செவ்வாய், 27 நவம்பர், 2012

நம்பள்கியின் கேள்விக்கு பதில்.


வருத்தத்திற்குரிய நிகழ்வு.
டாக்டர் பழனி.கந்தசாமி ஐயா, இந்த வருத்தம் ஏன் தினமும் இறக்கும் 5000 இந்தியக் குழந்தைகளிடம் யாருக்கும் இல்லை; அதுதான் என் கேள்வி?

நீங்கள் இதற்க்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் டாக்டர் பழனி.கந்தசாமி ஐயா; எனக்கு பல பெரிய மனிதர்கள் "இந்தியாவில்" சிந்திப்பது இன்றும் புரியவில்லை; உங்களையும் சேர்த்துதான் இந்தக் கேள்வி.
'
ஒரு வேளை சிகப்பாக இருந்தால் "மட்டுமே" இந்திய அரசாங்கம் கேள்வி கேட்குமா? உதவி செய்யுமா? நீங்கள் பெரிய மனிதர்; நீங்கள் இதற்க்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்...

[[
பழனி.கந்தசாமி said...வருத்தத்திற்குரிய நிகழ்வு.]]


நம்பள்கியின் இந்தக் கேள்வியை இன்றுதான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் பிறந்து இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்து இன்று அமெரிக்க சிகப்புத்தோல்களுக்கு சேவை புரியும் நீங்கள் இந்த 5000 குழந்தைகளின் இறப்புக்காக என்ன செய்தீர்கள் என்று சொல்லிவிட்டு, அப்புறம் எங்களைக் கேள்வி கேளுங்கள், பதில் சொல்கிறோம்.


28 கருத்துகள்:

  1. ஜாதிவாரியாக உணவு வகைகள் பதிவிற்கு முன் இந்தப்பதிவு ஏன் பதிவிட்டீர்கள் என்பது புரிகிறது...

    தீப ஒளி அனைவரின் மனதில் உள்ள இருளை ஒழிக்கட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பதிவு போட்டவுடன் ஒரு அன்பர் "இந்தப் பதிவு வேண்டாமே" என்றார். அதனால் அதை நீக்கினேன். பதிவை நம் பிளாக்கில் இருந்து நீக்கவிட்டாலும் கூகுளார் விடமாட்டார். அதைக் காட்டிக்கொண்டுதான் இருப்பார். இதற்கு ஏதாவது மாற்று இருக்கிறதா என்று கூகுளில் தேடிப்பார்த்தேன். எல்லாம் தலையைச்சுற்றி மூக்கைத் தொடுகிற மாதிரிதான் இருக்கிறது. போகட்டும் என்று விட்டுவிட்டேன்.

      நீக்கு
  2. சரியான கேள்வி
    Good counterattack;
    Let us see the discussion.

    பதிலளிநீக்கு
  3. டாக்டர் கந்தசாமி ஐயா, பதில் சொல்லிவிட்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிந்த நிகழ்வுகளுக்கு வருத்தம் தெரிவிப்பது உலக வழக்கம். நீங்கள் சவிதாவைப் பற்றி போட்ட பதிவில் நான் போட்ட பின்னூட்டம் "வருத்தத்திற்குரிய நிகழ்வு" என்ற இரண்டு வார்த்தைகள்தான். அதற்கு நீங்கள் போட்ட பதில்கள் எந்த விதத்திலும் நியாயமானதாக எனக்குத் தெரியவில்லை. உங்கள் பதிலின் உட்கருத்து " உங்கள் ஊரில் இருக்கும் நிகழ்வுகளைக் கண்டு கொள்ளாமல் இதற்கு ஏன் வந்தீர்கள்" என்பதுதான். இது சரியான வாதம் இல்லை. நீங்கள் இப்படிக்கேட்பதினால் நானும் இந்த மாதிரி கேட்கலாம் இல்லையா? அதாவது ஐர்லாந்து டாக்டருக்கு நீங்கள் ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள்" என்று.

      ஆனால் அது நேர்மையான வாதம் இல்லை. டாக்டர் தொழில் புனிதமானது என்று இந்தியாவில் கருதிக்கொண்டு இருக்கிறோம். அதைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.

      நீக்கு
  4. நாங்கள் செய்த தவறு. நூற்றுக்கு நூறு தவறு. பிச்சைக்காரத்தனம். மொள்ளமாரித்தனம்.

    ஏன்,ஒரு வகையில் பார்த்தல் பக்கா தேவடியாத்தனம்; செய்த தேவடியாத் தனதிற்குமன்னிப்பு கேட்கிறேன் 120 கோடி இந்திய மக்களிடம்.

    சரி, இப்ப என் கேள்வி?
    ஏன் தினமும் இறக்கும் 5000 இந்தியக் குழந்தைகளிடம் என் இந்த கேள்வி இந்த இறக்கம் யாருக்கும் இல்லை?

    ஒரு வேளை சிகாப்பாக இருந்தால் "மட்டுமே" இந்திய அரசாங்கம் கேள்வி கேட்குமா?

    அயல் நாட்டில் இருக்கும் பெண்ணுக்காக கேள்வி கேட்பது சரி. கேள்வி கேட்பதற்கு முன் அந்த ஊர் சட்டம் என்ன என்று தெரிந்து கொள்ளக் கூடாதா அந்த புண்ணாக்கு IAS தூதர்...!

    இல்லை சிகப்பா இருந்தா தான் கேள்வி கேட்கணும் அல்லது நடவடிக்கை எடுக்காணும் என்று I.P.C -ல், otherwise known as மனுதர்மத்தில் இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சரி, இப்ப என் கேள்வி?
      ஏன் தினமும் இறக்கும் 5000 இந்தியக் குழந்தைகளிடம் என் இந்த கேள்வி இந்த இறக்கம் யாருக்கும் இல்லை?//

      இந்தக்கேள்விக்கு மட்டும் பதில் கூறுகிறேன். மற்றவை பிதற்றல்கள். அவைகளுக்கு பதில் கூறும் தகுதி எனக்கில்லை.

      உங்களின் குழந்தைகள் இறப்புக்கணக்கு தவறு. இந்தியாவில் ஏறக்குறைய 15000 குழந்தைகள் பிரசவத்தில் இறக்கின்றன. அவைகளில் முக்கால்வாசி குறைப்பிரசவங்கள். இதற்கு நாட்டின் பொருளாதார நிலையே காரணம். மீதி இறப்புகளுக்கு நீங்கள் கூறும் "மெடிகல் மால்பிரேக்டீஸ்" காரணம். அவற்றிற்காக எப்படி இரக்கம் தெரிவிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. சொல்லிக் கொடுத்தால் இரக்கப்படுகிறோம்.

      நீக்கு
  5. இப்படியான பதிவு அவசியமா ஐயா, நேராகவே அவரிடம் கேட்டு இருக்கலாமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு என்பது பதிவுடனே இருக்கவேண்டும், இக்பால் செல்வன். பொது வெளிக்கு வந்த பின்பு தனி மனித உரையாடல் ஏது?

      நீக்கு
  6. நல்ல கேள்வி அய்யா. இந்தியா மண்ணுக்கு எந்த விதத்திலும் உதவாத, இந்த பர தேசிகள், ரொம்ப அக்கறை உள்ளவங்க மாதிரி வெளிவேஷம் போட்டு பொழுதை போக்கி கொண்டிருக்கிறார்கள்!!இங்க வந்து பிறந்த மண்ணுக்கு,ஜாதி, மத , இன பேதம் இல்லாம சேவை செய்யுங்க மேதைகளே, அப்புறம் இந்த நாட்டை பத்தி குறை சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  7. ஐயோ இப்போ இங்கேயும் பிரச்சனை ஆரம்பித்திட்டா.....
    விடமாட்டாய்ங்க போலிருக்கே

    பதிலளிநீக்கு
  8. //இந்தியாவில் பிறந்து இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்து இன்று அமெரிக்க சிகப்புத்தோல்களுக்கு சேவை புரியும் நீங்கள் இந்த 5000 குழந்தைகளின் இறப்புக்காக என்ன செய்தீர்கள்//
    Good question...have asked this question to him in another juncture but in vain...

    பதிலளிநீக்கு
  9. இந்தியாவில் சிவப்பு தோலுக்கு உள்ள மரியாதையே தனி. ஊர்ல குழந்தை பிறந்ததும் முதல்ல கேட்கற கேள்விகளில் ஒன்று குழந்தை சிவப்பா அல்ல கருப்பா என்பது தான். வெளி நாட்டில் இருக்கறவன் யாரு நம்மாளுதான? அவன் நம்மளமாதிரி தான இருப்பான். உள்நாட்டில் இருக்கறவன் கள பணி செய்ய முடியும் வெளி நாட்டில் இருக்கறவன் காசு மட்டுமே கொடுக்க முடியும். வெளி நாட்டில் இருக்கறவன் காசு அனுப்பலைன்னா எப்படி நம்ம ரிசர்வ் வங்கியிடம் டாலர் இருக்கும் சாமி கொஞ்சம் யோசிக்கனும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வெளி நாட்டில் இருக்கறவன் காசு அனுப்பலைன்னா எப்படி நம்ம ரிசர்வ் வங்கியிடம் டாலர் இருக்கும் சாமி கொஞ்சம் யோசிக்கனும்.//

      அவன் காசு அனுப்பறதெல்லாம் அவன் குடும்பத்திற்காகத்தான். இதற்கு இந்திய நாடு எவ்வளவு பாதுகாப்பு கொடுக்கிறது என்பதையும் யோசிக்கவேண்டும்.

      நீக்கு
    2. சரி பழனி மலை மேல் வாழும் கந்தசாமியை மனதில் நினைத்துக்கொண்டு இதை கேட்டுவோம். பேராசிரியரருக்கு மட்டும் இக்கேள்வி கிடைத்தாலும் சரி.

      அரசாங்கம் அவன் குடும்பத்துக்கு அனுப்பும் பணம் எல்லாவற்றையுமா அவன் குடும்பத்திடம் கொடுக்குது? அதிலிருந்து சிறிது தொகையை பிடித்துக்கொள்கிறது ஏன்? அந்த காசு தான் ரிசர்வ் வங்கியிடம் டாலர் அல்லது டாலர் வாங்க உள்ள பணம். அதை வைத்து தான் அமெரிக்க பாண்ட்ஐ வாங்குகிறோம் அதாவது அமெரிக்க டாலரை வாங்குகிறோம். இன்னும் சொன்னால் வழவழ என்று பதிவுக்கு தொடர்பில்லாததாக இருக்கும்.

      நீக்கு
    3. இந்தப் பதிவின் நோக்கம் வெளிநாட்டில் வேலை செய்பவன் டாலர் அனுப்பிகிறானா, இல்லையா என்பதைப்பற்றி அல்ல. நீங்கள் பொட்ட பின்னூட்டத்திற்கு பதில் போட்டேன். என் கருத்தைச் சொன்னேன். அவ்வளவுதான்.

      நம்பள்கி என்னிடம் கேட்ட கேள்வி நியாயமானதா? என்பதுதான் நான் இந்த்ப பதிவு போட்டதற்கான காரணம். அதைப் பற்றி உங்களுக்கு ஏதாவது சொல்ல முடியுமானால் சொல்லுங்கள். பதிவின் நோக்கத்தை திசை திருப்பவேண்டாம்.

      நீக்கு
  10. Sir
    For your calibre do you need this? Do you deserve this? At times dust also goes to heights.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியல்ல நண்பரே, ஒருவன் வேண்டுமென்று நம்மை வம்புக்கு இழுத்தால் அதை கண்டு கொள்ளாமல் இருப்பது கோழைத்தனம் என்று நான் நினைக்கிறேன்.

      நீக்கு
  11. Only fruit trees get stoned. I should not say this. Please learn to accept envy,hatred as compliments.

    பதிலளிநீக்கு
  12. நம்பள்கியின் பதிவில் இருந்து ஒரு பின்னூட்டம். என் நினைவுக்காக இங்கு காப்பி-பேஸ்ட் செய்திருக்கிறேன்.

    நம்பள்கி said...
    நான் கேட்டது பொதுவாக சவீதவைப் பற்றி கேட்டவர்களை...
    உங்கள் இடுகைக்கு பதில் போட்டதாள் உனகள் பெயர் வந்து விட்டது; எடுத்து விடுகிறேன்.

    I sincerely apologize. This was a generalized statement, however,I regret for this oversight.

    //Dr. சவிதா பற்றி கேள்வி கேட்கும் நீங்கள் யார்?
    அயர்லாந்தின் மண்ணின் மைந்தரா?
    உங்களுக்கும் அயர்லாந்துக்கும் என்ன சம்பந்தம்?
    சொல்லுங்கள் டாக்டர் பழனி.கந்தசாமி ஐயா?//

    நான் எப்போது சவிதா பற்றி கேள்வி கேட்டேன்? அயர்லாந்து எங்கு இருக்கிறதென்று மேப்பைப் பார்த்தால்தான் எனக்குத் தெரியும். சம்பந்தம் இருக்கிறதென்று நான் எப்போது சொன்னேன்.

    November 28, 2012 10:28 AM

    பதிலளிநீக்கு
  13. கோவிலுக்கு சாமி கும்பிட போன இடத்தில தேங்காய் ஆராச்சி பன்ரவனுக்கு பதில் பதிவு போட்டு நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம் ஐயா.

    பதிலளிநீக்கு
  14. http://www.nambalki.com/2012/11/1_27.html
    அமெரிக்கப் பரதேசியும் பாலவாக்கம் பரதேசியும்: பகுதி 1.
    இந்தப் பதிவில் வந்த ஒரு பின்னூட்டம். என் நினைவுக்காக இங்கே-
    mubarak kuwait said...
    பொதுவாக வெளிநாட்டில் வேலை பார்பவர்களை பார்த்து உள்ளூரில் இருப்பவர்கள் கேட்பதுதான், அதை நாம் பெரிதாக எடுத்து கொள்ள தேவை இல்லை, இதை ஒரு சாதரணமானவர்கள் சொன்னால் விட்டு விடலாம், படித்த சிந்தனையாளர் திரு பழனி கந்தசாமி சொல்வது நகைப்பிற்குரியது மேலும் அவரின் பொறாமையை காட்டுகிறது, இந்திய மக்கள் வரிபனத்தில் படித்த உள்ளூர் டாக்டர்கள் எல்லாம் முழு சேவை நோக்கத்தோடுதான் வைத்தியம் செய்கிறார்களா? அரசு மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்பதற்கும் இவர்கள் தனியாக கிளினிக் நடத்தும் இடங்களும் வேறுபாடுகள் இல்லையா? மக்கள் வரிபனத்தில் படித்து விட்டு மக்கள் வரிபனத்தில் சம்பளம் வாங்கி கொண்டு முறையாக வைத்தியம் பார்காதவர்களை விட, வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் மேல், நாம் வெளிநாட்டில் இருந்தாலும் நம் வருமானத்தை நம் தாய் நாட்டிர்க்குதானே அனுப்பிகிறோம், நம் நாட்டிற்கு எவ்வளவு அந்நிய செலவாணியை கொடுக்கிறோம்.
    அப்புறம் டாக்டர் அண்ணே. பப்பாளி இலை டெங்கு நோயை குனபடுதுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
    November 27, 2012 9:58 PM

    பதிலளிநீக்கு
  15. நம்பள்கி கேட்கிறார்-

    இந்தியாவில் தினமம் சாகும் ஆயிரக்கணக்கான மண்ணின் மைந்தர்களான முனியம்மாவிற்கும் கண்ணிம்மாவிற்கும் கவைலபடாத நீங்கள் Dr. சவிதா பற்றி கேள்வி கேட்கும் மர்மம் என்ன?
    நீங்கள் யார்? அயர்லாந்தின் மண்ணின் மைந்தர்களா?
    உங்களுக்கும் அயர்லாந்துக்கும் என்ன சம்பந்தம்?

    இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் நாங்கள் கேள்வி கேட்கக் கூடாது, ஆனால், நீங்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் எங்களை கேட்கலாம்...இது என்ன நியாயம்...டாக்டர் பழனி.கந்தசாமி ஐயா?

    நான் சவிதாவைப் பற்றி எங்கு கேள்வி கேட்டிருக்கிறேன். நான் செய்ததெல்லாம் நீங்கள் சவிதாவைப்பற்றி எழுதிய பதிவில் ஒரு சாதாரண பின்னூட்டம் {பரிதாபத்திற்குரிய நிகழ்வு} போட்டதுதான்.

    அதற்கு நீங்கள் இந்தியக் குழந்தைகள் சாவிற்கு இரக்கப்பட்டீர்களா? என்று கேட்கவேண்டிய அவசியம் என்ன? அதைத்தவிர சிகப்புத்தோல் விஷயத்தை அங்கு கொண்டுவரவேண்டிய அவசியம் என்ன?

    இன்னமும் உங்களுக்கு யார் மேல் கோபம் என்று எனக்குப் புரியவில்லை? வேண்டாத விவாதத்திற்கு என்னை இழுக்கவேண்டாம்.

    சம்பந்தமில்லாமல் கேள்விகள் எதற்குக் கேட்கிறீர்கள் என்று புரியவில்லை?

    நான் எப்போது சவிதா பற்றி கேள்வி கேட்டேன்? அயர்லாந்து எங்கு இருக்கிறதென்று மேப்பைப் பார்த்தால்தான் எனக்குத் தெரியும். சம்பந்தம் இருக்கிறதென்று நான் எப்போது சொன்னேன்.

    இது பக்கா உளறல்.


    பதிலளிநீக்கு
  16. http://www.nambalki.com/2012/11/1_27.html
    அமெரிக்கப் பரதேசியும் பாலவாக்கம் பரதேசியும்: பகுதி 1.
    இந்தப்பதிவில் நம்பள்கி கேட்கிறார்-

    //ஏனென்றால் நாங்கள் இந்தியா என்ற மண்ணின் மைந்தர்கள். கேள்வி கேட்பது எங்கள் பிறப்புரிமை. //

    நீங்கள் கேள்வி கேட்கலாம். ஆனால் அதற்குப் பொறுப்பானவர்களிடம் கேளுங்கள். சம்பந்தமில்லாதவர்களிடம் கேட்டால் அவர்கள் அதற்கு பதிலாக ஏடாகூடமான கேள்விகளைக் கேட்பார்கள். எனக்கு எள்ளளவும் சம்பந்தமில்லாத இந்தியக் குழந்தைகளின் இறப்புக்கு இரக்கம் காட்டினீர்களா என்று கேள்வி கேட்டதனால்தான் நான் உங்கள் படிப்பு, அயல்நாட்டு வேலை இவற்றைக் குறிப்பிடவேண்டி வந்தது. இந்தியாவில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் நான் தெரிந்திருக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? தவிர அந்தக் கேள்வியில் சிவப்புத்தோல் பற்றிய குறிப்புக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

    சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுத வேண்டாம்.
    November 28, 2012 1:23 AM

    பதிலளிநீக்கு