இந்த பயணத் தொடரை சீக்கிரம் முடித்து விட்டேன் என்று பலரும் குறைப்பட்டுக் கொண்டதால் நான் சென்ற அடுத்த ஊரைப் பற்றி எழுதுகிறேன்.
நெதர்லாந்திலிருந்து அடுத்தபடியாக நான் போனது இஸ்ரேல் நாடு. இந்த இஸ்ரேல் நாடு உருவான விதம் பற்றி எல்லோரும் அறிந்திருப்பீர்கள். நாடே இல்லாத யூதர் இனத்தினவர்களுக்காக அமெரிக்கா உருவாக்கிக்கொடுத்த ஒரு நாடு. இந்த நாடு இருந்த இடத்தில் இதற்கு முன்பு முஸ்லிம்களின் நாடான பாலஸ்தீனியம் இருந்தது. முஸ்லிம்களை விரட்டியடித்துவிட்டு அங்கு யூதர்கள் குடியேறினார்கள்.
இந்த நிலை வருவதற்குக் காரணம் யூதர்களும் முஸ்லிம்களும் ஒரே பிரதேசத்தில் இருந்து உருவானவர்கள். இருவரும் அண்ணன்-தம்பி என்றே சொல்லலாம். ஜெருசலேம் இருவருக்கும் பொதுவான புனிதஸ்தலம். யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் முதல் கோயில்கள் அங்கு இருக்கின்றன. அண்ணன்-தம்பிகளுக்கிடையான சண்டையில் இருவரும் பிரிந்து விட்டார்கள். ஆனாலும் அவர்கள் இடையே பல ஒற்றுமைகள் இன்றும் இருக்கின்றன.
யூதர்களுக்கான மொழி ஹீப்ரூ. முஸ்லிம்களுக்கான மொழி உருது. உலகிலேயே இந்த இரண்டு மொழிகள்தான் வலமிருந்து இடது புறமாக எழுதப் படுகின்றன.
யூதர்களின் ஆப்ரஹாம் முஸ்லிம்களின் இப்ரஹீம் ஆனார். ஜோசப் யூசுப் ஆனார். இப்படிப் பல உதாரணங்கள் காட்ட முடியும். இன்னும் அதிக விவரங்கள் வேண்டுவோர் கூகுளாரிடம் செல்லவும்.
இந்தியாவின் அயல் நாட்டுக் கொள்கையைப் பற்றி அறிவீர்கள். எப்போதும் பாலுக்கும் காவல்-பூனைக்கும் தோழன் கதைதான். அரேபியர்களிடமிருந்து நமக்கு பெட்ரோலியம் வேண்டும். இஸ்ரேல் அரேபியர்களுக்கு எதிரி. நண்பனின் எதிரி நமக்கும் எதிரிதானே? அதனால் இஸ்ரேலுடன் நமக்கு "டூ". இந்தியாவிலிருந்து இஸ்ரேலுடன் ஒருவரும் எந்த உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது. அங்கு செல்ல பாஸ்போர்ட்டில் அனுமதி இல்லை. இந்தியாவில் இஸ்ரேலுக்கு தூதரகம் இல்லை. அதனால் விசாவும் கிடைக்காது.
அமெரிக்கா இந்தியாவின் சட்டாம்பிள்ளை. அவனுக்கு இஸ்ரேல் செல்லப் பிள்ளை. இஸ்ரேலுடன் நாம் "டூ" விட்டாயிற்று. இதை எப்படி சரிக்கட்டுவது. எல்லாம் மூக்கால் அழுதுதான். ஐயா, எனக்கு பெட்ரோல் இல்லாவிட்டால் செத்துப் போய் விடுவேன். அரேபியர்கள்தான் எனக்கு பெட்ரோல் ஆதாரம். அதனால் அவர்களை சமாதானமாக வைத்துக் கொள்வதற்காக இஸ்ரேலுடன் சும்மானாச்சுக்கும் "டூ" விட்டிருக்கிறேன். நீங்கள் தப்பாக நினைக்கவேண்டாம். அரேபியர்களுக்குத் தெரியாமல் இஸ்ரேல் விஷயத்தில் நீங்கள் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்கிறேன் என்று சொல்லி அவர்களை சமாதானம் செய்தாகி விட்டது.
இது எல்லாம் 1990 ல் இருந்த நிலை. இப்போது பல மாற்றங்கள் வந்து விட்டன. எனக்கு ஒரு நப்பாசை. இந்த நாட்டைப் பார்த்துவிடவேண்டும் என்று. காரணம் இந்த நாட்டில்தான் சொட்டு நீர்ப்பாசனம் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவியது. நான் இங்கு நீர் நுட்பவியல் மையத்தில் பணி புரிந்து கொண்டிருந்ததால் இந்த நாட்டைப் பார்த்து விட்டு வந்தால் ஒரு கெத்தாயிருக்கும் என்று நினைத்தேன்.
ஸ்வீடனுடன் நாங்கள் தொழில் நுட்ப ஒத்துழைப்பு வைத்திருந்ததால் என்னை ஸ்வீடனுக்கு அழைத்தார்கள். அங்கு சென்றபோது என்னுடைய புரோக்ராம் பொறுப்பாளரிடம் என்னுடைய விருப்பத்தை தெரிவித்தேன். அவர் "நோ பிராப்ளம்" என்றார். யூரோப், அமெரிக்கா போன்ற நாடுகளில் நாம் என்ன சொன்னாலும் முதலில் அவர்கள் சொல்லுவது "நோ பிராப்ளம்" என்றுதான். நம் ஊரின் நிலை உங்களுக்கே தெரியும்.
ஆனால் இஸ்ரேலுக்கு விசா வாங்கப் போனபோதுதான் பிராப்ளம் ஆரம்பித்தது. என்ன பிராப்ளம் என்று அடுத்த பதிவில் பார்க்கலாமா?
மிகச் சுருக்கமாகவும் ஆயினும்
பதிலளிநீக்குமிகத் தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி
இஸ்ரேல் குறித்து விளக்கிச் சென்ற விதம் அருமை
ஆவலுடன் தொடர்கிறேன்...
tha.ma 2
பதிலளிநீக்குநான் சிறுவயதில் இதயம்பேசுகிறது என வந்த வார இதழில் மணியன் எழுதிய பயணக்கட்டுரையை போல உங்கள் பதிவும் அருமையாக இருக்கிறது பாராட்டுகள் tha.ma 3
பதிலளிநீக்குஇதயம் பேசுகிறது வார இதழுக்கு முன்பு திரு.மணியன் அவர்கள் ஆனந்தவிகடன் இதழில் இந்த தொடரை எழுதி வந்தார். இந்த தொடரின் மூலம் நாங்கள் உலகை பார்த்து வந்தோம். கருப்பு வெளுப்பு புகைப்படங்கள்தான். ஆனாலும் நன்றாக ரசித்தோம்.
நீக்குஅன்று சினிமா படங்களும் எல்லாம் செட்டிலேயே எடுக்கப்படும். இன்றுதான் ஒரு பாட்டின் முதல்வரிக்கு ஒரு வெளிநாடு இரண்டாம் வரிக்கு இன்னொரு வெளி நாடு என்று பறப்பதால் தயாரிப்பாளரின் தயவில் பல வெளிநாடுகளை பார்க்கமுடிகிறது. இன்டெர்நெட் இருக்கையில் அமர்ந்தபடியே எல்லா வெளி நாடுகளையும் பார்க்க முடிகிறது.
