வெள்ளி, 10 டிசம்பர், 2010

ஈரோடு, ஈரோடு,ஈரோடு,

நானும் ஈரோட்டுக்குப் போறேன். என்னோடு வருபவர்கள் எல்லாம் கோயமுத்தூர் காந்திபுரம் பஸ் ஸ்டேண்டிற்கு 26ம் தேதி காலை 8 மணிக்கு வந்துவிடுங்கள். அங்கே "ஈரோடு, ஈரோடு, ஈரோடு" என்று கூவிக்கொண்டு இருப்பார்கள். அவர்களிடம் இந்த பஸ் நேராக ஈரோடு போகுமா என்று கேட்டு விட்டு பஸ்ஸில் ஏறினால் நேராக ஈரோடு கொண்டுபோய் விடும். பஸ் கண்டக்டரிடம் என் பெயரைச் சொல்லி 50 ரூபாய் கொடுத்தால் ஈரோடுக்கு டிக்கெட் கொடுப்பார். ஈரோடு பஸ் ஸ்டேண்ட் போய் இறங்கியதும் என் பெயரைச் சொன்னால் உங்களை நேராக.....

வருகின்ற டிசம்பர் 26ம் தேதி காலை 11.00 மணிக்கு உங்கள் அனைவரையும் ஈரோட்டில் சந்திக்க மிகுந்த ஆவலாய் இருக்கின்றோம். ஆம், தமிழ்ப் பதிவர்களுக்கான ஒட்டு மொத்த கூடுதலில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கரங்கள் நீட்டி தயாராக இருக்கிறோம்

உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்

நிகழ்ச்சியில்

நீங்கள் எதிர்பார்க்கும் சில நிகழ்வுகளும்

எதிர்பாராத பல நிகழ்வுகளும் நிச்சயம் இருக்கும்

காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.

உங்கள் வருகையே எங்களின் வெற்றி!

25 கருத்துகள்:

  1. காலையில் இட்லி , பொங்கல், வடை, ரவா கேசரி.பில்டர் காப்பி.
    மதியம் கீரை கூட்டு, முருங்க காய் சாம்பார், கத்தரிக்காய் கறி,உருளை சிப்ஸ், தக்காளி ரசம், கெட்டி தயிருடன்
    சாப்பாடு.
    பின்னர் மாலை, ஒரப்படை, மலபார் அவியல் ,டீ. இவைகள் போதும்.
    இவைகள் கிடைக்கும் என்றால் நானும் வருகிறேன். உடன் பதில்.

    பதிலளிநீக்கு
  2. அய்யா எனக்கும் ஒரு சீதா புடிச்சி வைங்க

    பதிலளிநீக்கு
  3. பார்வையாளன் said...

    //சந்தோஷமான நிகழ்வு//

    நன்றி

    பதிலளிநீக்கு
  4. விக்கி உலகம் said...

    //அய்யா எனக்கும் ஒரு சீதா புடிச்சி வைங்க//
    நீங்க வந்தாப்போதுமுங்க, என்ன வேணும்னாலும் ஏற்பாடு பண்ணீடலாம்.

    பதிலளிநீக்கு
  5. கக்கு - மாணிக்கம் said...
    //காலையில் இட்லி , பொங்கல், வடை, ரவா கேசரி.பில்டர் காப்பி.//

    ஈரோட்டில இட்லி சாம்பார்தான் பேமஸ். ரெண்டு இட்லிக்கு ஒரு பக்கெட் சாம்பார். உங்க ஐடம்கள் எல்லாம் கிடைக்கும்.

    //மதியம் கீரை கூட்டு, முருங்க காய் சாம்பார், கத்தரிக்காய் கறி,உருளை சிப்ஸ், தக்காளி ரசம், கெட்டி தயிருடன் சாப்பாடு.//

    கூடவே முட்டைல எல்லா தினுசும், கோழி வறுவலும் உண்டு.

    //பின்னர் மாலை, ஒரப்படை, மலபார் அவியல் ,டீ. இவைகள் போதும். இவைகள் கிடைக்கும் என்றால் நானும் வருகிறேன். உடன் பதில்.//

    பூஊஊஊஊஊஊ இவ்வளவுதானா, வாங்க கொளுத்தீடலாம்.

    பதிலளிநீக்கு
  6. நானும்..நானும் வரேன்...

    // கோவை to ஈரோடு.. நான் டிக்கெட் எடுத்துக்கிறேன்..

    ஆனா. சிங்கை to கோவை மட்டும்..ஹி..ஹி.. பார்த்து ,,ஹி..ஹி ..டிக்கெட் மட்டும் வாங்கி கொடுங்க..சார்...

    பதிலளிநீக்கு
  7. ஐயா.. உங்களை ஈரோடு வலைப்பதிவர் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்....

    வாங்க பழகலாம்...

    பதிலளிநீக்கு
  8. சங்கவி said...

    // ஐயா.. உங்களை ஈரோடு வலைப்பதிவர் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்....

