சனி, 20 ஆகஸ்ட், 2011

அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - பாகம் 6



இந்த நிலத்தடி நீர் அருகி வருவதை சமாளிக்க இரண்டு முக்கியமான வழிகள் இருக்கின்றன. தனி நபர் பொருளாதாரத்தை மேலாண்மை செய்வது போல்தான் இதுவும்
அதாவது ஒன்று வரவை அதிகப்படுத்துவது
இரண்டு செலவைக்குறைப்பது.


முதலில் நிலத்தடி நீரின் வரவை அதிகப்படுத்தும் முறைகளைப் பார்ப்போம்..

1.  நிலத்தை உழுது வைத்தல்.


மழை பெய்யும்போது மழை நீர் என்ன ஆகின்றது என்று பலரும் கவனித்திருப்பார்கள். நிலம் கட்டாந்தரையாக இருந்தால் விழும் மழைநீர் முழுவதும் பள்ளத்தை நோக்கி வழிந்து ஓடி வீணாகி விடுகின்றது. இப்படி ஓடும் நீர் எல்லாம் சேர்ந்துதான் ஆறுகளை வெள்ளக்காடாய் மாற்றுகிறது. ஒரே நேரத்தில் இவ்வாறு அதிகமான நீர் ஓடும்போது அதைக்கட்டுப்படுத்த எல்லா இடங்களிலும் அணை கட்ட முடிவதில்லை.

நிலங்களை உழுது பண்படுத்தி வைத்திருந்தால் மழை பெய்யும்போது நிலம் மழைநீரை உறிஞ்சிக்கொள்ளும். இவ்வாறு உறிஞ்சப்படும் நீரானது கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தின் அடி மட்டத்திற்கு சென்று நிலத்தடி நீராய்ச்சேரும். இது ஒரு முக்கியமான செயல்முறை. ஆகவே தரிசு நிலங்களை எப்பொழுதும் உழுது வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் அந்த நிலத்தில் பெய்யும் மழைநீரானது தரை மட்டத்தில் வழிந்து ஓடாமல் நிலத்திற்குள் ஊடுருவிச்சென்று நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும்.

2.   நிலங்களில் சமச்சீர் வரப்புகள் அமைத்தல்.
                         
சாய்வாக இருக்கும் நிலங்களில் விழும் மழைநீரானது பூமியில் நிற்காமல் ஓடி வடிநீர் ஓடைகளில் சேர்ந்து விடும். அப்படி ஓடும் நீரால் நிலத்திற்குள் ஊடுருவிச்செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு. அந்த நீரை வேகமாக ஓடாமல் கட்டுப்படுத்தினால் அந்த நீரானது பூமிக்குள் ஊடுருவிச் செல்ல கிடைக்கும் நேரம் அதிகமாகும். அப்போது நிலத்தடிநீர் அதிகரிக்கும்.
இதற்காக நிலங்களில் சமச்சீர் வரப்புகள் (Contour bunds) அமைத்தால் வேகமாக ஓடும் மழைநீரை நிறுத்தி வைக்கும். அப்போது அதிக அளவில் நீர் பூமியில் ஊடுருவிச் செல்ல வாய்ப்புகள் அதிகமாகும்.
3.   வரப்புகளின் ஓரங்களில் வாய்க்கால்கள் வெட்டுதல்.


இந்த சமச்சீர் வரப்புகள் அமைக்கும்போதே, நீர் தேங்கும் பக்கத்தில் இந்த வரப்புகளை ஒட்டி அரை அடி அகலம், இரண்டடி ஆழம் கொண்ட வாய்க்கால்களை வெட்டி வைத்தால், மழை நீர் முழுவதும் அந்த வாய்க்கால்களில் தேங்கி, முழுவதுமாக பூமிக்குள் ஊடுருவிச் சென்றுவிடும். அப்போது இன்னும் அதிக நீர் நிலத்தடியில் சேரும்.

