ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

ஒரு முக்கிய அறிவிப்பு

இந்த பிளாக்கைத்தொடரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
 
என்னுடைய இந்த "சாமியின் மன அலைகள்" என்கிற பிளாக்கு நான் சொல்வதைக் கேட்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது. எனக்குத்தெரிந்த புத்திமதி எல்லாம் சொல்லிப்பார்த்து சலித்துப்போய் எக்கேடும் கெட்டுப்போ என்று கை கழுவி விட்டேன். யாரும் சிபாரிசுக்கு வரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய சொற்படி நடக்கும் வேறொரு பிளாக்கை சீக்கிரம் தத்தெடுத்து விடுகிறேன். அதையும் என்னுடைய விருப்பத்திற்கு பழக்க சிறிது நாள் பிடிக்கும். அதன் பிறகு பதிவுகளைத்தொடருகிறேன். இந்த பிளாக்கில் உள்ளவைகளையும்  ஒவ்வொன்றாக மறுபதிவு செய்கிறேன். அது வரையிலும் இந்த பிளாக்குக்கு தண்டச்சோறு போடுகிறேன்.

அன்பர்கள் யாவரும் வழக்கம்போல் தங்களுடைய ஆதரவை தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சிரமங்களுக்கு மன்னிக்கவும். வேறு வழி தெரியாததால்தான் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

உங்கள் ஆதரவை வேண்டும் அன்பன், தாத்தா,
ப.கந்தசாமி.

பின் குறிப்பு: என்னுடைய இன்னொரு பிளாக்கான  "மசக்கவுண்டன் கிறுக்கல்கள்"  அதுவும் இதோடு சேர்ந்து கொழுப்பெடுத்துத் திரிகிறது. எல்லாம் இந்த "விண்டோஸ்-7" O.S.  நிறுவியதின் விளைவுகள். அதையும் இதனுடன் சேர்த்து கை கழுவப்போகிறேன். காலுக்கு சேராத செருப்பை கழட்டி எறி என்று பெரியவர்கள் சொல்லிப்போயிருக்கிறார்கள். மூத்தோர் சொல்லைக் கடைப்பிடிப்பதே நமது கொள்கை.

12 கருத்துகள்:

  1. அன்பர்களுக்கு,
    இந்த அறிவிப்பு வெளியானவுடன் இரண்டு பிளாக்குகளும் ஒழுங்காக இருப்பது மாதிரி தெரிகிறது. ஆகவே இன்னும் இரண்டு நாள் அவகாசம் அவைகளுக்கு தருகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அன்பர்களுக்கு,
    இந்த அறிவிப்பு வெளியானவுடன் இரண்டு பிளாக்குகளும் ஒழுங்காக இருப்பது மாதிரி தெரிகிறது. ஆகவே இன்னும் இரண்டு நாள் அவகாசம் அவைகளுக்கு தருகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. பின்ன என்ன பேராண்டி, விடிய விடிய உக்கார்ந்து பதிவெழுதி பிளாக்கர்ல ஏத்தினா,பதிவு தப்புத்தப்பா போகுது. ரெண்டு மணி நேரம் போராடியும் ஒழுங்கா ஒரு பதிவ போடமுடியவில்லைன்னா கோபம் வராதா?

    பதிலளிநீக்கு
  4. // என்னுடைய இன்னொரு பிளாக்கான "மசக்கவுண்டன் கிறுக்கல்கள்" அதுவும் இதோடு சேர்ந்து கொழுப்பெடுத்துத் திரிகிறது. எல்லாம் இந்த "விண்டோஸ்-7" O.S. நிறுவியதின் விளைவுகள். //

    வாய்விட்டு சிரித்துவிட்டேன். அதுசரி windows - 7 O S பற்றி இது போல முதல் முறையாக அறியபடுகிறது.
    விபரம் அறிந்த பிள்ளைகள் சற்று இது குறித்து சொன்னால் உதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. இது என்ன புதுக்குழப்பம்.? நான் tamilish.com இல் உங்களுக்கு ஒட்டு போட போனால் அங்கே நம்ம
    "வால் பயன் "
    ஒரு முக்கிய அறிவிப்பு என்று தான் மருதை போகும் விபரம் அல்லவா இருக்கிறது?!! நீங்கள் சொன்னது போல
    உங்கள் ப்ளாகிற்கு ஏதோ ஆகித்தான் விட்டது.

    பதிலளிநீக்கு
  6. நீங்க தப்பா நெனக்கலையின்னா ஒன்னு சொல்றேன்.

    இயந்திரம் எப்போதும் தப்பு செய்யாது.
    நீங்கள் online யில் யாராவது ஒருவரின் உதவியை கோரலாமே ?

    பதிலளிநீக்கு
  7. Krishna said:

    //நீங்க தப்பா நெனக்கலையின்னா ஒன்னு சொல்றேன்.

    இயந்திரம் எப்போதும் தப்பு செய்யாது.
    நீங்கள் online யில் யாராவது ஒருவரின் உதவியை கோரலாமே ?//

    இந்த மிரட்டலுக்கு அப்புறம் என்னமோ இந்த பிளாக்குகள் ஒழுங்காக இருக்கிற மாதிரி தெரியுது. இன்னும் ரெண்டு நாள் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. யூர்கன் க்ருகியர் சொன்னது:

    //தாத்தா,

    Please never giveup!//

    விட்றதில்லை, பேராண்டி. கடைசி வரை ஒரு கை பாத்துட்றதுதான்.

    பதிலளிநீக்கு
  9. //மூத்தோர் சொல்லைக் கடைப்பிடிப்பதே நமது கொள்//,

    மாத்திடுங்க..

    பதிலளிநீக்கு
  10. உங்களுக்கு விண்டோ 7 பழகவில்லை :))

    சரி சரி கூகுள் டூல்பார் நிறுவிப்பாருங்க.

    அதிலிருந்து எல்லா கூகுள் அக்கவுண்டுக்கும் போகலாம், மெயில், பிளாக் எல்லாம் எளிதாக இருக்கும்,

    நம்மளுக்கு தெரியலன்னு ஒத்துக்கறது வுட்டுப்போட்டு மிசின்மேல பழிபோடறீங்களே :)))

    பதிலளிநீக்கு