சதாபிஷேகம் என்பது ஒருவருடைய வாழ்க்கையில் முக்கியமான ஒரு கால கட்டம். வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து மக்கள், மருமக்கள், பேரன், பேத்திகள் எடுத்து, அவர்கள் நல்ல வசதியான நிலையில் இருக்க, தானும் தன் இல்லாளுடன் நலமாகவும் வசதிகளுடனும் இருப்பது என்பது ஒரு பூரணமான வாழ்வாகும். எல்லோருக்கும் இந்த கொடுப்பினை இருக்காது. அப்படி இருக்கும் ஒருவருக்கு அவருடைய வாரிசுகள் ஒரு விழா எடுப்பது பெரிய பாராட்டுதலுக்குரியது. அத்தகைய ஒரு விழாவுக்கு எனக்கு அழைப்புக் கிடைத்தது. என்னுடைய நண்பரின் நண்பருடைய தந்தைக்கு அப்படிப்பட்ட விழா எடுத்தார்கள். நண்பர் என்னைத் துணைக்கு அழைத்தார். நானும் இந்த விழாவைப் பார்க்க விரும்பியதால் அவருடன் சேர்ந்து போனேன். விழா காரைக்காலில் நடந்தது.
சதாபிஷேக நடைமுறைகள் அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சதாபிஷேக தம்பதியருக்கு எல்லா உறவினர்கள் புடைசூழ யாகபூஜைகள் செய்து அந்த புனித நீரால் அபிஷேகம் செய்வித்து, கல்யாண உறசவம் நடத்துவார்கள். நான் கலந்து கொண்ட விழாவில் தாராளமாக செலவு செய்து எல்லா உறவினர்கள், நண்பர்கள் கூடியிருக்க இந்த விழா நிறைவாக நடந்தது. இதன் பல காட்சிகளைப் பாருங்கள்.

வேதவித்துக்கள்

யாகம் செய்தவர் : Dr. சிவஸ்ரீ பால சர்வேச்வர குருக்கள்
ஸ்தாபகர், ஸ்ரீமத் ஸ்ரீகண்ட சிவாசார்ய வேதசிவகாம வித்யா பீடம், காரைக்கால்.

பூர்ணாகுதி

மகாதீபாராதனை

பேத்தி

மூத்த மகனும் மருமகளும்

திருமஞ்சனம்

சதாபிஷேகத் தம்பதியினர்

தம்பதியினர் கல்யாணத்திற்கு தயார்

மாங்கல்யதாரணம்

மங்கள வாத்தியம்- திருவாரூர் திரு. சிவாந ந்தம், B.Com.
அவர்கள் குழுவினர்

ஆசீர்வாதம் வாங்க காத்திருக்கும் உறவினர்கள்.

