இதற்கெல்லாம் ஒரு பதிவா? இந்தப் பதிவினால் தேசத்திற்கு என்ன நன்மை? இல்லை, பதிவுலகத்திற்குத்தான் என்ன நன்மை? இப்படிக் கேட்பவர்கள் எல்லோரும் தனியாக ஒரு ஓரமாக உட்காரவும். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று கடைசியில் சொல்லுகிறேன். மற்றவர்கள் தொடர்ந்து படிக்கவும்.
என்னுடைய ஒரு பதிவில் நான் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு ஒரு நண்பர் அப்படி என்ன பெருமை அதில் இருக்கிறது என்று கேட்டிருந்தார். பெருமைக்காக நான் அவ்வாறு சொல்லவில்லை. என்னுடைய கையாலாகாத தன்மையைத்தைத்தான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். ஏன் என்னால் சினிமா விமர்சனம் எழுத முடிவதில்லை என்று யோசித்ததில் பத்து காரணங்கள் புலப்பட்டன. அவைகளை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
1. சினிமா விமர்சனம் எழுத சினிமாவைப் பார்க்க வேண்டும். இரண்டரை மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கவேண்டும். அது என்னால் முடிவதில்லை.
2. இப்போது நடிக்கும் நடிக நடிகைகளை எனக்கு அடையாளம் தெரிவதில்லை. டி. ஆர். ராஜகுமாரி, எம். கே. தியாகராஜ பாகவதர் இவர்களுக்கு அப்புறம் சினிமாவில் யாரையும் எனக்குத் தெரியவில்லை.
3. இப்போது சினிமாவில் பேசம் வசனங்கள் புரிவதில்லை. புரிந்தாலோ ஆபாசமாய் இருக்கிறது.
4. சினிமா பார்த்துக்கொண்டு இருக்கும்போது நான் தூங்கி விடுவதால் நான் விடும் குறட்டைச் சத்தம் தொந்தரவாய் இருப்பதாக போலீஸ் வரையில் கம்ளெய்ன்ட் போய் ஒரு நாள் போலீஸ் ஸ்டேஷனில் இருக்க வேண்டியதாய் போய்விட்டது.
5. ஒரு தடவை இப்படித் தூங்கி விழித்தபோது திரையில் ஆக்ரோஷமாக நடந்த ஒரு சண்டையைப்பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கையை வீச அது பக்கத்து சீட்டுக்காரர் மூக்கில் பட்டு சீரியஸ் ஆகி அதற்காக ஒரு தரம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனேன்.
6. நடனக்காட்சிகள் மிகவும் ஆபாசமாக இருக்கின்றன. லலிதா-பத்மினி-ராகினி ஆடினதுதான் நடனம். மற்றவர்கள் ஆடுவது எல்லாம் ஆபாசம்.
7. பாட்டுகளின் சொற்கள் புரிவதில்லை. மெட்டும் பிடிப்பதில்லை. எம.கே.டி அந்தக்காலத்தில் பாடிய “மன்மத லீலையை வென்றார் உண்டோ” மாதிரி ஒரு பாட்டு உண்டா?
8. காதல் காட்சிகள் முதலிரவுக் காட்சிகளை நினைவூட்டுகின்றன. இளைஞர்கள் சினிமா பார்த்து கெட்டுப்போகாமல் என்ன செய்வார்கள்?
9. இரவுக் காட்சிகளுக்குப் போனால் இருட்டில் தனியாக உட்கார்ந்திருக்க பயமாய் இருக்கிறது.
10. அந்தக்காலம் மாதிரி இப்போது சினிமா பாட்டுப் புஸ்தகங்கள் விற்பதில்லை.
இந்தக்காரணங்களினால் நான் சினிமா பார்ப்பதில்லை. அதனால் சினிமா விமர்சனமும் எழுதுவதில்லை.
ஒரு நண்பர் சொல்லுகிறார் - சினிமா விமர்சனம் எழுத சினிமாவைப் பார்க்க வேண்டியதில்லையே - அப்படீங்கறார். எனக்கு அந்த வித்தை இன்னும் கைவரவில்லை.
ரைட் ... ரைட் ...