    வாங்க பழகலாம்.//

    நன்றி சங்கவி

    பதிலளிநீக்கு
  9. பட்டாபட்டி.... said...
    //நானும்..நானும் வரேன்...
    // கோவை to ஈரோடு.. நான் டிக்கெட் எடுத்துக்கிறேன்..//
    //ஆனா. சிங்கை to கோவை மட்டும்..ஹி..ஹி.. பார்த்து ,,ஹி..ஹி ..டிக்கெட் மட்டும் வாங்கி கொடுங்க..சார்..//

    இதுக்கெதுக்கு இவ்வளவு தயக்கம்? எத்தனை பேருக்கு எடுக்கணும்? சிங்கை இந்த மருதமலைப் பக்கத்தில இருக்கே, அந்த சிங்கைதானே?

    பதிலளிநீக்கு
  10. அண்ணா, என்னோட சார்புல அல்லார்த்துக்கும் ஒரு வணக்கம் சொல்லிடுங்க!!

    பதிலளிநீக்கு
  11. ரொம்ப மகிழ்ச்சிங்கண்ணா. வரவேற்க காத்திருக்கிறோம்.

    அன்புடன்
    ஆரூரன்

    பதிலளிநீக்கு
  12. பட்டாசு கிளப்பிட்டீங்க...

    பஸ் ஸ்டேண்ட் கூட வரவேண்டாமுங்க, கொஞ்சம் முன்னாடியே எறங்கிக்க, அரங்கு பரிமளம் மாஹால் பக்கத்துலதான்...

    பதிலளிநீக்கு
  13. அய்யா,

    நானும் உங்களை ஈரோடு வலைப்பதிவர் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. பழமைபேசி said...
    //அண்ணா, என்னோட சார்புல அல்லார்த்துக்கும் ஒரு வணக்கம் சொல்லிடுங்க!//

    கண்டிப்பா சொல்லீட்ரனுங்க தம்பி.
    எங்கூட டூ உட்டுட்டீங்களாக்குமின்னு நெனச்சிட்டிருந்தனுங்க தம்பி. அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்கதானே?

    பதிலளிநீக்கு
  15. முதல் பாராவுல குசும்பு தெறிக்கிறது... :-))))

    வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  16. ஆரூரன் விசுவநாதன் said...
    //ரொம்ப மகிழ்ச்சிங்கண்ணா. வரவேற்க காத்திருக்கிறோம்.

    அன்புடன்
    ஆரூரன்//

    அன்பு வெள்ளத்தில முழுகீடுவம்போல இருக்குங்க. எதுக்கும் ஒரு லைப் ஜாக்கெட் கூடவே எடுத்துட்டு வந்தர்றனுங்க.

    பதிலளிநீக்கு
  17. அமர பாரதி said...

    //அய்யா,
    நானும் உங்களை ஈரோடு வலைப்பதிவர் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்.//

    நன்றி,நன்றி,நன்றி,நன்றி,

    கண்டிப்பா வெள்ளத்துல (அன்பு) அடிச்சுட்டு போகப்போறேன்.

    பதிலளிநீக்கு
  18. ஈரோடு கதிர் said...

    //பட்டாசு கிளப்பிட்டீங்க...

    பஸ் ஸ்டேண்ட் கூட வரவேண்டாமுங்க, கொஞ்சம் முன்னாடியே எறங்கிக்க, அரங்கு பரிமளம் மஹால் பக்கத்துலதான்...//

    இந்த டிப்ஸ் போதுமுங்க. டைமுக்கு வந்து சேந்துடுவேன்.

    பதிலளிநீக்கு
  19. ரோஸ்விக் said...

    //முதல் பாராவுல குசும்பு தெறிக்கிறது... :-))))
    வாழ்த்துகள் ஐயா.//

    வாங்க ரோஸ்விக். நம்மள மறந்துட்டீங்கன்னு நெனச்சுப்போட்டனுங்க. ஞாபகம் வெச்சுட்டிருக்கறதுல ரொம்ப சந்தோசமுங்க. அப்புறம் நம்ம மூச்சே இப்ப குசும்புலதானுங்க ஓடிட்டிருக்குதுங்க.

    பதிலளிநீக்கு
  20. அய்யா வணக்கமுங்க..நான் இப்பவே பொடி நடையப பொறப்பட்டாச்சுங்க..

    பதிலளிநீக்கு
  21. தாராபுரத்தான் said...
    //அய்யா வணக்கமுங்க..நான் இப்பவே பொடி நடையப பொறப்பட்டாச்சுங்க..//

    அப்ப ஈரோட்டில சந்திப்போம். பெரிய மாலையா வாங்கி வையுங்க, என்னை வரவேற்கிறதுக்கு.

    பதிலளிநீக்கு
  22. அய்யா.. வணக்கம்.. தங்களின் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.. வாருங்கள் கலக்கலாம்...

    பதிலளிநீக்கு