உறவினர் கூட்டம்
அன்பின் கந்தசாமி அய்யா
பதிலளிநீக்குஅருமையான நேரடி ஒளிபரப்பு - கையில் காமெராவும் கருத்தில் சதாபிஷேகமும் கொண்டு அழகான இடுகை உருவாக்கி விட்டீர்கள். அத்தனை முக்கியமான நிகழ்வுகளும் இங்கே ..... பகிர்வினிற்கு நன்றி
சஷ்டியப்தப்பூர்த்தி - மகன் / மகள்களால் நடத்தப் படவேண்டும்
பதிலளிநீக்குபீமரத சாந்தி - பேரன் /பேத்திகளால்
சதாபிஷேகம் - கொள்ளுபேரன் பேத்திகளால்
cheena (சீனா) said...
பதிலளிநீக்கு//அன்பின் கந்தசாமி அய்யா
அருமையான நேரடி ஒளிபரப்பு - கையில் காமெராவும் கருத்தில் சதாபிஷேகமும் கொண்டு அழகான இடுகை உருவாக்கி விட்டீர்கள். அத்தனை முக்கியமான நிகழ்வுகளும் இங்கே ..... பகிர்வினிற்கு நன்றி//
நன்றி, சீனா அய்யா அவர்களே. எழுதவில்லையென்றால் பேனா துருவேறிவிடும். அதுபோல போட்டோ எடுக்காவிட்டால் காமிரா துறுவேறிவிடுமல்லவா? அதற்காகத்தான் இந்த மாதிரி டூர்கள்.
எல் கே said...
பதிலளிநீக்கு//சஷ்டியப்தப்பூர்த்தி (60)- மகன் / மகள்களால் நடத்தப் படவேண்டும்
பீமரத சாந்தி (70)- பேரன் /பேத்திகளால்
சதாபிஷேகம் (80)- கொள்ளுபேரன் பேத்திகளால்//
நல்ல தகவல்.
மிக நேர்த்தியான பகிர்வு. சுருக்கமான உரையும், அதன் படங்களும்.......அதுசரி....தங்களின் சதாபிஷேகம் எப்போ சார்?
பதிலளிநீக்குஅந்த காலத்துல எல்லாரும் ஆரோக்கியமா இருந்தாங்காங்க 100 வயது ஈஸியா போனது . இப்போதுள்ள காலகட்டத்தில ஆரோக்கிய வயது 30க்கு மேல தாண்ட முடியல
பதிலளிநீக்குநல்ல தகவல் +போட்டோஸ் :-)
அழகிய படங்களுடன் நல்லதோர் பகிர்வு அய்யா. நாங்களே கலந்து கொண்டு அந்த பெருமக்களிடம் ஆசி பெற்ற ஒரு உணர்வு...
பதிலளிநீக்குநன்றி.
இம்மாதிரி நடத்தப்படும் விழாக்கள் குடும்ப ஒற்றுமைக்கு மேலும் ஊக்கமளிக்கும். நம் கலாச்சாரத்தின் ஒரு வெளிப்பாடு.பகிர்வுக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குசதாபிஷேகத்தில் நாங்களும் கலந்து கொண்டது போன்றதொரு உணர்வு.
பதிலளிநீக்குஅருமையான புகைப்படத் தொகுப்பு.
சதாபிஷேகம் கண்ட உங்கள் நண்பருக்கு எங்கள் வணக்கங்கள்.
பதிலளிநீக்குதாங்கள் சஷ்டியப்தப்பூர்த்தி கண்டவரா அல்லது
பீமரத சாந்தி கண்டவரா அல்லது சதாபிஷேகம் கண்டவரா அல்லது இப்போது தான் கல்லூரியில் படிக்கிறீர்களா?
//சதாபிஷேகத்தில் நாங்களும் கலந்து கொண்டது போன்றதொரு உணர்வு.//
பதிலளிநீக்குஅடேங்கப்பா....
பதிலளிநீக்குஎப்படியும் சிறப்பாக திருஷ்ட்டி சுத்தி இருப்பார்கள் என்பதால், தாராளமாகவே "கண் படலாம்"
பாரத்... பாரதி... said...
பதிலளிநீக்கு//தாங்கள் சஷ்டியப்தப்பூர்த்தி கண்டவரா அல்லது பீமரத சாந்தி கண்டவரா அல்லது சதாபிஷேகம் கண்டவரா அல்லது இப்போது தான் கல்லூரியில் படிக்கிறீர்களா?//
பேராண்டி, கிண்டல் செய்யறதுக்கும்
அளவில்லையா? என் படத்தைப்பார்த்தால் கல்லூரிக்குப் போறவராட்டம் தெரிகிறதா? கல்லூரிக்குப்போய் ரிடையர் ஆகி சஷடியப்த பூர்த்தியும் பீமரத சாந்தியும் முடித்து சதாபிஷேகம் காணப்போகும் 76 வயது இளைஞன் நான். சதாபிஷேகத்திற்கு (2015, ஆனி மாதம் மூல நட்சத்திரம் அன்று) கோவைக்கு தவறாது வந்துவிடவும்.
நேரடியாக கலந்து கொண்ட உணர்வு,இலங்கையில் இப்படியான நிகழ்வுகள் மிக அபூர்வம்
பதிலளிநீக்குஅய்யா,
பதிலளிநீக்குமிக அருமையான நிகழ்வு , மிக அருமையான விளக்கங்கள் .
என் தந்தையாருக்கும் வருகிற ஜூன் மாதத்தில் சதாபிஷேகம் நிகழ்த்த உள்ளோம் .
அருள்
பவானி