திங்கள், 24 அக்டோபர், 2011

உயிர் போனால் என்ன ஆகும்?


டிஸ்கி: இந்தப் பதிவைப் படிக்க நிறையப் பொறுமை வேண்டும்.
(அது இல்லைன்னா என்ன பண்ணுவது???? - கொஞ்சம் சிரமந்தான்)

மனிதன் என்பவன் உடல் + ஆன்மா + மனம் (+ புத்தி) என்று ஆன்மீகத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து இயங்கினால்தான் மனிதன் வாழ்கிறான் என்று சொல்லலாம். ஒருவன் இறக்கும்போது ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து செல்கிறது என்று கூறப்படுகின்றது. அப்போது அந்த ஆன்மாவுக்கும் இந்த உடலுக்கும் உள்ள தொடர்பு அறுந்து விடுகிறது என்று கூறுகிறார்கள். ஆன்மா பிரியும்போது மனமும் அழிந்து போகிறது.

ஆன்மாவுக்கு எந்த குணமும் கிடையாது என்று சொல்லுகிறார்கள். பகவத்கீதையில் ஒரு அத்தியாயம் முழுவதும் இந்தக் கருத்து பல விதமாக திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ஆன்மா அருவமானது, ஆதி அந்தம் இல்லாதது, அழிவற்றது, இப்படிச் சொல்லிக்கொண்டே போகிறது.

சாதாரண நடைமுறையில் நாம் சொல்லும் உயிர் என்ற வார்த்தையை ஆன்மீக குருக்கள் ஒருபோதும் உபயோகிப்பதே இல்லை. இதைப்பற்றி கேள்வி கேட்பதற்கும் அனுமதிப்பதில்லை. குரு சொல்லும் உபதேசத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்லி நம் வாயை அடைத்துவிடுகிறார்கள்.

நான் கருதுவது என்னவென்றால் இந்த ஆன்மா என்பதும் உயிர் என்பதும் ஒன்றுதான். இது உடலுடன் இருந்தால்தான் உடல் இயங்கும். இது பிரியும்போது உடல் சவமாகி விடுகிறது. உயிர் ஏன் உடலை விட்டுப் பிரிகிறது? உயிரை வைத்துப் போற்றும் திறன் உடலுக்கு இல்லாதபோது உயிர் பிரிந்து விடுகிறது.

அப்புறம் எதற்காக இந்த ஆன்மீகவாதிகள் “ஆன்மா” என்ற பெயரைப் புகுத்தினார்கள் என்றால் மக்களை குழப்புவதற்காகவே. அவர்கள் கூற்றுப்படி ஆன்மாவிற்கு எந்த குணபேதங்களும் இல்லையென்றால் அந்த ஆன்மா குடியிருக்கும் மக்களிடையே இவ்வளவு குணபேதங்கள் ஏன் இருக்கின்றன? ஒருவனுடைய கர்மவினைகள் அவன் இறந்த பிறகு அவனுடைய மறு ஜன்மத்திலும் அவனைத் தொடர்கின்றன என்று கூறுகிறார்கள். ஒருவன் இறந்த பிறகு எந்த சாதனத்தின் மூலம் அவனுடைய கர்ம வினைகள் அடுத்த ஜன்மத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன? இதற்கு எந்த ஆன்மீகவாதியும் சரியான விளக்கம் கொடுப்பதில்லை.

ஆக மொத்தம் உடல், உயிர், மனது+புத்தி இருப்பது நிஜம். மற்றவை எல்லாம் ஒரு நம்பிக்கை மட்டுமே. அவரவர்களுக்குப் பிடித்த நம்பிக்கையை அவரவர்கள் பின்பற்றலாம். ஆனால் நான் பின்பற்றும் நம்பிக்கைதான் உயர்ந்தது என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது. அதுதான் முக்கியம். பல ஆன்மீக குருக்கள் சொல்வதைக் கேட்கலாம். ஆனால் அதுதான் உண்மை என்று மூடத்தனமாக நம்பக்கூடாது. அவரவர்களாக யோசித்து தங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை நம்புவதே சிறந்தது.

23 கருத்துகள்:

  1. ரொம்ப சிறப்பா இருக்கு. இதுல என்ன பொறுமை வேண்டி கிடக்கு? சுருக்கமா நச்சுன்னு அல்லவா சொல்லி இருக்கீங்க. கேள்விகள் கேட்கக்கூடாது என்று சொல்வதற்கு காரணமே பல தலைமுறைகளாக கடத்திக் கொண்டிருக்கிற சுயநல எண்ணங்களே காரணம். வர வர கோவிலில் கூடும் கூட்டத்தையும் அங்கே நடக்கும் கூத்துக்களையும் பார்க்கும் போது தலையில் அடித்துக் கொண்டு ஒரு ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக கொண்டிருக்கின்றேன்.

    அவரவர் நம்பிக்கைகள் தான் அவரவர் எண்ணங்களை வளர்க்கின்றது. வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இது எல்லை மீறும் போது இவர்கள் வைத்துள்ள நம்பிக்கைகளை வைத்து மற்றவர்கள் ஏமாற்றி வாழத் தொடங்கி விடுகிறார்கள்.

    உணர்பவர்களுக்கு உத்தமம்.

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப நன்றிங்க, ஜோதிஜி. இந்த மாதிரி பதிவுகளுக்கு வரவேற்பு எப்படியிருக்குமோ என்று கொஞ்சம் டென்ஷனாக இருந்தது. உங்கள் கமென்ட் அந்த டென்ஷனைப் போக்கிவிட்டது.

    பதிலளிநீக்கு
  3. பொறுமையாக படித்தேன் ஜயா மிகவும் சிறப்பான பதிவைபடித்த ஓரு திருப்தி கிடைத்து..

    பதிலளிநீக்கு
  4. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்...

    பதிலளிநீக்கு
  5. ஐயா, டிஸ்கி என்னும் இந்த வார்த்தை பல பதிவுகளில் பார்த்திருக்கிறேன். அதன் பொருள் தெரியவில்லை. நமக்கு ஏற்படும் சிந்தனைகள் பல ரூபத்தில் வெளியாகிறது. ஒரு பதிவரின் இடுகையில் பல விஷயங்கள் தவறாகப் பின்பற்ற்ப்படுவதுபோல் எழுதி பின் அவை சரி என்னும் தொனியிலும் எழுதியிருக்கிறார் கேள்வி கேட்டு பதிலும் அறிவது, தெரிந்து கொண்டிருப்பது நல்லதுதானே.

    பதிலளிநீக்கு
  6. சரியானது போலதான் இருக்கு.. நிஜமாவே நல்லா யோசிச்சு இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொரு ஆன்மிக வாதியும் உலகில் இருக்கும் ஒவ்வொரு முட்டாளாக பார்த்து ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் சொல்வதில்லை. அது அவர்களது வேலையும் இல்லை. தான் எதையும் அறியாத வரை மற்ற அறிந்தவர்களை முட்டாளாக நினைப்பதுதான் முட்டாள்களின் தன்மை. எந்த அறிவு வேண்டுமோ அதை தேடு அது கண்டிப்பாக கிடைக்கும். தேடாமல் இருந்தால் அது தானாக கிடைக்காது யாரும் உன்னிடம் வந்து சொல்ல மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  8. //G.M Balasubramaniam said...
    ஐயா, டிஸ்கி என்னும் இந்த வார்த்தை பல பதிவுகளில் பார்த்திருக்கிறேன். அதன் பொருள் தெரியவில்லை//

    "Disclaimer" என்ற வார்த்தையை பல பொருட்களின் பேக்கிங்க் அட்டையில், மற்றும் விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள். அதனுடைய பதிவுலக மருவல்தான் "டிஸ்கி". இப்போது ஆங்கிலம் பரிணாம வளர்ச்சி அடைந்து, இன்றைய இளைஞர்கள் பேசும் ஆங்கிலத்தை நம்மைப் போல் உள்ளவர்கள் புரிந்து கொள்ள முடியாதபடி மாறியுள்ளது.

    பதிலளிநீக்கு
  9. //தாராபுரத்தான் said...
    எலக்சன் வேலைகள் முடிந்ததுங்கோ,,//

    எலக்சன்ல நீங்க நின்னீங்களா?

    பதிலளிநீக்கு
  10. ஆஹா தங்கள் கருத்து வித்தியாசமானது ,ஏற்றுக்கொள்கிறேன் தங்கள் கருத்துக்களை ,நன்றி .

    தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. அய்யா உங்கள் இல்லத்தில் இருப்பவர்களுக்கும் இதயத்தில் இருப்பவர்களுக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. A sensitive topic interestingly presented. I would rather reframe your caption of the blog "What happens after death"?

    பதிலளிநீக்கு
  13. இரத்தின சுருக்கமாக இருந்தது இப்பதிவு. தாங்கள் சொல்ல வந்த இக்கருத்துகளை என் இளம்பிராயத்தில் நான் கூற முனைந்த போது நீ நாத்திகனா..? என்ற கேள்வியுடன் என்னை சினந்தனர். ‘சிந்திக்காதே! நம்பிக்கை வை!!” என்று அறிவுறுத்தினர். ’அப்புறம் எதுக்குங்க 6ம் அறிவு என்ற ஒன்று நம் மனித இனத்திற்கு படைக்கப் பட்டிருக்கவேண்டும்?’ன்கின்ற என் கேள்விக்கு இன்று வரை பதிலில்லை என்றாலும் நம் வாயை அடைக்கவே முற்படுகின்றனர்.

    பதிலளிநீக்கு
  14. முனைவர் ஐயா அவர்களுக்கு எனது தீப திரு நாள் வாழ்த்துகள்.
    அன்புடன் அ.ஆரிப்.
    malaithural.blogspot.com

    பதிலளிநீக்கு
  15. இதைப்பற்றிய விவாதங்களுக்கு என்றும் முடிவே தெரியாது, அந்த முடிவு தெரிந்தவர்கள் அதை சொல்ல நம்முடன் இருப்பதில்லை,,,, ஓம் நமச்சிவாய ,,

    பதிலளிநீக்கு
  16. தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
  17. தயவு செய்து நீங்கள் வாழ்க வளமுடன் வகுப்புகளுக்கு செல்லுங்கள். உங்களின் இந்த கேள்விகளுக்கு தகுந்த பதில் கிடைக்கும். சரவணன்,திருப்பூர்

    பதிலளிநீக்கு
  18. What is the difference between Mind and Brain? Where your thoughts originate (Your brain may be processing it, but the input to the brain comes from outside of it). If you notice, even people who have been severely injured (Paralysis for example, which affects the brain and the related functions controlled by the brain)are able to think, relate.

    based on my understanding, Aatma as referred contains your thoughts, desires,wisdom, etc,. this does not go away when a person dies. There are multiple Past life regression therapy cases (recorded and published) wherein under deep hypnosis people were able to recollect their past life details, their thoughts, Like/dislike, hatred, fear, etc,. in such great details and all that has been coming from their own and not manufactured. If we correlate this, then the logical explanation is that what is being referred as Aatma goes through the cycle of birth, death till it it abosolves it's Karma (Hindu Dharma teaching)

    பதிலளிநீக்கு
  19. உயிர் ஏன் உடலை விட்டு பிரிகிறது.

    பதிலளிநீக்கு