வியாழன், 10 ஏப்ரல், 2014

இது என்ன மாயவேலை?

நான் திருச்சியில் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை சந்திக்கச் சென்றது உங்களுக்குத் தெரியும். அப்போது அவர் கேமராவில் நாங்கள் இருவரும் சேர்ந்திருப்பதை படம் எடுத்தார். படம் கீழே காண்க.


இந்தப் படத்தில் திடீரென்று ஒரு மூன்றாவது நபர் நுழைந்திருக்கிறாரே, அவர் யார் என்று என்னைக் கேட்டார். படம் பார்க்க.


படம் அவருடைய கேமராவினால் எடுக்கப்பட்டது. என்னால் இது எப்படி நடந்தது என்று சொல்ல முடியவில்லை. யாராவது பாஸ்வேர்டு தெரிந்தவர்கள் இப்படி செய்திருக்கலாம் அல்லது ஏதாவது கம்ப்யூட்டர் வைரஸ் செய்த வேலையாயிருக்கலாம். நண்பர்களே, உங்களில் யாருக்காவது இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா?

11 கருத்துகள்:

  1. முதல் படத்தில் உள்ள தெளிவு இரண்டாம் படத்தில் இல்லை. ப்ளர் ஆகியிருக்கிறது. வெளுத்திருக்கிறது.

    படம் மொத்தமும் கொஞ்சம் இடது பக்கம் ஒதுங்கி இருக்கிறது. இடது பக்க முகத்தை சரியாக ஒட்ட வைக்க வேண்டி இருக்கலாம்.

    இதே காரணத்துக்காக வேண்டி படம் சற்றே ஜூம் செய்யப் பட்டிருக்கிறது. :)))))

    பதிலளிநீக்கு
  2. இது ஏதோ Photoshop வேலை என எண்ணுகிறேன். இந்த துறையை நன்கறிந்தவர்கள் விளக்கக்கூடும்.

    பதிலளிநீக்கு
  3. ஏப்ரல் 1 அன்று வந்து இருக்க வேண்டிய பகிரவோ...? ஹிஹி...

    பதிலளிநீக்கு
  4. அந்த ஏரியாவில் ஏதாவது பிரிட்டிஷ்காரன் அந்தக்காலத்தில் இருந்திருக்கக்கூடும் !

    பதிலளிநீக்கு
  5. எதுனா ‘ஆவி’ ’கீவி’ பூந்திருக்குமா சாரே!

    ஆனா ஒண்ணு இதைப் பண்ணினவருக்கு பாவம் போட்டோ ஒர்க் சரியா தெரியலைங்குறது நல்லா தெரியுது!

    பதிலளிநீக்கு
  6. intha link la padchu parunka unkaluku purium http://googleblog.blogspot.in/2014/03/introducing-auto-awesome-photobombs.html

    பதிலளிநீக்கு
  7. உங்கள் போட்டோவில் போட்டோ ஷாப் தெரிந்தவர் விளையாடி இருக்கிறார்....
    படம் ஜூம் செய்யப்பட்டு போட்டோ இணைத்திருப்பதால் கிளியராக இல்லை...

    பதிலளிநீக்கு