4.   தடுப்பணைகள் கட்டுதல்
எவ்வளவு உத்திகளை நடைமுறைப்படுத்தினாலும் மழை காலங்களில் நீர் பல இடங்களிலிருந்து வழிந்து போகத்தான் செய்யும். இந்த நீர் பல காலமாகச் செல்லும் ஓடைகளை பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். இந்த நீரை ஆங்காங்கே குளம் மாதிரி நிறுத்தி வைத்தால் அந்த நீர் பூமிக்குள் ஊடுருவிச் செல்லும் என்ற தத்துவம் விஞ்ஞானபூர்வமாக பல நாடுகளில் பரிசோதனைகளின் மூலம் அறியப்பட்டது.
இந்த உத்தியை நம் நாட்டிலும் பல இடங்களில் பரிசோதித்துப் பார்த்ததில் நல்ல பலன் கிடைத்தது. இந்திய அரசு இந்த முறையை முடிந்த இடங்களில் எல்லாம் நடைமுறைப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்திரவு பிறப்பித்து அதற்கான நிதியும் கொடுத்தது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாயிகளின் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்பட்டது. எதற்கென்றால் இந்த தடுப்பணைகள் கட்டவும், அங்கு சேரும் நீரை சேமித்து வைக்கவும் போதுமான இடம் வேண்டும். அதற்கு தகுந்த விலை கொடுத்தாலும் விவசாயிகள் அந்த நிலத்தைக் கொடுக்க முன் வரவேண்டும்.


விவசாயிகள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், இந்த மாதிரி தடுப்பணை கட்டிய இடங்ளில் ஏற்பட்ட நிலத்தடி நீர் அதிகரிப்பை நேரில் பார்த்து மனம் மாறினார்கள். பல இடங்களில் இருந்து எங்கள் நிலத்தில் தடுப்பணை கட்டுங்கள் என்று வேண்டுகோள்கள் வந்தன. தடுப்பணை கட்ட வசதி உள்ள இடங்களில் எல்லாம் தடுப்பணைகள் கட்டப்பட்டன. அதன் பலனை விவசாயிகள் கண்கூடாக அனுபவித்துக்கொண்டு வருகிறார்கள்.

5.   ஏரிகள், குளங்களைப் பராமரித்தல்.

பள்ளியில் படிக்கும்போது சரித்திரப் பாடப் பரீட்சையில் ஏதாவது மன்னர் பெயரைக்கொடுத்து அவர் நாட்டுக்கு என்னென்ன நன்மைகள் செய்தார் என்று ஒரு கேள்வி கட்டாயமாக இருக்கும். இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல ஒன்றும் யோசிக்கவே வேண்டியதில்லை. சாலைகள் போட்டார், மரங்கள் நட்டார், ஏரி, குளங்கள் வெட்டினார், சத்திரங்கள் கட்டினார் என்று தயங்காமல் எழுதிவிடலாம். முழு மார்க் கிடைத்துவிடும்.

ஆகவே ஒரு நாட்டின் வளம் பெருக, ஏரி, குளங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பது விளங்கும். மழைநீர் அவைகளில் சேர்ந்து குடி நீராகவும், பாசனத்திற்கும் பயன்படுவது போக நிலத்தடி நீர் அதிகரிப்பதற்கும் மிகவும் உதவும்.

ஆனால் இன்று நடப்பது என்ன? எங்கள் ஊரில் ஒரு குளத்தை எங்கள் பஞ்சாயத்து தலைவர் பட்டா போட்டு விற்றுவிட்டார். ஏறக்குறைய தமிழ் நாட்டிலுள்ள எல்லாக் குளக்கரைகளிலும் குடிசை போட்டிருக்கிறார்கள். இதற்கு ஆளும் கட்சி பிரமுகர்கள் ஆதரவு. அந்த வட்டாரத் தலைவரை அழைத்து ஒரு கூட்டம் போட்டு ஒரு கொடிக் கம்பத்தை நட்டுவிட்டால் அந்தக் குளக்கரை பட்டா போடாத குடியிருப்பு ஆகிவிடும்.

கொஞ்சம் கொஞ்சமாக குளத்திற்கு உள்ளேயும் குடிசைகள் போடுவார்கள். மழைகாலத்தில் குளத்தில் தண்ணீர் சேரும்போது குளக்கரையை வெட்டி தண்ணீரை வெளியேற்றுவார்கள். இவர்களை யாரும் கேட்கமுடியாது. இவர்களுக்கு ஒரு லோகல் தலைவன் இருப்பான். அவன் ஒரு பக்கா ரவுடியாகவும், ஆளும் கட்சித் தலைவனுக்கு அடியாளாகவும் இருப்பான். அவனை எதிர்த்து யாரும் ஒன்றும் செய்யமுடியாது.

6.   வீடுகளில் மழைநீர் சேகரித்தல்.


பழங்காலத்தில் வீடுகள் எல்லாம் ஓட்டு வீடுகளாக இருந்தன. அப்போது மழை பெய்தால் மழைநீரெல்லாம் சேர்ந்து ஒரு மூலையில் விழும். அந்த நீரைச்சேகரித்து குடிப்பதற்காக பதனப்படுத்துவது வழக்கம். இதற்காக தனியாகத் தொட்டிகள் கூட சில ஊர்களில் கட்டுவது உண்டு. இப்பொழுது எல்லா ஊர்களிலும் தண்ணீர் விநியோகம் பைப்புகள் மூலம் நடைபெறுவதால் இந்த முறை வழக்கொழிந்து போயிற்று. ஆனாலும் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டபிறகு இந்த நீரையும் ஏன் உபயோகப்படுத்தக்கூடாது என்கிற எண்ணம் வந்தது


போன தடவை (அம்மா) ஆட்சி இருந்தபோது மழைநீர் சேகரிப்புத்திட்டம் அமல் படுத்தப்பட்டது. என்ன கொடுமை என்றால் எங்கே (கிராமப்புறங்களில்) செய்ய வேண்டுமோ அங்கே விட்டுவிட்டு தேவையில்லாத இடங்களில் (நகர்ப்புறங்களில்) அதை அமல்படுத்தினார்கள். நகர்ப்புறங்களில் ஏற்கனவே நீர் மட்டம் உயர்ந்து கட்டிடங்களுக்கு அபாயம் விளைவிக்குமளவிற்கு இருக்கிறது. இந்த திட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்தினால் கணிசமான பலனை அனுபவிக்கலாம்.

7.   ரிவர்ஸ் பம்ப்பிங்க்.

பம்ப்பிங்க்என்றால் நிரத்தடி நீரை நம் உபயோகத்திற்காக மேலேற்றுவது என்று பொருள். இதற்கு எதிராக, மேலே உள்ள நீரை நிலத்தடிக்கு அனுப்புவதைரிவர்ஸ் பம்ப்பிங்க்என்று கூறுகிறார்கள். நிலத்தில் சில இடங்கள் பள்ளமாக இருக்கும். அங்கிருக்கும் நீர் எவ்வழியிலும் வெளியேற முடியாமல் போகும். அதை அப்படியே விட்டால் கொஞ்சம் நீர்தான் நிலத்தடிக்குச் செல்லும். மீதி நீர் ஆவியாகி பலனில்லாமல் போகும்.

அப்படிப்பட்ட இடங்களில் இந்த உத்தியை பயன்படுத்தலாம். இது எப்படியென்றால், நீர் தேங்கும் இடங்களில் குறைந்த இடைவெளியில் 10 அல்லது 15 அடி ஆழத்திற்கு போர் போட வேண்டும். சுமார் 10 போர்கள் போடலாம். அந்த இடத்தில் தேங்கும் நீர் இந்த போர்களின் வழியே நிலத்தின் அடி மட்டத்திற்கு சென்று அங்கிருந்து ஊடுருவி நிலத்தடி நீரோடு சேரும். என்னவோ கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கு பிடிப்பது போல் தோன்றுகிறதல்லவா? இது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட தத்துவம் ஆகும்.
கோவை நகர்ப்புறத்தில் ஒரு சாலையில் தண்ணீர் வெளியில் போக வாட்டம் இல்லாததால் தேங்கிக்கொண்டு இருந்தது. அங்கே இந்த முறையை கடைப்பிடித்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளதை கண்கூடாகப் பார்க்கலாம்.

8.   நதி நீர் இணைப்புத்திட்டங்கள்.

இவைகளைப்பற்றி பல காலமாகப் பேசிக்கொண்டு இருக்கிறோம். சில தலைப்புகள் அரசியல்வாதிகளுக்கு மிகவும் பிடித்தவை. அவைகளில் இதுவும் ஒன்று. நம் அரசியல் வாதிகளுக்கு ஒரு பிரச்சினை பிடித்துப்போய்வுட்டது என்றால் அதைத் தீர்க்க மாட்டார்கள். அதைப்பற்றி பேசிப்பேசியே நாட்களை ஓட்டுவார்கள். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதற்கு இந்தப்பிரச்சினைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. குறிப்பாகத் தேர்தல் சமயங்களில் இந்தப் பிரச்சினைகளை எடுத்துக்கொள்வார்கள். வாய் கிழியப் பேசுவார்கள். தேர்தல் முடிந்ததும் பிரச்சினையை மறந்து விடுவார்கள். நம் நாட்டை ஆண்டவனாகப்பார்த்து காப்பாற்றினால்தான் விடிவு ஏற்படும் என்று எண்ணாமல் ஆழ்ந்த சிந்தனையும் தொலை நோக்குப் பார்வையும் கொண்டு செயல்பட்டால்தான் நம் நாட்டிற்கு நல்ல காலம் ஏற்படும்.

இனி நிலத்தடி நீரின் செலவைக்குறைப்பது அதாவது பயன்பாட்டில் எவ்வாறு சிக்கனமாக இருப்பது என்பது பற்றிப் பார்ப்போம்.
தனி நபர் வாழ்விலேயே செலவைக்குறைப்பது என்பது ஒரு கானல் நீராகவே இருக்கிறது. எல்லா மனிதர்களும் பணத்தை இருக்கும் வரை செலவு செய் என்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அது மாதிரியே விவசாயிகளும் நீரைப்பயன்படுத்துவதில் இதே கொள்கையைத்தான் கொண்டிருக்கிறார்கள். நான் ஒருவன் மட்டும் சிக்கனமாக இருந்து என்ன பயன்? எல்லோரையும் கட்டுப்படுத்துங்கள், நானும் கட்டுப்படுகிறேன் என்கிற மனப்பான்மையில் நடந்து கொள்கிறார்கள். இந்திய மக்களுக்கு தேசப்பற்று என்பது சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதுடன் முடிந்து போகிறது. தேசத்தின் வளங்களைக் காத்து, அடுத்து வரும் தலைமுறையினருக்கு கொடுக்கும் பெரும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று யாரும் நினைப்பதேயில்லை. இது காலம் காலமாக இந்தியப்பிரஜையின் இரத்தத்தில் ஊறிப்போன குணமாகும்.



9 கருத்துகள்:

  1. ரொம்ப ரொம்ப நல்ல விஷயம், உங்கட வலை பக்கத்தை இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டன்,

    பதிலளிநீக்கு
  2. //KANA VARO said...
    ரொம்ப ரொம்ப நல்ல விஷயம், உங்கட வலை பக்கத்தை இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டன்,//

    ஒங்கட பேர தமிழ்ல எப்படி எழுதறன்னு தெரியல. வழி தெரிஞ்சு போச்சில்ல, இனி அடிக்கடி வாங்கோ.

    பதிலளிநீக்கு
  3. //ஸ்ரீதர் said...
    மிகவும் அவசியமான பதிவு சார்!//

    கருத்துக்கு மிக்க நன்றி ஸ்ரீதர்.

    பதிலளிநீக்கு
  4. நிறைய ஈரமான விஷயங்கள் தெரிந்துகொண்டோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. மிக மிக அவசியமான தலைப்பு.இந்தத் தலைப்பில்தான் என் அடுத்த கவிதையை ஆரம்பித்துள்ளேன்.மிக்க நன்றி ஐயா
    உங்கள் சிறப்பான சமூக சிந்தனைக்கு .அத்தோடு என் தளத்தில் ஒரு நகைச்சுவை காத்திருக்கின்றது .கீழே பாருங்கள்

    கோயமுத்தூர்ல செஞ்சா அதுக்கு "கோயமுத்தூர் சிக்கன் பிரியாணி" அப்படீன்னு பேர் வச்சுக்கலாமுங்களா? எதாச்சும் வம்பு வழக்கு வராதுங்களே?

    இத போட்ட இடம் ஞாபகத்தில் உள்ளதா?...அங்கு இருந்து உங்களைப் பின்தொடர்ந்து வந்து அழைப்பு வைக்கின்றேன்.
    முடிந்தால் வந்து பார்த்து சிரியுங்கள் .நன்றி ஐயா பகிர்வுக்கு ........

    பதிலளிநீக்கு
  6. இராஜராஜேஸ்வரி + அம்பாளடியாள் இருவருக்கும் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு