வெள்ளி, 30 நவம்பர், 2012

கடவுள் சைவமா, அசைவமா?


இத்தகைய கேள்விகளையே கேட்கக்கூடாது, இதுதான் தமிழனின் முக்கிமான கெட்ட குணம், நாங்கள் சொல்வதை அப்படியே கேட்டு நம்புகிறவர்கள் மட்டும் எங்களிடம் வந்தால் போதும் என்று சொல்லும் மத குருமார்கள் இருக்கிறார்கள். நன்றாகவே இருக்கிறார்கள்.

ஆனாலும் சமீப காலங்களில் இந்த சைவ, அசைவ உணவுகளைப் பற்றிய விழிப்புணர்வு பதிவுலகில் ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாகத்தான் இந்த சந்தேகம் என் மனதில் தோன்றியது.

இரண்டு விதமான கடவுள்களும் இருக்கிறார்கள். ஆடு, மாடு, எருமை, கோழி இவற்றைப் பலி கொடுக்கும் கடவுள்கள் நிறைய இருக்கின்றன. கோவில் மடப்பள்ளியில் அய்யர் சமைத்ததைத்தான் சாப்பிடுவேன் என்று சொல்லும் கடவுள்களும் இருக்கிறார்கள்.

கடைசியில் பார்த்தால் கடவுள் பெயரைச் சொல்லி மனுசன் சாப்பிடுகிறதுக்காகத்தான் இந்த படையல்களெல்லாம். இந்த வழக்கங்களெல்லாம் எப்போது யாரால் முறைப்படுத்தப்பட்டன என்று தெரியவில்லை. எது சரி என்றும் தெரியவில்லை?

எது எப்படியானாலும் மனிதன் தன்னுடைய தேவைக்கேற்பவும் கற்பனைக்கேற்பவும் கடவுள்களைப் படைத்திருக்கிறான். தனக்கும் பிடித்த உணவு வகைகளை கடவுள் பெயரைச்சொல்லி சாப்பிடுகிறான். ஆகவே ஒரு வகை உணவுதான் சிறந்தது மற்ற வகை உணவு தாழ்ந்தது என்று கருதவேண்டியதில்லை.

16 கருத்துகள்:

  1. தனக்குக் கிடைப்பவை எல்லாம் எவனால் (எவரால்) கிடைக்கிறதோ அவருக்கு நன்றி சொல்லப் பழகவும், அவருக்குப் 'படைப்பதன்' மூலம் பகிர்ந்துண்ணும் பழக்கம் வரவும் ஏற்படுத்தப் பட்ட வழக்கமாயிருக்கலாம். அகத்தியர் வாதாபியை ஜீரணம் பண்ணும்வரை எல்லோரும் அசைவமாகத்தான் இருந்தார்களாம்!

    பதிலளிநீக்கு
  2. சாமி மட்டும் நெசமாவே படையலை சாப்பிட்டுச்சுன்னா..... ஒருத்தரும் படைக்கமாட்டாங்க. புள்ளைப்பேரைச் சொல்லி பூதமுன்னு சாமி பேரைச் சொல்லி ஆசாமிகள் தின்னத்தான்.

    அதுவும் நம்ம பண்டிகைப் பலகாரங்களைப் பாருங்க. ஒவ்வொன்னுக்கும் ஒரு வகை ஒரு ருசி!!!!!
    இந்தப்பண்டிகைக்கு இதுன்னு லிஸ்ட் போட்டது யாரோ!!!!!

    நேரம் இருந்தால் இங்கே பாருங்க.
    http://thulasidhalam.blogspot.co.nz/2009/09/blog-post_18.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நேரம் இருந்தா பாருங்க.//

      இதைத் தவிர வேற என்ன வெட்டி முறிக்கற வேலை எனக்கு?

      நீக்கு
    2. பார்த்தேன். "கோழி முதலா முட்டை முதலா" என்கிற மாதிரிதான் பண்டிகையும் பலகாரங்களும்.

      சுதா ரகுநாதன் கச்சேரி அங்கயும் நடந்ததா?

      அவங்க பாட்டெல்லாம் டவுன்லோடு செஞ்சு வச்சிருக்கேன். இப்ப கூட போனமாதம் அவங்க கச்சேரி கோயமுத்தூர்ல நடந்தது. ரெண்டு மணி நேரம் ஒரே இடத்துல உக்கார முடியல. அதனால போகலை. வருத்தமா இருக்கு. என்ன பண்ண?

      நீக்கு
  3. ஒரு விசயத்திலேயே மனிதன் இன்னும் உணரவில்லை... அதற்குள் அடுத்தது... நன்றி ஐயா...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_30.html) சென்று பார்க்கவும்...

    பதிலளிநீக்கு
  4. சைவ உணவோ அல்லது அசைவ உணவோ அது அவரவர்களின் விருப்பத்தைப் பொருத்தது. உணவில் உயர்ந்தது தாழ்ந்தது என்று ஒன்றும் இல்லை என்ற உங்கள் கருத்து சரியே!

    பதிலளிநீக்கு
  5. /கடைசியில் பார்த்தால் கடவுள் பெயரைச் சொல்லி மனுசன் சாப்பிடுகிறதுக்காகத்தான் இந்த படையல்களெல்லாம். / செம செம, எந்த படையலையாவது கடவுள் உண்டதுண்டா? தாவர உணவு மட்டுமே உண்ணும் பழக்கம் சமணர்களால் கொண்டு வரப்பட்டவையே. அகத்தியர் கதை எல்லாம் உடான்ஸ்...

    பதிலளிநீக்கு
  6. ஐயா.. கடவுள் ஒருவரே என்று சொல்பவர்கள் கூட இந்த விசயத்தில் மாறுபடுகிறார்கள்..

    பதிலளிநீக்கு

  7. நம்மில் கடவுள் இருக்கிறார் என்றால். நாம் உண்பதை கடவுளும் உண்கிறார்.

    பதிலளிநீக்கு
  8. கடவுள் பெயரைச் சொல்லி படைத்து சாப்பிடுவதுடன் நின்றால்போதும்.

    கடவுள் பெயரால் காசு உழைக்கும் கள்ளஆசாமிகளை சனங்கள் நம்பாமல் இருந்தால் சரி.

    பதிலளிநீக்கு
  9. ஆண்டவன் நம்க்கு கொடுத்ததற்கு நன்றி சொல்லும் விதமாகத்தான் படையல் விஷயங்களையும் எடுதுக்கணும்னு நினைக்கிரேன்

    பதிலளிநீக்கு
  10. ****எது எப்படியானாலும் மனிதன் தன்னுடைய தேவைக்கேற்பவும் கற்பனைக்கேற்பவும் கடவுள்களைப் படைத்திருக்கிறான். தனக்கும் பிடித்த உணவு வகைகளை கடவுள் பெயரைச்சொல்லி சாப்பிடுகிறான். ****

    இங்கேதான் பகுத்தறிவுவாதியும் (உடனே தி க காரனை நெனைச்சுக்கிடாதீங்க), கடவுள் நம்பிக்கை உள்ளவனும் வேறுபடுகிறான்.

    * கடவுளை தன் தேவைக்காக மனிதன் படைத்ததாக நம்புவன்ந்தான் பகுத்தறிவுவாதி.

    * கடவுள் நம்மைப் படச்சாரு.. அவரை நம்ம எல்லாரும் திருப்திப்படுத்தனும்னு சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் ஆத்திகர்கள்.

    ஆத்திகனோ, நாத்திகனோ நல்லவனா/மனசாட்சி உள்ளவனா இருந்தாச் சரி.

    ஆமா சார், உங்களுக்கு கடவுள் சாப்பிடுவாருனு யாரு சொன்னா? சாப்பிட்டால்த்தானே அசைவமா, சைவமா என்கிற கேள்வியே?

    கடவுள் சாப்பிடுவாரு, தூங்குவாரு, சிரிப்பாரு, கோபப்படுவாரு, அவருக்கு பசிக்கும் இப்படியெல்லாம் யோசிச்சா அவரு மனுஷக்கடவுளாத்தான் இருக்கனும் நம்ம சாய்பாபா, நித்தி போல..

    எப்படியெல்லாம் கடவுளை மனுஷன் பயன்படுத்திக்கிறான்!!!

    பதிலளிநீக்கு
  11. கடவுள் மனிதனால் படைக்கப்பட்டது...
    கடவுள் மனிதனின் கற்பனை..
    ஆகையால் கடவுள் தொடர்ப்பான அனைத்தையும் மனிதனின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைத்துக் கொண்டான்.
    கடவுள் மனிதனால் படைக்கப்பட்டது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் கடவுள்கள் அனைத்தும் மனிதனின் உருவத்தைப் போலவே ஒத்திருப்பதுதான்... கைகள் எத்தனை கடவுள்களுக்கு(சிலைகளுக்கு) இருந்தாலும் கால்கள் மட்டும் இரண்டுதான் உள்ளது.
    உணவை முறையினை வைத்து நல்லவன்/கெட்டவன் என கணிக்கும் மிகக் கொடுமையான முறை இந்தியாவில் மட்டும்தான் உள்ளது

    பதிலளிநீக்கு
  12. நாமதான் புத்தி கெட்டுப்போய் பதிவு எழுத வந்துட்டோம், வர்ரத அனுபவிக்கோணும். நமக்கு பின்னூட்டம் போடறவங்க எதுக்காக கஷ்டப்படோணும்?

    அதுக்குத்தான் இந்த எச்சரிக்கை.

    பதிலளிநீக்கு