பதிலளிநீக்குஇப்போ நீங்க செஞ்சதுக்குப் பேர் என்னவாம்? இதுதான் விமர்சனம்:-)
பதிலளிநீக்கு//இதற்கெல்லாம் ஒரு பதிவா? இந்தப் பதிவினால் தேசத்திற்கு என்ன நன்மை? இல்லை, பதிவுலகத்திற்குத்தான் என்ன நன்மை?//
பதிலளிநீக்குதீதும் நன்றும் பிறர்தர வாரா
//என்னுடைய ஒரு பதிவில் நான் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு ஒரு நண்பர் அப்படி என்ன பெருமை அதில் இருக்கிறது என்று கேட்டிருந்தார். பெருமைக்காக நான் அவ்வாறு சொல்லவில்லை. என்னுடைய கையாலாகாத தன்மையைத்தைத்தான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.//
நீங்கள் குறிப்பிட்ட பத்து காரணங்களையும் வாசித்தேன். இவற்றைக் கையாலாகாத்தனம் என்பதை விடவும், இப்போதைய சூழலுக்கு ஒவ்வாமை என்று சொல்லுங்கள்! மற்றபடி சினிமா விமர்சனம் எழுதமுடியாததால் கையாலாகாத்தனமோ, எழுதுவதால் மட்டுமே திறமை என்றோ அறுதியிட்டுச் சொல்ல முடியாது. நான் பார்த்த அளவில் புதிதாக எழுத வருகிறவர்களும் சினிமா விமர்சனத்தோடு தான் துவங்குகிறார்கள்.
உங்களுக்கென்று ஒரு பாணியிருக்கிறது. உங்களுக்குப் பிடித்தமான விஷயங்கள் குறித்து எவ்வித சமரசமுமின்றி எழுதி வருகிறீர்கள். இதைப் பார்த்து என் போன்றவர்கள் உங்களைப் பின்பற்ற நாளடைவில் முயல்வார்கள்.
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி!
எழுத தெரியாது, எழுத வராதுன்னு சொல்லி சொல்லியே "சினிமா" விமர்சனம் எழுதிட்டீங்களே.
பதிலளிநீக்குஅதெல்லாம் எங்களுக்கு தெரியும். // இந்த பூனையும் பால் குடிக்குமா // கதைதான்.
பதிலளிநீக்குஅது சரி, நீங்கள் ஏன் தமிழ் பிளாக்கில் வெற்றிகரமாக எழுதுவது எப்படி என்று தொடர்பதிவுகள் போடக்கூடாது? அப்படி எழுதினால் என்னை போன்ற கத்து குட்டிகளுக்கு வழிகாட்டியாக இருக்குமே??
rightuuuu.....
பதிலளிநீக்குவாய்ப்பே இல்ல தாத்தா , சில இடங்களில் சிரிப்பினை அடக்க முடியல !!
பதிலளிநீக்குநான் எழுதிய அசோக் குமார் படத்தின் விமர்சனத்தை படித்துவிட்டீர்களா ஐயா! இந்த மாதிரி சில விமர்சனங்கள் எழுதும் எண்ணம் இருக்கிறது
பதிலளிநீக்குவீராங்கன் said...
பதிலளிநீக்கு//நான் எழுதிய அசோக் குமார் படத்தின் விமர்சனத்தை படித்துவிட்டீர்களா ஐயா! இந்த மாதிரி சில விமர்சனங்கள் எழுதும் எண்ணம் இருக்கிறது//
பண்ணுங்க வீராங்கன். பெயர் மாத்தின விபரம் இப்பத்தான் தெரிஞ்சுது. பழய டாக்டர் சுரேஷ்தான நீங்க? சந்தோஷம்.
இப்ப வர்ர படங்களை விட பழய படங்கள்ல ஏதாச்சும் கதை இருக்கும். அது நம்ப முடியலேன்னாலும் பொழுது போகும்.
வருகை புரிந்த கோபி, கக்கு-மாணிக்கம், நண்டு-நொரண்டு, தமிழ் உதயம், சேட்டைக்காரன், சிவா, சே.குமார், கோமாளி செல்வா, அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
பதிலளிநீக்குஎன் வழக்கமான பணியைச் செவ்வனே செய்து கொண்டிருப்பேன். வேற என்ன வேலை இருக்கு?
இன்றைய சினிமா நடிகையின் நிலையைப்பாருங்கள். போட்டுக்கொள்ள ஒரு கிழியாத துணி கூட இல்லை.
பதிலளிநீக்குச்சும்மா இந்த டிகால்டி வேலையெல்லாம் இங்கே வேண்டாம். போட்டுருக்கிற படத்த பார்த்தாலே எத்தனை படங்களைப் பார்த்து வீட்ல அம்மிணிக்குத் தெரியாம ரசித்து இதை போட்டுருப்பீங்கன்னு இங்கேயிருந்தே தெரியுதே? இருங்க உண்மைத்தமிழனிடம் சொல்லி உங்களை உண்டு இல்லைன்னு ஆக்குறேன்.
வருகை புரிந்த கோபி, கக்கு-மாணிக்கம், நண்டு-நொரண்டு, தமிழ் உதயம், சேட்டைக்காரன், சிவா, சே.குமார், கோமாளி செல்வா, அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
பதிலளிநீக்குஎன் வழக்கமான பணியைச் செவ்வனே செய்து கொண்டிருப்பேன். வேற என்ன வேலை இருக்கு?
25 January 2011 04:53
Delete
Blogger ஜோதிஜி said...
//இன்றைய சினிமா நடிகையின் நிலையைப்பாருங்கள். போட்டுக்கொள்ள ஒரு கிழியாத துணி கூட இல்லை.
ச்சும்மா இந்த டிகால்டி வேலையெல்லாம் இங்கே வேண்டாம். போட்டுருக்கிற படத்த பார்த்தாலே எத்தனை படங்களைப் பார்த்து வீட்ல அம்மிணிக்குத் தெரியாம ரசித்து இதை போட்டுருப்பீங்கன்னு இங்கேயிருந்தே தெரியுதே? இருங்க உண்மைத்தமிழனிடம் சொல்லி உங்களை உண்டு இல்லைன்னு ஆக்குறேன்.//
இப்படியெல்லாம் சேம் சைடு கோல் போடக்கூடாதுங்க.
நம்புறோம் நம்புறோம்..
பதிலளிநீக்குநீங்களும் படம் காட்ட ( -போட ) ஆரம்பிச்சுட்டீங்களா?..
வளர்க ஹிட்ஸ் ஐயா...:)
இன்றைய சினிமாவிலுள்ள ஆபாசத்தைப் பத்தி நீங்கள் குறிப்பிட்டுள்ள சேதிகள் எல்லோருக்குமே தெரிஞ்சதுதானே, இருந்தும் இதை ஒரு பொம்பிளை படத்தைப் போட்டுத்தான் புரிய வைக்கனும்னு தேடித் தேடி கடைசியா எங்கேயோ இருந்து ஒரு படத்தை பிடிச்சிக்கிட்டு வந்து போட்டிருக்கீங்களே, உங்களது தெரிவை பார்த்தா சிரிப்புதான் வருது. இந்த மாதிரி படத்தை உங்கள பிளக்குல போட முடியுதுன்னா, உங்களால இன்றைய படங்களை பார்க்கவும் முடியும். அப்படியே வேண்டாமென்றாலும், உங்களுக்கு விமர்சனம் எழுதவும் விருப்பமிருந்தால், உங்களுக்குப் பிடித்த பழைய படங்கள் இணையத்திலும் உள்ளன, தி.நகர் போனால் எல்லா படங்களும் கிடைக்கிறன, வாங்கி வந்து வீட்டிலேயே கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்து விமர்சனம் போடுங்கள், நாங்கள் படிக்கிறோம்!
பதிலளிநீக்குJayadev Das said...
பதிலளிநீக்கு//இன்றைய சினிமாவிலுள்ள ஆபாசத்தைப் பத்தி நீங்கள் குறிப்பிட்டுள்ள சேதிகள் எல்லோருக்குமே தெரிஞ்சதுதானே, இருந்தும் இதை ஒரு பொம்பிளை படத்தைப் போட்டுத்தான் புரிய வைக்கனும்னு தேடித் தேடி கடைசியா எங்கேயோ இருந்து ஒரு படத்தை பிடிச்சிக்கிட்டு வந்து போட்டிருக்கீங்களே, உங்களது தெரிவை பார்த்தா சிரிப்புதான் வருது.//
நன்றி, ஜெயதேவ் தாஸ்.
பதிவுலகில எழுதறதுக்கு தலைப்பு கெடைக்காம ரொம்ப பேரு திண்டாடறாங்க. அதில நானும் ஒருத்தன். அதனால கெடச்ச தலைப்புல எதாச்சும் எழுதி பதிவுன்னு போடறதுதானுங்க. அப்பறம் இந்தக்காலத்துல எல்லாத்துக்கும் கவர்ச்சி தேவைப்படுது. இந்த மாதிரி எதாச்சும் படத்தெ போட்டாத்தான் நாலு பேராவது பதிவ படிக்கறாங்க. மத்தபடி இந்தப் பதிவுலகத்துல எதுவும் சீரியஸ் மேட்டர் கெடயாதுங்க.
வாழ்த்துக்கள்.