப்பிள்ளை ஊட்ல செய்யவேண்டிய சீர்களைஎல்லாம் செஞ்சுட்டு, மாப்பிள்ளை ஊட்டுக்காரங்களெல்லாம்பொண்ணோட ஊருக்குப்போவாங்க. அவங்களைபொண்ணூட்டுக்காரங்க வரவேத்து ஒரு ஊட்ல தங்கவைப்பாங்க. அந்த ஊட்டுக்கு மாப்பிள்ளை விடுதின்னு பேரு.அப்புறம் காத்தால முகூர்த்த நேரத்துக்கு முன்னாலஎல்லாருமா சேர்ந்து கோயிலுக்குப் போய்விட்டு அப்புறம்முகூர்த்த மண்டபத்துக்கு போவாங்க.
இப்ப பொண்ணூட்டுல எல்லாரும் தயாரா இருக்கிறாங்களாஅப்டீன்னு தெரியாம அந்த ஊருக்குப் போய்ட்டோமுன்னுவச்சுக்குங்க. அங்க ஏதாச்சும் அசம்பாவிதம் நடந்து முகூர்த்தம்நடத்த முடியாத நெலமயாப் போயிருந்ததுன்னு வச்சுக்குங்க.அப்ப என்ன பண்ண முடியும்? மாப்பிள்ளை ஊட்டுக்காரங்கவெறுங்கையோடதானே திரும்பி வரவேண்டும். அது ஒருபெரிய மானக்கேடுதானுங்களே. இந்த மாதிரி நிலமைஏற்படுவதைத் தடுக்க அந்தக்காலத்துல ஒரு சடங்குவச்சிருக்காங்க. அதுதானுங்க இந்த வெத்தில புடிக்கிற சீரு.
மாப்பிள்ளை ஊட்டுல இருந்து ஒரு ஐந்து பேருபொண்ணூட்டுக்கு போய் இந்த சீரை செய்துவிட்டு வருவார்கள்.அப்ப அங்க நிலைமை சரியாய் இருக்கிறதா என்றுகவனிப்பார்கள். அவர்கள் பொண்ணு ஊட்டுல இருந்து திரும்பிவந்ததுக்கு அப்புறம்தான் மாப்பிள்ளை ஊட்ல இருந்துபொண்ணு ஊட்டுக்கு புறப்படுவார்கள்.
இந்த சீரு செய்யறதப்பத்தி விவரமாச்சொல்றனுங்க. மொதல்லமாப்பிள்ளை ஊட்ல சாமி கும்பிடற எடத்தைச் சுத்தம் பண்ணி,புள்ளார் புடிச்சு வச்சு பூச சாமானெல்லாம் எடுத்துவைக்கோணுமுங்க. வெத்திலை பாக்கு தனியா ஒரு தட்டத்துலஎடுத்து வைக்கோணுமுங்க. மாப்பிள்ளைப் பையனைக்கூட்டீட்டுவந்து ஒரு முக்காலி போட்டு சாமி கும்பிடற எடத்துலஉக்கார வைக்கோணுமுங்க. அப்புறம் பூச பண்ணி சாமிகும்புட்டுட்டு எல்லோரும் கற்பூரத்தைத் தொட்டுக் கும்பிட்டுட்டுதிண்ணீரு எடுத்து நெத்தியில வச்சுக்கோணுகுங்க. அப்பறம்ஒரு அஞ்சு சமங்கலிப் பொம்பளைகளைக் கூப்பிட்டுஅவங்களுக்கு வெத்திலை பாக்கு கொடுக்கோணுமுங்க. அவங்கசீர்க்காரரைக் கும்புட்டுவிட்டு அந்த வெத்தில பாக்கைஅவங்கவங்க சீலை மடியில வாங்கிக்குவாங்க. அதாவது அந்தஅஞ்சு பேரும் மாப்பிள்ளைப் பையனை ஆசீர்வாதம்பண்ணினதா ஐதீகம். இதையெல்லாம் குனுப்பமா படிச்சுஅர்த்தத்தை மனசுல பதிச்சுக்கோணுமுங்க. என்னமோ சீருபண்ணறதெல்லாம் வெறும் சடங்குன்னு ரொம்பப்பேருநெனச்சுக்கிட்டு இருக்காங்க. அதெல்லாம் வெவரமில்லாதவங்கபேசற பேச்சு.
அப்புறமா ஒரு அஞ்சு பேரு (ஆம்பிளைங்க பொம்பிளைங்கசேர்ந்து) புறப்பட்டு பொண்ணு ஊட்டுக்குப் போவாங்க. அங்கயும்சாமி கும்பிடோணுமுங்க. பொண்ணுப் புள்ளைய கூட்டீட்டுவந்து முக்காலில உக்கார வச்சு மாப்பிள்ளை ஊட்ல கும்பிட்டமாதிரியே சாமி கும்பிட்டுட்டு அஞ்சு மங்கிலியப்பொம்பளைகளுக்கு வெத்திலை பாக்கு கொடுப்பாங்க.அவங்களும் தங்களோட சீலை மடியில பயபக்தியோடசீர்க்காரரைக் கும்பிட்டு வாங்கீக்குவாங்க.
அப்பறம் மாப்பிள்ளை ஊட்ல இருந்து போனவங்க எல்லாம்பொண்ணூட்ல கை நனைக்கோணுமுங்க. அதாவது பந்தியிலஉக்காந்து சாப்பிடோணுமுங்க. மொதல்லயே சாப்பிட்டுட்டுவந்திருந்தாலும் திரும்பவும் பந்தியில உக்காந்துசாப்பிட்டோம்னு பேர் பண்ணோணுமுங்க. இல்லீன்னா அதுவெவகாரமாயிடுமுங்க. இதில பல கருத்து தெளிவாகுதுபாருங்க. ஒண்ணு ஊட்டுக்கு வந்தவங்களை விருந்துவச்சுத்தான் அனுப்போணும்கிறது. ரெண்டாவது பொண்ணூட்லசாப்பாடெல்லாம் ஒழுங்கா பண்ணீருக்காங்களா அப்படீங்கறசமாசாரம். நாளைக்கு நம்ம பையன் மாமியா ஊட்டுக்கு வந்தாஒழுங்கா சாப்பாடு கிடைக்குமாங்கறதை இதை வச்சுகண்டுபிடிச்சறலாம் பாருங்க.
இப்படி கை நனைச்சதுக்கப்புறம் மாப்பிள்ளை ஊட்ல இருந்துவந்தவங்கெல்லாம் சொல்லீட்டு திரும்பிப் போவாங்க. இவங்கதிரும்பிப்போயி எல்லாம் சரியாயிருக்குதுன்னுசொன்னதுக்கப்புறம்தான் மாப்பிள்ளையை கூப்புட்டுட்டுஎல்லோரும் பொண்ணு ஊட்டுக்கு பொறப்படுவாங்க.
தொடரும்…