வெள்ளி, 14 டிசம்பர், 2012

உலகம் அழியுமா?


மனிதன் விஞ்ஞானத்தில் எவ்வளவோ உயர்ந்திருக்கிறான். பல சாதனைகள்புரிந்திருக்கிறான். மரணத்தை வெல்ல முடியவில்லையே தவிர மனிதனின் பல நோய்களுக்கு தீர்வு கண்டு மனிதனின் ஆயுளை அதிகரித்திருக்கிறான்.

அப்படிப்பட்ட காலத்தில் யாரோ சிலர் ஒரு அபத்தமான கொள்கையின்படி இந்த உலகம் 21-12-12 அன்று அழியப்போகிறது என்று சொன்னால் அதையும் நம்புவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அதிசயம்.

பகவத் கீதையில் பகவான் சொல்லியிருக்கிறாராம். உலகத்தில் தர்மம் அழிந்து அதர்மம் ஓங்கும்பொழுது நான் அவதரித்து தர்மத்தைக் காப்பாற்றுவேன் என்று. மத நம்பிக்கையுள்ளவர்கள் இதை நம்புகிறார்கள். ஆனாலும் கீதையில் நான் இத்தனாம் தேதி வருகிறேன் என்று கிருஷ்ணர் சொல்லவில்லை.

ஆனால் இந்த மாயன் கேலண்டர்காரர்கள் தேதியைக் குறிப்பிட்டு உலக அழிவை சொல்கிறார்கள். இது ஒரு அப்பட்டமான புளுகு. இதை நம்புகிறவர்கள் தங்கள் அறிவை அடகு வைத்துவிட்டார்கள் என்று பொருள்.