இவையெல்லாம் இல்லாத அந்த காலத்தில் திரு மணியன் அவர்களின் - விகடன் ஆசிரியர் திரு வாசன் அவர்களின் புண்ணியத்தில் - எழுத்து வண்ணத்தில்தான் நாங்கள் வெளிநாட்டைப்பார்த்துகொண்டிருந்தோம். அந்த புகழில்தான் திரு. மணியன் அவர்கள் விகடனை விட்டு வெளியே வந்து 1977இல் இதயம் பேசுகிறது என்ற தனது சொந்த வாராந்தரியை ஆரம்பித்தார். தமிழ் பத்திரிகைகளில் முதன் முதலாக கலர் படம் (அட்டை நீங்கலாக) நடுப்பக்கத்தில் வெளியிட்டது இதயம் பேசுகிறது வாரப்பத்திரிகைதான். பின்னர் அனைத்து பத்திரிகைகளும் அதை பின்பற்ற ஆரம்பித்துவிட்டன. திரு. மணியன் அவர்களது பயணக்கட்டுரைகளை மிஞ்ச இன்றளவும் ஆட்கள்(எழுத்தாளர்கள்) இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. திரு மணியன் அவர்கள் ஞாபகத்தை கிளறியதற்கு நன்றி
சேலம் குரு
//யூதர்களுக்கான மொழி ஹீப்ரூ. முஸ்லிம்களுக்கான மொழி உருது. உலகிலேயே இந்த இரண்டு மொழிகள்தான் வலமிருந்து இடது புறமாக எழுதப் படுகின்றன. உருதுவிலிருந்து தோன்றிய அரபியும் இதே மாதிரிதான். //
பதிலளிநீக்குஉங்கள் கருத்து தலைகீழ். அராபியரின் மொழி அரபி. அரபியும், பார்சியும் இந்துஸ்தானியுடன் கலந்ததே உருது ஆகும். அது தெற்காசியாவிலேயே தோன்றி வளர்ந்த மொழி.
என் தவறுதான். மாற்றிவிட்டேன்.
நீக்கு
பதிலளிநீக்குஒரு சிறிய திருத்தம். உருது இந்தியாவில் அமீர் குஸ்ரு அவர்களால் பாரசிகம் மற்றும் ஹிந்துஸ்தானி மொழிகளை கலந்து உருவாக்கப்பட்டது. அரபி அப்படி இல்லை,அது அந்த பிராதேசிய மொழி.
--
Jayakumar
தவறுக்கு மன்னிக்கவும்.
நீக்குஇஸ்ரேல் பற்றிய தொடரை துவங்கியமைக்கு நன்றி. பல விஷயங்கள் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஅரபி அராபியர்களின் மொழி. உருது இந்தியாவில் உருவான மொழி.
பதிலளிநீக்குவணிகத்திற்காக ஏற்பட்ட பாரசீக மற்றும் அரேபியா தொடர்புகள், பின்னர் எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (கி.மு. 711 அளவில்) முஸ்லீம்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்க முக்கிய காரணமாக அமைந்தன என்றால் அது மிகையாகாது. நாம், இந்தியர்கள், வணிகத்தொடு நின்றோம். ஆனால் மற்றவர்களோ நம்மிடம் இருந்த செல்வ செழிப்பை தமதாக்கிக்கொள்ள நினைத்து விட்டனர். இத்தகைய படையெடுப்புக்களால் பாரசீக, அராபிய மொழிகளின் தாக்கம் ஹிந்துஸ்தானி மொழியில் ஏற்பட ஆரம்பித்து
நாளடைவில் அது உருதுவாக - தனியொரு மொழியாக - ஜனனமெடுத்தது. சில காலம் கழித்து 11ம் நூற்றாண்டுகளில் பாரசீக மற்றும் துருக்கியர்களின் படையெடுப்புகளின் விளைவாக காலத்தின் கட்டாயமாக உருது மொழி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர ஆரம்பித்தது. அதன் பிறகு - காங்கிரசிடமிருந்து ஆட்சி பறிபோன, தற்போது பி.ஜே.பி. கட்சிக்கா அல்லது ஆம் ஆத்மி கட்சிக்கா என்று தெரியவில்லை - டெல்லியில் சுல்தான்களின் ஆட்சி (கி.பி.1200 - கி.பி.1525)ஏற்பட்ட பிறகு கொழு கொழு என்று வளர ஆரம்பித்த உருது அதன் பின் மொகலாய பேரரசுகளின் ஆட்சியில் (கி.பி. 1525 - கி.பி. 1850) நன்கு தனது கால்களை பதித்துக்கொண்டது. இதற்கும் ஹிந்திக்கும்தான் நாலா தொடர்பு இருந்ததே தவிர (ஹிந்தி நமது முறைப்படி இடது வலதாக எழுதப்படுகிறது. உருது வலது இடதாக எழுதப்படுகிறது) . அரபிதான் உருதுவுக்கு ஊட்டி வளர்த்திருக்கிறது. அரபி அந்த தேசத்து மொழி. உருது நமது நாட்டில் பிறந்து வளர்ந்த தற்போது முஸ்லிம்களால் பெரிது பேசப்படும் மொழியாக இருக்கிறது. இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் உருதுவும் ஒன்று.
சேலம் குரு
விரிவான தகவலுக்கு நன்றி.
நீக்கு//இந்த பயணத் தொடரை சீக்கிரம் முடித்து விட்டேன் என்று பலரும் குறைப்பட்டுக் கொண்டதால் நான் சென்ற அடுத்த ஊரைப் பற்றி எழுதுகிறேன்.//
பதிலளிநீக்குஇஸ்ரேல் நமக்கு நட்பு நாடாக (யாரால் என்பது வேறு விஷயம்) இல்லாதிருப்பதால் அந்த நாட்டுக்கு போவது ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனைகள் அதிகம் இருந்திருக்கும். எனவே இஸ்ரேல் சின்ன நாடாக இருந்தாலும் அதை பற்றிய பதிவு பெரிதாக இருக்கும் என்று நினைக்கிறோம்.
திருச்சி அஞ்சு
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது.
நீக்குஆவலுடன் எதிர்பார்க்கிறோம். பெரிய தொடராக இருக்கட்டும். இன்னொரு முறை ஏமாற்றிவிடாதீர்கள்.
பதிலளிநீக்குதிருச்சி தாரு
//நாடே இல்லாத யூதர் இனத்தினவர்களுக்காக அமெரிக்கா உருவாக்கிக்கொடுத்த ஒரு நாடு //
பதிலளிநீக்குஒரு பக்கம் நாடில்லாத மக்களுக்கு ஒரு நாட்டை உருவாக்கிக்கொடுத்த வகையில் அமெரிக்காவை பாராட்டித்தான் ஆக வேண்டும். ஆனால் அதே சமயம் அமெரிக்கா உலகின் போலீஸ்காரனாக தன்னை நினைத்துகொண்டு அனைத்து நாடுகளின் விஷத்திலும் தலையிட இது ஒரு மோசமான முன்னுதாரணமாக அமைத்துவிட்டது என்பது உண்மைதான்.
திருச்சி காயத்ரி மணாளன்
1971இல் பாகிஸ்தானுடன் சண்டை ஏற்பட்டபோது இந்த போலிஸ்காரன்தான் இந்திய பெருங்கடலில் இருக்கும் டீகோ கார்சியா தீவில் தனது ஏழாவது கடற்படையை கொண்டு வந்து நிறுத்தி இந்தியாவை அச்சுறுத்தினான். அதனால்தான் முந்தைய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் ருஷியாவுடன் ராணுவ உடன்படிக்கை செய்துகொள்ளும் ராஜதந்திர நடவடிக்கை எடுத்தார்.
நீக்குபோலிசுக்கு உள்ளூரில் வேலை இல்லாதபோது இப்படித்தான் உலகின் அனைத்து நாடுகளிலும் ஊடுருவி இல்லாத பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டிருந்தான்.
சேலம் குருப்ரியா
//முஸ்லிம்களை விரட்டியடித்துவிட்டு அங்கு யூதர்கள் குடியேறினார்கள்.//
பதிலளிநீக்குஆஸ்திரேலியா நாட்டில் இப்படித்தான் பழங்குடியினர்களை புறந்தள்ளி உலக மக்கள் குடியேறினார்கள். தற்போது அங்கு பழங்குடியினர் தனது உரிமைக்கு போராட வேண்டியிருக்கிறது. அங்காவது அவர்களை நாட்டை விட்டு விரட்டியடிக்க வில்லை (ஒரு வேளை சுற்றிலும் கடல் சூழ்ந்திருந்ததால் வெளியேற முடியவில்லை போலும். இல்லையென்றால் விட்டிருக்க மாட்டார்களே) ஆனால் இங்கோ அனைத்து முஸ்லிம்களையும் விரட்டியடித்து விட்டுத்தான் யூதர்களை அமெரிக்க குடியமர்த்தியது. அமெரிக்கா ரஷியா நாடுகளுக்கிடையே இருந்த பனிபோரின் போது பூகோள ரீதியாக அமெரிக்காவுக்கு இந்த இடத்தில் ஒரு நட்பு நாடு வேண்டியிருந்தது. நன்கு உபயோகபடுத்திகொண்டது.
சேலம் குருப்ரியா
//இருவரும் அண்ணன்-தம்பி என்றே சொல்லலாம்.....அண்ணன்-தம்பிகளுக்கிடையான சண்டையில் இருவரும் பிரிந்து விட்டார்கள்//
பரவாயில்லையே, அங்கும் பங்காளி சண்டை இருக்கிறதே.
சேலம் குரு
பங்காளி சண்டை என்பது அங்கிங்கெனாதபடி என்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு தேவையில்லாத விசித்திர ஜந்து. ஈகோ என்று சொல்லபடும் தன்னடக்கம் இல்லாத குணத்தினால் ஏற்படுவது. கூடவே இருக்கும் அல்லக்கைகளினால் விசிறிவிடப்படுவது. கோர்ட்டில் இருக்கும் கேஸ்களில் ஒரு குறிப்படத்தக்க அளவு இந்த பங்காளி சண்டைகளினால்தான் இருக்கிறது. என்ன இதனால் சில பல வக்கீல்களின் வாழ்க்கை ஓடுகிறது என்று சொல்லலாம்
நீக்குதிருச்சி காயத்ரி மணாளன்
இதெல்லாம் - பங்காளி சண்டை, அல்லக்கைகள் - உண்டு கொழுத்து வேலையற்றிருப்போரிடம் இருப்பவை. அடுத்த வேலைக்கே லாட்டரி அடிப்பவனுக்கு எங்கிருந்து இதற்கெல்லாம் நேரம் இருக்க போகிறது. என்ன அல்லக்கையாக இருந்தால் ஒரு நாளைக்கு 100 ரூபாய் கிடைக்கிறது என்றால் இருக்க ரெடியாக இருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட அல்லக்கைகள் இப்படியெல்லாம் ஏத்தி விடமாட்டார்கள்.
நீக்குதிருச்சி அஞ்சு
//அண்ணன்-தம்பிகளுக்கிடையான சண்டையில் இருவரும் பிரிந்து விட்டார்கள்//
பதிலளிநீக்குஏன் அய்யா பிரிந்து விட்டார்கள். ஏதேனும் சொத்து சண்டையா இல்லை வேறு ஏதாவது சதியா. முடிந்தால் இதை பற்றியும் பின்னர் எழுதுங்களேன்
திருச்சி அஞ்சு
அண்ணன் தம்பிகள் பிரிந்து விடவில்லை. அவர்கள் பிரித்து விடப்பட்டார்கள் என்பதே உண்மை.
நீக்குஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக்கொண்டாட்டம் என்று நம் கிராமங்களில் சொல்வார்கள். அந்தமாதிரி எங்கேயாவது ஒரு பிரச்சனை என்றால் உலக போலீஸ்காரன் என்று தன்னை நினைத்துக்கொள்ளும் அமெரிக்கா உள்ள புகுந்து - சமாதானம் செய்தால் பரவாயில்லை - அதில் தனக்கு ஆதாயம் என்ன என்று பார்க்க ஆரம்பித்து விடும். 1989இல் குவைத் சண்டையின் போது சண்டையில் குஎஐடுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று சொல்லி தனது ஆயுதகிடங்குகளில் துருபிடித்துகொண்டிருந்த ஆயுதங்களை எல்லாம் உபயோகப்படுத்திவிட்டு அவ்வளவுக்கும் குவைதிடமிருந்து காசு வச்சொல் பண்ணிவிட்டதல்லவா இந்த போலீஸ்காரர் செய்த வேலை.
ஆனால் இதைபற்றியெல்லாம் விரிவாக எழுத முடியுமா என்றுதான் தெரியவில்லை.
திருச்சி காயத்ரி மணாளன்
இங்கு மத்திய அரசு ஒருசில தொழிலதிபர்களால் நடத்தப்படுகிறது என்று சொல்வது மாதிரி அமெரிக்காவிலும் ஆயுதங்கள் உற்பத்தி செய்பவர்களால்தான் நடத்தப்படுகிறதாம். உலகில் நாடுகளுக்கிடையே சண்டை ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைபவர்கள் அவர்கள்தான். அமெரிக்கா அதிபர்கள் இந்த மாதிரி விசயங்களில் சொந்தமாக முடிவெடுக்க முடியாது என்பது உண்மையே. நமது நாட்டிலும் அமைச்சர்கள் பலர் தொழில் அதிபர்களின் கைப்பாவையாக இருப்பதற்கு காரணம் என்ன என்று சொல்லவே வேண்டியதில்லை
நீக்குதிருச்சி தாரு
இந்த நாட்டில்தான் சொட்டு நீர்ப்பாசனம் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவியது.
பதிலளிநீக்குநீர் நிர்வாகத்தில் முன்னேறிய நாட்டைப்பற்றிய பகிர்வுகள் ..பாராட்டுக்கள்..!
எழுதுகிறேன், இராஜராஜேஸ்வரி.
நீக்கு//அண்ணன்-தம்பிகளுக்கிடையான சண்டையில் இருவரும் பிரிந்து விட்டார்கள்//
பதிலளிநீக்குஏன் அய்யா பிரிந்து விட்டார்கள். ஏதேனும் சொத்து சண்டையா இல்லை வேறு ஏதாவது சதியா. முடிந்தால் இதை பற்றியும் பின்னர் எழுதுங்களேன்
திருச்சி அஞ்சு
பதிலளிநீக்கு// நாம் வழக்கமாக முதல் பக்கம் என்று உபயோகப்படுத்துவது அவர்களுக்கு கடைசி பக்கம். அவர்கள் புஸ்தகங்களை எடுத்தால் நாம் வழக்கமாக கடைசிப் பக்கம் என்று சொல்லும் பக்கத்திலிருந்துதான் ஆரம்பமாகும்,//
அப்ப அதனால்தான் "முதல்ல கொஞ்சம் பக்கத்தை காணோம்" அல்லது "கடைசியில கொஞ்சம் பக்கத்தை காணோம்" என்று படம் எடுக்காமல் எல்லோருக்கும் பொதுவாக "நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்" என்றால் பிரச்னை இல்லை என்று இப்படி ஒரு படத்தை எடுத்தார்களோ? . ஹா. ஹா. சும்மா தமாஸ்
திருச்சி தாரு
இதைப்பற்றி - வலமிருந்து இடமாக படிக்கும் வழக்கம் - ஒரு ஜோக் கூட உண்டு. புதிதாக வாஷிங் பவுடர் ஒன்றுக்கு விளம்பரம் செய்ய புறப்பட்ட ஒரு கம்பனி மற்ற இடங்களில் செய்தது போலவே இங்கும் மூன்று படங்கள் மூலம் விளம்பரம் செய்ததாம். ஆனால் விளம்பரத்துக்கு பிறகு மற்ற ஊர்களில் விற்பனை அதிகரிக்க, இந்த ஊரில் மட்டும் விற்பனை படுத்துவிட்டதாம். காரணம் முதல் படத்தில் ஒரு நடிகை (நடிகையை போட்டால்தானே நாம் பார்க்கிறோம் என்பது வேறு விஷயம்) கவலை தோய்ந்த முகத்துடன் அழுக்கு துணியை காட்டுவாள். இரண்டாவது படத்தில் இந்த வாஷிங் பவுடர் கலக்கிய தண்ணீரில் அந்த துணியை முக்குவாள். மூன்றாவது படத்தில் 'பளிச்' என்றிருக்கும் துணியுடன் முகமலர்ந்து சிரிப்பாள். இதை வலமிருந்து இடமாக பாருங்கள். சலவைத்துணி அழுக்காகிவிடுமல்லவா. அப்புறம் எப்படி விற்பனை பெருகும்?
