ஞாயிறு, 14 மே, 2017

4.நதிமூலம்-4



                                        Image result for flowers images
காலை 3 மணிக்கு எழுந்திருந்து கணிணி முன்பு உட்கார்ந்து மின்னஞ்சல் உருவாக்கி இன்டர்நெட்டுக்குள் போனால் ஒரு நிமிடத்திற்குள் இந்த மின்னஞ்சல் போய்விடும். பிறகு மீதி உள்ள 14 நிமிடத்தை என்ன செய்வது? ஏதாவது செய்யலாம் என்று வலைத்தளங்களுக்குள் பிரவேசித்தேன். சிறிது காலம் ஒன்றும் திசை தெரியாமல் குழம்பி பிறகு ஒருவாறாக இன்டர்நெட்டின் நுணுக்கங்களை புரிந்து கொண்டேன். குறிப்பாக கூகுள் தேடுதளம் மிகவும் உபயோகமாக இருந்தது. பலவிதமான பொருள்களைப்பற்றி தேடியதில் பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.

இளைஞர்கள் (60+) எவ்வாறு உடல்நலத்தை பேணுவது என்பதில் இருந்து விமானம் எப்படி பறக்கிறது என்பதுவரை பார்த்தபிறகு வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போதுதான் என் நண்பர் ஒருவர் ஒரு துண்டு பிரசுரம் எங்கள் குழு கூட்டத்தில் விநியோகித்தார். அதில் அவர் ஆரம்பித்து நடத்திவரும் ஒரு வலைத்தளம் (வலைத்தளமா அல்லது வலைப்பூவா, எனக்கு சரியாகத்தெரியவில்லை) பற்றி குறிப்பிட்டிருந்தார். அதைத்தேடி கண்டுபிடித்து பார்த்தேன். மிகவும் அழகான மலர்களின்(?!) படங்கள் (நம் தமிழ் கலாசாரப்படி பெண்களும் மலர்கள்தானே) மற்றும் பல செய்திகள் சுவையாக வெளியிட்டிருந்தார்.

சில காலம் இதைப்பார்த்த பிறகு சலிப்பு ஏற்பட்டு இது மாதிரி வேறு தளங்கள் இருக்கிறதா என்று தேடினேன். தேடும்போதுதான் தெரிந்தது – உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் இந்த வேலைதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. இவர்கள் எல்லாம் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள், அவர்களுக்கு குடும்பம் உண்டா, அப்படி இருந்தால் அதை யார் கவனிக்கிறார்கள், இந்த கணிணி நோண்டுவேலை செய்வதற்கு யார் செலவு செய்கிறார்கள் இப்படிப்பட்ட அபத்தமான கேள்விகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்த தளங்களில் என்னதான் இருக்கிறது என்று பார்த்தேன். பார்த்ததில்.....

வளரும்....