1. கோபியில் ஈமு பண்ணை நடத்தி 8 கோடி மோசடி செய்த பெண் போலீஸ் உட்பட 3 பேர் கைது.
2. கடன் வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் மோசடி
3. திருமணம் செய்வதாகக் கூறி பத்தாவது படிக்கும் மாணவியை கர்ப்பிணியாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் தலைமறைவு.
4. சுய உதவிக்குழுவினருக்கு கடன் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் ஏமாற்றிய "அப்ரோ" நிறுவனர் ஏசுதாஸ் கைது.
5. வணிக வளாக லிப்டில் ஓவர் லோடு ஆட்கள் ஏறினதில் லிப்ட் ஒரு மணி நேரம் நின்றது.
6. குடி போதையில் 3 வயது குழந்தையைத் தவிக்கவிட்ட தந்தை.
7. பைனான்ஸ் கம்பெனி ஏஜண்டின் கணவர் அவமானம் தாங்காமல் தற்கொலை.
8. 15000 ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது.
9. போர்ஜரி கடிதம் கொடுத்து அரசு மான்யத்தை சுருட்டிய மத்திய மந்திரி சல்மான் குர்ஷீத்.
நான் ரொம்ப நல்ல எண்ணத்துடன்தான் பேப்பரைப் படித்தேன். என் கண்ணில் பட்ட செய்திகள் இவை. வேறு நல்ல செய்தி ஏதாவது உங்கள் கண்களில் பட்டிருந்தால் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.