நீக்குஅது மாதிரி பார்க்கும் கோணம் புரியாமல் நாம் நடந்து கொள்ளக்கூடாது
சேலம் குருப்ரியா
அய்யா அவர்கள் என்ன சொல்லி இந்த விசா ப்ராப்ளத்தை வெற்றி கொண்டார்கள் என்று சொன்னால் ' விசாவை தன் வசப்படுத்திய தன்னிகரற்ற தமிழன்' என்று ஒரு பட்டமளிக்கலாம் என்று நினைகிறேன்
பதிலளிநீக்குசேலம் குருப்ரியா
அதைவிட 'விசா கவுண்டன்' என்று அழைத்தால் நன்றாக இருக்குமோ?
நீக்குதிருச்சி காயத்ரி மணாளன்
//அதனால் அவர்களை சமாதானமாக வைத்துக் கொள்வதற்காக இஸ்ரேலுடன் சும்மானாச்சுக்கும் "டூ" விட்டிருக்கிறேன். //
பதிலளிநீக்குஇது தர்ம நியாயத்திற்கு அடுக்குமா? நாம் வாழவேண்டும் என்று இப்படி நல்லவன் ஒருவனை (இஸ்ரேல் நல்லவன் எனும் பட்சத்தில்) எதிரியாக நினைக்கலாமா. சும்மனாச்சுக்கும் டூ விட்டிருக்கிறேன் என்பது இந்திய மாதிரியான நாட்டுக்கு சரியில்லை என்றே கருதுகிறேன்.
திருச்சி அஞ்சு
//காரணம் இந்த நாட்டில்தான் சொட்டு நீர்ப்பாசனம் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவியது. //
பதிலளிநீக்குநம் நாட்டில் இதன் நிலை இப்போது என்ன என்று அய்யா அவர்கள் விவரிக்க முடியுமா? காவிரி தண்ணீர் நமக்கு இப்படி தண்ணி காட்டும் நிலை. வருண பகவானும் கருணை காட்ட வில்லை. அத்தகைய நிலையில் சொட்டுநீர் பாசனம் நல்லதொரு வழியாக தெரிகிறது. ஆனால் தஞ்சாவூர் பக்கம் சென்றால் இத்தகைய முறையை காண முடியவில்லை. ஏன் நமது விவசாய நிபுணர்கள் இதை நல்ல முறையில் எடுத்து சொல்லி முன்னேற்றக்கூடாது
திருச்சி காயத்ரி மணாளன்
//இந்தியாவின் அயல் நாட்டுக் கொள்கையைப் பற்றி அறிவீர்கள். எப்போதும் பாலுக்கும் காவல்-பூனைக்கும் தோழன் கதைதான்.//
பதிலளிநீக்குஇதுதான் நமது நாட்டையே கெடுத்துகொண்டிருகிற ஒரு விவகாரம். நமக்கு சொந்த புத்தியென்று ஒன்றில்லாமல் இதுவும் வேண்டும் அதுவும் வேண்டும் என்று கடைசியில் ஒன்றும் இல்லாமல் நிற்கிறோம். உள்நாட்டிலும் அதே குழப்பம்தான். நமக்கென்று ஒரு சுயமான கொள்கை இல்லாமல் கேபிடலிசம் சோசியலிசம் கம்யுனிசம் என்று எல்லாவற்றையும் சேர்த்து குழப்பி ஒன்றுக்கும் உதவாத ஒரு கொள்கை. நமது நாட்டுக்கு ஒத்து வரும் கொள்கை ஒன்றை வகுத்தால் போதும். இன்றில்லையென்றாலும் நாளை நாடு முன்னேறும்.
