புதன், 20 பிப்ரவரி, 2013

கோடிகளில் புரள ஆசைப்படுங்கள்


இதற்குத் தேவை “மார்க்கெட்டிங்க்” அதாவது பேச்சுத்திறமை. உங்களுக்கு அது இருந்தால் போதும். உலகமே உங்கள் காலடியில் விழுந்து கிடக்கும். அது இல்லாவிடில் நல்ல மூளை வேண்டும். பேச்சுத்திறமையை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்.

முதலில் ஒரு தொழில் திட்டம் தயாரிக்கவேண்டும். இதற்கு நல்ல கன்சல்டென்ட்ஸ் இருக்கிறார்கள். அவர்களிடம் உங்கள் ஐடியாவை ஒரு கோடு போட்டுக் காட்டினீர்களென்றால், அவர்கள் நல்ல பக்கா ரோடு போட்டு விடுவார்கள்.

அடுத்து ஆரம்ப மூலதனம். உலகமயமாக்கல் – இந்த தாரக மந்திரத்தை அறியாதவர்கள் இன்று யாரும் இந்தியாவில் இல்லை. இதனால் பட்டி தொட்டிகளில் இருப்பவர்களெல்லாம் இன்று கோடிகளில் புரள்கிறார்கள். நாமும் அப்படி புரளவேண்டாமா? மேலே படியுங்கள்.

உங்கள் திட்டத்தை நல்ல விளம்பரக் கம்பெனி மூலம் விளம்பரப் படுத்துங்கள். நீங்கள் அடையப்போகும் லாபத்தை மூலதனம் போடுபவர்களுக்கு பிரித்துக்கொடுப்பதாக சொல்லுங்கள். அவர்கள் போட்ட மூலதனம் ஒரு வருடத்தில் மூன்று பங்காக வளரும் என்று சொல்லுங்கள். உங்கள் கற்பனைக்கு வானமே எல்லை.

உங்கள் ஊரில் நல்ல லொகாலிடியில் ஒரு ஆபீஸ் திறந்து கொள்ளுங்கள். நல்ல பெர்சனாலிடி உள்ள நாலு இளம் பெண்களை ஆபீஸ் வேலைக்கு அமர்த்துங்கள். நீங்கள்தான் MD. உங்கள் ரூம் மிகவும் அட்டகாசமாக இருக்கவேண்டும். முதலில் சூடு பிடிக்க கொஞ்ச நாளாகும்.

நல்ல களப்பணியாளர்களாக பத்து பேரை வேலைக்கு அமர்த்துங்கள். அவர்கள் ஊர் ஊராகப்போய் உங்கள் கம்பெனியில் முதலீடு செய்து கோடீஸவரர் ஆனவர்களைப் பற்றி பிரசாரம் செய்யவேண்டும்.
நாளாக நாளாக உங்கள் கம்பெனிக்கு முதலீடு செய்ய ஆட்கள் வருவார்கள். அப்படி வருபவர்களில் ஊருக்கு ஒருவராகத் தேர்ந்தெடுத்து கோவா அல்லது அந்தமானுக்கு டூர் கூட்டிக்கொண்டு போங்கள். மற்றவர்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு கூப்பிட்டு விருந்து வையுங்கள்.

அப்புறம் பாருங்கள். வரும் பணத்தை வாங்கி எண்ணக்கூட முடியாத அளவிற்குப் பணம் வரும். அப்போது ஒரு நல்ல ஆடிட்டரைப் பிடித்து அந்தப் பணத்தையெல்லாம் பினாமி பெயர்களில் முதலீடு செய்து விடுங்கள். அப்படியே ஒரு நல்ல வக்கீலையும் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இனிமேல் நீங்கள் செய்யவேண்டியதுதான் மிகவும் கடினமான வேலை. இப்படி பணம் கொட்டிக் கொண்டிருக்கும்போதே கம்பெனியை மூடிவிடவேண்டும். பணம் மரத்தில் காய்ப்பது போல் கொட்டிக்கொண்டிருக்கும்போது அதை வேண்டாம் என்று சொல்வது மெத்தக் கடினம். ஆனால் இங்கேதான் பலரும் தவறு செய்திருக்கிறார்கள்.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. கம்பெனியை அப்படியே அம்போவென்று விட்டு விட்டு நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் தலைமறைவாகி விடவேண்டும். அவ்வளவுதான் நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிட்டீர்கள். பிறகு என்ன, ராஜபோகம்தான்.

வாழ்த்துக்கள்.

25 கருத்துகள்:

  1. அந்தக் கடைசீல போட்டிருக்கிற படம் என்னங்க?

    அது சிம்பாலிக்கா, உங்களுடைய எதிர்காலத்தைக் காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  2. மரம், கோழி, நிலம் என்று சில பெயர்கள் நினைவுக்கு வருகின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே. புது திட்டங்களுக்கு வரவேற்பு கட்டாயம் இருக்கும்.

      நீக்கு
  3. நான் கேட்கவிருந்த கேள்வியை நீங்களே கேட்டு பதிலும் தந்துவிட்டீர்கள். ‘கேள்வியும் நானே பதிலும் நானே.’ என்பது போல்!

    பதிலளிநீக்கு
  4. கடைசியில் போட்டிருக்க படம் பொருத்தமா இருக்கு

    பதிலளிநீக்கு
  5. கடைசியில படம் போட்டிருந்தாலும் மாட்டினாத்தானே....அப்படியே மாட்டினாலும்எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.... அதான் சேத்து வச்சோமே அத வைத்து வெளியே வந்திடலாம்...கொஞ்ச நாள்ல எல்லாரும் மறந்துடுவாங்க... அப்புறம் திரும்பவும் முடிஞ்சா ஆரம்பிக்கலாம் நம்ம விளையாட்டை .....

    ஏமாற்றும் மக்களின் மனதைப் படம் பிடித்த பதிவு....

    பதிலளிநீக்கு
  6. நீங்க சொன்னதில் பாதி பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் பின்பற்றி இன்னைக்கு பெரிய நடிகராயிட்டாறு. அடுத்து நாலு அழாகா பெண்கள் வேணும்......... அதுக்கு நான் எங்கே போவேன்?!! பணத்தை பினாமி பேர்ல போடணும், அதுக்கு நம்பகமான பினாமி வேணும். நமக்கு கிடைக்கிறவன் எல்லாம் காசு கிடைச்சதும் கம்பியை நீட்டிட்டு தலைமறைவாயிடரானுங்க. ஆக மொத்தத்தில், பித்தலாட்டம் செய்வதற்கும் திறமை வேண்டும், சாமர்த்தியம் வேணும், எல்லோரும் செய்துவிட முடியாது!! ஒருவேளை எல்லோருக்கும் அந்தத் திறமை, சாமர்த்தியம் இருந்திருந்தால் ஏமாறுவதற்கு ஆளே இருந்திருக்க மாட்டான். இது எப்படி இருக்கு!!

    பதிலளிநீக்கு
  7. கொஞ்சம் நெருடலாக இருக்கிறது, அந்த கடைசீல போட்ட படம்!

    பதிலளிநீக்கு

  8. கோடீஸ்வரர் ஆகும் முன் கேடீஸ்வசராய் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. கம்பி எண்ண நல்லா கத்துக்கொடுக்கிறீங்க!

    பதிலளிநீக்கு
  10. கோடிகள் சம்பாதிக்க பல கேடிகளின் துணை தேவை போலயிருக்கு

    பதிலளிநீக்கு
  11. நல்ல வழிதான்! ஆனால் அதற்கும் திறமை வேண்டுமே! :) இல்லையென்றால் கடைசி படம் உண்மையாகிவிடும்!

    பதிலளிநீக்கு
  12. உலகில் எதுவும் இலவசம் இல்லை. ஒவ்வொன்றுக்கும் அதற்குத் தகுந்த விலை கொடுத்துத்தான் ஆகவேண்டும். கொஞ்சம் முன்பின் இருக்கலாம். நான் சொன்ன முறையில் விலையைக் கடைசியில் கொடுப்பீர்கள். அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  13. உங்கள் சூப்பர் ஐடியா வை பலபேர் ஃபாலோ செய்து கொண்டிருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  14. There are a number of participants in the Project as described by you.The consultants,advertising media,marketing agents,interior decorators,travel agents,auditors,advocates and the gullible customers besides the 'entrepreneur'. I guess most of them would have had their share of the pie insome way, but consider it legitimate .When caught, only the 'entrepreneur' is culpable.All others would be scotfree and look for the next project.Erosion in Values appears to be the root cause.Though you might have written this article in a lighter vein,I hope it motivates all of us to light a candle, instead of cursing the darkness.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் இத்தகைய சூழ்ச்சிகளில் சிக்கக் கூடாது என்பதுதான் என் நோக்கம். எதையும் செய் என்று சொன்னால் செய்யமாட்டார்கள். அதுதான் மனித இயல்பு.

      நீக்கு
  15. வணக்கம் ஐயா.....என்னை ஞாபகம் இருக்க என்பது தெரியவில்லை.....எனக்கு ஒரு சந்தேகம்....உங்களால் மட்டும் எப்படி இப்படி நகைசுவையை கலந்து எழுதமுடிகிறது? கண்டிப்பாக பதில் சொல்லவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டென்று உங்களை நினைவிற்கு கொண்டுவர முடியவில்லை, செந்தில். வயதான கோளாறு. மன்னிக்கவும். ஒரு நாள் சந்திப்போம். உங்களுக்கு சௌகரியமான நாள் ஒன்று சொல்லுங்கள்.

      நகைச்சுவை மனதிற்குள் ஊறியிருக்கவேண்டும். வாழ்க்கையில் பலர் நகைச் சுவையை ரசிப்பதில்லை. ஆகவே நிஜ வாழ்க்கையில் என்னால் செய்ய முடியாததை பதிவுகளில் வெளிப்படுத்துகிறேன்.

      நீக்கு
  16. இதுதானே நடக்கிறது.

    கடைசிப்படம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  17. அன்பின் கந்த சாமி அய்யா - பரவா இல்லையே - கடசில படம் போட்டுக் காமிச்சுட்டீங்க - அதுக்குப் போற வழியையும் சொல்லிக் கொடுத்தீட்டிங்க - ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு