வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

காதலர் தினமும், தொடரும் அமில வீச்சுகளும்.



காதலர் தினம் அதாவது Valentine Day என்று சொல்லப்படும் ஆங்கில மோக கலாச்சாரம் எப்படியோ நம் நாட்டு இளைஞ-இளைஞிகளிடம் ஒட்டிக்கொண்டு விட்டது. அதை நேற்று எல்லோரும் பிரபலமாகக் கொண்டாடினார்கள். பல பதிவர்களும் அதற்கு ஜால்ரா கவிதைகள்  போட்டார்கள்.

ஆனாலும் நம் இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் கிடையாது என்பது உலகம் அறிந்ததே. முந்தாநாள் ஒரு ஆசிட் வீச்சுக்கு ஆளான ஒரு பெண் செத்து, புதைத்த இடத்தில் இன்னும் ஈரம் கூடக் காயவில்லை. அதற்குள் காதல் புராணம். மக்களுக்கு மனச்சாட்சியே கிடையாது.

இதுவரை டில்லியில் நடந்த பாலியல் பலாத்காரத்தில் ஏகப்பட்ட பேர் போராட்டம் நடத்தி அதில் ஒரு காவலர் கூட இறந்து போனாரே, அந்த சம்பவத்தில் அந்தப் பெண் கூட இருந்தவன் நண்பன் என்றுதான் எல்லோரும் குறிப்பிடுகிறார்களே தவிர, யாராவது அந்தப் பெண் ஏன் அவனுடன், வேலையிலிருந்து வந்தவுடன் ஊர் சுற்றினாள் என்று கேட்டார்களா?

எல்லோரும் பெண்கள் அபலைகள் என்று சொல்லுகிறார்களே தவிர, அவர்கள் பண்ணும் அக்கிரமங்களைப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. அவள் ஆணுடன் பழகுவாள், அவனுடைய எதிர்பார்ப்புகளைத் தூண்டிவிடுவாள், திடீரென்று கழட்டி விடுவாள். அந்த இளிச்சவாயன், ஒன்றும் சொல்லாமல் அவள் வாழ்க்கையில் இருந்து மறைந்து விட வேண்டும்.

இது என்னவோ விளையாட்டு என்று இந்த அபலைப் பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் பின் விளைவுகளைப் பற்றித் தெரியாத அளவிற்கு இவர்கள் என்ன கை சூப்பும் குழந்தைகளா? அதற்கு இந்த வேலென்டைன் ஆட்கள் தூபம் போடுகிறார்கள். என்ன சட்டம் போட்டாலும் பெண்கள் மனது மாறி ஜாக்கிரதையாக செயல்பட்டால் ஒழிய, இந்த சம்பவங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

எந்த கோவிலுக்கோ, பார்க்குக்கோ, பீச்சுக்கோ, சினிமாக் கொட்டகைக்கோ போய்ப்பாருங்கள் என்னென்ன அக்கிரமங்கள் நடக்கின்றன என்று? யாராவது இதைத் தட்டிக் கேட்க முடியுமா? கேட்டால் மனித உரிமைக் கழகம் மற்றும் பெண்கள் நலப் பாதுகாப்புக் கழகங்கள் வக்காலத்து வாங்கும். அப்புறம், வேறென்ன, போலீஸ் ஸ்டேஷன்களில்தான் திருமணங்கள் உறுதிப்படுத்தப்படும். பெற்றோர்கள் வாயை மூடிக்கொண்டுதான் இருக்கவேண்டும்.

இத்தகைய காதல் திருமணங்களில் கால்வாசி கூட வெற்றியடைவதில்லை என்று இந்தப் பெண்களுக்குத் தெரியுமா? எல்லா உயிரினங்களும் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்கின்றன. மனிதன் மட்டும் தான்தோன்றித்தனமாக நடப்பான், அவனை ஒருவரும் கேள்வி கேட்கக் கூடாது?

இதையெல்லாம் காலத்தின் கோளாறுகள் என்று ரொம்ப சுலபமாக  சொல்லிவிடலாம். இந்த பெண்ணியல் நலப் பாதுகாவலர்கள் இதற்கு ஒன்றும் வழிவகை சொல்லமாட்டார்கள். அப்புறம் இதனால் தொடரும் சீரழிவுகளுக்கு மட்டும் ஏன் குய்யோ முறையோ என்று ஓலமிடுகிறீர்கள்?

44 கருத்துகள்:

  1. உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை சார். மன்னிக்கவும். சொல்லவே சங்கடமாக இருக்கிறது. பதிவு முழுதும் ஆணாதிக்க வாடை.

    //
    முந்தாநாள் ஒரு ஆசிட் வீச்சுக்கு ஆளான ஒரு பெண் செத்து, புதைத்த இடத்தில் இன்னும் ஈரம் கூடக் காயவில்லை. அதற்குள் காதல் புராணம். மக்களுக்கு மனச்சாடெசியே கிடையாது.
    //
    அந்த பெண் இறந்தது கொடுமையான சம்பவம். செய்தவனுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் அதனால் காதலை கொண்டாட கூடாதா? அன்பின் உச்சகட்ட வெளிப்பாடு காதல் தான். அதை கொண்டாடாமல் எதை கொண்டாடுவது?

    எவ்வளவோ பேர் தினமும் எவ்வளவோ துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். அதனால் நாம் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டு சாப்பிடாமல் இருக்கிறோமா?

    //
    யாராவது அந்தப் பெண் ஏன் அவனுடன் வேலையிலிருந்து வந்தவுடன் ஊர் சுற்றினாள் என்று கேட்டார்களா?
    //
    ஏன் கேட்க வேண்டும்? அவளை கேட்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது? அவள் இரவு நேரத்தில் ஒரு ஆணுடன் சுற்றினால், அது நமக்கு பிடிக்கவில்லை என்றால் அவளை ரேப் செய்யலாமா? எனக்கு கூடத்தான் உங்கள் இந்த பதிவு பிடிக்கவில்லை.

    //
    ஆணுடன் பழகுவாள், அவனுடைய எதிர்பார்ப்புகளைத் தூண்டிவிடுவாள், திடீரென்று கழட்டி விடுவாள்
    //
    ஏன், இதை ஆண்கள் செய்வதே இல்லையா? அக்கிரமம் செய்வதில் ஆண் பெண் என்றெல்லாம் பேதம் கிடையாது. வெள்ளையா இருப்பவன் பொய் பேச மாட்டான் என்று கூறுவது போல இருக்கிறது.

    //
    இத்தகைய காதல் திருமணங்களில் கால்வாசி கூட வெற்றியடைவதில்லை என்று இந்தப் பெண்களுக்குத் தெரியுமா?
    //
    பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணங்கள் எல்லாம் வெற்றி தானே? இல்லையா? சரியோ, தவறோ அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் தீர்மானிக்க வேண்டும். அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் அவரவருக்கே. அடுத்தவருக்கு இதில் கருத்து சொல்ல ஒரு அதிகாரமும் கிடையாது.

    //
    அப்புறம் இதனால் தொடரும் சீரழிவுகளுக்கு மட்டும் ஏன் குய்யோ முறையோ என்று ஓலமிடுகிறீர்கள்?
    //
    வாச்சாத்தியில் பெண்கள் அவுத்து போட்டுக் கொண்டு பப்களுக்கு சென்றதால் தான் கற்பழிப்பு நடந்ததா? தினம் தினம் தலித் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாவது அவர்கள் அவுத்து போட்டுக் கொண்டு அலைவதால் தானா?

    Let us call a spade a spade.

    நமது அடி மன வக்கிரங்களுக்கு அடுத்தவர் மீது பழி போடுவது சரியல்ல. அதுவும் உங்களை போன்ற பேராசிரியர்கள் இம்மாதிரி செய்வது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழனி. கந்தசாமி15 பிப்ரவரி, 2013 6:06 AM
      பாலியல் வக்கிரங்களுக்கு காதல் என்ற பூச்சைப் பூசி, அதற்கு புனிதத்துவம் கொடுக்க நினைப்பவர்களுக்கு என் பதிவு பிடிக்காமல் போகலாம். ஆனால் நான் கருத்து தெரிவித்திருப்பது நிஜ உலக நிதரிசனங்களைப் பற்றியதே.

      இந்த மாதிரி கருத்துகளுக்கு ஆணாதிக்கம் என்று பெயர் சூட்டுவதால் இந்தக் கருத்துகள் தவறு என்று பொருள் அல்ல.

      பேராசிரியர் ஆக இருந்ததால்தான் மாணவர்களின் பொறுப்பற்ற செயல்களுக்காக மனம் நொந்து இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.

      டில்லி மாணவி ஒரு பையனுடன் ஏன் சுற்றினாள் என்று கேட்க இந்த நாட்டுல் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. ஏனெனில் என் வரிப் பணத்தில் அந்த ஒரு பெண்ணிற்காக கோடிக்கணக்கில் செலவிடப்பட்டிருக்கிறது. ஏன் என்றால் இந்த வக்கற்ற டெல்லி மாணவர்கள் பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணினதால்தான். அந்த இறந்து போன காவல் துறை ஊழியருக்கு இதே ஆர்ப்பாட்டக்காரர்கள் என்ன செய்தார்கள்?

      வாச்சாத்தியில் நடந்ததைப் பற்றியோ, உலகத்தில் நடக்கும் அத்தனை சமூக விரோதச் செயல்கள் பற்றியோ நான் கருத்து தெரிவிக்கவில்லை. பெண்கள் நடந்து கொள்ளவேண்டிய பொது நடைமுறைகளைப் பற்றி மட்டும்தான் கருத்து தெரிவித்திருக்கிறேன். ஆகவே மற்ற எல்லா சமூகப் பிரச்சினைகளுக்கும் நான்தான் தீர்வு சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நான் சொல்லாதவைகளைப்பற்றி கருத்து தெரிவிக்கவேண்டாம்.

      ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் அடி மனதில் எவ்வளவோ எண்ணங்கள் இருக்கும். அதை வக்கிரங்கள் என்று இழிவு படுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என் கருத்துகளுக்கு என்ன மறுப்பு வேண்டுமானாலும் சொல்லுங்கள். அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. என்னை, என் குணத்தைத் தனிப்பட்ட முறையில் தாக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று மீண்டும் சொல்கிறேன். உங்கள் அந்தக் குறிப்பை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்.

      நீக்கு
    2. //ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் அடி மனதில் எவ்வளவோ எண்ணங்கள் இருக்கும். அதை வக்கிரங்கள் என்று இழிவு படுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?//

      தனக்கு தொட உரிமை இல்லாத பெண்ணை, கற்பழித்து, பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைக்கும் செயலை நாங்கள் எங்கள் ஊரில் வக்கிரம் என்று தான் சொல்வோம். தங்கள் ஊரில் புனிதம் என்பார்களோ என்னவோ ?

      நீக்கு
    3. என்னைப்பற்றி மட்டும்தான் நான் சொல்ல முடியும். என்னைப்பற்றி, என் மனதில் வக்கிரம் இருக்கிறது என்று யார் சொன்னாலும் அதை மறுக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. என்னைப்பற்றிய மனவக்கிரம் பற்றிய குறிப்புக்குத்தான் நான் பதில் கொடுத்தேன்.அது அப்பட்டமான அவதூறு. அவதூறு செய்து விட்டு நான் அப்படித்தான் செய்வேன் என்பவன் மனிதனல்ல, மிருகம்.

      வக்கிரம் வேறு. மனவக்கிரம் வேறு. மனவக்கிரம் பிடித்தவன் என்று ஒருவனைப் பற்றிச் சொல்ல அடுத்தவனுக்கு என்ன உரிமை இருக்கிறது. அவன் வக்கிரமான செயலைச் செய்தால் அவனை வக்கிரம் பிடித்தவன் என்று கூறலாம் அவதூறுக்கும் குற்றத்திற்கும் வேறுபாடு உண்டு. அதைப் புரியாதவர்களிடம் பேசி பயன் இல்லை.

      தவிர நீங்கள் குளிப்பிட்டுக் கூறும் செயலைப் பற்றி நான் கருத்து எப்பொழுதும் சொன்னதில்லை. இப்பொழுதும் சொல்ல விருப்பமில்லை.

      நீக்கு
  2. //
    டில்லி மாணவி ஒரு பையனுடன் ஏன் சுற்றினாள் என்று கேட்க இந்த நாட்டுல் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. ஏனெனில் என் வரிப் பணத்தில் அந்த ஒரு பெண்ணிற்காக கோடிக்கணக்கில் செலவிடப்பட்டிருக்கிறது.
    //
    அதாவது அவள் ஊர் சுற்றியதால் தான் உங்கள் வரிப்பணம் செலவானது, அவள் கற்பழிக்கப் பட்டதால் அல்ல, அப்படித்தானே?

    நல்லது, இவ்வளவு அற்புதமான கருத்து இருக்கும் போது உங்களுடன் விவாதிப்பதில் பொருள் ஒன்றும் இல்லை.


    //
    பேராசிரியர் ஆக இருந்ததால்தான் மாணவர்களின் பொறுப்பற்ற செயல்களுக்காக மனம் நொந்து இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.
    //
    மாணவிகள் என்று திருத்திக் கொள்ளுங்கள். பதிவு முழுதும் அவர்களை தானே குற்றம் சாட்டுகிறது.

    //
    நமது அடி மன வக்கிரங்களுக்கு
    //
    இதை சொன்னது பொதுவாக ஆண்களின் அடி மன வக்கிரங்கள் என்ற நிலையில் தான். உங்களை தனிப்பட்ட முறையில் சொன்னது அல்ல.

    அப்படி நீங்கள் எடுத்துக் கொண்டால் "பெண்கள் ஊர் சுற்றுகிறார்கள், ஆண்களை ஏமாற்றுகிறார்கள், அக்கிரமங்கள் செய்கிறார்கள்" என்றெல்லாம் நீங்கள் சொன்னது என் வீட்டு பெண்களையும் சேர்த்து தான் என்று நான் எடுத்துக் கொள்ளலாம்.

    அதனால் எனது குறிப்பை திரும்ப வெல்லாம் பெற்றுக் கொள்ள இயலாது. வேண்டுமானால் நீங்கள் அதனை நீக்கி விடுங்கள். உங்கள் தளம் தானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதாவது அவள் ஊர் சுற்றியதால் தான் உங்கள் வரிப்பணம் செலவானது, அவள் கற்பழிக்கப் பட்டதால் அல்ல, அப்படித்தானே?//

      அவள் ஊர் சுற்றியதால்தான் கற்பழிப்புக்கு உள்ளானாள். இந்தக் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்.

      மாணவிகளின் பொறுப்பற்ற செயல்களுக்கு மாணவர்களும் ஏன், பெற்றோர்களும் கூட உடந்தையாகத்தான் செயல்படுகிறார்கள்.

      நீக்கு
    2. //அதனால் எனது குறிப்பை திரும்ப வெல்லாம் பெற்றுக் கொள்ள இயலாது. வேண்டுமானால் நீங்கள் அதனை நீக்கி விடுங்கள். உங்கள் தளம் தானே.//

      என்னுடைய ஆட்சேபணையைத் தெரிவித்து விட்டேன். எனக்குத் தேவை அதுதான்.

      நீக்கு
    3. அய்யா, வயசாக ஆக இப்படியுமா? ஒரு பெண் இரவில் ஒரு பஸ்சில் ஏறினால் அவளை கற்பழிக்கலாம் என்பதுதான் உங்கள் கருத்தின் சாராம்சம். பெண்கள் அடக்கமாக இருத்தல் நலம் தான்! ஆனால் அப்படி இல்லாத பட்சத்தில் அவர்களை கற்பழிப்பது தவறல்ல.

      வாழ்க தலிபன் கலாச்சாரம்! எனக்கும் கூட பிடித்துதான் இருக்கிறது உள் மனதில்!

      நீக்கு
    4. ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும் நான் அப்படித்தான் நடப்பேன் என்று சொல்பவர்களுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?

      //அய்யா, வயசாக ஆக இப்படியுமா?//

      வயசானதால்தான் இப்படி. ஆபத்திலிருந்து விலகுங்கள் என்று வயசானவன்தான் சொல்லுவான். ஆபத்தை எதிரடியாகச் சந்திக்காதீர்கள் என்று சொல்வது "தலிபன்" கலாசாரம் என்றால் நான் அந்தக் கலாச்சாரத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

      //ஆனால் அப்படி இல்லாத பட்சத்தில் அவர்களை கற்பழிப்பது தவறல்ல.//

      இப்படி நான் எங்கே சொல்லியிருக்கிறேன் பெயரிலியே? உன்னைப் போன்றவர்களுக்கு அப்படி எண்ணம் இருந்ததால்தான் டில்லி சம்பவம் நடந்துள்ளது. நீயும் அந்தக் குழுவில் சேர்ந்து கொள். அதுதான் இனக்கு நல்லது.

      நீக்கு
    5. அவள் ஊர் சுற்றியதால்தான் கற்பழிப்புக்கு உள்ளானாள். இந்தக் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்.

      The above is equivalent to
      "ஆனால் அப்படி இல்லாத பட்சத்தில் அவர்களை கற்பழிப்பது தவறல்ல"

      நீக்கு
    6. அது உங்களுடைய எண்ணம் அல்லது ஆசை. உங்கள் மாதிரி ஆட்கள் ஊருக்குள் இருப்பதால்தான் வேளை கெட்டவேளைகளில் வெளியே போகவேண்டாம் என்று சொல்கிறோம்.

      ஆபத்தை நாடவேண்டாம் என்று சொன்னால் உங்கள் குறுக்குப் புத்தி எப்படி வேலை செய்கிறது என்று பாருங்கள். பிரச்சினைக்கு தீர்வு சொல்ல வக்கில்லை. விதண்டாவாதத்திற்கு மட்டும் வாய் முழ நீளம் நீளுகின்றது. உங்களை மாதிரி ஆட்களை தொலைத்தால்தான் நாடு உர்ப்படும்.

      முதலில் உங்கள் அடையாளத்தை வெளிக்காட்டுங்கள். பேடி மாதிரி அனானிக்குள் ஒளிந்து கொண்டு கல்லை வீசாதீர்கள்.

      நீக்கு
    7. //அவள் ஊர் சுற்றியதால்தான் கற்பழிப்புக்கு உள்ளானாள். இந்தக் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்.The above is equivalent to "ஆனால் அப்படி இல்லாத பட்சத்தில் அவர்களை கற்பழிப்பது தவறல்ல"//

      உங்க வூட்டுலயும் பொம்பளைங்க இருப்பாங்கோ. அவுங்களுக்கும் ராத்திரி பத்துமணிக்கு மேல எதுக்கொசரமாவது வெளிய போக வேண்டிருக்கும். ஞாபகம் வெச்சி பேசுனா நல்லாருக்கும் தம்பி

      நீக்கு
    8. எல்லார் ஊட்லயும் பொம்பளைங்க இருக்காங்க. ராத்திரி 10 மணிக்கு மேல வெளிய தனியா போனா என்ன நடக்கும்னு தெரிஞ்சவங்க மரியாதையா தெணையோடதான் போவாங்க.

      தனியா போனா கற்பழிப்பது தவறல்ல என்று கூறுவது நீங்கள்தான். அபாயம் இருக்குதுன்னு சொல்றதையே தப்புன்னு சொல்றதும், அப்ப தனியா போனா நீ கற்பழிப்பாயா என்று கேட்பதுவும் விதண்டா வாதங்கள். அவை அவரவர்களுடைய அந்தரங்க ஆசைகளைக் காட்டுகின்றன. உங்களுக்கு அப்படிப்பட்ட ஆசை இருந்தால் நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.

      நீக்கு
  3. ‘நம் நாட்டு கலாச்சாரத்திற்கு பொருந்தாத காதலர் தினம் தேவையில்லை’ என்ற கருத்தை வலியுறுத்தி தாங்கள் இட்ட பதிவை திரு சத்தியப் பிரியன் அவரது கோணத்திலிருந்து பார்த்திருக்கிறார். ஆண்களுக்கும் பெண்களுக்கும் முழு சுதந்திரம் உண்டு என்றாலும் இருவரும் வரம்பு மீறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. இனி இந்த நிகழ்வுகள் இரு பாலாருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  4. உங்களது கருத்தை மதிக்கிறேன், ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. நேரமிருப்பின் இது குறித்த எனது சமீபத்திய பதிவைப் பாருங்கள்: http://lazyguy2005.blogspot.com/2013/02/blog-post_14.html

    பதிலளிநீக்கு
  5. காதலர் தினத்துக்கும் கற்பழிப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காதலர் தினம் நம் நாட்டில் கொண்டாடுவதற்கு முன்பும் ஏராளமான கற்பழிப்புகள் நடந்துள்ளன. எந்த ஒரு விஷயத்தையும் சரியான புரிதல்களை ஏற்படுத்தி கொண்டு செல்ல வேண்டுமே தவிர அது கூடவே கூடாது என்று சொல்வது சரியல்ல. இரவு நேரங்களில் வெளியே தனியாக செல்லும் ஆண்களுக்கு கூடத்தான் வழிப்பறி பிரச்சினை வருகிறது. அதற்காக ஆண்கள் யாரும் இரவு நேரங்களில் எங்கும் செல்லக் கூடாது என்று சொல்வோமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வெளியில் போகாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.

      காதலர் தினம் சமீபத்திய புகுதல். அதன் அவசியம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை? அது தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கிறது. பஸ் தினம் இப்போது எப்படி நடக்கிறது? எல்லாவற்றிலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு என்றால் நன்மை அதிகம் இருந்தால் அதைக் கொள்ளலாம். தீமை அதிகமாக இருந்தால் அதை விலக்கவேண்டும்.

      நீக்கு
  6. என் கருத்துடன் மற்றவர்கள் கருத்து ஒத்துப் போகவேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகத் தவறு என்பதை நான் அறிவளன். மாற்றுக் கருத்துகளும் முன் வரவேண்டும் என்பதே என் ஆசை. இந்த சமூகப் பிரச்சினைக்கு எப்படி தீர்வு காணலாம் என்பதே என் நோக்கம். நான் பழமைவாதி. என் கருத்துகள் நிச்சயம் பிற்போக்கானதாகத்தான் இருக்கும். மாற்றுக் கருத்துக்கள் என்ன? அவைகளைத்தான் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. பெண்களின் பாதுகாப்பு மீது அக்கறையுடன் எழுதப்பட்ட பதிவு இது. ஆனால் இதை இளைய சமூகம் ஒத்துக்கொள்ளாது. ஊடகங்கள் வியாபார நோக்கத்திற்காக மக்களை மூளை சலவை செய்து வைத்துள்ளன. இதிலிருந்து அவர்கள் வெளியே வருவது கடினம்தான்.

    பதிலளிநீக்கு
  8. பெண்கள் எந்த நேரமும் வெளியே சென்று வர சுதந்திரம் வேண்டும். அதே சமயம், அந்த நிலை இல்லாதபோது நேரம் கேட்ட நேரத்தில் வெளியே செல்வதை தவிர்ப்பதே புத்திசாலித்தனம். அதை தவிர்க்க முன் வராமல் ஆபத்தில் மாட்டிக்கொள்வதை பார்க்கும்போது தான், எதற்கு இவர்கள் இந்த நேரத்தில் வெளியே செல்லவேண்டும் , ஆபத்தை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  9. உங்கள் பதிவை எதுவும் செய்ய இயலாத ஒருவரின் ஆதங்கங்கள் என்றே எண்ணுகிறேன். மாறிவரும் சூழ்நிலையில் பெண்கள் பாதுகாப்பாய் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். இது சரி, இது தவறு என்று சொல்லப்போனால் YOU MAY WIN AN ARGUMENT, BUT LOSE A FRIEND என்பதுபோல் ஆகிவிடும்..பெண்களின் நடவடிக்கைகள் தான் அவர்கள் நிலைமைக்குக் காரணம் என்றால், தினம் தினம் பத்திரிகைகளில் பாலியல் பலாத்காரத்துக்குப் பலியாகும் ஏதும் அறியாக் குழந்தைகள் ஏன் சீரழிக்கப் படவேண்டும்.?ஆண்களின் மிருக இச்சையைத் தூண்டிவிடாத வகையில் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதுதான் உங்கள் அடிப்படைக் கருத்து என்று நினைக்கிறேன். காதலர் தின நிகழ்வுகள் சில உங்கள் பதிவை ஒரு MORAL POLICING என்பதுபோல் காட்டுகிறது. பெண்கள் கருத்து என்ன என்று தெரியவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஆதங்கப்படத்தான் முடியுமே நவிர, வேறு என்ன செய்ய முடியும்?

      மக்களிடையே இந்த சீர்கேட்டைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படவேண்டும். பல வயதுள்ள பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி வழிகாட்டுதல் வேண்டும். அந்தப் பாதையில் ஒரு முயற்சிதான் இந்தப் பதிவு.

      இந்தப் பதிவின் மூலம் நான் சொல்லும் செய்தி பெண்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். பெண்ணின் பெற்றோர்கள் பொறுப்புடன் இருக்கவேண்டும். இந்த இரண்டும்தான் நான் சொல்லும் செய்திகள்.

      பெண்கள் எந்த நேரத்திலும் எங்கேயும் சென்று வரும் சுதந்திரம் வேண்டும் என்றால் அந்த சூழ்நிலை இன்று இந்தியாவில் இல்லை. வேண்டும், வேண்டும் என்றால் எங்கேயிருந்து வரும்? இது நடைமுறை சாத்தியமில்லை. பெண்கள் தங்களை தாங்களேதான் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இதைச் சொன்னால் சம்பந்தமில்லாத சம்பவங்களை சுட்டிக் காட்டி இதற்கு என்ன சொல்லுகிறீர்கள் என்று கேட்டால் ஒவ்வொன்றுக்கும் என்ன தீர்வு சொல்ல முடியும். என்னால் முடிந்தது சமூக சீர்கேடுகளிலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான்.

      நீக்கு
    2. இது சரியாகப் படுகிறது!

      அதாவது பெண்கள் அவிழ்த்துப் போட்டு சினிமாவில் ஆட மாட்டேன் என்று உறுதி எடுக்க வேண்டும்! அறைகுறையாக உடை உடுத்தாமல் இருப்போம் என உறுதி அளிக்க வேண்டும்! அப்படி அவிங்களை இருக்கச் சொல்லுங்க. அப்புறமா நாங்க கற்பழிப்பை விடுகிறோம்!

      நீக்கு
    3. பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு இருந்தாச் சொல்லுங்க ஐயா, அதை விட்டுவிட்டு எங்கேயோ போகிறீர்கள். உங்கள் மன வக்கிரங்களைக் காட்ட வேறு இடங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

      நீக்கு
  10. அப்படியே புட்டு புட்டு வக்ச்சுடீங்க ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களுக்குப் புரிகிற இந்த உண்மை மாக்களுக்குப் புரிவதில்லை.

      நீக்கு
  11. என்ன சட்டம் போட்டாலும் பெண்கள் மனது மாறி ஜாக்கிரதையாக செயல்பட்டால் ஒழிய, //உண்மை இதைதான் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்

    பதிலளிநீக்கு
  12. //பெண்கள் மனது மாறி ஜாக்கிரதையாக செயல்பட்டால் ஒழிய//

    இதைத் தானுங்க நான் இங்க சொல்லியிருக்கேன். அதுக்கு என்னை ஆணாதிக்கவாதி அப்படீங்கறாங்க. ஆணாதிக்கவாதி அப்படீன்னா என்னங்க? பொம்புளைங்க ஜாக்கிரதையா இருக்கவேண்டும் என்று சொன்னால் ஆணாதிக்கவாதியா?

    அப்ப என்ன சொல்லவேண்டும்? பொம்பிளைங்க அவங்கவங்க இஷ்டம்போல் இருந்து கொள்ளுங்கள் என்று சொல்லவா? அப்ப பெண்ணுரிமை வந்துடுமா?

    என்ன உலகம் ஐயா இது? "வெளிக்குப் போறப்ப வெள்ளரிக்காய் திங்காதேன்னு சொன்னா, நான் தொட்டுக்கிட்டு திம்பேன், நீ யார் அதக்கேட்க" அப்படீங்கற காலமாய்ப்போச்சு.

    ஒண்ணைச்சொன்னா, உடனே அதுக்கு நீ என்ன பண்ணினே அப்படீன்னு பதில் கேள்வி. நல்லதைச் சொல்லத்தான் செய்யலாம். கேட்டாக் கேளுங்கோ, கேக்காட்டி நாசமாப் போங்கோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எண்ணம் நல்ல எண்ணம் தான்...ஆனால் எதில் எதை கனக்ட் பண்ணுகிறீர்கள் என்பதில் தான் குழப்பம்!

      நீக்கு
    2. காதல் என்பது பால் கவர்ச்சியின் ஒரு வெளிப்பாடு. ஒருதலைக் காதல், பொருந்தாக் காதல், இளம் பருவக் காதல் என்று பல வகையான காதல்கள் ஏற்படுகிறதை நாம் பார்க்கிறோம். அவைகள் நிறைவேறாது என்பது அனுபவப்பட்டவர்களுக்குத் தெரியும்.

      "வேலன்டைன் டே" என்பது மேலை நாடுகளில் நிலவும் கலாசாரத்திற்கு ஏற்றது, தேவையானது. அங்குள்ள ஒவ்வொரு அம்மாவும் தன் பெண் "பாய் பிரண்ட்" வைத்துக்கொள்ளவில்லையானால் வருத்தப்படுவாள். அங்குள்ள கலாசாரம் அதை தேவையாக்குகிறது. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்கிற மாதிரி அந்த கலாசாரத்தை இந்தியாவில் அரங்கேற்றினால் நடக்கும் விபரீதங்களைத்தான் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

      நீக்கு
  13. @Sathya,

    Your reply was spot on man. Keep up.

    //
    பொம்புளைங்க ஜாக்கிரதையா இருக்கவேண்டும் என்று சொன்னால் ஆணாதிக்கவாதியா?
    //
    பெண்கள் யாரிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும்? சுமார் 60 சதவிகித கற்பழிப்புகள் அந்த பெண்களுக்கு தெரிந்தவர்களால் நடத்தப் படுகின்றன.

    32 சதவிகித கற்பழிப்புகள் ரத்த சம்பந்தம் உள்ளவர்களால், குடும்பத்தினரால் நடத்தப் படுகின்றன. வீட்டில் படுக்கும் போது பெண்கள் தங்களை மாமன், மச்சான், சித்தப்பா, பெரியப்பா ஆகியோரிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள கத்தியை படுக்கையில் வைத்துக் கொண்டு தூங்கலாமா?

    //
    அப்ப என்ன சொல்லவேண்டும்? பொம்பிளைங்க அவங்கவங்க இஷ்டம்போல் இருந்து கொள்ளுங்கள் என்று சொல்லவா? அப்ப பெண்ணுரிமை வந்துடுமா?
    //
    இல்லை. கிடைக்கும் பொந்தில் எல்லாம் எப்படி 'அதை' நுழைக்கலாம் என்றே அலைந்து கொண்டிருக்காதீர்கள் என்று ஆண்களிடம் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல புள்ளி விவரத்தைக் கொடுத்துள்ளீர்கள். எப்போது யாரிடம் இருந்து ஆபத்துகள் வரும் என்று தெரிந்து விட்டதோ, அப்போது அதற்கான காப்பு நடவடிக்கையாக என்னென்ன செய்யவேண்டும் என்று அந்தக் குடும்பத்தினர் யோசித்து செயல்படவேண்டும்.

      அதை விட்டு நான் படுக்கையில் கத்தி வைத்துக்கொள்ளட்டுமா என்று கேட்பது பிரச்சினையை திசை திருப்பும் யுக்தி. அப்பட்டமான விதண்டாவாதம்.

      உங்களுக்கு வாதம் செய்ய மட்டும் விருப்பமா? அல்லது பிரச்சினைகள் வராமல் தடுப்பதில் விருப்பமா? உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்யுங்கள். நான் எதற்கும் தயார்.

      நீக்கு
    2. //கிடைக்கும் பொந்தில் எல்லாம் எப்படி 'அதை' நுழைக்கலாம் என்றே அலைந்து கொண்டிருக்காதீர்கள் என்று ஆண்களிடம் சொல்லுங்கள்.//

      என்ன நாகரிகமான வார்த்தைகள். புரொபைல் இல்லாத பேடி அப்படித்தான் எழுதுவான்.

      நீக்கு
  14. //
    என்ன உலகம் ஐயா இது? "வெளிக்குப் போறப்ப வெள்ளரிக்காய் திங்காதேன்னு சொன்னா, நான் தொட்டுக்கிட்டு திம்பேன், நீ யார் அதக்கேட்க" அப்படீங்கற காலமாய்ப்போச்சு.
    //
    அய்யா ரெம்ப சரியா சொன்னீங்க, டெல்லியில் குளிர் கால இரவு 8 மணி என்பது நம்ம ஊர் நள்ளிரவு 12 மணி மாதிரி. அங்கு வாழும் காலங்களில் இரவு எட்டு மணி அளவில் வெளியில் சுத்தாதே சீக்கிரம் வீட்டுக்கு வந்து விடு என்று அக்கம் பக்கதில் வசிக்கும் பெரியவர்கள் கூற கேட்டுள்ளேன். சில ஏரியாக்களில் ஆட்டோக்கார்கள் கூட தொலை தூர சவாரிக்கு இரவு 9 மணிக்கு மேல் வர மட்டார்கள்.
    எங்க ஊர் பக்கம் வீம்புக்கு புளியங்காய் திங்கிறதுனு சொல்வாங்க....நிறைய பேர் இங்க சொல்ரது அப்படித்தான் இருக்கு....

    பதிலளிநீக்கு
  15. அய்யா

    I beg to differ your views. நம்ப ஆம்பிள்ளைக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. பொம்பள புள்ள வேலைக்கும் போகணும், வீடு வேலையும் செய்யணும். அம்மா போல அடக்க ஒடுக்கமாவும் இருக்கணும். ஆனால் நம்ப பப் கல்ச்சர்தான் ! என்ன கொடுமை சார் இது ? I beleive in todays, even yesterdays world, women perform more tasks than we men. It is really men's world. I pity these poor women. I pray God, if I have to born again, please don't let me born as a female. Even If I born as a female, please not in third world countries, where they are treated as dirt. If we let our daughters live as our mothers lived, what you say stands alright. If not, we men have to make sure, our daughters live in a society, where they can have equal footing and safe. I belive, it is men's problem, rather than the women's one.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம கால சமுதாயப் பிரச்சினையை மக்கள் கவனத்திற்காக நான் வெளிக்கொணர்ந்துள்ளேன். பிரச்சினை இருக்கிறது என்று முதலில் உணரவேண்டும் பின்புதான் அதற்குத் தீர்வு காண முடியும். எல்லாரும் பிரச்சினையை அடையாளம் காட்டினது தவறு என்றுதான் கூறுகிறார்களே தவிர பிரச்சினை இருக்கிறது என்று ஒருவரும் உணர்ந்ததாகக் காணோம்.

      நீக்கு
  16. \\யாராவது அந்தப் பெண் ஏன் அவனுடன், வேலையிலிருந்து வந்தவுடன் ஊர் சுற்றினாள் என்று கேட்டார்களா?\\ சார், ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லும் இந்த நாளில் இப்படி ஒரு கேள்வியை நீங்கள் எழுப்பியிருப்பது ஏற்கத் தக்கதாக இல்லை. நீங்கள் ஒருவேளை பெங்களூர் வந்து திரு G.M Balasubramaniam அவர்களுடன் பத்து மணிக்கு எங்கேயாவது போனால் தப்பா? அப்படியானால் ஒரு பெண் தனது நண்பருடன் போவதை எப்படி தவறு என்று சொல்கிறீர்கள்? நடுராத்திரியில் கழுத்ஹ்டில் நகைகளோடு ஒரு பெண் தனித்தனியாக நடந்து செல்லும் நாளே உண்மையான சுதந்திரம் நாள் என்று காந்தி சொன்னது ஏன்? தவறு இந்திய அரசிடம் தானே தவிர அந்தப் பெண்ணிடம் அல்ல. அவள் செல்வது அவளுடைய சுதந்திரம். அவ்வாறு நண்பருடன் செல்வது தவறு என்று நாட்டில் சட்டம் எதுவும் இல்லை. ஒருவேளை அந்த நபர் பாலியல் ரீதியாக தவறாக நடப்பவர் என்று தெரிந்தே அந்தப் பெண் உடன் சென்றிருந்தார் என்றால் அந்தப் பெண் மீது தவறு இருக்கிறது. மற்றபடி அந்தப் பெண்ணைப் பாதுகாக்கத் தவறிய இந்திய அரசுதான் குற்றவாளியே தவிர அந்தப் பெண் அல்ல.


    \\இத்தகைய காதல் திருமணங்களில் கால்வாசி கூட வெற்றியடைவதில்லை என்று இந்தப் பெண்களுக்குத் தெரியுமா?\\ இது முழுக்க முழுக்க உண்மை, இந்தக் கருத்தில் நான் சத்யா பிரானின் கருத்தில் இருந்து மாறுபடுகிறேன் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணங்கள் இந்த அளவுக்கு தொவிகளைச் சந்தித்ததில்லை ஆயிரத்தில் ஒன்று தோல்வியடையும் ஆனால் காதல் திருமணங்களில் நான்கில் மூன்று Divorce -ல் முடியும்.

    பதிலளிநீக்கு
  17. எனக்குப் புரியாத ஒரு வாதம். அந்தப் பெண் இரவில் தனியாகவோ அல்லது யாராவது ஒரு நண்பன்/நண்பியுடன் இரவில் வெளியே செல்வது தப்பா என்று அனைவரும் கேட்கிறார்கள். சட்டப்பிரகாரமோ அல்லது சாதாரண மனித உரிமைப் பிரகாரமோ அப்படிச் செல்வதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அதை மறுக்க எனக்கு உரிமை இல்லை என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.

    நடைமுறையில் என்ன நடக்கிறது? இந்தியப் பிரஜைகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பாதுகாக்க அரசினால் முடியுமா என்பதைக் கொஞ்சம் யோசியுங்கள். உலகில் எங்கேயும், எந்த நாட்டிலும் இந்த பாதுகாப்பு கிடையாது. இந்தியாவில் மட்டும் எப்படி இந்தப் பாதுகாப்பு சாத்தியமாகும்? தனி மனிதன் தன்னைத்தானே பாதுகாத்துக்கொண்டால் ஒழிய, அவனுக்கு வேறெங்கும் இருந்து பாதுகாப்பு கிடைக்காது என்பதை அன்றாடம் செய்தித்தாள்களில் நாம் படிக்கிறோம்.

    காந்தி கனவு கண்ட ராமராஜ்யம் வரும் என்று நினைத்துக் கொண்டிருப்பவன் என் கருத்துப்படி இந்த உலகில் இருக்க லாயக்கற்றவன். அவன் காந்தி போன இடத்திற்கே போகவேண்டியவன்தான்.

    நடைமுறையில் இருக்கும் உண்மைகளைக் கண்டு கொள்ளாமல் தத்துவம் பேசி ஆகப்போவதென்ன? நான் பெங்களூர் வந்து GMB யுடன் இரவு பத்து மணிக்கு மேல் ஊர்வலம் போனால் எங்களை விட முட்டாள்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பெங்களூர் என்ன, என் சொந்த ஊரான கோயமுத்தூரிலேயே இரவு பத்து மணிக்கு மேல் நான் வெளியில் போனால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, நீங்க எந்த மாதிரி காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் அப்படின்னு கொஞ்சம் யோசிங்க தற்போது மென்பொருள் துறையில் பெண்களும் வேலை செய்கிறார்கள், அவற்றில் பாதிக்கும் மேல் இரவில் இயங்கும் அலுவலகங்கள். ஆகையால் அவர்கள் இரவில் எப்போது வேண்டுமானாலும் வெளியில் செல்ல வேண்டிய நிலை நிச்சயம் இருக்கிறது. கற்பழிப்புகள் ஏதோ இரவில் வெளியில் போன இந்த பெண்ணுக்குத்தான் நடக்கிறதா? வீட்டிக்குள் இருப்பவர்கள் எல்லாம் பதுகாப்பகத்தான் இருக்கிறார்களா? அல்லது இரவு இத்தனை மணிக்கு பெண்கள் வெளியில் செல்லாதீர்கள் என்று டெல்லியில் எச்சரிக்கை ஏதாவது விடுத்திருக்கிறார்களா? ஒருவேளை ஒரு பெண்ணுக்கு உடல்நலம் சரியாக இல்லை, இரவு பத்து மணிக்கு மருத்துவமனைக்கு போக வேண்டிய கட்டாயம். அப்போ அவள் வெளியில் வந்தால் அதோ கதிதானா? தொலைதூர ரயில்கள் 24 மணி நேரமும் இயங்குகின்றன. அவற்றுக்குச் செல்ல வேண்டுமானால் எந்த நேரத்துக்கு வேண்டுமானாலும் இரயில் நிலையத்துக்குப் போக வேண்டியிருக்கும். ஆகையால் பெண்கள் அந்த ரயில்களில் போகக் கூடாது என்பீர்களா, அல்லது அவற்றின் நேரத்தை காலை பத்து முதல் மாலை நான்கு வரை மட்டும் என மாற்றுவீர்களா? நமது உடைமைகளை உயிரை நாம் தான் எச்சரிக்கையாக பார்த்துக் கொள்ள வேண்டும், வாஸ்தவம்தான், அதற்காக ஊரெல்லாம் திருட்டுப் பயலா சுத்துவான் நாங்க ஒன்னும் செய்யமாட்டோம்னு ஒரு அரசாங்கம் உட்கார்ந்திருக்கலாமா?

      நீங்க எந்தெந்த நாடுகளையோ சொன்னீங்க, ஏன் சிங்கப்பூரைச் சொல்லவில்லை?

      காந்தி சொன்னது ஒரு Ideal நிலை, அது நடக்கா விட்டாலும், அதை நோக்கியாவது போக முயல வேண்டும். இன்னைக்கு இரவு பத்து மணிக்கு பெண்ணை பலாத்காரம் பண்ணியவன் நாளைக்கு எட்டு மணிக்கே வருவான், அப்புறம் பகலிலேயே வருவான், அப்புறம் பூட்டிய வீட்டில் உடைத்து உள்ளே புகுத்து எல்லாம் பண்ணிட்டு போவான். அப்பவும் நீதான் எச்சரிக்கையா இருக்கணும்.........நீதான் எச்சரிக்கையா இருக்கணும்......... அப்படின்னு தேஞ்சு போன ரெகார்ட் மாதிரி பாடிகிட்டே இருக்க வேண்டியதுதான், வேலைக்காகாது. அதே சமயம் நீங்க சொன்ன மாதிரி நாமும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்பதும் சரிதான் அதற்காக சற்று ஏமாந்தவன் எல்லாம் இருப்பதை பரிகொடுத்துவிட்டுப் போகவேண்டியதுதான் என்ற நிலை சரியானது அல்ல. அரசு மனது வைத்தால் நிச்சயம் இந்த மாதிரி குண்டர்களை இனம் கண்டு நாலு தட்டு தட்டி எளிதில் சரி செய்ய முடியும். அவங்களுக்கு இதுக்கெல்லாம் நேரம் கிடையாது அதுதான் பிரச்சினை.

      நீக்கு
    2. நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை. நான் நடைமுறை நிதரிசனத்தை முன் வைத்து சிந்திக்கிறேன். நீங்கள் நடக்க வேண்டியவைகளைப் பற்றி சிந்திக்கிறீர்கள். இதுதான் தலைமுறை இடைவெளி. நீங்கள் எதிர்பார்க்கிறபடி நடந்தால் நானும் மிகவும் சந்தோஷப்படுவேன். நடப்பதில்லையே என்பதுதான் வருத்தம்.

      சிங்கப்பூர் ஒரு ஊர், நாடு அல்ல. அங்கு சட்டத்திற்கு மதிப்பு கொடுக்கும் மனிதர்கள் வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். அப்படிப்பட்ட நிலை இந்தியாவிற்கு வந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

      நான் கடந்த காலம். நீங்கள் நிகழ்காலம். என்ன நடக்கிறது என்று பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது.

      நீக்கு
    3. என்ன பக்குவமான பதில் உங்களுடையது... மூத்தோர் வாய்ச்சொல் அமிர்தம் என்'கிற காலம் காலாவதியானதுதான் நிறைய பின்னூட்டங்களுக்குக் காரணம். எப்படி இருக்க வேண்டும் என்று பேசுகிறவர்கள், அவர்களுக்கு வரும்போது ஜாக்கிரதையாகத்தான் இருப்பார்கள்.

      நீக்கு
  18. //அந்த சம்பவத்தில் அந்தப் பெண் கூட இருந்தவன் நண்பன் என்றுதான் எல்லோரும் குறிப்பிடுகிறார்களே தவிர//

    உங்களுடையது என்ன மாதிரி கருத்து என்றெ சொல்ல இயலவில்லை. அந்த பையன் காதலன் என்றே வைத்துக்கொள்வோமே. அதில் தவறு என்ன இருக்கிறது? உங்கள் கருத்து காதலனுடன் சினிமாவுக்கு சென்று வரும் பெண்ணை கற்பழிக்கலாம் என்பதா? உங்கள் வீட்டில் பெண்கள் யாரும் மாலை நேரத்திற்கு பின் அவசியமோ அல்லது ஏதாவது அவசரம் என்றோ எதற்கும் வெளியே போவதே இல்லையா ?


    இப்படி வைத்துகொள்ளுங்கள். நீங்கள் இரவில் எங்காவது செல்லும்போது உங்களிடம் ஒருவன் வழிப்பறி செய்து விட்ட நிலை. அப்போது திருடனை விட்டுவிட்டு இரவில் ஏன் வெளியே வரவேண்டும் என உங்களை குற்றம் சாட்டினால் எவ்வளவு அபத்தமாக இருக்கும் ? திருடியது தவறு என சண்டைக்கு வர மாட்டீர்கள் ? ஒரு வழிப்பறிக்கே இப்படி என்றால் நடந்தது ஒரு கொடூரமான கற்பழிப்பும், கொலையும் அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிப்பறி, கற்பழிப்பு அனைத்தும் ஒருவன் பாதுகாப்பு இல்லாத சமயத்தில் வெளியில் போனால் நடக்கும் என்று தெரிந்த பிறகும் வெளியில் போவது தவறு என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கும் உங்களைப் போன்றவர்கள் விதண்டாவாதம் செய்யத்தான் லாயக்கு. பாதுகாப்பு இல்லாத சமயங்களில் ஜாக்கிரதையாக இருங்கள் என்றுதான் சொல்ல முடியும். நான் அப்படித்தான் ஆபத்தை விலை கொடுத்து வாங்குவேன் என்றால் வாங்கிக்கொள்ளுங்கள். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.

      திருடியது தவறு என்று யாரிடம் சண்டைக்குப் போவது? திருடனிடமா அல்லது போலீஸ்காரரிடமா? போலீஸ்காரரிடத்தில் போனால் அவர் கேட்கும் முதல் கேள்வி, அந்நேரத்தில் அந்த இடத்தில் உனக்கு என்ன வேலை என்பதாகத்தான் இருக்கும்.

      நியாயம், தர்மம் எல்லாம் பேச்சுக்கு சரி. நடைமுறையில் என்ன நடக்கிறது, என்ன நடக்கும் என்பது தெரியாமல், அல்லது உணர மறுத்து பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம்.

      டில்லியில் ஒரு கற்பழிப்பிற்கு அவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்களே, போன உயிர் திரும்ப வந்துவிட்டதா? அல்லது அதற்குப் பிறகு அங்கு கற்பழிப்புகள் நின்று விட்டனவா?

      "காதலனுடன் சினிமா போன பெண்ணைக் கற்பழிக்கலாமா" என்பது என் கருத்தா என்று கேட்டிருக்கிறீர்கள். நேரம் கெட்ட நேரத்தில் சுற்றினது தவறு என்றுதான் நான் கூறினேன். எப்போதும் கூறுவேன். கற்பழிக்கலாமா என்று நீங்கள்தான் கேட்கிறீர்கள். உங்களுக்கு அப்படி எண்ணம் இருந்தால் அதை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள், என்னுடன் சம்பந்தப்படுத்தாதீர்கள். நான் அப்படி ஒருபோதும் சொல்லவுமில்லை, அப்படிப்பட்ட அயோக்கியத்தனமான எண்ணம் என் மனதிலும் இல்லை. உங்கள் மனதில் அப்படிப்பட்ட எண்ணம் இருக்கிறது போல் எனக்குத் தோன்றுகிறது. அது அவ்வளவு நல்ல குணம் இல்லை. அதை நீக்குங்கள்.

      காதலனுடன் சினிமா போய்விட்டு வந்து ஆபத்தை எதிர்கொண்ட பெண் மாதிரி எங்கள் வீட்டுப் பெண்கள் செய்யமாட்டார்கள். உங்கள் வீட்டுப் பெண்கள் எப்படி?

      நீக்கு