திரு. பட்டாபட்டி இறந்தது 12-5-2013, ஞாயிற்றுக்கிழமை. அடுத்த நாளான 13ந் தேதி, திங்கட்கிழமை, தாய்லாந்தில் லீவு. ஒரு காரியமும் நடக்கவில்லை. இன்றுதான் (14-5-2013) பேப்பர் வொர்க் முடிந்து மதியத்திற்கு மேல் பேங்காக்கில் விமானத்தில் ஏற்றுவார்கள். இன்று இரவு(அதாவது 15-5-2013 அதிகாலை) 1 மணி சுமாருக்கு சென்னை வரும். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவருடைய சொந்த ஊரான பெரியநாயக்கன்பாளையத்திற்கு (கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 20 கி.மீ. தூரம்) அநேகமாக நாளை (15-5-2013, புதன்கிழமை) காலையில் 8 லிருந்து 9க்குள் சடலம் வரலாம். அன்றே இறுதிச்சடங்குகள் நடக்கும்.
இறந்தவருக்கு வயது 46. மனைவியும் இரு பெண் குழந்தைகளும் இருக்கின்றன. எனக்கு நெருங்கிய நண்பர். அந்த விபரங்களை பிற்பாடு எழுதுகிறேன்.
அவருக்கு சொந்த ஊரில் ஏகப்பட்ட நண்பர்கள். ஊரெங்கும் இரங்கல் நோட்டீஸ் அடித்து ஒட்டியிருக்கிறார்கள்.