செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

அவன், அவள், அது?


இவைகள் பிரதி பெயர்ச்சொற்கள் என்று சொல்லப்படும் Pronouns எனப்படுபவை. தமிழில் பெயர்ச்சொற்கள் உயர்திணை, அஃறிணை என்று இரண்டு வகைப்படும். உயர்திணையில் ஆண்பால், பெண்பால் என்று இரண்டு வகை உண்டு. அஃறிணையில் ஒரே திணைதான்.
ஆனால் சம்ஸ்கிருதத்திலும், ஜெர்மன் மொழி மற்றும் வேறு சில மொழிகளில் ஆண்பால், பெண்பால், உயிரில்லாதவை என்பவை சொற்களைப் பொருத்தே அமைகின்றன. பொருளைப்பொருத்து அமையவில்லை. உதாரணத்திற்கு கமலம் என்பது உயிரற்ற திணையில் அடங்கும். ராமா என்பது பெண்பாலாகும்.
அவன் என்பது வடமொழியில் =  ச:
அவள் என்பது வடமொழியில் =  சா
அது என்பது வடமொழியில்   = தத்
இந்த வேறுபாடுகள்தான் வடமொழியை மற்ற மொழிக்காரர்கள் கற்பதற்கு கஷ்டமாக இருப்பதற்கு காரணம்.