மூக்கு என்றதும் உங்கள் போட்டோவில் உங்கள் மீசை ஞாபகம் வந்தது. மீசை வகைகள், நீங்கள் மீசை வைத்த கதை, மீசைக்கு செலவிடும் நேரம் – இவைகள் பற்றி விரிவாக, வழக்கம் போல உங்கள் பாணியில் நகைச்சுவையாக ஒரு பதிவு போடவும்.
நம் மக்களுக்கு எப்போதுமே ஒரு ஆசை உண்டு. அதுதான் கொம்பு சீவுதல். அதாங்க கிள்ளிவிட்டு வேடிக்கை பாக்கறது. காசா, பணமா, சும்மா வேடிக்கை பாக்கலாமில்லையா? அதுக்குத்தான். இப்ப பாருங்க, தமிழ் இளங்கோ எனக்கு கொம்பு சீவி உட்டிருக்கார். பாக்கலாம், இந்த ஐயா என்ன பண்ணுவார்னு பாக்கறதுக்காக காத்திட்டிருக்காங்க.
நாம என்ன இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் அசர்ற ஆளா? எதைப் பத்தி எளுதச்சொன்னாலும் எதையாவது தேத்தீடுவமில்ல?
உலகத்தில ஆம்பிளைன்னு சொல்லணும்னா, மீசை வச்சிருக்ணுங்க. மீசை இல்லாதவங்களை பொம்பிளைங்கன்னுதான் சொல்லணும். அதாவது அவங்களுக்கு மனசில மாஞ்சா இல்லைன்னு அர்த்தம்.
ஆகவே ஆம்பிளைன்னா மீசை கண்டிப்பா இருக்கணும். இந்த மீசை வளர்க்கறதில யார் பலே கில்லாடின்னு ஒரு போட்டி நடக்குது தெரியமுங்களா? அதில ஜெயிச்ச ஆளோட மீசையைப் பாருங்க.
வச்சா இந்த மாதிரி மீசை வைக்கோணுங்க. நாம வக்கறதெல்லாம் ஒண்ணுமே இல்லீங்க.
ஹிட்லர் மீசை உலகப்பிரசித்தம்.
நான் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தபோது, ஜெமினி கணேசன் மீசைதான் ரொம்பவும் பாபுலர்.
அதுதான் அன்று ஸ்டேண்டேர்டு மீசை. நானும் அப்படித்தான் வைத்திருந்தேன்.
பிறகு பணி ஓய்வு பெற்றபின் வேறு முக்கியமான வேலை வெட்டி எதுவும் இல்லாததினால், நானும் என் ஜாதி ஆசாரப்படி பெரிதாக மீசை வைத்தாலென்ன என்ற ஆசை வந்தது. சரி வயதான காலத்தில் வந்த ஆசையை நிறைவேற்றி விடுவோம் என்று பெரிய மீசையாம வளர்த்தேன்.
மீசை வளர்ப்பது பெரிதல்ல. அதை பராமரிப்பது பெரிய வேலை என்று அப்புறம்தான் கண்டுபிடித்தேன். அதற்கு பல வித கிரீம்கள் தேவைப்படுகின்றன. அப்புறம் அதை ஒரே நிலையில் வைத்திருக்க அதற்கு ஏகப்பட்ட வேலை இருக்கின்றன.
இதை எல்லாம் பார்த்த பிறகு, இப்போது வேறு ஸ்டைலில் மீசை வைத்திருக்கிறேன்.
மீசை நரைச்சுடுடிச்சி போலே இருக்குங்களே... நரை மீசை நாயகர் என்று பட்டம் தரலாமா என்று யோசிக்கிறேன்! :)))
பதிலளிநீக்குஎன்னங்க, 80 வயசுக்கும் மீசை நரைக்காமயா இருக்கும்?
நீக்குமீசை நரைத்தாலும் (பதிவிடும்) ஆசை நரைக்கவில்லை என்பதை விதம் விதமாக பதிவிட்டு அசத்திவிடுகிறீர்கள். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபராமரிப்பது சிறிது சிரமம் தான்... இப்போது உள்ள ஸ்டைல் முறுக்குவது போல் இல்லையே...?
பதிலளிநீக்குவயது எண்பது ஆனால் என்ன.... துள்ளி வரும் பதிவுகளில் தெரிக்கும்
பதிலளிநீக்குநகைச்சுவை ரசிக்க முடிகிறதே... அன்பு வணக்கங்கள்.
நீங்கள் பதினெட்டு வயதில் இருந்து பதிவு போட்டால் எப்படி இருக்கும்?
அடுத்த பதிவுக்கான கேள்வி ரெடி....
இந்த மாதிரி பதிவுகள் போடுவேன். பின்னூட்டங்களையும் சேர்த்துப் படிக்கவும்.
நீக்குhttp://swamysmusings.blogspot.com/2013/02/blog-post_15.html
பதிலளிநீக்குஒவ்வொரு மீசைக்கும் ஒரு கதை. ரசித்தேன்.
மீசை வளர்த்த கதை அருமை! நன்றி!
பதிலளிநீக்குபூனைகள் , கரப்பான் பூச்சிகள் எப்படி மீசை வளர்க்கின்றன ????
பதிலளிநீக்குமீசை பற்றிய எனது ஆசையை சொன்னதற்கு உடனே முறுக்கிக் கொண்டு ஒரு பதிவை தந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குஐயா, அந்த மீசையை வளர்த்து பராமரிக்க என்னவெல்லாம் கஷ்டப் பட்டீர்கள் என்று சொன்னால் எங்களுக்கு உதவியாய், பாடமாய் இருக்கும்! அப்புறம் கடைசியாக போட்டிருக்கும் தற்போதைய போட்டோ சரியாக தெரியவில்லை, சற்று blurred ஆகி விட்டது!
பதிலளிநீக்குஜெமினி ஸ்டைல் மீசையில் இன்னும் அழகாக உள்ளீர்கள்!
மீசை பற்றிய பதிவு போட உங்களை தூண்டிவிட்ட தமிழ் இளங்கோவுக்கும், உடனே வந்து பதிவு போட்ட உங்களுக்கும் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு