என் பதிவைப் படிக்கும் நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
என்னுடைய கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் 500 GB கொண்டது. இதில் C,D,E ஆகிய பிரிவுகள் இருக்கின்றன.
நான் பாட்டுகள், மகாபாரத விடியோக்கள், கதைகள், வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி போன்ற கட்டுரைகள், சமையல் குறிப்புகள், பிரயாணக் கட்டுரைகள் என்று பலவற்றை டவுன்லோடு செய்து வைத்துள்ளேன். இந்த வயதிற்குப் பின் (80) என்ன முன்னேற்றம் காணப் போகிறீர்கள் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. இளம் வயதில் இந்தக் கட்டுரைகளைப் படித்திருந்தால் நாம் எவ்வளவு முன்னேறியிருப்போம் என்று ஒரு பகல் கனவு காண்பதற்காகத்தான் இவைகளை சேகரிக்கிறேன்.
சமையல் குறிப்புகள் எதற்காக சேமிக்கிறேன் என்றால் இவைகளை என் மனைவி பார்த்து ஒரு நாளாவது அது போல் செய்து கொடுக்க மாட்டார்களா என்ற நப்பாசைதான் காரணம். இரண்டாவது காரணம் இந்தக் குறிப்புகளை யூட்யூப்பில் சொல்லும் சமையல் நிபுணிகள் மிகவும் அழகாக இருக்கிறார்கள்.
ஹார்டு டிஸ்கின் கொள்ளளவு குறைந்து கொண்டே வருகிறது. என்ன செய்யலாம் என்று வயதானபின் மிகவும் செயல் குறைந்து போன என் மூளையை கசக்கி யோசித்ததில் ஒரு வெளியிலிருந்து செயல்படும் ஹார்டு டிஸ்க் வாங்கிக்கொண்டால் சௌகரியமாக இருக்கும் என்று தோன்றியது. இதற்குக் காரணம் இன்டர்நெட்டில் பல இடங்களில் வந்த கட்டுரைகளைப் படித்ததின் விளைவு..
என் ஆஸ்தான கம்ப்யூட்டர் டாக்டரும் அவ்வாறே அபிப்பிராயப்பட்டார். ஒரு வேகத்தில் நேற்று கம்ப்யூட்டர் கடைக்குப் போய் Seagate 1 TB அளவுள்ள ஒரு எக்ஸ்டர்னல் ஹார்டு டிரைவ் வாங்கிக்கொண்டு வந்து விட்டேன். ஒரு அனாமத்து கணக்கில் வந்த ஐயாயிரம் ரூபாய் பாக்கெட்டில் துள்ளிக்கொண்டு இருந்ததும் மற்றொரு காரணம். இதன் விலை 5300 ரூபாய் ஆயிற்று.
ஆக மொத்தம் இன்னொரு வெள்ளை யானையை வாங்கியாயிற்று. இரவு முழுவதும் இந்த யானையை எப்படி பராமரிப்பு செய்வது என்ற கவலையில் தூக்கத்தைத் தொலைத்தேன். (முதலிலேயே தூக்கம் வருவதில்லை என்பது வேறு விஷயம்.)
இந்த விஷயத்தில் நம் பதிவுலக நண்பர்கள் உதவுவார்கள் என்கிற என் ஆழ்ந்த நம்பிக்கையின் பேரில் இந்த விஷயத்தை இங்கு பதிவிடுகிறேன். உங்களுக்குத் தெரிந்த யோசனைகளை பின்னூட்டத்தில் தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பதிவுலக நண்பர்களின் ஆலோசனைக்காக நானும் காத்துக் கொண்டிருக்கிறேன் ஐயா.
பதிலளிநீக்குஏனென்றால் நானும் தங்கள் ரகம்தான்.
த.ம.1
பதிலளிநீக்குஇதுக்கென்ன பராமரிப்பு? கட்டி வச்சு தீனியாப்போடப்போறீங்க?
பதிலளிநீக்குதனித்தனி தலைப்பு கொடுத்து அதில் சேமிக்க வேன்டியதுதானே. நான் அப்படித்தான் செய்கிறேன். ஆனால் பத்திரமாகக் கையாள வேண்டுமாம்.தொப்ன்னு தரையில் விழுந்தால் எல்லாம் போச்:(
இங்கே விலை இந்தியக் காசில் நாலாயிரத்துக்குக் கீழ்!
என்னுடைய கணினியில் உள்ளேயே 1 TB உள்ளது. நான் அதைத் தவிரவும் 1 TB வைத்துள்ளேன். அதிலும் கால்வாசிக்கும் மேலேயே நிரம்பி விட்டது. இப்போதுதான் குப்பைகள் சேர்ப்பதைக் கொஞ்சம் நிறுத்தியுள்ளேன்! :)))
பதிலளிநீக்குபராமரிப்பு என்று எதை கேட்கிறீர்கள்?
பதிலளிநீக்குஉபயோகிப்பதைத்தான் பராமரிப்பு என்று கூறி விட்டேன். தவறுதலான வார்தைப் பிரயோகம்
நீக்குபோதுமான அளவு ஆலோசனைகள் கிடைத்திருக்கிறது'னு நினைக்கிறேன்...
நீக்குஒரு வெளியிலிருந்து செயல்படும் ஹார்டு டிஸ்க் வாங்கித்தருவதாக எனக்கும் சொல்லியிருக்கிறார் மகன் ..தங்கள் தகவல்கள் எனக்கும் பயனளிக்கும் என மகிழ்ச்சி..!
பதிலளிநீக்குசமையல் குறிப்புகள் செய்வதிலும் அலங்காரம் இருப்பதால், அப்படித்தான் தோன்றும்... அதை சாப்பிட்டால் வீட்டின் அருமை தெரியலாம்... ஹா... ஹா...
பதிலளிநீக்குவழக்கமாக நண்பர்களுக்கு அனுப்பும் இணைப்புகளை உங்களுக்கும்... இதோ :
1. http://www.windowstalk.org/2013/01/maintain-external-hard-drive/
2. http://www.overstock.com/guides/tips-on-maintaining-your-hard-drive
இதையும் முயற்"சிக்கலாம்" : http://www.tamilinfotech.com/2012/12/ADrive-account-50GB-Dataspace.html
நன்றி ஐயா...
அய்யா,
பதிலளிநீக்குஇது ஒண்ணும் பெரிய சமாச்சாரம் இல்ல. அதை கணிணியுடன் இணைத்து விட்டு ஒரு கூடுதல் டிரைவாக (F:\\ ?) பாவிக்க வேண்டியது தான்.
ஏற்கனவே 20-30 mb-களுக்கு driver, லொட்டு-லொசுக்கு கோப்புகள் வைத்திருப்பார்கள். அதைத் தூக்கி எறியாமல் ஒரு sub-folderல் போட்டு வைக்கவும்.
அப்புறம் 1 TB என்பது நிசமாக 931 GB வரைக்கும் தான் இருக்கும்.
மிச்சத்தைக் கேட்டு கடைக்காரனிடம் சண்டை போடவேண்டாம்.
பார்க்க...
http://www.techzonez.com/forums/showthread.php/7243-Drive-Capacity-explained
உள்ளே ஒரு folder உருவாக்கி பின்னர் தேவைக்கேற்ப பல sub-folder களை உருவாக்கிக் கொள்ளலாம். இது பின்னர் தேடுதலை எளிமையாக்கும்.
உங்களின் அத்தியாவசியமான கோப்புகளை அங்கே படியெடுத்துக் (copy) கொள்ளவும். அட்டாலியில் போட வேண்டிய கோப்புகளை external-driveக்கு கொண்டு (move) செல்லவும்.
self-powered-ஓ இல்ல usb-powered-ஓ ரொம்ப நேரம் சுத்த விடாதீர்கள். ஒரே நேரத்தில் ஓரிரு மணி நேரத்திற்கு அதிகமாக ஓட்டாதீர்கள்.
ஒன்றை மறக்க வேண்டாம். external driveகளுக்கும் ஆயுள் உண்டு. 1000 அல்லது 2000 பயன்பாட்டிற்குப் பின்னர் அவைகளும் பொசுக்கென்று போய்விடலாம்(அனுபவம்!).
ஐயையோ, அப்புறம் இன்னொரு 5000 ரூபாய் தண்டம் வேறயா? அப்புறம் அதில் வைத்திருந்த டேட்டா எல்லாம் கோவிந்தாவா? எப்படியொ என் காலம் வரைக்கும் தாங்கினால் போதும்.
நீக்குநீங்கள் கூறியுள்ளபடி இதை கணிணியில் இணைத்தவுடன் வேலை செய்வதில்லை. குறிப்பாக விண்டோஸ் 8 இதை லேசில் ஒத்துக் கொள்வதில்லை. இதை ஸ்கேன் செய்யவேண்டும் என்று சொல்லும். பிறகு கொஞ்சம் ரிப்பேர் இருக்கிறது, அதை சரி செய்யவா என்று கேட்கும். சரி என்று சொன்னால் கொஞ்ச நேரம் ஜால வித்தைகள் காட்டிவிட்டு அப்புறம்தான் இதை ஏற்றுக்கொள்ளும்.
நீக்குநான் இதை மூன்று நாள் அல்லாடிய பின் கண்டுபிடித்தேன். ஆகவே விண்டோஸ் 8 பயன் படுத்துபவர்கள் கொஞ்சம் மெனக்கெடவேண்டி வரும்.
நமக்கு எவ்வளவு இடமிருந்தாலும் போதாது ஐயா.அதனால் தான் மேகக் கணினி குறித்தும் கட்டற்ற சேமிப்பு குறித்தும் சிந்தித்து வருகிறார்கள். விரைவில் அளவற்ற சேமிப்பு வசதி நமக்குக் கிடைத்துவிடும் ஐயா.
பதிலளிநீக்குvanakkam ayya, even though it is external hard disk, plz dont move, or shake while it is in operation. keep atleast 3 or more partition and sub folders. try to use splitted (Y shape) USB 2.0 or 3.0 cable to gain enough supply. seagate supporting SATA to Firewire, SATA to eSATA and SATA to thunderbolt ports. if you have eSATA port in your desktop or in laptop computer plz use it instead of USB to gain more bus speed. seagate providing "goflex" application (as optional) for back up, if you use this application keep your internal recycle bin as empty.
பதிலளிநீக்குbest regards from
kannan.
abu dhabi.
http://samykannan.blogspot.ae/
samykannan@yahoo.com
பதிவைப் படித்துக்கொண்டு வரும்போது வரிகள் ஒன்றுக்குள் ஒன்று ஒளிந்து கொள்கின்றன.
பதிலளிநீக்கு// இரண்டாவது காரணம் இந்தக் குறிப்புகளை யூட்யூப்பில் சொல்லும் சமையல் நிபுணிகள் மிகவும் அழகாக இருக்கிறார்கள்.// :))
பதிலளிநீக்குஎனக்கும் இந்த தொழில்நுட்பத்திற்கும் ரொம்ப...................தூரம். நான் எஸ்கேப்!
பதிலளிநீக்குஇந்த வயதில்தொழில் நுட்பப் பதிவுகளை படித்து கணினியை தானாகவே அப்க்ரேட் செய்யக் கூடியவர்களை உங்களைத் மிக சிலரை இறுகக் கூடும் தாங்கள் ஒருமுறை விண்டோஸ் 8 ஐயும் பயன்படுத்திப் பார்த்தது எனக்கு ஆச்சர்யம் அளித்தது.
பதிலளிநீக்குபென்டிரைவே போலவே பயன்படுத்த முடியும் என்பதால் கையாள்வது எளிது. இதிலும் சில சில Partitionகளை செய்து கொள்ளவும்.
ம்ஹும் ...நான் இந்த விளையாட்டுக்கு வரலை !
பதிலளிநீக்குபார்ட்டிசன் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்....
பதிலளிநீக்குஎனக்கும் நீங்க வாங்கியதைப் போல ஒன்று வாங்க வேண்டும் என்று ஆசை. என் நண்பர் நீ வாங்கிக் கொடு. ஆயிரம் உருப்படியான ஆங்கிலப்படங்களை தலைப்பிட்டு பதிவு செய்து தருகின்றேன் என்று சொல்லியுள்ளார். வாங்கினால் பார்க்க நேரம் இருக்க வேண்டும். அதற்காக வாங்காமல் இருக்கின்றேன். முடிந்தால் உங்களுக்கு பிடித்த பழைய புதிய படங்களை பதிவு செய்து பார்த்து அனுபவிங்க. படிப்பதை விட உங்களைப் போன்றவர்கள் (விட்டுப் போன) பல டாக்மெண்ட்ரி படங்கள், தமிழ் ஆங்கிலப் படங்களை பதிவு செய்து தினம் ஒன்றாக பார்த்து ரசிக்கலாமே?
பதிலளிநீக்குமிக்க நன்றி, ஜோதிஜி. எல்லாவற்றிற்கும் ஆசை இருக்கிறது. ஆனால் உடல் மற்றும் மனோதிடம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. சினிமாக்களை பத்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடிவதில்லை.
நீக்குஉங்கள் கேள்விக்கு வந்த பதில்கள் என்னுடைய சில ஐயங்களை போக்கிவிட்டது. அதற்காக நன்றி!
பதிலளிநீக்குENAAKKU KATHAIPADIPPATHU POL ULLATHU. VETTIVELAI . SYSTETHILINNAITHUVIDDAL PAYANPADUTHIYAVUDAN EDUTHUVIDAVUM. OTHERWISE CRAZ AAKI VERU VANGAVENDIYATHAGIVIDUM.
பதிலளிநீக்குஅதாவது சின்னையா கருணாநிதி என்ன சொல்கறார் என்றால்-
நீக்குஎனக்கு கதை படிப்பது போல் உள்ளது. வெட்டிவேலை. சிஸ்டத்தில் இணைத்து விட்டால் பயன்படுத்தியவுடன் எடுத்துவிடவும். இல்லாவிட்டால் கிரேஷ் ஆகி வேறு வாங்கவேண்டியதாகிவிடும்.
நன்றி சின்னையா கருணாநிதி..