வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

கல்யாணம் பேசி முடித்தல்





கல்யாணம் பேசறப்போ ஆளாளுக்கு ஒண்ணப்பேசுவாங்க. முக்கியமா இருக்கிற ஒருத்தர், பேச்சு எப்படிப்போனாலும் காரியத்த கச்சிதமா முடிக்கறதுலயே கண்ணும் கருத்துமா இருப்பாரு. “என்னத்துக்கு வருவோமுங்க, உங்கூட்டுல பொண்ணு வச்சிருக்கீங்கன்னு கேள்விப்பட்டோமுங்க. அதான் எங்க பையனுக்கு கட்டுக்கொடுப்பீங்களான்னு தெரிஞ்சுட்டுப்போலாமுன்னு வந்தமுங்க” அப்படீன்னு விசயத்துக்கு வருவாருங்க.

பொண்ணூட்டுக்காரங்களும் அப்புறம் சகஜமா தமாசு பேசி, சரீங்க, பொண்ணு குடுக்கறோம், கட்டிக்குங்க என்று சொல்லுவாங்க. எதுக்கும் ஊட்லயும் கேட்டுக்கோங்க அப்படீம்பாரு ஒருத்தரு. பின்னால திரும்பி, என்னம்மா, ஒங்களுக்கு எல்லாம் சம்மதம்தானேன்னு ஒரு கொரல் குடுப்பாரு.

அவங்களும் ஏதாவது தமாசு சொல்லி சரீம்பாங்க. அப்ப, நீங்கெல்லாம் மாப்பிள்ள ஊட்டுக்கு வாங்க, அங்க வச்சு நாளு நச்சத்திரம் எல்லாம் குறிச்சுக்கலாம் என்று மாப்பிள்ள ஊட்டார் முடிப்பாங்க. முந்தி எல்லாம் நிச்சியம் பண்ற அண்ணிக்குத்தான் பொண்ணப் பாக்கமுடியுமுங்க. இப்ப கோயல்லெ பொண்ண பாக்குறதும், ஒரப்பு பண்ற அண்ணிக்கே பொண்ணக்கூட்டிட்டு வந்து சபெயில உக்காரவைக்கறதும் நடக்குதுங்க.

அப்புறம்தான் எல்லாருக்கும் விருந்து சாப்பாடு நடக்கும். அதத்தான் கை நனைக்கறதுன்னும் சொல்லுவாங்க. எல்லாரும் சாப்பிட்டு முடிந்தவுடன் மாப்ள ஊட்டுக்காரங்க எல்லாம் “போய்ட்டுவரமுங்க” ன்னு சொல்லிட்டு கிளம்புவாங்க.
பொண்ணு ஊட்டுக்காரங்க அண்ணிக்கோ இல்ல ரெண்டு நாளு களிச்சோ மாப்ள ஊட்டுக்குப் போவாங்க.

விருந்து சாப்பிட்டது கொஞ்சம் களைப்பா இருக்குதுங்கோ, நாளைக்கு பாக்கலாமுங்களா?