சேலம் குரு
//எனக்கு ஒரு நப்பாசை. இந்த நாட்டைப் பார்த்துவிடவேண்டும் என்று. //
பதிலளிநீக்குஆசைப்படுங்கள். புத்தர் சொன்னமாதிரி ஆசையில்லாமல் இருந்துவிடாதீர்கள். ஆசைப்பட்டதால்தானே இஸ்ரேலை பார்க்க முடிந்தது. ஆனால் அந்த ஆசை அய்யா அவர்கள் பட்டமாதிரி நல்ல டைரக்சனில் இருந்துவிட்டால் போதும். எனவே ஆசைபடுங்கள் எல்லோரும் ஆசைபடுங்கள் ஆனால் நல்லதுக்காக ஆசைப்படுங்கள்
இந்த கருத்து பின்னூட்டத்தில் வரவேண்டும் என்ற ஆசையுடன்
சேலம் குருப்ரியா
//எல்லாம் மூக்கால் அழுதுதான்//
பதிலளிநீக்குஅப்படியென்றால் என்ன?
மூக்கால் அழுவது என்றால் அது இயலாமையை குறிப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் சொல்லா இல்லை காரியம் சாதிப்பதற்காக செய்யப்படும் செயலா இல்லை யாரிடம் அழுகிறோமோ அவர்கள் சரி சரி மூக்கால் அழுதுவிட்டான் செய்து தொலைத்துவிடுவோம் என்று நினைக்க தூண்டும் காரியமா
இதற்கும் நீலி கண்ணீருக்கும் எதாவது தொடர்பு உண்டா என்று அய்யா அவர்கள் ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும்
திருச்சி காயத்ரி மணாளன்
மூக்கால் அழும்போது கண்களில் தானாகவே நீலிக்கண்ணீர் வரும்.
நீக்குரசித்தேன்...(!!!!!)
பதிலளிநீக்குநன்றி, DD
நீக்குரசித்தேன். பின்னூட்டங்களையும் சேர்த்து.
பதிலளிநீக்குநன்றி, GMB.
நீக்கு"நோ பிராப்ளம்" ........ தொடருங்கள் ஐயா ....... "நோ பிராப்ளம்"
பதிலளிநீக்குநன்றி, வை.கோ.
நீக்குஇஸ்ரேல் பயணம் பற்றிய தொடர் வழக்கம்போல் ஒரு சுவாரஸ்யமான தொடராக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இஸ்ரேலின் பால் பண்ணை பற்றியும், அவர்கள் கறவை மாடுகளை பரமரிப்பது பற்றியும், அந்த கறவை மாடுகள் அதிக பால் கொடுக்கும் இரகசியத்தையும் சொல்வீர்கள் என எண்ணுகிறேன்.
பதிலளிநீக்குஇஸ்ரேல் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா...
பதிலளிநீக்குஉங்கள் பயணம் குறித்து அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம்...
i donot agree from you, that america didnot give them a country, rather they had earlier before america was found and named. pls read history
பதிலளிநீக்குஉண்மைதான். கிறிஸ்து பிறந்ததே அந்த நாட்டில்தானே. இருந்தாலும் யூதர்கள் பலவாறாக சிதறிப் போய் 1940 ல் தானே இப்போதைய இஸ்ரேலை ஸ்தாபித்தார்கள். அதற்கு அமெரிக்கா மிகுந்த ஆதரவு அளித்ததுதானே.
நீக்கு